தொல்காப்பியக் கவிதைக்கோட்பாடு- ஏற்பு நிலையும் விலகல் நிலையும் புறநானூற்றை முன் வைத்து
இலக்கியம் என்று இன்று அழைக்கப்படும் சொல் எல்லாவிதமான இலக்கிய வகைகளையும் உள்ளடக்கிய எழுத்துப் பிரதிகளையும் குறிக்கும் ஒரு சொல். ஆனால் தொல்காப்பியர் காலத்தில் இலக்கியம் என்பதே செய்யுள் என்பதாகவே அர்த்தம் தந்திருக்கிறது. அவரது பொருளதிகாரத்தில் நாடகம், உரை, போன்ற இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்கள் பற்றிய சொற்கள் இருந்தாலும், அவை பற்றிய சொல்லாடல்கள் இல்லை. அல்லது அக்காலகட்டத்தில் உரைக்கும் நாடகத்திற்கும் வேறு யாராவது சொல்லாடல்களை உருவாக்கியிருக்கத் தான் செய்யுள் என்ற இலக்கிய வெளிப்பாட்டு வடிவம் பற்றிய சொல்லாடலை உருவாக்க நினைத்து அதைச் செய்தவராகத் தொல்காப்பியரை அறிந்து கொள்ளலாம்.
இன்று எழுத்தாளர் என்றும் படைப்பாளி என்றும் அழைக்கப்படும் நபரை அக்காலத்தில் புலவன் என்ற சொல்லால் அழைத்துள்ளனர் என்பதைத் தொல்காப்பியச் சூத்திரங்கள் காட்டுகின்றன. ’என்பமனார் புலவர்’ எனப் பல இடங்களில் காணமுடியும். புலமைத் தொழிலால் உருவாக்கப்பட்ட படைப்பு பா எனவும் செய்யுள் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. புலமைத்தொழிலுக்கு இன்னொரு மாற்றுச் சொல்லாக பாடுதல் என்பதும் இருந்துள்ளது. “புலவர் பாடாது வரைக என் நிலவரை” என ஓர் அரசன் கூறுகிறான். பாடல், செய்யுள், பா என்பனவற்றோடு ஒத்து நிற்கக் கூடிய சொல்லாகக் கவிதை என்ற சொல் எப்போது தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதைச் சொல்லாராய்ச்சி ஆய்வாளர்களுக்கு விட்டு விடலாம். கவியெனக் கிடந்த கோதாவிரி எனக் கூறும் கம்பனின் கூற்று புலவன் என்ற சொல்லுக்கீடாகக் கவி என்ற சொல் அவன் காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சொல்லாக ஆகி இருக்கிறது என்பதைச் சொல்கிறது.
இன்று செய்யுள்,பா, பாடல் என்பன வழக்கொழியும் நிலையில் இருக்க, கவிதை என்னும் சொல் வழக்கிலிருக்கும் சொல்லாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இருக்கும் Poetry, Poem போன்ற சொற்கள் கவிதை என்றே மொழி பெயர்க்கப்படுகின்றன. உலக இலக்கியத்திற்கு அடிப்படைகளை உருவாக்கித்தந்த அரிஸ்டாடில் எழுதிய Poetics – கவிதையியல் என்றே பெயர்க்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் செய்யுளியல் என்றொரு சொல் Poetics என்பதற்கீடாக இருக்க, அதை விட்டு விட்டுக் கவிதையியல் என்று பெயர்க்கப்பட்டதன் காரணம் பற்றி நாம் யோசிக்க வேண்டும்.
இலக்கியக் கல்வியைத் தொடக்க நிலையில் கற்கும் மாணவர்களுக்கு விளக்குவது போல அமையாமல் உயர்நிலையில் கற்கும் மொழி இலக்கியத்துறை மாணவர்களுக்கான குறிப்புகள் போல அமைந்துள்ளது இப்போது கிடைக்கும் தொல்காப்பியம். மொத்தத் தொல்காப்பியத்திலும் இத்தகைய தன்மையே விரவிக் கிடக்கிறது என்றாலும், பொருளதிகாரத்தில் அந்த நிலை அதிகம் எனலாம். ஆனால் இன்று உலக இலக்கிய அறிமுகமும், கோட்பாடுகளும் கைவரப்பெற்றுள்ள நிலையில் நாம் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை முறையான இலக்கியக் கோட்பாட்டு நூலாக ஒழுங்கு படுத்தித் தர முடியும். அதன் பின்னர் உரை எழுதியும், மொழி பெயர்த்தும் தரும் நிலையில் உலக இலக்கியக் கோட்பாட்டு நூல்களில் தொல்காப்பியம் ஏற்கப்படும் என்பதற்குத் தனி மாநாடோ, கூப்பாடோ போட வேண்டியதில்லை.
