இடுகைகள்

பிப்ரவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிரித்துக் கொள்ள சில மணித்துளிகள்: அசோகமித்திரனின் சங்கமம்

குடியிருந்த வீடுகளின் கதை- பல ஊர்களுக்கும் மாறுதல் பெற்று வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஒரு அரசாங்க ஊழியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதி. வாடகை வீடு தேடுவதும், வீட்டு உரிமையாளரின் கட்டு திட்டங்களைக் கேட்டு மனதைக் கெட்டியாக்கிக் கொண்டு முன்பணம் கொடுத்துச் சாவி வாங்கிக் குடியேறுவதும், நடுத்தர வர்க்க வாழ்க்கையில் பிரிக்க முடியாத சோக சித்திரங்கள் என்பதை விலாவரியாக அவர்கள் சொல்வார்கள். அத்தகைய சோக சித்திரங்களுக்குள் வாய்விட்டுச் சிரிக்கும் நாட்கள் இருந்ததா ? எனக் கேட்டால் , நிச்சயம் இல்லை என்றே பல பேர் சொல்லக் கூடும். 

நான் வாழுகின்ற நகரம்

(உணரப்படாதவரை எதுவுமே சிக்கல் இல்லை ) திருநெல்வேலிக்கு நான் முதன் முதலில் போனது 1982 -இல் என்பது எனது நினைவு.மக்கள் சிவில் உரிமைக்கழகம் ( பியூசிஎல்) தொடுத்திருந்த ஒரு வழக்கு நிதிக்காக ஞாநி எழுதிய பலூன் நாடகம் போட , மதுரை நிஜநாடக இயக்க நடிகனாக அங்கு போயிருந்தேன். திருநெல்வேலிக்குப் போகிறோம் என்று நினைத்தவுடன் அப்பொழுது பேச்சிலும் நினைப்பிலும் வந்த வார்த்தைகள் நான்கு. திருநெல்வேலி அல்வா, தாமிரபரணி ஆறு, பாளையங்கோட்டை ஜெயில், நெல்லையப்பர் கோவில்.

பெயர்கள்; நமது பெயர்கள்

ஞாயிற்றுக்கிழமை தவிர வேலைநாட்கள் மதியம் 12.00 மணிக்கு எஸ்.டி.டி. எதுவும் வருவதில்லை. நாங்களும் யாருக்கும் பண்ணுவதில்லை. போன் இருக்கிறது என்று பண்ணினால் பில் வரும்பொழுது பட்ஜெட் உதைக்கும். அன்று வௌ¢ளிக் கிழமை மதியம் 12 மணிக்கு நீண்ட அழைப்பொலி கேட்டபோது நான் தான் ஏதோ அவசரமாகப் பேசுகிறேன் என நினைத்து என் மனைவி எடுத்திருக்கிறாள்.

புத்தகங்கள் :மதுப்புட்டிகளாகவும் வெடிகுண்டுகளாகவும்

பாண்டிச்சேரியிலிருந்து இதுவரை நூறு தடவையாவது மதுரைக்குப் பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறேன். ஏழெட்டுத் தடவை போல¦ஸ் சோதனை போட்டிருக்கிறது. அந்தச் சோதனைக்கு யாருடைய பையும் தப்பாது. சூட்கேசாக இருந்தால் ஆட்டிப்பார்த்தே உள்ளே இருப்பது மதுப்புட்டிகள் என்று கண்டுபிடித்து விடுவார்கள். பையாக இருந்தாலும் ஒலியெழுப்பும் பாட்டில்கள் காட்டிக் கொடுத்து விடும்.ஒரு தடவை 20 கிலோ சர்க்கரைக்குள் இரண்டு அரை பாட்டில்கள் இருந்தன. திறந்து பார்த்த போல¦ஸ் கொஞ்சம் சர்க்கரையை அள்ளி வாயில் போட்டு விட்டு நகர்ந்து விட்டது. அல்வாவுக்குப் பதில் சர்க்கரை.

தொல்காப்பியம்- சங்க இலக்கியங்கள் திணைநிலைக் கூற்றுகள்

முன்னுரை: தமிழ்க் கவிதையின் மரபைப் பற்றிப் பேசும் கல்வியாளர்கள் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் தமிழ் மரபின் தொடக்கம் எனக் கொள்வதில் பின் வாங்குவதில்லை. கல்வித்துறை சாராத இலக்கியத்திறனாய்வாளர்களும் கூடத் தமிழ்க் கவிதையியலின் தொடக்கம் இவையே என்பதை ஒத்துக் கொள்ளவே செய்வர். ஆனால் அம்மரபுதான் இடையூறுகளின்றி இன்று வரை தொடர்கிறதா? எனக் கேட்பவருக்கு ஆம் என்றோ, இல்லை என்றோ உறுதியான பதில் ஒன்றைச் சொல்ல முடியாது.