இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பார்க்கத்தக்க சினிமா

படம்
இப்போது பெரும்பாலான சினிமாக்களை இணையச்செயலிகள் வழியாகவே பார்க்கிறேன், திரை அரங்கம் சென்று சினிமா பார்த்து, சுடச்சுட விமரிசனம் எழுதிய காலம் முடிந்துவிட்டது.   நான் திரை விமர்சனங்கள் எழுதிய இதழ்களின் தேவையை நிரப்பப் பலரும் காத்திருக்கிறார்கள். என்றாலும் எனது பரிந்துரைகளைச் செய்கிறேன். என்னைப் போலவே செயலிகளின் வழியாகப் படம் பார்ப்பவர்களுக்கு இந்தப் பரிந்துரைகள் பயன்படக்கூடும்.

கலாப்ரியா : கவியாகவும் படைப்பாக்க ஆசிரியராகவும்...

படம்
கலாப்ரியா என்ற பெயரை நான் நினைத்துக்கொள்ளும்போது என்னை அறியாமலேயே எனது கடந்த காலத்திற்குள் பயணிக்கின்றவனாக மாறிப்போகின்றேன். அந்தப் பெயர் எனக்கு அறிமுகமானது எப்படி என்பது தொடங்கி ஒவ்வொன்றாய் நினைத்துக் கொள்கின்றேன். பின்னர் அந்தப் பெயர் தமிழ் இலக்கியப்பரப்பில் தவிர்க்கமுடியாத ஆளுமையின் பெயராக நிலைபெற்ற காலகட்டத்துச் செயல்பாடுகளில் நான் இருந்தேனா? எனக் கேட்டுக்கொள்பவனாக மாறுகின்றேன். பின்னர் அவரும் நானும் சேர்ந்து இயங்கிய சூழலுக்குள் நகர்ந்து இப்போது இந்த மேடையில் – கலாப்ரியா-75 என்ற பெருநிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன். எனது நகர்வின் வழியே கலாப்ரியா என்று அறியப்பட்ட சோமசுந்தரத்தின் நகர்வைக் கவனித்துச் சில குறிப்புகளைச் சொல்லிப்பார்க்கின்றேன். இப்படித்தான் நுழைந்தார் கலாப்ரியா.. கல்லூரிப் படிப்புக்குள் நுழைந்தபோது அறிவியல் படிக்கும் விருப்பத்தோடு நுழைந்து பின்னர் தடம் மாறி, இலக்கியத்தைத் தேர்வு செய்து படித்தவர்களுள் ஒருவன் நான். அப்படித் திசைமாறிய நண்பர்கள் பலரையும் எனக்குத் தெரியும். அந்தத் திசைமாற்றம் காரணமாக மரபான தமிழ் இலக்கியப் படிப்பை மேற்...

திறமையாளர்களைக் கண்டறிதலும் திறப்புகளை உருவாக்குதலும்

படம்
நான் முதல்வன் திட்டம் 2022, மார்ச், ஒன்றாம் தேதி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ‘நான் முதல்வன்’ என்னும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அதனால் விளைந்துள்ள பலன்களைத் தமிழக இளையோர்கள் உணரவும் பயன்படுத்திக் கொள்ளவும் தொடங்கியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டம் வழியாகப்  பள்ளிக்கல்வியைச் சரியாகவும் திறனுடனும் முடித்துக் கல்லூரிக் கல்விக்குள்  நுழைந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களாக இருக்கப் போகின்றது. 

மகேந்திரசிங் தோனிக்கு வயது 44.

படம்
இரவுமுழுவதும் நடக்கும் தெருக் கூத்திலும் ஸ்பெஷல் நாடகத்திலும் முக்கியமான கட்டங்களில் தூங்கிய பார்வையாளர்கள் எழுந்து உட்கார்ந்து விடுவார்கள். குறிப்பாக வாதம்- எதிர் வாதம் என்ற பகுதிகளில் நடிகர்களின் குரலும் வாதத்திறமையும் அந்த நேரத்தில் உருவாக்கிப் பேசும் வசனங்களும் இட்டுக்கட்டும் பாடல்களும் கையொலியை எழுப்பும். அது அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிக ஆளுமைக்குக் கிடைக்கும் பாராட்டு. அப்படித்தான் தோனியின் மட்டையடியை இந்தியத் திரள் காத்திருந்து ரசித்தது. நான் அப்படி ரசித்திருக்கிறேன். அப்படிக் காத்திருந்து ரசிக்க இன்னொரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும்.

விலகிச் செல்லும் அந்தரங்கம்

படம்
திருமணம் நடக்கும் அந்த மண்டபம்  புதிய ஒன்று அல்ல. ஆனால் அந்த மண்டபத்தில் நடக்கும் திருமணத்தில் கலந்துகொள்ள வருவது இதுதான் முதல் முறை. இப்போது மண்டபம் இருக்கும் இடத்தில் முன்பு ஒரு திரை அரங்கம் இருந்தது. அந்தத்திரை அரங்கிற்குப் பல முறை வந்திருக்கிறேன். நூறு நாட்களுக்கும் மேலும் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடிய படங்கள் சிலவற்றை அந்த திரை அரங்கில் பார்த்திருக்கிறேன். இப்போது எல்லா வசதிகளும் கொண்ட திருமண மண்டபமும் வணிக வளாகமும் என அந்த இடம் மாறி விட்டது.

