இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தணிக்கைத்துறை அரசியல்

படம்
இப்படி எழுதுவதால் ஊழலை ஆதரிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற முன்குறிப்போடு எழுதுகிறேன்: அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழல்கள் குறித்து விரிவான தகவல்கள் வெளிவருகின்றன; விவாதங்கள் நடக்கின்றன; குற்றச்சாட்டுகள் - தண்டனைகள்- விடுவிப்புகள் என நீள்கின்றன. தொடர்ச்சியாக வெளிப்படும் இத்தகவல்களால் இந்தியா ஊழல் மலிந்த நாடு என்ற அடையாளத்தைப் பெற்றுக் கொண்டே இருக்கிறது.

உங்கள நீங்க எப்படி பாக்க விரும்புறீங்க... ஓராள் நாடகத்தின் சாத்தியங்கள்

படம்
நமது நிகழ்காலம் கண்காணிப்பின் காலம். குறிப்பாக முதலாளியின் அதன் அடுத்த கட்டப் பாய்ச்சலாகப் பன்னாட்டு வணிக வலைப்பின்னலுக்குள் நகர்ந்தபோது அனைவரையும் கட்டுக்குள் வைப்பதற்குக் கண்டுப்பிடித்த பேராயுதம் ”அட்டைகள்( ID CARDS)” குடிமைப்பொருட்கள் வாங்குவதற்கு ஒரு குடும்பத்தின் உறுப்பினராக ஆகவேண்டும் என்ற வலியுறுத்தலின் வழியாக உருவான “அடையாள அட்டை”ப் பண்பாட்டை தேசத்தின் உறுப்பினர் என்ற பேரடையாளமாக மாற்றியிருக்கிறது. அவ்வகையான அட்டைகள் இல்லாதவர்கள் நாடற்றவர்களாகக் கருதப்பட்டுத் தனியான முகாம்களில் அடைக்கப்படும் காலத்தில் வாழ்கிறோம். ஒரு நாட்டிற்குள் இருப்பவர்களையே சிலவகையான தகவல்களைத் தரமுடியவில்லை என்றால் அட்டை வழங்காமல் சிறப்பு முகாம்களுக்குள் தள்ளிவிடும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன நவீன அரசுகள்.

தமிழ்க் கவிதைக்குள் திணையென்னும் படிமம்

படம்
இந்தக் கேள்விகள் கவிதைகளை எழுதுபவர்களின் கேள்விகள் அல்ல. கவிதை வாசகர்களின் கேள்விகளும்கூட அல்ல. ஆனால் இலக்கியத்திறனாய்வு என்னும் விமரிசனம், “கவிதையை எப்படி வாசிப்பது?” என்ற கேள்வியில் தொடங்கி, “கவிதை எவ்வாறு உருவாகிறது?” என்பதை விளக்கிக் கொண்டே இருக்கின்றது. இப்படி விளக்குபவர்களை திறனாய்வாளர்கள் என்று சொல்வதைவிடவும், இலக்கியத்தை ஒரு கோட்பாடாக்கி விளக்கிவிட நினைப்பவர்கள் என்று சொல்லலாம்.

சேடபட்டி முத்தையா: ஒரு நினைவு அலை

படம்
  இப்போது சேடபட்டி என்றொரு தொகுதி இல்லை. 2008 இல் உருவாக்கப்பட்ட தொகுதி மறுவரையில் அதன் ஒரு பகுதி திருமங்கலம் தொகுதிக்குள்ளும் இன்னொரு பகுதி உசிலம்பட்டித் தொகுதிக்குள்ளும் கரைந்து போய்விட்டது. என்றாலும் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் தான் இருந்தது. இப்போது அதுவும் தேனி நாடாளு மன்றத் தொகுதியாக மாறி விட்டது. அதன் பிறகும் அந்தப் பெயர் அவரது பெயருக்கு முன்னால் அடைமொழியாகவே இருந்தது. இந்த மாற்றங்களுக்கு முன்பே எனது வாக்குரிமையை அத்தொகுதியிலிருந்து மாற்றிக் கொண்டேன்.

இவை ஒரு நகரத்தின் கவிதைகள்

தாமிரபரணி, நெல்லை மாவட்டத்தின் ஊர்ப்பெயர்கள், சைவப் பெருங் கோயில்கள், திருவிழாக்கள், அவை சார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளின் விவரிப்பு போன்றவற்றின் வழியாகக் கவி கலாப்பிரியா தனது கவிதைக்கு வட்டாரத்தன்மையை உருவாக்கியிருக்கிறார். ஆனால் அக்கவிதைகளுக்குள் உலவும் மாந்தர்களின் காதல், காமம், தவிப்பு, அதன் வழியெடுக்கும் முடிவுகள் போன்றன வட்டார எல்லைகளைத் தாண்டி விரியக்கூடியன.