தொல்காப்பியத்தில் கவிதைக்கான அடிப்படைகள் பேசப்பட்டுள்ளன; அதன் வழியாக இலக்கியக் கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை முன் வைத்துத் தனது கருத்துக்களை முன் வைக்கிறது இக்கட்டுரை. தொல்காப்பியர் முறையியல், பொதுவான கவிதைக் கோட்பாட்டை விளக்கிக் காட்டி விட்டு வகைகளுக்குள் செல்லும் எளிமையான வழிமுறையை அல்ல. ஒன்றை விளக்கிக் காட்டி அதிலிருந்து இன்னொன்றைப் புரிய வைக்கும் உத்தியைத் தொல்காப்பியர் பின்பற்றியுள்ளார். முதல் இயலான அகத்திணையியலில் அகக் கவிதைக்கோட்பாடுகளை விளக்கிக் காட்டி, அடுத்த இயலான புறத்திணையியலில் அகத்திணை ஒவ்வொன்றின் புறனாக இருப்பன புறக்கவிதைகளின் இயல்பு எனச் சொல்லியுள்ளார் தொல்காப்பியர்.
அகத்திணையில் பேசப்படும் அன்பின் ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவற்றோடு கைக்கிளையும் பெருந்திணையுமாக ஏழுதிணைகள் சொல்லப்படுகின்றன. ஏழு உறுதிப்பொருள் அல்லது உரிப்பொருள் அடிப்படையிலேயே அகக் கவிதைகள் பின்னர் வகைப்பாடு செய்யப்பெற்றுள்ளன. தொகை நூல்களில் இருக்கும் வகைப்பாடுகள் அதனையே நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் புறக்கவிதைகள் தொகுக்கப்பட்ட போது இந்த வகைப்பாடு ஏன் பின்பற்றப்படவில்லை என்பது முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு விடை கண்டால் தொல்காப்பியரின் புறக்கவிதைக் கோட்பாடு புலவர்களால் ஏற்கப்பட்டனவா? அல்லது விலக்கப் பட்டனவா? என்ற வினாவிற்கும் விடை காண முடியும்.
கிடைக்கும் தொகைப்பாடல்களில் புறநானூறு மற்றும் பதிற்றுப் பத்து மட்டுமே புறப்பாடல்கள். மற்ற ஆறும் அகப்பாடல்கள். பத்துப்பாட்டில் ஆற்றுப்படைகள் மட்டுமே அகம் அல்லாத பாடல்கள். இவற்றைத் தொகுத்தவர்கள் எண்ணிக்கை அடிப்படை ஒன்றை மட்டுமே முக்கியமாகக் கருதி விட்டு திணை என்னும் இலக்கியவியல் அடிப்படையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. அகநானூறு தொகுப்பு மட்டும் அதற்கு விதி விலக்கு.
கிடைக்கும் புறப்பாடல்களை திணை என்னும் இலக்கியவியல் அடிப்படையில் வகைப்படுத்தித் தொகுத்துக் கொண்டு மேலாய்வு செய்யும் போது தொல்காப்பியரின் புறக்கவிதைக் கோட்பாடு எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது எனவும் விலகிச் செல்லும் நிலைபாடுகள் எங்கே , எப்போது ஏற்பட்டன என்றும் விரிவாக விளக்க முடியும். இந்த நோக்கத்திற்குக் கிடைக்கும் புறப்பாடல்களை முதல் , கரு, உரி என்ற கவிதையின் அடிப்படைக் கூறுகளின் பின்னணியில் விளக்கிக் காட்டி திரும்பவும் தொகுக்க வேண்டும். அப்படித்தொகுக்கும் போது புறநானூற்றில் எத்தனை வெட்சிப் பாடல்கள் உள்ளன எனக் கண்டு பிடிக்க முடியும் வஞ்சி,உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி,பாடாண் என ஒவ்வொரு திணைக்கும் எத்தனையெத்தனை பாடல்கள் கிடைக்கின்றன எனக் காட்டலாம்.
