இடுகைகள்

மே, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு பாடல்

எட்டுத் திக்கும் மதயானை

படம்
போருக்குப் பல கட்டங்கள். கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளோடு போராடும் போரை நான் சொல்லவில்லை. கண்ணுக்குத் தெரியாத பண்பாட்டு வெளிகளில் நடக்கும் போர்களின் கட்டங்களையே இங்கு குறிப்பிடுகிறேன். இன்றைய தேதியில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் ஒற்றை எதிரி யாராக இருக்க முடியும்? தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றியும், தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவம் பற்றியும் அறியாமல் தான் தோன்றித்தனமாக கருத்து சொல்லும் பெண்களாக இருக்கமுடியும். கருத்துச் சொல்பவர்கள் மட்டுமல்ல; நடந்துகொள்பவர்களும்கூட.  அப்படி நடந்துகொண்டவர் ஸ்ரேயா என்னும் நடிகை. 

அமானுஷ்யத்தின் அடிப்படைகள்:தளவாய் சுந்தரத்தின் சாவை அழைத்துக் கொண்டு வருபவள்

கடவுள் அல்லது தெய்வம் உண்டா? இல்லையா? என நடக்கும் விவாதம் போலவே பேய்கள் அல்லது பிசாசுகள் உண்டா? இல்லையா? என்ற விவாதமும் தொடரும் நிகழ்வாகவே இருக்கிறது. இவ்விரு விவாதங்களுக்கும் இடையில் பலவிதமான ஒற்றுமைகள் இருந்த போதிலும் அடிப்படையான வேறுபாடும் உண்டு.

நம்பிக்கைகள் சிதையும் தருணங்கள்:எக்பர்ட் சச்சிதானந்தத்தின் தேவனுக்குரியதை தேவனுக்கும் ராயனுக்குரியதை ராயனுக்கும்..

ஒரு மாதத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட நித்தியானந்தப் புயல், சாதாரண மக்களின் பொதுப்புத்தியிலிருந்து நகர்ந்து விட்டது. ஆனால் நமது ஊடகங்கள் அதன் மர்மமுடிச்சுகளை இன்னும் அவிழ்ப்பதாகப் பாவனை செய்து கொண்டே இருக்கின்றன. தேர்ந்த மர்மத்திரைப்பட இயக்குநர் அடுத்தடுத்து ரகசியங்களை அவிழ்த்துப் பரவசப்படுத்துவதுபோல காட்சிகளை விரித்துக் கொண்டிருக்கின்றன தமிழகத்து ஊடகங்கள்

சாதியெனும் பீனிக்ஸ் பறவை : சுப்ரபாரதி மணியனின் தீட்டு

இது இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கத்தி. இதுவும் அதுவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நாணயம், கத்தி இரண்டு வார்த்தைகளையும் குறியீடாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர்களைப் பழமொழிகள் என்று சொல்ல முடியாது. மரபுத் தொடர்கள் எனக் கூறலாம்.