இடுகைகள்

கவியும் கவிதையும் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நினைவுக்குள் நாடும் காடும்

படம்
உயிர்மை இதழில் வந்திருந்த இந்தக் கவிதையை (தீபச்செல்வன்/ உயிர்மை/நவம்பர்/2025) வாசித்து முடித்தேன். ஒருமுறைக்குப் பதிலாக இன்னும் சில தடவை வாசித்துப் பார்த்தேன். முதல்வாசிப்பில் அந்தக் கவிதை தரும் ஈர்ப்பு தான் திரும்பவும் வாசிக்கச் செய்யும். ஒரு கவிதையில் கிடைக்கும் ஈர்ப்பு என்பதில் அதன் செய்நேர்த்தி, அதன் வழியாக எழுப்பும் உணர்வுத் திரட்சி, அதற்குக் காரணமான கவிதை நுட்பங்கள் எனப் பலவற்றில் ஏதாவதொன்றாக இருக்கலாம்.

கவி சல்மா

படம்
நண்பர் சேரனோடு கீழடிக்குப் போகும் திட்டத்தில் அம்பை -80 நிகழ்வில் உரையாற்றுவதற்கு வந்திருந்த கவி. சல்மாவும் சேர்ந்துகொண்டார். காலடி அருங்காட்சியகம் திராவிட முன்னேற்றக்கழகத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகக் கீழடியைத் திமுகவினர் கருதுகின்றனர் என்பதால் அவரது விருப்பம் ஆச்சரியம் ஊட்டவில்லை.

விஜய்குமாரின் கையறு நிலைக்கவிதை

படம்
இயலாமையையும் கையறுநிலையையும் முன்வைக்கும் கவிதைகளுக்கு ஒரு பொதுக்குணம் உண்டு. அதனை எழுதும் கவிதைகளை வாசிக்கும்போது அந்தக் கவிதைகள் கவிகளின் அனுபவம் போலத் தோன்றுவதைத் தவிர்த்தல் இயலாத ஒன்றாக இருக்கும். குறிப்பாகக் கவிதைக்குள் உருவாக்கப்படும் கவிதை சொல்லியின் - கூற்றுப் பாத்திரத்தின் உறவுநிலைப் பாத்திரங்களின் இயலாமையையோ, கையறு நிலையையோ சொல்லும் விதமாக எழுதப்படும் கவிதையில் இந்தத் தன்மை தானே உருவாகிவிடுகின்றன.

மனுஷ்யபுத்திரனின் கவிதைச் சம்பவங்கள்

படம்
நாடகங்களைக் கவிதை வடிவில் எழுதிய சேக்ஸ்பியர், கவிதை வடிவமே உணர்ச்சிகளுக்கான வடிவம் என்பதை உடன்பாட்டுடன் சொல்கிறார். Poetry is the spontaneous overflow of powerful feelings/கவிதை வடிவம் தன்னுணர்வற்ற நிலையில் தோன்றிப் பெருகும் வலுவான உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்பது வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் சொன்ன வரையறை.

சதீஷ்குமார் சீனிவாசன்: ஒரு நகரத்தின் கவிதைகள்

படம்
தாமிரபரணி, நெல்லை மாவட்டத்தின் ஊர்ப்பெயர்கள், சைவப் பெருங் கோயில்கள், திருவிழாக்கள், அவை சார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளின் விவரிப்பு போன்றவற்றின் வழியாகக் கவி கலாப்பிரியா தனது கவிதைக்கு வட்டாரத்தன்மையை உருவாக்கியிருக்கிறார். ஆனால் அக்கவிதைகளுக்குள் உலவும் மாந்தர்களின் காதல், காமம், தவிப்பு, அதன் வழியெடுக்கும் முடிவுகள் போன்றன வட்டார எல்லைகளைத் தாண்டி விரியக்கூடியன.

தேவசீமாவின் வைன் என்பது குறியீடல்ல

படம்
எல்லாவகை இலக்கிய வகைமையும் தொகுப்பாக வாசித்து முடிக்கும்போது ஒரேவிதமான இலக்கிய நுட்பங்களை வாசிப்பவர்களுக்குத் தருவதில்லை. ஒவ்வொரு வகைமையும் அதனதன் வெளிப்பாட்டு நோக்கத்தோடு தான் உணர்த்தும்.

ஆகச்சிறந்த நல்லாணும் நல்லாளும் - BOY BESTIE AND GIRL BESTIE

படம்
உருளும் நிகழ்வுகளால் அல்லது சுழலும் சொற்களால் அலைகிறது நமது காலம். சுழலும் சொற்களை அல்லது உருளும் நிகழ்வுகளை உற்பத்தி செய்வதில் அனைத்து வகையான ஊடகங்களும் போட்டியில் இருக்கின்றன. எப்போதும் பெரும் நிகழ்வுகளைத் திறப்புச் செய்திகளாக (Breaking News) உருட்டிவிடும் தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் போட்டியாக சிறு நிகழ்வுகளை உண்டாக்கி உருட்டி விடும் வேலையைச் சமூக ஊடகங்கள் செய்கின்றன.

கனிமொழி:தனிமையின் இருமுனைகள்

படம்
தனிமை ஒருவிதத்தில் சுதந்திரத்தின் குறியீடு. இன்னொரு விதத்தில் ஏக்கத்தின் வெளிப்பாடு. தனித்திருத்தலும் சேர்ந்திருந்தலும் ஒருவிதக் கண்ணாமூச்சி ஆட்டம். தனித்திருப்பவர்கள் சேர்ந்து வாழ ஆசை கொள்வதும், சேர்ந்திருப்பவர்கள் தனித்துப் போய்விட ஏக்கம் கொள்வதும் தொடர் இயங்கியல். மனித வாழ்க்கையின் தொடக்கம் கூட்டத்தின் பகுதியாகவே தொடங்குகிறது. கூட்டம் ஏற்படுத்தும் சுமை தாங்காது தனித்துப் போவதை அவாவும் செய்கிறது. துறவை நாடிச் சென்ற முனிவர்களும், ஞானத்தைத் தேடிய ஞானிகளும் தனித்திருத்தலின் காதலர்கள்.