மே 30, 2021

நவம்பர் கதை : நடப்பியல் நடிப்பின் வலிமை

 

”தமன்னாவின் வீட்டில் ரெய்டு” என இணையப்பக்க விளம்பரமாக வரும் இணையத்தளத் திரைத் தொடர் கதைப்பின்னல், விடுவிப்பு என்ற அடிப்படையில் துப்பறியும் கதை. எல்லாத் துப்பறியும்/குற்றவிடுவிப்புக் கதைகளின் தன்மையில் இருப்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்கிறது.

இரண்டு எதிர்வுகளும் பொதுப்புத்தியின் நகர்வுகளும்

பத்மசேஷாத்ரியின் ஆசிரியர் ராஜகோபாலன் x அப்பள்ளியின் மாணவிகள் - இது ஒரு எதிர்வு
பாடலாசிரியர் வைரமுத்து x பாடகி சின்மயி. இது இன்னொரு எதிர்வு

மே 29, 2021

தில்லையின் விடாய்: உடலரசியலின் வெளிப்பாடுகள்

 


அவன்

தூங்கிக் கொண்டிருக்கும்

ஒவ்வொரு நொடிக்கும்

என் நெஞ்சில் புடைத்து எழுகின்ற

வலியைப் பொத்திக்கொண்டு

நான் உயிர்க்கின்றேன்

 

மே 28, 2021

பத்மசேஷாத்ரியும் அதன் தொடர்ச்சியும் : சில குறிப்புகள்

நான்கு குறிப்புகள்
1. பாலியல் கல்வி: உடனடித்தேவை
2. விதிகள்: மாற்றமும் மாற்றமின்மையும்
3. முன்னோடியாக இருப்பதின் சூட்சுமம்
கிறித்தவப்பள்ளிகளே மாதிரிகள். ஆனால் 

மே 27, 2021

கவிதைப் பொருள்கொள்ளல் - சில குறிப்புகள்

கூற்று அல்லது மொழிதல்

கவிதை வாசகர்கள் எப்போதும் இருக்கவே செய்கிறார்கள். இரண்டாவது அலையின் தனிமையில் -கடந்த இரண்டு மாதங்களில் 50 -க்கும் அதிகமான கவிகளின் ஒரு கவிதையை முகநூலில் பதிவேற்றம் செய்கிறேன். அந்தந்தக் கவிகளின் ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்று என்பதாக நான் நினைக்கும் கவிதையல்ல. அதே நேரத்தில் கவிதையின் சிறப்புகளில் ஏதாவதொன்றைக் கொண்டதாக நான் நினைக்கும் கவிதைகளில் ஒன்றாக இருக்கும். என்னிடமிருக்கும் கவிதைத்தொகுப்புகளிலிருந்து அதனைத் தெரிவு செய்கிறேன். அப்பதிவேற்றத்தில் ஒரு தொகுப்புப் போட்டவர்களின் கவிதைகளும் உண்டு ஓராயிரம் கவிதைகள் எழுதியவர்களின் கவிதைகளும் உண்டு.

