இடுகைகள்

செப்டம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிகரி விருது - அறிவிப்பும் பரிசளிப்பும்

படம்
நிகரி சமத்துவ ஆசிரியர் விருது வழங்கும் விழா 24.09.2013 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை ஆ.ரவிகார்த்திகேயன் வரவேற்றார்.சிறப்பான ஆய்வு இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் மணற்கேணி பல்வேறு ஆய்வரங்கங்களை இதற்கு முன் நடத்தியிருக்கிறது. ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விதமாகத் தற்போது எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டார்.

ஆண்மை அடங்கட்டும்

படம்
தினசரிக் காட்சி என்று சொல்ல முடியாது. எனது பணி இடத்துக்குச் செல்லும் வாகனத்தைத் தவற விடாமல் பிடித்து விடும் நோக்கத்தோடு சரியான நேரத்துக்கு வரும் ஒவ்வொரு நாளும் காணும் காட்சி என்று சொல்லலாம்.

காலத்தின் எழுத்தாளன்

படம்
இமையத்தின் பெத்தவன் கதை அண்மையில் தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்கப்பெற்றுள்ளது . தெலுங்கு- தமிழ்ச் சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பில்  பெத்தவன் கதை முப்பது பக்கங்களில் (464-493) மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளது. மொழி பெயர்த்துள்ளவர் புருஷோத்தம தாஸ். 20 கதைகள் அடங்கிய அந்தத் தொகுப்பில் பெத்தவன் கதை இடம் பெற்றுள்ளதும், திருப்பதி பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திற்கு ஏற்றுக் கொண்டுள்ளதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று.  தமிழ் நாட்டில் இதுபோல ஒரு பல்கலைக்கழகத்தில் உடனடியாகப் பாடமாக ஆகும் சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும்.

குகைமரவாசிகள் : திரும்பவும் முருகபூபதியின் அந்நிய எதிர்ப்பு நாடகம்

முருகபூபதியின் எல்லா நாடகங்களையும் பார்க்கும் வாய்ப்பு எப்படியோ கிடைத்து விடுகிறது. கவனிக்கபட வேண்டிய மாணவன் என்ற நிலையில் அவனது ஆசிரியராக நானே உருவாக்கிக் கொள்கிறேன் என்று கூடச் சொல்லலாம். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதன் மீதான விமரிசனங்களைப் பொறுப்புடனும் எழுதிக் கொண்டிருக்கிறேன். பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் அவன் தயாரித்த நாடகங்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதோடு நிறுத்திக் கொண்ட நான் தனித்த அடையாளம் கொண்ட நாடகக்காரனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு அவனது தயாரிப்புகள் அனைத்தையும் பார்வையாளர்கள் செலுத்தும் அக்கறையைத் தாண்டிய அக்கறையோடு சென்று பார்த்து வந்துள்ளேன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. நான் வார்சாவில் இருந்த காலத்தில் மேடையேற்றிய குகை மரவாசிகள் என்னும் நிகழ்வை இரண்டாவது சுற்றில் தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆகஸ்டு 31 இல் அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நான் அதிகம் நடந்து திரிந்த மணிக்கூண்டின் அருகில் பார்த்தேன். அந்த இடம் என் வாழ்நாளில் இளம்பருவத்தில் மூன்று ஆண்டுகளைத் தின்ற இடம். மண்சாலையில் ஓரத்தில் அமைக்கப் பெற்ற சிமெண்ட் திண்டில் உட்க