நாம் பார்க்கும் புறநானூற்றுத் தொகுப்புகளில் பாடல்கள் இடம் மாறி இருக்கின்றனவே. துறைக்குறிப்புகள் சில வேறுபாடுகளோடு இருக்கின்றன. ஆனால் திணை இது எனச் சுட்டுவதில் வேறுபாடு இல்லை. ஏனென்றால் புறப்பாடல்களுக்குத் திணை வகுத்தோர் தொல்காப்பியரின் புறத்திணையியலை அடிப்படையாகக் கொண்டு திணை , துறைக் குறிப்புகளை எழுதவில்லை. பின்னர் வந்த புறப்பொருள் வெண்பாமாலையை அடிப்படையாகக் கொண்டு அவற்றை குறித்துள்ளனர். போரின் ஒவ்வொரு கட்டமே புறத்திணை வகைப்பாடுகள் என்ற புரிதலோடு எழுதப்பட்ட புறப்பொருள் வெண்பாமாலையை அடிப்படையாகக் கொண்டதால் தான் போர்க்காரணம் என்னும் உரிப்பொருள் மட்டுமே திணைக்குறிப்புக்குப் பின்னணிக் காரணமாக இருந்துள்ளதாகத் தெரிகிறது. கவிதையில் இருக்கும் கருப்பொருள் குறிப்புகளையோ, முதல் பொருள் குறிப்புகளையோ முக்கியமாகக் கருத வில்லை. ஆனால் அகக் கவிதைகளுக்குத் திணை சொல்லும் போது உரிப்பொருளோடு, முதல் , கரு என்ற இரண்டும் முக்கியமான அடிப்படைகளாக இருந்துள்ள நிலையில், புறக்கவிதைகளுக்கு அவை கருதப் படாமல் விடப்பட்ட காரணம் தெரியவில்லை. முதல், கரு, உரி என்ற மூன்றையும் கவிதையின் உட்கிடையாகக் கருதிப் புறநானூற்றைப் பாகுபடுத்துக் காட்டினால் தான் ஏற்பு அல்லது விலகல் என்ற அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். அப்படித் தொகுக்கும் முயற்சிக்கு வழிகாட்டியாக ஒவ்வொரு திணைக்கும் இரண்டு காட்டுகள் தரப்பட்டுள்ளன.
வெட்சித் திணை
புறம் : 269 / துறை : உண்டாட்டு
பாடியவர் : ஔவையார்
கருப்பொருள்/நிலம் |
பாடல் வரி |
பாடல் |
புள் |
1 |
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் |
பூ |
1 |
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் பயிலாது அல்கிய பல் காழ் மாலை மை இரும் பித்தைபொலியச் சூட்டி |
விலங்கு |
4 |
புத்தகல் கொண்ட புலிக் கண் வெப்பர் ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை |
மக்கள் |
6 |
உவலைக் கண்ணித் துடியன் வந்தென |
உணவு |
7-8 |
பிழி மகிழ் வல்சி வேண்ட, மற்று இது கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்தி |
விலங்கு |
9-10 |
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில் பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர் |
புள் |
11-12 |
கொடுஞ் சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப தடிந்து மாறு பெயர்த்தது, இக் கருங்கை வாளே |
புறம் : 297 /துறை : உண்டாட்டு
பாடியவர் : பாடியோர் பெயர் இல்லை
கருப்பொருள்/நிலம் |
பாடல் வரி |
பாடல் |
விலங்கு |
1 |
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை |
செடி |
|
|
மருத நிலம் |
2-4 |
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க் |
செடி |
2-3 |
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை |
விலங்கு |
4 |
கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க் |
உணவு |
5-6 |
- - - - - - நார் அரி நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி |
மருத நிலம் |
7-8 |
துறை நனி கெழீஇக் கம்புள் ஈனும் தண்ணடை பெறுதலும் உரித்தே |
புள் |
7-8 |
துறை நனி கெழீஇக் கம்புள் ஈனும் தண்ணடை பெறுதலும் உரித்தே |
மரம் |
9-10 |
நெடு வேல் பாய்ந்த மார்பின் மடல் வன் போந்தையின், நிற்குமோர்க்கே. |
கரந்தைத் திணை
புறம் : 260 துறை : கையறுநிலை
பாடியவர் : வடமோதங்கிழார் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
பண் |
1-3 |
வளரத் தொடினும் வௌவுபு திரிந்த விளரி உறுதரும் தீம் தொடை நினையா தளரும் நெஞ்சம் |
மரம் |
3-5 |
- - - மனையோள் உளரும் கூந்தல் நோக்கி களர கள்ளி நீழற் கடவுள் வாழ்த்தி |
