நான் என்னும் தன்னிலை: சங்க அகக் கவிதைகளிலும் பக்தி கவிதைகளிலும்
முன்னுரை எடுத்துரைப்பு (Narrative) என்பது நவீனத் திறனாய்வாளர்கள் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு கலைச் சொல். அக்கலைச்சொல் மூலம் மேற்கத்தியத் திறனாய்வு கலை இலக்கிய வடிவங்கள் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய எடுத்துரைப்பியல் கோட்பாட்டை (Narratogy) உருவாக்கித் தந்துள்ளது. உருவவியல் தொடங்கி அமைப்பியல் வழியாக வளர்ந்துள்ள எடுத்துரைப்பியல் கோட்பாடு தொல்காப்பியர் சொல்லும் கூற்று என்பதோடு நெருங்கிய உறவுடைய ஒன்று என்று கருதுகிறது இக்கட்டுரை.கட்டுரை சங்க அகக் கவிதைகளிலும் பக்திக் கவிதைகளிலும் செயல்படும் கூற்று முறையை நவீன எடுத்துரைப்பியல் பின்னணியில் விளக்க முயற்சி செய்கிறது. அம்முயற்சிக்காக அகக்கவிதைகள் அனைத்தையும் தரவுகளாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோல் பக்திக்கவிதைகள் அனைத்தையும் தரவுகளாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் கிடைக்கும் முடிவும் முடிந்த முடிவும் இல்லை. முதல் கட்ட நிலையில் இவ்வாறு வாசிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று காட்டுகிறது. இந்த முன்னாய்வைத் தொடர்ந்து ஒருவர் முழுமையையும் தரவுகளாக்கி இந்நோக்கில் ஆய்வு செய்யலாம். அப்போது இந்த முடிவு உறுதி செய்யப்படலாம். அல்லாமல் மாறுபட்ட முடிவும் கூடக் கிடை...