மே 31, 2020

அனோஜனின் புனைவு உலகம்

சமநிலை பேணும் குடும்ப அமைப்பு 
================================== 
ஆதிக்கம் செய்தல், அடங்கிப்போதல் என்ற இரட்டை நிலைகள் எப்போதும் ஒருபடித்தானவை அல்ல. இவ்விரண்டுக்குமே மாற்று வெளிப்பாடுகள் உண்டு என்பது தனிநபர் உளவியலும் சமூக உளவியலும் பேசும் சொல்லாடல்கள். போலச் செய்யும் மந்திரச்சடங்குகளில் கூட ஆதிக்கத்திற்கெதிரான மந்திரச் சடங்குகள் உண்டு எனப் பேசும் மானிடவியல், அதிகாரத்தின் குறியீட்டைக் கேலிசெய்தும், இழிவுசெய்தும் ஏவல்கள் செய்து திருப்தி அடைவதுண்டு எனப்பேசுகிறது. 

மே 25, 2020

போரும் புலப்பெயர்வும்: மூன்று கதைகள்

நேர்கோட்டில் சொல்லிப்போகும் கதை: ஷமீலா யூசுப் அலியின் கிணறு 

 

================================================================= 

கதை கதையாம்.. காரணமாம்..காரணத்தால தோரணமாம்.. .

தோரணம் கட்டிய பந்தலும் எதுக்கு..?பூரணகும்பம் எடுப்பதும் எதுக்கு 

 

இப்படியொரு சிறுவர் பாடல் உண்டு. இந்தப்பாடலில் வரும் தோரணத்துக்குப் பதிலாக வெவ்வேறு சொற்களைப் போட்டு அவரவர்கள் உருவாக்கிக் கொண்ட மாற்றுப்பாடல்களும் உண்டு. எங்கள் ஊரில் தோரணத்துக்குப் பதிலாக ஊருணி என்றொரு சொல்லைப்போட்டு உருவாக்கிய

கதைகதையாம் காரணமாம்.. காரணத்திலெ ஊருணியாம்.. ஊருணியில ஒழக்குத்தண்ணியாம்.. ஒழக்குத்தண்ணியில கெழுத்தி மீனாம்.. என்று பிள்ளைகள் பாடுவார்கள்.” 

கொரோனாவோடு வாழ்ந்தது -மே மாதம்

 கொரொனா ஞாயிறு 

 

பல்கலைக்கழகப் பணியில் இருந்த காலத்துப் பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றாக மாறிக் கொண்டிருக்கின்றன என்றாலும், இந்த வாரக்கடைசி வாழ்க்கை(weekend life) ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை

மே 20, 2020

கவிதைகள் வாசிக்கும் தருணங்கள்


தொடர்ச்சியாக வேலைகள் இருக்கும்போது வாசிக்கவே முடியாமல் போய்விடும். கடந்த 10 நாட்களாகத் தினசரித்தாள்களைக் கூடப் புரட்டிவிட்டு வைத்துவிடும் அளவுக்குப் பல்கலைக்கழக வேலைகள்.தொடர்ச்சியாக நிகழ்வுகள் ஏற்பாடுசெய்து முடிக்கும்போது ஏற்படும் அலுப்பு தீரவேண்டுமென்றால் நான் காணாமல் போகவேண்டும். இருக்கும் இடத்திலேயே நான் தொலைந்து போக வேண்டுமென்றால் இன்னொரு வெளியை உருவாக்கி அதற்குள் நுழைந்துகொள்ளவேண்டும். அதைச் செய்வதில் கவிதைகள் எப்போதும் உதவியாக வந்து நிற்கின்றன- வேலைகளிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும்போது வாசிப்பதற்குக் கவிதையே ஏற்ற ஒன்று. அப்படியான கவிதைகளைத் தமிழில் எல்லாரும் எழுதிவிடுவதில்லை. குறிப்பான மனிதர்களை -அவர்களின் சிடுக்குகளையும் அழுத்தப்படும் நிலைகளையும் சொல்லும் கவிதைகள் வாசிப்பவர்களை இன்னொரு மனிதர்களாக மாற்றி அவர்களின் வலியையும் நம்மீது சுமத்தித் தத்தளிக்கச் செய்துவிடும்.அதற்கு மாறான கவிதைகளும் அவற்றை எழுதும் கவிகளும் தமிழில் இருக்கிறார்கள்.