பாஞ்சாலி சபதம் - நாடகப்பனுவலாக்கம்

படம்
தமிழின் மறுமலர்ச்சிக் கிளைகள் ஒவ்வொன்றிலும் தனது திறனால் புதுத்துளிர்களை உருவாக்கியவர் கவி பாரதி. கவிதை கட்டுரை, புனைகதை, தன்வரலாறு எனப் பல தளங்களில் அவரது பங்களிப்புகள் பின்வந்தவர்களுக்கு முன்னோடியாக இருக்கின்றன. பழைய இலக்கியப்பனுவல்களின் வாசிப்பையும் ஆக்கத்தையும்கூட, தான் வாழுங்காலத்தைப் பதிவு செய்தல் என்பதற்கு எடுத்துக்காட்டாக மாற்றிப்புதுமை செய்தவர் அவர். இந்தப் போக்கிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வது பாஞ்சாலி சபதம் என்னும் குறுங்காப்பியம். மகாபாரதமென்னும் இதிகாசத்திலிருந்து ஒரு பகுதியைத் தன் காலத்திற்கேற்ற விவாதப்பொருளாக்கிய பாரதியின் பாஞ்சாலி சபதம், அவருக்குப் பின் பல்வேறு பதிப்புகளையும் பனுவலாக்கங்களைக் கண்டு வருகிறது. அப்பனுவலாக்கங்களின் வழித் தமிழர்களின் கலை வெளிப்பாட்டுப் பார்வையில் பாஞ்சாலி சபதத்திற்கு ஓர் உயர்வான இடம் இருப்பதை உறுதி செய்கின்றனர். இக்கட்டுரை குறுங்காப்பியமென்னும் இலக்கிய வகைப்பாட்டிற்குள் வைத்துப் பாரதி எழுதிய பாஞ்சாலி சபதத்தை நாடகப்பனுவலாக்கம் செய்யும் விதத்தை விவரிக்கிறது. குறுங்காப்பியங்களும் நாடகமும் இந்தியச் செவ்வியல் மொழிகளான சம்ஸ்கிருதமும

ராசேந்திர சோழனின் இசைவு: பிறழ்வெழுத்தின் மோசமான முன் மாதிரி

படம்
ஆண் - பெண் உறவுகளின் பிறழ்வு நிலையை எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் தான் எழுதப்போகும் கதை பொதுப்புத்தி சார்ந்த வாசிப்பு மனநிலை ஏற்றுக்கொள்ளாத ஒன்றை - பொதுச்சமூகம் இயல்பானதாகக் கருதாத ஒன்றை எழுதுகிறேன் என்ற உணர்வுடன் தான் எழுதுவார்கள். அதனாலேயே பாத்திரங்களின் மீறலை -பிறழ்வு உறவை நியாயப்படுத்தும் உரையாடல்களையும் காரணங்களையும் முன்வைத்து விவாதித்துக் கதையை நகர்த்துவதுண்டு. அப்படி இல்லாமல் பிறழ்வு உறவுகளில் ஈடுபடுகின்றவர்கள் அதனைப் பிறழ்வாகக் கருதாமல் இயல்பான உறவாகவே நினைக்கின்றனர்; ஏற்று நகர்கின்றனர் என்ற பார்வையைப் புனைவுக்குள் வைத்து எழுதியவர்கள் பட்டியல் ஒன்று உள்ளது. தமிழில் அப்பட்டியலில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே.

கொண்டாடப்படவேண்டியவர் சாரு

சாரு நிவேதிதாவின் எழுத்துகள் மீது காட்டப்படும் வன்மம் என்பது அவரது ஆளுமை மீது காட்டப்படும் வன்மம் அல்லாமல் வேறில்லை. மரபான அமைப்புகள் மீது நம்பிக்கையும் வழிபாட்டு மனோபாவமும் கொண்ட தமிழ் எழுத்தாளர்களில் பலர் நவீனத்துவத்தின் மீது நம்பிக்கைகொண்டவர்களாகப் பாவனை செய்பவர்கள். சரியாகச் சொல்வதானால் இப்பாவனை யாளர்களுக்கு நவீனத்துவத்தின் சாராம்சவாதம் மட்டுமே உவப்பானது. ஆனால் மரபின் மீது மூர்க்கமான எதிர்ப்பைக் காட்டுவதோடு சாராம்சத்தைக் கடந்தவர் சாரு நிவேதிதா. உரிப்பொருளில் மட்டுமல்லாது வெளிப்பாட்டு முறையிலும் அதனைக் கைக்கொண்ட ஒரு முன்மாதிரி அவர்.

சிறார்களுக்கான நாடகங்கள் -ஒரு குறிப்பு

படம்
தமிழில் நாடகக் கலையின் இருப்பே கேள்விக்குரியதாக இருக்கிறது. நவீன நாடகங்கள் என்ற அறிமுகம்கூடத் தமிழில் அதன் சரியான அர்த்தத்தில் வெளிப்படவில்லை. ஒரு செய்தியை அல்லது ஒரு கேள்வியை நிகழ்வாக்கிப் பார்வையாளனை நோக்கிக் காட்சிப்படுத்திய நிகழ்வுகள்தான் நவீன நாடகங்களாக அறிமுகப்பட்டன. அந்தப் போக்கிலிருந்து மாற்றங்களை உருவாக்கிப் பல்வேறு வகைப்பட்ட நாடகப்பிரதிகளும் மேடையேற்ற முறைகளும் உள்ளன என்ற தகவலே பொது வாசகனுக்கு அல்லது பார்வையாளனுக்கு இன்னும் எடுத்துச் செல்லப்படவில்லை.