இடுகைகள்

ஜூன், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மயிலாடிய கானகங்கள்

கடந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் இப்படி வெயில் அடிக்கவில்லை. ஆகஸ்டு கடைசி வாரத்திலேயே வெயில் குறைந்து ஆடிக் காற்று பரபரவென வீசியது. இந்த ஆண்டு ஆடிக் காற்றின் வேகம் ஒரு சில நாட்கள் தான் இருந்தது. திரும்பவும் வெயில் பங்குனி உத்திரத்தின் போது அடிப்பது போல அடித்தது.

கி.ரா.வின் புதிய வரவு: பெருங்கதை

படம்
முன்பெல்லாம் நண்பர்களின் எழுத்துகள் கையெழுத்தில் வாசிக்கக்கிடைக்கும் . நீலவண்ண எழுத்துகள் , கறுப்பு வண்ண எழுத்துகள் அதிகம் என்றாலும் பச்சை , சிவப்பு , ஊதா வண்ணங்களிலெல்லாம் எழுதும் பேனாக்கள் வந்தபோது அவற்றில் எழுதிப் பார்க்கும் எழுத்தாளர்கள் உண்டு . எழுத்தாளர்களின் கையெழுத்திலேயே வாசிக்கக் கிடைக்கும் பிரதிகள் இப்போது குறைந்துவிட்டன . அப்படிக்கிடைத்தாலும் டைப் செய்யப்பட்டு கணினி வழியாகவே வந்துசேர்கின்றன . அப்படிப் படித்த எழுத்துகளையும் பிறகு அச்சில் வாசிக்கும் ஆசை விலகுவதில்லை .

இலக்கிய ஆய்வுகளும் பிறதுறை அறிவும்: சில குறிப்புகள்

தமிழ் ஆய்வுகள், தமிழியல் ஆய்வுகளாகக் கல்வி நிறுவனங்களுக்குள் மாறிவிட்டன. புதிதாகத் தொடங்கப்படும் ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை, தமிழியல் துறையாக அமைக்கப்பட வேண்டும் என வல்லுநர்குழுக்கள்பரிந்துரைக்கின்றன. பல்கலைக்கழகத்திற்கு வெளியே செயல்படும் தமிழ் சார்ந்த உயராய்வு நிறுவனங்களும் தமிழியல் ஆய்வு நிறுவனங்களாகவே செயல்படுகின்றன. கல்வித்துறை சாராத விமரிசனங்களும் ‘ரசனை அனுபவத்திலிருந்து நுகர்வு திணிப்பு’பற்றிப் பேசுவனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. கல்விப்புல ஆய்வுகளும், சாராத ஆய்வுகளும் ஏற்படுத்திக்கொண்டுள்ள இம்மாற்றங்கள் வெறும் எண்ணளவு மாற்றங்கள் (Quantitative changes) மட்டும் அல்ல; பண்பு மாற்றங்களும் (Qualitative changes) கூட. தமிழில் நடந்துள்ள இந்த மாற்றம் இந்திய மொழிகள் பலவற்றிற்கும் பொருந்தக்கூடியது.

தொல்காப்பியத் திணைக்கோட்பாடும் அகநெடும்பாடல்களும்

முன்னுரை:தொல்காப்பியப் பொருளதிகாரத்தை மையப்படுத்திச் சிந்திக்கும்போது அதன் முதன்மை நோக்கம்   பாவியல் அல்லது கவிதையியல் என்பதற்கான வரையறைகளை உருவாக்குவது எனக் கருதத்தோன்றுகிறது . அக்கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகின்றது . கருத்தரங்கின் பொதுப்பொருள் தொல்காப்பிய மரபும் செவ்வியல் ( சங்க இலக்கியங்களும் ) என்பதனை மனங்கொண்டு , தொல்காப்பியர் கூறும் திணைப்பொருள் மரபை நவீன இலக்கியக் கோட்பாடான நிலவியல் பண்பாட்டியலோடு தொடர்புபடுத்தி அமைகிறது இக்கட்டுரை . தொல்காப்பியம் மூன்று பொருட்களைக் கவிதையின் உள்ளடக்கமாகக் கூறியுள்ளது இக்கட்டுரை கருப்பொருளின் இடம் பற்றிய நிலையை விவாதிக்கிறது . கட்டுரை உருவாக்கிக் கொண்ட கருத்தியல் நிலைபாட்டைப் பொருத்திப் பார்க்கும் தரவுகளாகத் தமிழ்ச் செவ்வியல் கவிதைகளில் அகநெடும்பாடல்கள் இக்கட்டுரைக்கான முதன்மைத் தரவுகளாக அமைகின்றன .