இடுகைகள்

ஆகஸ்ட், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புத்திசாலித்தனம் + கோமாளித்தனம் = பட்டிமன்ற நடுவர்கள்

படம்
தொலைக்காட்சிகளில் பண்டிகை நாட்களுக்குச் சிறப்பு ஒளிபரப்பைத் தொடங்கிய பிறகு, சடங்குகளுள் ஒன்றாகப் பட்டிமன்றம் ஆகிவிட்டது. தனியார் தொலைக் காட்சி அலைவரிசைகளுக்குச் சுலபமாகத் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளுள் பட்டிமன்றமும் ஒன்று. விடுமுறையாகவும் இருந்து, விழா நாளாகவும் ஆகிவிட்டால் ‘பட்டிமன்றம்‘ ஒன்று நம் வீட்டிற்குள் வந்து விடுகின்றது. விழா நாட்களில் தொலைக் காட்சியைத் தொடுவதில்லையென விரதம் பூண்டிருப்பவா்களுக்கு மட்டுமே பட்டிமன்றம் என்றால் என்ன? பட்டிமன்ற நடுவர்களென பிரசித்தி பெற்றுள்ள சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி என்பவா்கள் யார்? எனறு சொல்ல வேண்டும்.

சுஜாதாவின் அரங்கியல் பார்வை: எழுத்துப் பிரதிகளின் ஊடாக

முன்னுரை எழுத்தாளர் சுஜாதாவை அதற்கு முன்பும் சந்தித்திருக்கிறேன் என்றாலும் அன்றைய சந்திப்பு நாடகம் சார்ந்த சந்திப்பு. அத்துடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த சந்திப்பும் கூட.இந்திய அரங்க வரலாற்றில் குறிப்பிடத் தக்க ஒரு நாள் என்று சொன்னால் மிகை அல்ல. உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு அரங்க வியலாளர் பீட்டர் புருக் தனது வாழ்நாள் சாதனைப் படைப்பான மகாபாரதத்தின் காட்சிகளை இந்தியாவில் நடத்திக்காட்ட அவரது நாடகக்குழுவினருடன் இந்தியா வந்திருந்தார். புரூக்கின் மகா பாரதத்தில் பங்கேற்ற கலைஞர்களை நேரடியாகப் பார்த்ததோடு, அவர்களின் மேடைக்காட்சிகளின் துணுக்குகள் சிலவற்றையும் பார்த்தோம். மேடை நிகழ்வாகவும், தனித்தனியாகவும் பேசிக் கொண்டிருந்தோம். பத்து மணி நேரம் மகாபாரத்தின் 200 நிமிடப் படக்காட்சி வடிவமும் அவரோடு கொண்டு வரப் பட்டிருந்தது. அதையும் பார்த்து அசந்துபோன நாடகக்காரர்களின் ஒருவனாக நான் இருந்தேன்.

இயல்பு தொலைக்கும் தமிழர்கள்

நான் நின்றிருந்த அந்த அங்காடி வளாகத்தில் மூன்று வங்கிகள் செயல்படுகின்றன . இரண்டு வங்கிகள் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள். இந்த வங்கி பன்னாட்டு வங்கி. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியைப் போல மாநில மொழிக்கோ அல்லது தேசியமொழி என நம்பப்படும் இந்திக்கோ இங்கு வேலை இல்லை. எல்லாமே ஆங்கிலத்தில். அங்கே வேலை பார்க்கும் இளைஞர்களும் யுவதிகளும் பரிமாறிக் கொள்ளும் மொழி கூட ஆங்கிலமாகத்தான் இருக்கிறது. பேச்சு மொழி ஆங்கிலமாக இருந்தால் கூடப் பரவாயில்லை. அவர்களின் உடல் மொழியே ஆங்கில நளினத்துக்குரியதாக ஆகி இருப்பதை நீங்கள் நேரில் பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.

அடிப்படை வாதத்தின் முகங்கள்

2008, ஜுலை 22 இந்திய வரலாற்றின் சுவடுகளில் ஒன்றாக ஆகிவிட்டது என எழுதிய பேனா மையின் ஈரம் கூட இன்னும் காய்ந்து விடவில்லை. ஈரமான அந்த வரிகளை அடித்துச் செல்லும் வேகத்தோடு புதிய நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன.

கவனிக்கப்பட்டதின் பின்னணிகள்

தகவல்களும் நிகழ்வுகளும் சேர்ந்துதான் வரலாற்றை உருவாக்குகின்றன.சொல்லப்படும் தகவல்களும் நடக்கின்ற நிகழ்வுகளும் நேர்மறை வரலாற்றை உருவாக்கவா..? எதிர்மறை வரலாற்றை உருவாக்கவா.? என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டியது அதில் பங்கேற்பவர்களின் தன்னுணர்வு சார்ந்த ஒன்று.இன்னும் சொல்வதானால் பங்கேற்கிறவர்களின் நோக்கம் சார்ந்தவைகளும் கூட.

இக்கால இலக்கியம் குறித்த பல்கலைக்கழக ஆய்வுகள்

இக்கால இலக்கியம், ஆய்வுக்கான பரப்பு என்பதாகப் பல்கலைக் கழகங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மூன்று பத்தாண்டுகளைத் தாண்டி இருக்கிறது.தமிழகப் பல்கலைக் கழகங்களில், தமிழியலின் எல்லைகளை விரிவடையச் செய்ததில் முக்கியப் பங்காற்றியுள்ள மதுரைப் பல்கலைக் கழகமே -இன்றைய மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்- இக்கால இலக்கியங்களைப் பாடங்களாக ஆக்கியதிலும், ஆய்வுப்பொருளாக ஆக்கியதிலும் முன்கை எடுத்தது. அதன் விளைவுகள் இன்று விரிந்துள்ளன; பரந்துள்ளன.