August 01, 2021

எழுதத்தூண்டும் கதைகள் –1


வாசித்து முடித்தவுடன், இதுபோன்றதொரு பனுவலை இதே வகைப்பாட்டில் வாசித்திருக்கிறோம் என்று தோன்றினால் அதைக் குறித்துக்கூட வைத்துக்கொள்ளத் தோன்றுவதில்லை. அதற்குப் பதிலாக அந்தப் பனுவலின் ஏதோவொரு புனைவாக்கக் கூறு புதியதாகத் தோன்றும்போது, அது என்ன? என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கான விடையைத் தேடித் திரும்பவும் பனுவலுக்குள் பயணம் செய்யும்போது, பனுவலுக்குள்ளிருக்கும் அந்தப் புத்தாக்கக் கூறும், அதன் வழியாகக் கிடைக்கும் அனுபவங்கள் அந்தப் பனுவலை விவாதிக்க வேண்டிய பனுவலாக மாற்றிவிடுகின்றன. அனுபவங்கள் என்பன விவரிக்கப்பட்ட நிகழ்வுகளோடு, புற வாழ்க்கையின் காட்சிகளும், தொடர்புகளும் ஒத்துப்போகும் தன்மையாக இருக்கலாம். முரண்படும் நிலைகளாகவும் இருக்கலாம். இவ்விரண்டிற்கும் அப்பால், பனுவலில் பயன்படுத்தும் மொழியும், மொழியைக்கொண்டு உருவாக்கப்படும் சொல்முறைகளாகக்கூட இருக்கலாம். இந்த மூன்று கதைகளில் வாசித்தவுடன் எழுதத்தூண்டிய கதை இளங்கோவன் முத்தையாவின்  முன்னை இட்ட தீ. ஹேமாவின் இறுதியாத்திரையும் தீபுஹரியின் தேன்கூடும் உடனடியாக எழுதத் தூண்டியன அல்ல.

July 31, 2021

பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை: தலித் சினிமாவிலிருந்து விளிம்புநிலை நோக்கி…

 
இயக்குநர் பா. இரஞ்சித்தின் ஐந்தாவது படமாக வந்துள்ள சார்பட்டா பரம்பரை உலகத்தமிழ் பார்வையாளர்களையும் தாண்டிப் பலராலும் கவனிக்கப்பட்ட சினிமாவாக மாறியிருக்கிறது. அப்படி மாற்றியதின் பின்னணியில் இயக்குநரின் முதன்மையான நகர்வொன்றிருக்கிறது. உலக அளவில் சினிமாப் பார்வையாளர்களுக்கு நன்கு அறிமுகமான    குத்துச்சண்டை சினிமா என்ற வகைப்பாட்டை, உள்ளூர் வரலாற்றோடு இணைத்துப் பேசியதே அந்த நகர்வு.  அதன் மூலம் தனது சினிமாவை, விளையாட்டு சினிமா என்ற வகைப்பாட்டிலிருந்து அரசியல் சினிமாவாகவும், விளிம்புநிலைச் சினிமாவாகவும் மாற்றியிருக்கிறார்.  அந்த மாற்றம், அவரைத் தலித் சினிமா இயக்குநர் என்ற முத்திரையிலிருந்து, பொதுத்தள சினிமா இயக்குநர் என்ற அடையாளத்திற்குள் நகர்த்தியிருக்கிறது. 

July 24, 2021

புலம்பெயர் எழுத்துகள்: வரலாறாக்கப்படும் புனைவுகள்

இலங்கையின் தமிழ்ப் பகுதியில் நடந்த போர்க்காலம் தொடர்ந்து புனைகதைகளாக எழுதப்படுகின்றன. போர் நிகழ்ந்த காலத்தில் வந்த எழுத்துகளைவிட, போருக்குப் பின் அந்தக் காலங்களை நினைவில் கொண்டு எழுதப்படும் புனைவு எழுத்துகள் - நாவல்களும் சிறுகதைகளும் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கின்றன. அதனை எழுதுபவர்களில் பெரும்பாலோர் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களாக இருக்கின்றனர்.

July 18, 2021

தமிழ்க்குடிதாங்கி: ஆய்வுக்கட்டுரையான ஆவணப்படம்

 


2011 - இல் மருத்துவர் .ராமதாஸ் அவர்களுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கும் ஆண்டுவிருதுகளில் ஒன்றான அம்பேத்கர் சுடர் விருதை வழங்கியது. அதற்கும் முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் அவரைத் தமிழ்க்குடிதாங்கி என்று பட்டம் வழங்கிப்பாராட்டினார்.

July 17, 2021

விரும்பித் தொலையும் இயக்குநர்கள்

 நாயக நடிகர் உருவாக்கம்

சிவாஜி X எம்ஜிஆர் என்ற எதிரிணையின் காலம் முடிந்து அரையாண்டுக்கும் மேலாகிவிட்ட து. அந்தப் போட்டியில் எம்.ஜி.ஆரே வென்றவராக – நட்சத்திர நடிகராக வலம் வந்தார். அடுத்து உருவான ரஜினி X கமல் போட்டியில் வென்றவர் நடிகர் ரஜினிகாந்த்.   நீண்ட காலமாக ரஜினி, உச்ச நடிகராக (Super Star) வலம்வர அவருக்கு உதவியவர்களின் வரிசையில் பல இயக்குநர்கள் இருந்தார்கள்.

July 11, 2021

மாடத்தி: மாற்று சினிமாத்திசையிலொரு பயணம்


இந்தியாவின்/தமிழ்நாட்டின் தென் மாவட்டக்கிராமம் ஒன்றின் காவல் தெய்வமாக விளங்குவது மாடத்தி. புதிரை வண்ணார் சாதியைச் சேர்ந்த யோசனா என்னும் பதின் வயதுப் பெண், மாடத்தி என்னும் தெய்வமாக – காவு வாங்கிய துடியான தெய்வமாக ஆன கதை, வாய்மொழி மரபில் சொல்கதையாக இருக்கிறது. அக்கதைக்குப் பின்னால் இருந்த சாதி ஒதுக்கலையும், ஒதுக்கப்பட்ட சாதிப் பெண்கள் மீது ஆண்கள் செலுத்தும் பாலியல் வன்முறையையும் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறது லீனா மணிமேகலையின் மாடத்தி.