வழிபாடு |
5 |
கள்ளி நீழற் கடவுள் வாழ்த்தி |
விலங்கு |
12-13 |
முன் ஊர்ப் பூசலின் தோன்றி தன் ஊர் நெடு நிரை தழீஇய மீளியாளர் |
விலங்கு/ இயற்கை/ விலங்கு |
15-19 |
- - - - கோள் விடுத்து வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின் மறவர் கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்ஆன் நிரையொடு வந்த உரையன் ஆகி |
விலங்கு |
20-21 |
உரிகளை அரவம் மான தானே அரிது செல் உலகில் சென்றனன் |
நீர்நிலை |
21-25 |
- - - உடம்பே கானச் சிற்றியாற்று அருங் கரைக் கால் உற்று கம்பமொடு துளங்கிய இலக்கம் போல அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே |
வழிபாடு/ புள் |
26-29 |
உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே மடம்சால் மஞ்ஞைஅணி மயிர் சூட்டி இடம் பிறர் கொள்ளாச் சிறுவழி படம் செய் பந்தர்க் கல் மிசையதுவே. |
புறம் : 261 துறை : கையறுநிலை
பாடியவர் : ஆவூர் மூலங்கிழார் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
புள் / உணவு |
1-2 |
அந்தோ! எந்தை அடையாப் பேர் இல் வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு |
நீர்நிலை |
4-5 |
வெற்று யாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக் கண்டனென், |
விலங்கு |
6-7 |
வையம் காவலர் வளம் கெழு திரு நகர், மையல் யானை அயா உயிர்த்தன்ன |
உணவு |
8-10 |
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப் பயந்தனை மன்னால், முன்னே! |
புள் |
11-12 |
பல் ஆ தழீஇய கல்லா வல் வில் உழைக் குரற் கூகை அழைப்ப ஆட்டி |
பூ |
13-14 |
நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை விரகறியாளர் மரபின் சூட்ட |
விலங்கு |
14-16 |
நிரை இவண் தந்து, நடுகல் ஆகிய வென் வேல் விடலை இன்மையின் புலம்பி |
காஞ்சித் திணை
புறம் : 339 துறை : மகட்பாற் காஞ்சி
பாடியவர் : பாடலாசிரியர் பெயர் கிடைக்கப்பெறவில்லை
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
விலங்கு/ மக்கள்/ பூ |
1-3 |
வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு மடலை மாண்நிழல் அசைவிட, கோவலர் வீததை முல்லைப் பூப்பறிக்குந்து |
விலங்கு |
4-5 |
குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து |
நீர்நிலை / பூ |
6-7 |
- - - - - தொடிந்தோள் மகளிர் கடல் ஆடிக் கயம் பாய்ந்து கழி நெய்தல் பூக்குறூஉந்து |
விலங்கு |
13-14 |
முறம்செவி யானை வேந்தர்‘ மறம்கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. |
புறம் : 342 துறை : மகட்பாற் காஞ்சி
பாடியவர் : அரிசில் கிழார் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
புள் / பூ |
1-2 |
கானக் காக்கை கலிச்சிறகு ஏய்க்கும் மயிலைக் கண்ணி, |
தெய்வம் |
5 |
திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே |
மக்கள் |
6 |
பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே |
புள் |
7-8 |
பைங்காற் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை மென்சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின் |
விலங்கு |
9-10 |
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை கூர்நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம் |
மருதநிலம் |
11 |
தண்பணைக் கிழவன் இவள் தந்தையும் |
விலங்கு / காலம் |
13 |
கழிபிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா, வாள்தக வைகலும் உழக்கும் மாட்சியவர், இவள் தன்னைமாரே |
கைக்கிளை
புறம் : 84 துறை : பழிச்சுதல்
பாடியவர் : பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
உணவு |
1 |
என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே, |