பொதுப்புத்தியை விவாதிக்கும் கலையியல் : டூரிஸ்ட் பேமிலியும் அயோத்தியும்

படம்
டூரிஸ்ட் பேமிலி, அயோத்தி - இந்த இரண்டு சினிமாக்களையும் திரையரங்கத்தில் நான் பார்க்கவில்லை. இணையச்செயலிகள் வழியாகவே பார்த்தேன். திரையரங்க வெளியீட்டின் போதும், இணையச் செயலிகளில் வந்த பிறகும் பார்வையாளர்களின் பொதுரசனைக்குரிய படங்களாகவே அந்த சினிமாக்கள் இருந்தன; இப்போதும் இருக்கின்றன என்பது அனைவரும் அறிந்தது. அந்தப் படங்களை இயக்கிய இயக்குநர்கள் – ஆர். மந்திரமூர்த்தி, அபிசன் ஜீவிந்த் இருவருமே புதுமுக இயக்குநர்கள் என்பது கூடுதல் தகவல். புதுமுக இயக்குநர்கள் என்றாலும் தேர்ச்சிபெற்ற இயக்குநர்கள் போலத் தாங்கள் படத்தைப் பார்வையாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்கள். அவை வந்தபோது திரையரங்கிற்குப் பார்வையாளர்களை ஈர்க்கும் படங்களாக இருந்தன. இதற்கான காரணம், அந்தப் படங்களில் வெளிப்பட்ட கலையியல் பார்வையின் தன்மையும் அதனை முழுமையாக உள்வாங்கிச் செய்த திரைக்கதை அமைப்பும் என்பது எனது கணிப்பு. இந்தப் புதுமுக இயக்குநர்களுக்குத் தொடர்ச்சியாகப் படங்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். தமிழில் இயக்குநர்களாக அறிமுகமாகித் தங்களை நிலை நிறுத்திக்கொண்ட பலரும், தேர்ச்சி பெற்ற இயக்குநர்களிடம் சி...

வருத்தங்களற்ற பெண் தன்னிலைகள்

படம்
அண்மைக்காலத்தில் அதிகமும் எழுத வந்துள்ள பெண்களின் பனுவல்களை மதிப்பீடு செய்பவர்கள் தொடர்ந்து இந்தப் பிழையைச் செய்கிறார்கள். ஆனால், திறனாய்வுப் பார்வை கொண்ட வாசிப்பு அந்தப் பிழைகளைச் செய்வதில்லை. அவர்களுக்குக் கிடைக்கும் கவிதை அல்லது சிறுகதைத் தொகுப்பையோ, நாடகம் அல்லது நாவலையோ எழுதியவரின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இது பெண் எழுத்து என்று வகைபிரித்துப் பேசத்தொடங்குகிறார்கள். இதே நிலைதான் தலித்தெழுத்து, வர்க்கச் சார்புடைய அரசியல் எழுத்து, இனவரைவியல் அடையாளங்களைப் பேசும் எழுத்து என்று வகைபிரித்துச் சொல்வதிலும் இருக்கின்றது. வாசிக்கக் கிடைத்த இலக்கியப்பனுவலின் முன்னுரையும், பின்னட்டைக் குறிப்பும் தரும் தகவல்களையும் ஏற்றுக்கொண்டு அப்படியே பேசுவதைத் தவிர்க்க நினைப்பதே தீவிர வாசிப்பின் அடையாளம்; திறனாய்வை நோக்கிச் செல்லும் வாசிப்பின் பாதை.

தொடரும் ஒத்திகைகள்

படம்
அங்கம் : 1 காட்சி : 1 இடம்: நாடக ஒத்திகைக்கூடம். சுவர்களில் நடன முத்திரைகள் கொண்ட சுதை உருவங்கள், புகைப்படங்கள் உள்ளன. நாட்டுப்புறக் கலைகளின் பாணியிலான சிற்பங்களும் திரைச்சீலைகளும் சுவர்களை ஒட்டி இருக்கின்றன. மையத்தில் சிறியதும் பெரியதுமான சதுர செவ்வக மேடைகள் கிடக்கின்றன. அவற்றில் இருவர் மூவராக அமர்ந்துள்ளனர். அவர்களின் உடைகளில் விசேஷமாகக் குறிப்பிட எதுவும் இல்லை. மொத்தம் பதினைந்து பேர் அங்கு உள்ளனர். ஓரத்திலிருக்கும் ஸ்டீரியோப் பெட்டியிலிருந்து இசையின் ஒலி மெல்லியதாகக் கேட்கிறது. உள்ளே நுழைந்த உதவி இயக்குநர், இசை எழுப்பும் கருவியை நிறுத்தி விட்டு கையில் கொண்டு வந்த நாடகத்தின் பிரதிகளைப் பெயர் சொல்லிக் கொடுக்கிறார். கொடுத்து முடிக்கும் முன் இயக்குநர் வந்து விடுகிறார். இயக்குநர்:  ரவி ஸ்கிரிப்ட் கொடுத்து முடிங்க. பைண்டிங் நல்லா பண்ணியிருக்கா . இன்னையிலிருந்து ஸ்கிரிப்ட் வீட்டுக்குக் கொண்டு போகலாம். சீக்கிரம் படிச்சிடணும் [ரவி அவர்களிடம் சென்று கொடுத்துவிட்டு வந்து இயக்குநருக்கு நேர் எதிரில் உட்காருகிறார்] இயக்குநர்: ரவி நீங்களே பிராக்கெட்ஸ் படிங்க. யாருக்கு என்ன கேரக்டர...