இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மழையும் மழைசார்ந்தனவும் -10

படம்
மழை 100 என முடிக்க நினைத்த இந்தத் தேடல் 102 உடன் முடிந்துள்ளது. வசனகவிதை, புதுக்கவிதை, நவீனக்கவிதை என அறியப்பட்டுள்ள வடிவத்திற்குள் இப்படியான 100, 100 ஆக வெவ்வேறு தலைப்புகளில் வகைப்பிரித்துக் காட்டுவதின் மூலம் தமிழ்க்கவிதைகளை வாசிக்கமுடியும். கடைசிப்பத்தில் சுகுமாறன், ஈழவாணி,செல்மா பிரியதர்ஸன், அய்யப்ப மாதவன், பெருமாள் முருகன், எஸ்.செந்தில்குமார், ஸர்மிளா செய்யித், வா.மணிகண்டன், இளங்கோ கிருஷ்ணன், பொன்.வாசுதேவன், நிலா ரசிகன், சுகிர்தராணி ஆகியோரின் 12 கவிதைகள்.

மழையும் மழைசார்ந்தனவும் -9

படம்
இந்தப்பத்தில் (81-90) நரன்,கடற்கரய், மீனாமயில், வண்ணநிலவன், எஸ்.வைத்தீஸ்வரன், லீனா மணிமேகலை, பாலகணேசன், யோகி, கி.பி அரவிந்தன், பாரதியார் எனப் பத்துப்பேரின் மழைக்கவிதைகள்.

மழையும் மழைசார்ந்தனவும்-8

71/ நீர் 1. கண்கள் கலங்கி முகமே குளமான நீர்நிலை ஆழம் காண மூழ்குகிறேன் இரவில் அமிழ்ந்து தரைபடிந்த நிலாவில் பாதம் பதிய வசதியாகத் தியானத்தில் அமர்ந்து விடுகிறேன் தியானவெளியாகவும் மையப்போதமாகவும் குளம் ஆனால் இது அந்தரத்தில் மிதக்கிறது. 2 மழையைப்போல நீ எனக்கு எல்லாம் தந்தாய் 3 தூறலாய்த் தொடங்கி படிப்படியாக வலுத்து ஒவ்வொரு இழையாக இணைத்து சலசலவென ஓடோடி தியானத்தின் உச்சியிலிருந்து உன்னை அவிழ்த்துக் கொண்டிருக்கிறாய் அருவி 4. நீ நடந்துசெல்லும் பாதையெல்லாம் ஈரம் அது உனது பண்பு என் உடலெங்கும் பலவாகி ஓடுவது ஒரேவொரு அறு 5 கடலைப்போல ஒரு உடல் நீ கவிதையைப்போல ஒரு கடல்நீ 6. குளம் மழை அருவி ஆறு கடல் எல்லாம் நீ இப்பெயர்களில் பொருந்தும் வடிவம் நான் 7 குளம் தியானம் மழை குதூகலம் அருவி கொண்டாட்டம் ஆறுதிருவிழா கடல்கலவி எல்லாம் மனசெனச் சுழலும் ஒரு துளி 8 மழையைப்போல நீ எனக்கு எல்லாம் தந்தாய் ================================================== ரமேஷ் -பிரேம் /கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 262 72   அடைமழையின் அமைதி பெருமழையின் ஆக்ரோஷம் அடிமனத்தின் ஆழத்தில் ஆனந்