மே 24, 2021

தலித் பெண்ணிய நோக்கில் சிவகாமி, பாமா நாவல்கள். பொதுவும் சிறப்பும்


இலக்கியம் தன்னளவில் ஒரு பொதுப்பெயராக நிற்கும்வரை அதன் வாசகக் கூட்டமும் பொதுநிலைப்பட்டதாகவே  இருந்துவிடும். அப்பொதுப் பெயர், இந்திய இலக்கியம், லத்தீன் அமெரிக்க இலக்கியம், அமெரிக்க இலக்கியம்,  எனத் தேசஞ்சார்ந்த அடையாளத்தை, அல்லது பண்டைய இலக்கியம், இடைக்கால இலக்கியம், இக்கால இலக்கியம் எனக் காலஞ்சார்ந்த அடையாளத்தை, அல்லது நாடக இலக்கியம், காப்பிய இலக்கியம், தூது இலக்கியம் என இலக்கிய வகை சார்ந்த அடையாளத்தைப் பெறுகிற போது காரணப் பொதுப்பெயராக ஆகி விடும். அப்போது அதன் வாசக எல்லை பொதுநிலைப் பட்டதாகவே இருந்திட வாய்ப்புண்டு. அதே போல , அக இலக்கியம், பக்தி இலக்கியம், நீதி இலக்கியம் எனச் சிறப்புப் பெயரைத் தாங்கிவிடும்போது கூட அவற்றின் வாசகர்கள் ‘பொதுவானவர்களே’ என்று ஒருவர் வாதிடவும் கூடும். அந்த வாதங்களுக்குச் சாதகமான காரணங்கள் நிறையச் சொல்லி விட வாய்ப்புகளுமுண்டு. ஆனால், வர்க்க இலக்கியம், கறுப்பு இலக்கியம், பெண்ணிய இலக்கியம், விளிம்புநிலை இலக்கியம் எனக் காரணச் சிறப்புப் பெயராக ‘ இலக்கியம்’ மாறிவிடும்பொழுது அவற்றின் வாசக நிலையிலும் குறிப்பான எல்லைகள் உருவாகிடக் காரணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ‘ தலித் இலக்கியம்’ என்ற சொல் ஒரு காரணச் சிறப்புப் பெயர். அதிலும் தலித் பெண்ணிய இலக்கியம் இரண்டு சிறப்புகளை இலக்கியத்தின் முன் அடையாகச் சேர்த்துக் கொண்டுள்ள ஒரு சொற்கூட்டம்.

மே 15, 2021

தேவசீமாவின் வைன் என்பது குறியீடல்ல:

 எல்லாவகை இலக்கிய வகைமையும் தொகுப்பாக வாசித்து முடிக்கும்போது ஒரேவிதமான இலக்கிய நுட்பங்களை வாசிப்பவர்களுக்குத் தருவதில்லை. கவிதை எப்போதும் உணர்வுகளையும் கவிதை சொல்வதற்கான கூற்றாளர்/ உரைப்பவரின் த்வனியையும் முன்வைக்கும். புனைவுகளோ பாத்திரங்களின் இருப்பையும் நோக்கங்களும் வளர்சிதை மாற்றங்களையும் முன்வைக்க முனையும். அதிலும் சிறுகதைகள் உருவாக்கப்படும் புனைவுப்பாத்திரங்களின் முடிவெடுக்கும் கணத்தைத் தீட்டிக்காட்டுவதை முதன்மையாக நினைக்கும். இன்னொரு புனைவு வடிவமான நாவலோ பாத்திரங்களின் பின்னணிகளை - காலத்தையும் வெளியையும் விரிவாக்கித்தருவதில் கவனம் செலுத்தும். நாடகங்களோ எப்போதும் கருத்தியல் அல்லது மனவியல் முரண்பாடுகளைக் காட்டுவதையே செய்கின்றன

மே 14, 2021

ஒரு கதையும் முப்பத்தியோரு நுண்கதைகளும்

 கிராமிய வாழ்வின் உள்ளடுக்குகள்

================================
தனிமனித அந்தரங்கத்திற்குள் அலையும் காதல், காமம், கடவுள், என்ற மூன்றையும் அதனதன் இருப்போடும் உளவியல் கோணங்களோடும் எழுதப்பெற்றுள்ள இந்தக் கதை நீண்ட இடைவெளிக்குப் பின் வாசித்த நல்லதொரு கதை. வாசித்து முடித்தபின் எழுந்த எண்ணங்களும் நினைவுகளும் இந்தியக் கிராமிய வாழ்விற்குள் சாமியாட்டங்களுக்கும் பூசாரிப்பொறுப்புகளுக்கும் திரள் மக்களின் நம்பிக்கைகளுக்கும் இருக்கும் பிணைப்பைத் தீவிரமாகச் சொல்லும் புனைவொன்றை வாசித்த அனுபவமாக நிறைந்தது.

மே 11, 2021

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

இந்தியத்தன்னிலை உருவாக்கம்


பிராமணியத்தன்னிலையைக் கைவிடுதல் இங்கு பலருக்கும் முடியாத ஒன்றாக இருக்கிறது. பிறப்பின் வழியாகவே பிராமணர்கள் என நினைத்துக் கொள்பவர்களுக்கும், வேறு வர்ணத்தில் பிறந்து பிராமணியத்தன்னிலை நோக்கிப் பயணிப்பதாக நினைப்பவர்களுக்கும் நிகழ்காலப் பகையாக இருக்கும் பெயர் ஈ .வெ. ராமசாமி. நீண்டகாலப் பகையாக இருக்கும் பெயர் கௌதம புத்தர்.