மே 18, 2020

கடவுளும் காமமும்- உமையாழின் மூன்று கதைகள்எழுதப்படும் இலக்கியப் பனுவல்கள் எழுதியவருக்குச் சில அடையாளங்களை உருவாக்கித் தருகின்றன. உருவாக்கப்படும் அடையாளங்களுக்குக் காரணமாக இருப்பதில் முதல் இடம் எதை எழுதுகிறார்கள்? என்பதாகத் தான் இருக்கும். அதனைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல நேர்ந்தால் யாரை எழுதுகிறார்கள் என்பதாக மாறிவிடும். இதற்குப் பின்பே எப்படி எழுதுகிறார்கள்? என்பது வருகிறது. எதை அல்லது யாரை என்ற கேள்விக்கான விடையைக் கண்டுசொல்ல நினைக்கும் திறனாய்வு, எழுத்திற்குள் அலையும் பாத்திரங்களையும், உடல் மற்றும் மன ரீதியான அலைவுகளையும் முன்வைத்துப் பேசுகிறது. இதனைச் சரியான இலக்கியத்திறனாய்வுக் கலைச்சொல்லால் குறிக்க வேண்டுமென்றால் ‘உள்ளடக்கச் சொல்லாடல் (Content Discoruse)’ எனக் குறிக்கலாம். உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தை விவரிக்கும்போதுதான் ‘எப்படி எழுதுகிறார்கள்?’ என்பதைப் பேச நேரிடுகிறது. அந்தப் பேச்சு, எழுதுபவர்கள் பயன்படுத்தும் கருவிகளைப் பற்றிய பேச்சுகளாக மாறிவிடும். அதனைக் குறிக்கும் கலைச்சொல்லாக வடிவச் சொல்லாடல் (Structural Discourse) என்பது பயன்பாட்டில் இருக்கிறது. வடிவச்சொல்லாடல் தான் இலக்கிய நுட்பங்களைக் கண்டறிந்து விதந்து பாராட்டுகிறது. சொல் முறைமைகள், மொழிப்பயன்பாடுகள், இவற்றின் வழியாக உருவாக்கப்படும் புலனீர்ப்பு விளைவுகள்,நம்பகத்தன்மை போன்றனவே வடிவச் சொல்லாடல்களாக விரிக்கப்படுகின்றன. 

மே 12, 2020

வாசித்த கதைகளும் காரணங்களும்

வாசிப்பின் காரணங்கள்

கண்ணில் படும் எல்லாக்கதைகளையும் வாசிப்பதுமில்லை; வாசித்த கதைகள் எல்லாவற்றையும் விவாதிப்பதும் இல்லை. சில கதைகளை வாசித்தபின் எழுதத்தோன்றும். எழுதிய குறிப்புகள் முகநூல் ஓட்டத்தில் காணாமல் போயிருக்கின்றன. சிலவற்றைத் தொகுக்கமுடிந்துள்ளது. முகநூலில் நான் எழுதிய குறிப்புகளை இந்தப் பக்கத்தில் படிக்கலாம்.சில கதைகளைச் சொல்முறைக்காகப் பேசியிருப்பேன்; சில கதைகளைப் பாத்திர முன்வைப்புக்காகப் பேசியிருக்கலாம்; சில கதைகளை அவை எழுப்பும் உணர்வுநிலைக்காகப் பேசியிருப்பேன். சில கதைகளின் விவரிப்பு நுட்பங்களுக்காகவும் பிடித்திருக்கும். 
வாசிக்கப்பட்ட கதைகள்
------------------------------------------------
ஜெயமோகனின் ஒரு கோப்பை காபி
இமையத்தின் தாலிமேல சத்தியம்
வண்ணதாசனின் அதற்குமேல்
இரா,முருகவேளின் சர்ரியலிச இரவு
வா.மு.கோமுவின் ஒரு காதல் கதை
கலாப்ரியாவின் தனுக்கோடி

மே 11, 2020

புறமாகவும் அகப்புறமாகவும்- கருணாகரனின் கவிதைகளுக்குள் ஒரு பயணம்


தொடர்ச்சியாகக் கவிதை வடிவத்தைத் தனது முதன்மையான வெளிப்பாட்டு வடிவமாகக் கொண்டிருக்கும் கவி. கருணாகரன். அவரது மூன்று கவிதைகளை யாவரும் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தலைப்புகளின்றி- கருணாகரன் கவிதைகள் – எனப் பதிவேற்றம் பெற்றுள்ள அம்மூன்று கவிதைகள் உருவாக்கும் உணர்வுகள் அதற்குள் இருக்கும் காலப்பின்னணியால் அர்த்தம் கொள்கின்றன . 

மே 05, 2020

தலைப்புப் பொருத்தம் தேடி ஒரு வாசிப்பு


விடுமுறைதினத்தில் ஓர் அனார்க்கிஸ்ட் கதையை முன்வைத்து 

சில பனுவல்களின் தலைப்பு உருவாக்கும் ஆர்வம் காரணமாக வாசிப்பு ஆரம்பமாகும். அப்படி ஆரம்பிக்கும் ஆர்வம், தலைப்புக்கான பொருத்தம் அல்லது தொடர்பு எங்கே இருக்கிறது தேடிக்கொண்டே வாசிக்கத் தொடங்கும். ஒற்றைச் சொல்லாக - பெயராகவோ, பெயர்ச்சொல்லாகவோ - இருக்கும் தலைப்புகள் அப்படியொரு ஆர்வத்தைத் தூண்டுவதில்லை. உருவகமாகவோ, குறியீடாகவோ, படிமமாகவோ அமையும் தலைப்புகள் கவிதைக்கான தலைப்புகளாக இருந்து வாசிப்பின்பத்தைக் கூட்டும். கதைகளிலும் கூட சில தலைப்புகள் ஆரம்பத்தில் நேர்ப்பொருளிலிருந்து விலகிச் சூழலில் வேறுவிதமான அர்த்தங்களுக்குள் வாசிப்பவரை நகர்த்திக் கொண்டு போவதுண்டு.