ஊர் |
4 |
கல்லென் பேர் ஊர் விழவுடை ஆங்கண் |
மக்கள் |
6 |
உமணர் வெரூஉம் துறையன்னன்னே |
புறம் : துறை : பழிச்சுதல்
பாடியவர் : பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
அணிகலன் |
6 |
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல் |
மரம் |
7-8 |
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று, யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே. |
தும்பைத் திணை
புறம் : 90 துறை : பழிச்சுதல்
பாடியவர் : பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
அணிகலன்/பூ |
1
-2 |
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் அடை மல்கு குளவியொடு கமழும் சாரல் |
இடம் |
2 |
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல் |
விலங்கு |
3 |
மறப் புலி உடலின், மான் கணம் உளவோ? |
வெளி |
4-5 |
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? |
விலங்கு |
8-9 |
வரி மணல் ஞெமர, கல் பக, நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? |
மரம் |
10 |
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை |
புறம் : 307 துறை : களிற்றுடனிலை
பாடியவர் : வண்ணக்கன் சோருமருங்குமரனார்
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
நிலம் / விலங்கு |
2 |
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன் |
காலம்/ விலங்கு/ புள் |
4-5 |
வேனல் வரிஅணில் வாலத்து அன்ன, கானஊகின் கழன்று உகு முதுவீ |
மக்கள்/ விலங்கு |
7-9 |
-
- - உமணர் யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த வாழா வான்பகடு ஏய்ப்ப, |
விலங்கு |
11 |
வெஞ்சின யானை வேந்தனும் |
நொச்சித் திணை
புறம் : 109 துறை : மகள் மறுத்தல்
பாடியவர் : கபிலர் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
நிலம் / மக்கள் |
1 |
அளிதோதானே, பாரியது பறம்பே! நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும், உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே |
மரம் |
4 |
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே |
உணவு |
5 |
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே |
உணவு |
6 |
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே |
நிலம் / உணவு |
7-8 |
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து, திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே. |
நீர்நிலை |
9-10 |
வான் கண் அற்று, அவன் மலையே, வானத்து மீன் கண் அற்று, அதன் சுனையே |
விலங்கு |
11 |
மரம் தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் |
யாழ் / மக்கள்/ இடம் |
15-18 |
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின்வர, ஆடினிர் பாடினிர் செலினே, நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே |
புறம் : 299 துறை : குதிரை மறம்
பாடியவர் : பொன்முடியார் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
செடி / ஊர் |
1 |
பருத்தி வேலிச் சீறூர் மன்னன் |
விலங்கு |
2
-3 |
உழுத்ததர் உண்ட ஓய் நடைப் புரவி கடல் மண்டு தோணியின், படை முகம் போழ |
உணவு/ விலங்கு |
4-5 |
நெய்ம்மிதி அருந்திய, கொய் சுவல் எருத்தின், தண்டை மன்னர், தாருடைப் புரவி |
தெய்வம் |
6 |
அணங்குடை முருகன் கோட்டத்துக் கலம் தொடா மகளிரின், இகந்து நின்றவ்வே |
பெருந்திணை
புறம் : 144 துறை : குறுங்கலி, தாபதநிலையும்
பாடியவர் : பரணர் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
காலம்/ யாழ்/ பண் |
1-2 |
-
- - இருள் வர, சீறியாழ் செவ்வழி பண்ணி |
நிலம் |
3 |
கார் எதிர் கானம் பாடினேமாக, |