மழையும் மழைசார்ந்தனவும் -7

61 மழை நின்றபின் போயேன் என்றாள் மறுபடியும் அம்மா நிற்பதாயில்லை மழை இருப்பு கொள்ளாமல் இங்கும் அங்குமாய் வீட்டுக்குள் உலவினேன் துளியில் தொடங்கி துளியில் முடிக்கும் எளிய கலையை களைப்பின்றி மேற்கொண்டிருந்தாள் மழைத்தேவதை நெடுநேரத்துக்குப் பின் போய்வருவதாய்க் கூறி வாசலுக்கு வந்தேன் மழை நின்றபின் போயேன் என்றாள் மறுபடியும் அம்மா சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறத் தெரியாத பிள்ளையாய் இருப்பதை எண்ணி ஆத்திரமடைந்தேன் விருட்டென்று எழுந்து வெளியேறியபோது ஸ்தம்பித்தார்கள் மழையும் அம்மாவும் அம்மாவின் கண்களில் வளர்ந்தது ஆகாய நீலம் கருவிழிகளில் கார்மேகத்திரள் மழை. அரவமின்றி இடம் மாறியிருந்தது. துளித்துளியாய் அடுத்த பாட்டம் பொழியத்தொடங்கியது என் வயதுகள் கரைந்து வாசலில் வழிந்தன இறுதித்துளியை நோக்கி உருகும் பனிக்கட்டியாய் என் சரீரம் குலுங்கியது மழை நின்றபின் போயேன் என்றாள் மறுபடியும் அம்மா சுவரில் மாட்டியிருந்த புகைப்படமொன்றில் அடைமழையைப் பார்த்து விடாது சிரித்துக்கொண்டிருந்தார் அப்பா. ஜெ.பிரான்சிஸ் கிருபா/ கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 395 62/நீரின்றி அமையாது உலகு   மழை

மழையும் மழைசார்ந்தனவும் -6

படம்
 மழையை நினைத்துக்கொள்ளுதல் என்பது மழையின் காலத்தை நினைத்துக்கொள்ளுதல் தான். மழையின் காலம் என்பது ஈரத்தின் காலம் . ஈரத்தை விரும்புவதும் வெறுப்பதுமான மனநிலையில் மழை பெய்யத்தொடங்குகிறது. இது ஆறாவது பத்து. இப்பத்தில் யாழன் ஆதி மண்குதிரை சித்தாந்தன் அப்பாஸ் குமரகுரு பூமா ஈஸ்வரமூர்த்தி பொன்.தனசேகரன் மனோமோகன் அன்பழகன் செந்தில்வேல் கோ.நாதன் ஆகியோரின் மழைக்கால நினைவுகள் குறித்து வாசிக்கலாம்

மழையும் மழைசார்ந்தனவும்-5

படம்
மழை என்பது மழை மட்டுமல்ல. மழை சாரலாகவும் தூறலாகவும் பொழிவாகவும் அழிவாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது. மழை மனதிற்குள்  ஈரமாகவும் நேசமாகவும் காதலாகவும் காமமாகவும் மாறுகிறது. வெக்கையை உருவாக்கிப் பிரிவைப் பரிசளிக்கிறது. ஐந்தாம் பத்தில் நீலகண்டன், பரமேசுவரி, தூரன் குணா, சாய் இந்து, அலறி, கல்பனா, பெண்ணியா, காலபைரவன், த.அரவிந்தன்  எனப் பத்துப்பேரின் கவிதைகள்

மழையும் மழைசார்ந்தனவும் -4

படம்
ஐப்பசி, கார்த்திகை தமிழ்நாட்டின் மழைக்காலம். ஐப்பசி பேஞ்சு பொறக்கணும்; கார்த்திகை காஞ்சு பொறக்கணும் என்பது சின்ன வயசில் கேட்ட சொலவடை. காலமாற்றத்தில் மார்கழி  கொட்டும் மழையோடு பிறக்கிறது. நிலவெளியையும் அதன் இருப்பையும் அங்கு வாழும் மனிதர்களின் நெருக்கடிகளையும் எழுதும் எழுத்துகள் எப்போதும் கவனத்துக்குரியன. மழையும் மழைசார்ந்தனவும் கவனத்துக்குரியனவாக இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

மழையும் மழைசார்ந்தனவும்- 3

படம்
மழைக்குப் பால் வேறுபாடு உண்டா? கவிதை எழுதும் பெண்கள் வேறுபட்ட மனநிலையையே வெளிப்படுத்துகிறார்கள். இந்த மூன்றாவது பத்தில் 4 பேர் பெண்கள். அவர்களின் கவிதைகளில் வெளிப்படும் உணர்வுகள் வேறானவை.   சுஜாதா செல்வராஜு, கடங்கநேரியான், வெயில், கலாப்ரியா, போகன் சங்கர், தர்மினி, அனார், தமிழச்சி, சிபிச்செல்வன், ரமேஷ் பிரேதன் கவிதைகளுக்குள் மழையை வாசித்துப்பாருங்கள்

மழையும் மழைசார்ந்தனவும் -2

இரண்டாவது தொகையாக பத்துக் கவிகளின் - குட்டி ரேவதி, ராஜசுந்தரராஜன்,சமயவேல், ஆதவன் தீட்சண்யா, மகுடேசுவரன், தீபச்செல்வன், நேசமித்திரன், பா.செயப்பிரகாசம், ரியாஸ் குரானா, திருமாவளவன்-    கவிதைகளை வாசிக்கலாம். 

