இடுகைகள்

மார்ச், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நளாயினிகள்: மாதிரிகளை முன்மொழிதலும் கட்டுடைத்தலும்

படம்
கலை இலக்கியங்கள், சமூகமாற்றத்தில் வினையாற்றுவதில்லை; வினையாற்று கின்றன என்ற வாதம் இலக்கியத் திறனாய்வில் நீண்டகாலச் சொல்லாடல். சமூகமாற்றத்தில் இலக்கியத்தின் பங்கை மறுப்பவர்கள், தாங்கள் எழுதும் பிரதிகளில் முன்மாதிரிகளை உருவாக்குவதில்லை. ஆனால் சமூகத்தின் இருப்பில் அதற்கு முந்திய கலை, இலக்கியப்பிரதிகள் மாற்றங்களை உண்டாக்கியுள்ளன  என்ற உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் அப்படி விலகிச் செல்வதில்லை. 

ஒருமாதிரிப்பெண்கள்

மார்ச் 8. உலகப்பெண்கள் தினம். இப்படியொரு தினத்தை உருவாக்கி முன்மொழிந்து கொண்டாடிய ஆண்டு 1975. முன்மொழியப்படும் ஒவ்வொன்றையும் ஏற்பதும் நிராகரிப்பதும் நடைமுறைச் செயல்பாடு. நடப்புவாழ்க்கையில் எதிர்ப்படும் நெருக்கடியில் இரண்டிலொன்றைத் தேர்வுசெய்து விட்டு நகர்வது ‘இயல்பு’ என நம்பப்படுகிறது. இயல்பானது எனக் கேள்விக்குள்ளாக்கப்படாமல் விட்டுவிட்டவை ஏராளம். உன்னைப்பற்றி/பெண்ணைப் பற்றிச் சொல்பவைகளும் சொல்லப்பட்டவைகளும் இயல்பானவை என்று நம்பவேண்டாம் எனக் கூவிக்கூவிச் சொல்லிக்கொண்டிருக்கும் நாள் மார்ச் 8.

தொடரும் இலங்கைத் தமிழர் போராட்டம் : இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்

படம்
செல்வா கனகநாயகம் தொகுத்துள்ள இத்தொகுப்பிற்கு அவர் வைத்துள்ள பெயர்   வேரோடு பிடிங்கப்பெற்ற பூசணிக்கொடி( Uprooting the Pumpkin -Selections from Tamil Literature in Sri Lanka edited Chelva Kanaganayakam Oxford University Press). இத்தொகுப்பில் அரைநூற்றாண்டுக்கால இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் கவனிக்கத்தக்க பதிவுகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிற்றி பிரஸின் வெளியீடான இத்தொகுப்பு உலகமனச்சாட்சியை நோக்கிப்பேசும் தன்மைகொண்ட தொகுப்பு. தொகுப்பாசிரியர் வைத்த ஆங்கிலச் சொற்களை நேர்பொருளில் அப்படியே மொழிபெயர்த்து ஏற்றுக்கொள்ள என் மனம் விரும்பவில்லை. ஏனென்றால் சூழல் தந்துள்ள அர்த்தம் வேறொன்றாக இருக்கிறது.

குற்றநீதிபற்றிய விசாரணைகள் : காப்காவின் நாய்க்குட்டி

படம்
நாவல்கலையினூடாக  வகைபிரித்தல் காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தனது விருப்பம் போல் உருவாக்கி விரியும் நாவல் இலக்கியப்பரப்பிற்கு எல்லைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அது யாருடைய வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொல்லும் நோக்கம் கொண்ட இலக்கியவகையும் இல்லை. இது ஒன்றைத் தவிர நாவலென்னும் இலக்கியக்கலைக்கு வரையறை எதையும் சொல்லிவிடமுடியும் எனத் தோன்றவில்லை.  

எளிய கவிதைகளின் இயக்கம்

ஆனந்தவிகடன் கவிதைகளை வெளியிடும் பக்கங்களுக்குச் சொல்வனம் எனப் பெயரிட்டுக் கொண்டிருக்கிறது. 16/3/16 தேதியிட்ட ஆ.வி.யில் சௌவி, ஆர்.ஜவஹர் பிரேம்குமார், ம.மகுடீசுவரன் ஆகிய 3 பேரின் கவிதைகள் அச்சாகியுள்ளன. இந்த மூன்று பேரின் 3 எழுத்து வரிகளும் கவிதையாக நினைக்கப்படும் காரணஙகள் என்னவாக இருக்கும்?

கடந்து வந்த 20 வருடங்கள்: நிகழ்வுகளும் நினைவுகளும்

படம்
கடந்த காலத்தை நினைத்துக் கொள்வது, எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு ஒருவழி. தனிமனிதர்கள் தங்கள் மனத்திற்குள் செயல்படுத்தும் இந்தச் செயலை, நிறுவனங்கள் கூடிப்பேசி விவாதித்துச் செய்கின்றன. 1991 -ல் தொடங்கப்பட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் தமிழியல் துறை (1996) ஆரம்பிக்கப்பட்டது.

பண்பாட்டுக் கல்வி

படம்
  “நமது கல்வி புதியன படைக்கும் ஆற்றலை வளர்க்கவில்லை; மனப்பாடம் செய்வதையும் அதன் வழியாகத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறும் வழிமுறைகளையையும் தானே வளர்க்கிறது?”                                                             - இந்தக் கேள்வியைப் பேராசிரியர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் தமிழகம் வந்த போது கோவை நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவர் கேட்டார்:  அதற்கு,   “ முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்”     என்று பதிலளித்தார் பேராசிரியர்.