பூ |
4 |
நீர் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் |
பூ |
8-9 |
-
- - காந்தள் முகை புரை விரலின் கண்ணீர் துடையா, |
மரம் / ஊர் |
14 |
முல்லை வேலி, நல் ஊரானே |
புறம் : 146 துறை : குறுங்கலி, தாபதநிலையும்
பாடியவர் : அரிசில் கிழார் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
யாழ் / பண் |
3 |
சீறியாழ் செவ்வழி பண்ணி, |
நிலம் |
3-5 |
-
- - நின் வன் புல நம் நாடு பாட, என்னை நயந்து பரிசில் நல்குவை ஆயின், |
புள் |
8 |
கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன, |
அணிகலன் |
10 |
தண் கமழ் கோதை புனைய, |
விலங்கு |
11 |
வண் பரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே! |
பொதுவியல் திணை
புறம் : 224 துறை : கையறுநிலை
பாடியவர் : கருங்குழலாதனார் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
உணவு |
2-3 |
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி, இரும் பாண் ஒக்கற் கடும்பு புரந்ததூஉம் |
இடம் |
4 |
அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து, |
தொழில் |
8-9 |
-
- - யூப நெடுந் தூண், வேத வேள்வித் தொழில் முடிந்ததூஉம் |
நீர்நிலை/ காலம் |
12-13 |
அருவி மாறி, அஞ்சு வரக் கருகி, பெரு வறங் கூர்ந்த வேனிற் காலை, |
மரம் |
14-16 |
பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார், பூ வாட் கோவலர் பூவுடன் உதிரக் கொய்து கட்டு அழித்த வேங்கையின், |
புறம் : 237
துறை : கையறுநிலை
பாடியவர் : பெருஞ்சித்திரனார்
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
காலம் |
3 |
கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி |
பூ |
10-11 |
- - -
மகளிர் வாழைப் பூவின் வளை முறி சிதற |
செடி / இடம் |
13 |
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
நிலம் / விலங்கு |
15-17 |
-
- - ஓங்கு வரைப் புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின் எலி பார்த்து ஒற்றாதாகும் |
நீர்நிலை |
17-19 |
-
- - மலி திரைக் கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று, நனியுடைப் பரிசில் தருகம், |
வஞ்சித் திணை
புறம் : 4 துறை : கொற்றவள்ளை
பாடியவர் : பரணர் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
வெளி |
1-2 |
வாள், வலம் தர, மறுப் பட்டன செவ் வானத்து வனப்புப் போன்றன |
அணிகலன் / விலங்கு |
3-4 |
தாள், களம் கொள, கழல் பறைந்தன கொல்ல் ஏற்றின் மருப்புப் போன்றன. |
கருவி |
5 |
தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ, நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன. |
விலங்கு |
7-12 |
மாவே, எறி பதத்தான் இடம் காட்ட, கறுழ் பொருத செவ் வாயான், எருத்து வவ்விய புலி போன்றன களிறு கதவு எறியா, சிவந்து, உராஅய் நுதி மழுங்கிய வெண் கோட்டான் |
நீர்நிலை / இயற்கை |
15-16 |
மாக் கடல் நிவந்து எழுதரும் செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ |
புறம் : 16 துறை : மழபுலவஞ்சி
பாடியவர் : பாண்டரங்கண்ணனார் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
விலங்கு |
1 |
வினை மாட்சிய விரை புரவியொடு |
இயற்கை |
2-3 |
மழை உருவின தோல் பரப்பி முனை முருங்கத் தலைச் சென்று |
நிலம் |
4 |
விளை வயல் கவர்பூட்டி |
இடம் / விலங்கு |
6 |
கடி துறை நீர்க்களிறு படீஇ, |
இயற்கை |
7-8 |
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம் செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற |
நறுமணப்பொருள் |
11 |
- - - புலர் சாந்தின் |
கொடி / மருத நிலம் |
13-16 |