மழையும் மழைசார்ந்தனவும் -1

படம்
2023 நவம்பர் கடைசி வாரத்தில் தொடங்கியது மழை. மழை, பெருமழையாகி, தொடர்மழையாக, கடும் தாக்குதலை நடத்திவிட்டுக் கடந்தபோது சென்னையின் பாதிப்பைக் கணக்கிட முடியாத நிலை. இப்போது தென்மாவட்டங்களில் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. இதேமாதிரியான தொடர்மழையைத் தமிழகத்தின் வடபகுதியும் தென்பகுதியும் 2015 இல் சந்தித்தன.   சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருந்த 2015, டிசம்பர் முதல் வாரத்தின் கடைசி நாளில் -டிசம்பர் 7- கடலும் மழையும் கனவாகவும் நினைவாகவும் மாறிக் கொண்டிருந்தன. கடலால் மழையா? மழை போய்ச்சேருமிடம் கடலா? என்ற எண்ணம் எனக்கு மட்டுமல்லாமல் தமிழகத்தின் எண்ணமாக மாறியது. சுந்தரராமசாமியின் 107 கவிதைகள் தொகுப்பையெடுத்து வாசித்துக் கொண்டிருந்தபோது அந்தக் கவிதையைத்தாண்டிப் போகமுடியவில்லை. கவிதையின் தலைப்பு: கடலுக்குத் தெரியாது.

தீர்க்கவாசகன் கவிதைகள்

கட்டுரை மனம் என்னுடையது. ஆனால் விரிவாக அமர்ந்து எழுதமுடியாத கட்டுரைகளைக் கவிதை வடிவத்திற்குள் அடைத்துவிடவும் முயற்சிசெய்வேன். அந்த வகையில் எனது கவிதைகள் எப்போதும் புறம் சார்ந்த நிகழ்வுகளை விவரிப்பனவாகவும் விமரிசனம் செய்வனவாகவும் இருக்கின்றன. 

சிலிர்ப்புகள்

சிலிர்ப்பு-4 --------------- ஞாயிற்றுக்கிழமைப் பின்மதியத் தூக்கத்தின் தொடர் கனவுகள் இன்னொரு ஞாயிற்றுக்கிழமைப் பின்மதியக் கனவில்  தொடரும் போடுகிறது.

மழைக்காலப் பாடல்கள்

இந்தவருடத்து மழை என்னைக் கவிதைகள் எழுதவைத்துவிட்டது நன்றி மழைக்கு---

உதிர்வது உத்தமம்

அற்றைத்திங்கள் வலியின் துயரம் சுமந்த கருவறை வாசனை முகர்ந்து சொல்ல முடிந்தது. புன்னகை கசியும் எளிமையும் தோற்றம் இவளெனச் சொன்ன முன்னோன் நாவை ரசிக்க முடிந்தது. மாற்றுக் கருத்தின் களம் ஒன்று கண்டு விரித்துப் பரப்பி விசும்ப முடிந்தது. விலக்கி வைக்கப்பட்ட கனிகள் ருசிக்கும் நாவின் ருசியை உணர முடிந்தது. இற்றைத்திங்கள் ரகசியக்குறிகள் விரைக்கும் வேகம் அறிய முடிகிறது. அதிகாரத்தின் வேர்கள் பரவும் வழிகள் சொல்லத்தெரிகிறது பணத்தின் மதிப்பும் உறையும் வெளியும் ஆழ்கடல் எனினும் துடுப்புகள் உண்டு. துரத்திச் செல்லும் வலிமையும் உண்டு. எதிரிகள் கூட்டம் எழுந்து வந்தால் வலிமை காட்டிட இனமென்னும் துருப்பு என் வசம் உண்டு, அவ்வெண்ணிலவில் கவியுணர் கனவும் கலைக்கும் ஆற்றலும் இருந்தன அறிவேன். இவ்வெண்ணிலவில் உருவேற்றிய பிம்பம் இனியுமெதற்கு? உதிர்வது உத்தமம். 

ஒரு பாடல்

தீர்க்கவாசகன் கவிதைகள்-2

கறுப்பின் பயணம்