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல், பனிப் பகன்றை, கனிப் பாகல், கரும்பு அல்லது காடு அறியாப் பெருந் தண் பணை பாழ் ஆக |
விலங்கு |
18 |
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே |
வாகைத்திணை
புறம் : 368 துறை : மறக்களவழி
பாடியவர் : கழாத்தலையார் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
விலங்கு/ இயற்கை/ நிலம் |
1-3 |
களிறு முகந்து பெயர்குவம் எனினே, ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போல, கைம்மா எல்லாம் கணைஇட்த் தொலைந்தன |
விலங்கு |
5-7 |
கடும்பரி நல்மான் வாங்குவயின் ஒல்கி, நெடும்பீடு அழிந்து, நிலம்சேர்ந் தனவே, கொற்சுவற் புரவி முகக்குவம் எனினே |
இயற்கை |
9-10 |
வளிவழக்கு அறுத்த வங்கம் போல, குருதிஅம் பெரும்புனல் கூர்ந்தனவே |
இடம் |
12 |
இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து |
விலங்கு / பறை |
14-15 |
கடாஅ யானைக் கால்வழி அன்னஎன் தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப ஒற்றி |
விலங்கு |
18 |
அரவுஉறழ் ஆரம் முகக்குவம் எனவே |
புறம் : 369 துறை : மறக்களவழி
பாடியவர் : பரணர் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
விலங்கு / இயற்கை |
1-2 |
இருப்பு முகஞ் செறித்த ஏந்துஎழில் மருப்பின், கருங்கை யானை கொண்மூ ஆக |
விலங்கு / இயற்கை |
6-7 |
அரசுஅராப் பனிக்கும் அணங்குஉறு பொழுதின், வெவ்விகைச் புரவி வீசுவளி ஆக |
காலம் |
11 |
விடியல் புக்கு நெடிய நீட்டிநின் செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால், பிடித்துஎறி வெள்வேல் கணையமொடு வித்தி, |
விலங்கு |
16 |
கணநரியோடு கழுதுகளம் படுப்ப, |
பறை |
19-21 |
-
- - புரையும் விசிபிணி வேய்வை காணா விருந்தின் போர்வை அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றி, |
நீர்நிலை / இடம் |
23-24 |
எழிலி தோயும் இமிழ்இசை அருவி, பொன்னுடை நெடுங்கோட்டு, இமையத்து அன்ன |
விலங்கு |
25-28 |
ஓடை நுதல, ஒல்குதல் அறியா, துடிஅடிக் குழவிய பிடிஇடை மிடைந்த குவழ முகவை நல்குமதி- தாழா ஈகைத் தகைவெய் யோயே! |
பாடாண் திணை
புறம் : 266 துறை : மறக்களவழி
பாடியவர் : பரணர் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
காலம் |
1-2 |
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி, கயம் களி முளியும் கோடை ஆயினும், |
நீர்வாழ்வன / இடம் |
3-6 |
பழற்கால் ஆம்பல் அகல் அடை நீழல், கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்? |
விலங்கு |
7 |
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி! |
இடம் |
8-10 |
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன், ஆசு ஆகு என்னும் பூசல் போல, வல்லே களைமதி |
புறம் : 2374
துறை : பூவைநிலை
பாடியவர் : ஏணிச்சேரி முடமோசியார் பாடியது
கருப்பொருள்/ நிலம் |
பாடல் வரி |
பாடல் |
நிலம் / விலங்கு |
1-2 |
கானல் மேய்ந்து வியன்புலத்து அல்கும் புல்வாய் இரலை நெற்றி அன்ன |
காலம் |
4 |
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர் |
மரம் / பறை |
5-6 |
மன்றப் பலவின் மால்வரை |
|
|
|
முடிவுரை:
இவ்வாறு போர்க்குறிப்பை மட்டும் முக்கியமாகக் கருதாமல், கருப்பொருள், முதல் பொருள் குறிப்புகளையும் மையப்படுத்தி உருவாக்கும் தொகுப்பில் இப்போதுள்ள திணைக்குறிப்புகளும் துறைக்குறிப்புகளும் மாறிவிடுவதற்கும் வாய்ப்புண்டு. அதன் பின்னரே தொல்காப்பியத்திலிருந்து புறநானூற்றுப்பாடல்கள் விலகி நிற்கின்றனவா? ஒட்டிச் செல்கின்றனவா? எனக் கூற முடியும். புறப்பொருள் வெண்பாமாலையின் திணை, துறை விளக்கங்களை வைத்துக் கொண்டு அதனைச் சொல்வது பொருத்தமானது அல்ல என்ற முடிவை மட்டுமே இங்கு சுட்ட முடியும்.
கருத்துகள்