இடுகைகள்

செப்டம்பர், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நடிப்புச் சொல்லித் தரும் நாடகப்பள்ளிகள்

படம்
  சண்முகராஜனின் முயற்சிகளை முன் வைத்து:  பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் கலைஞர்களை உருவாக்குவதில்லை என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இலக்கியத்தில் ஆய்வுப் பட்டத்திற்குப் பின்னும் ஒரு கவிதை, கதை, நாடகம் என எழுதும் ஆற்றல் ஒருவருக்கு ஏற்படுவதில்லை என்ற வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. எழுத்துக்கலை சார்ந்து சொல்லப் படும் இந்தக் குற்றச்சாட்டு நாடகக் கலையின் இன்னொரு பரிமாணமான அரங்கவியல் துறைக்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இந்தியாவில் செயல்படும் பல நாடகப் பள்ளிகள் தேர்ந்த நாடகக் கலைஞர்களை உருவாக்கியிருக்கின்றன . அதிலும் குறிப்பாக புதுடெல்லியில் செயல்படும் தேசிய நாடகப் பள்ளியின் மாணவர்கள் தேர்ந்த நடிகர்களாக, இயக்குநர் களாக, ஒப்பனைக் கலைஞர்களாக, ஆடை வடிவமைப்பாளர்களாக உலக முழுக்க வலம் வருகின்றனர்.

அழிபடும் அந்தரங்கம்

  பிரசாத் என்ற பெயருக்கு முன்னால் ‘கன்னட’ என்ற சொல்லை அவரே சேர்த்து வைத்திருந்தாரா..?அல்லது தமிழ் அச்சு ஊடகங்கள்தான் சேர்த்துச் சொல்கின்றனவா..? என்பது உறுதியாகத் தெரியவில்லை. அந்தப் பெயரைச் சுற்றி எழுப்பப்படும் புனைவுகளுக்கும், எழுதப்படும் கதைகளுக்கும் வண்ணங்கள் வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டால், நான் பரிந்துரை செய்வன; பச்சையும் நீலமும் கலந்த செஞ்சுடர் இருட்டு என்பது தான்.செஞ்சுடர் இருட்டாகப் பரவி விரியும் காட்சிகளில் மிளிரும் பச்சை வண்ணமும் நீல வண்ணமும் உண்டாக்கும் உணர்வுகள் எப்படிப் பட்டவை; அவை பார்வையாளர்¢களின் மனத்தில் எழுப்பும் உணர்வுத் தூண்டல்கள் என்ன வகையானவை என்பதை விளக்குவதற்கு புள்ளியியல் விவரங்கள் தேவையில்லை. வண்ணங்கள் பற்றிய பாரம்பரிய அறிவே கூடப் போதும்¢. ஆனால் காட்சிச் சாதனங்களுக்குச் சற்றும் குறையாமல் எழுத்தும் உணர்வுத் தூண்டலைச் செய்யும் வல்லமை உடையன என்பதைத் தர்க்க பூர்வமாக விளக்க வேண்டும் என்றால் புள்ளிவிவர ஆய்வொன்றை மேற்கொள்ளத் தான் வேண்டும். அந்த ஆய்வு வெறும் புள்ளியியல் துறையோடு நின்று விடாமல், மருத்துவ உளவியல் துறையையும் இணைத்துக் கொண்ட புள்ளியியல் ஆய்வாக இருந

அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பு..?

படம்
  இந்திய ஊடக வெளிகள் கடும் போட்டியின் களன்களாக உள்ளன. சேரி, ஊர், கிராமம், நகரம், மாநகரம் என எல்லா வெளிகளையும் கடந்த காட்சிகளை விரித்துக் காட்டும் தொலைக்காட்சி ஊடகங்கள் இந்திய யதார்த்தத்தைக் கண்டு கொண்டனவாக இல்லை. பல நேரங்களில் இந்தியச் சமூகத்தில் நிலவும் எல்லாவகை வேறுபாடுகளையும் புறந்தள்ளி விடும் சித்திரங்களையே அவை தீட்டிக் காட்டுகின்றன. பெரும்பான்மை மக்களின் யதார்த்த வாழ்க்கைக்குப் புறம்பான விவாதங்களை முன்னெடுக்கும் ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளின்¢ உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத நிலைதான் வட்டார மொழி அலைவரிசை களிடம் காணப்படுகின்றன. 2007, ஜனவரியில் அதிகம் தோன்றிய பிம்பங்கள் யார் ? என்று கேள்வியைக் கேட்டு ஒரு குறுஞ்செய்திப் போட்டி நடத்தினால் முதலிடத்தைப் பிடிப்பதில் காதல் ஜோடி ஒன்றிற்¢கும், ஒரு அபலைப் பெண்ணுக்கும் (?) நிச்சயம் கடும் போட்டி இருக்கும். 

பாடத்திட்ட அரசியல்

படம்
    ‘விழிப்பென்பது    இரு விழிகளையும்   சேரத் திறந்து   வைத்திருத்தல் அல்ல‘                                                     (சு. வில்வரத்தினம், உயிர்த்தெழும் காலத்திற்காக)     என்ற வரிகளைப் படித்துவிட்டு, அடையாளத்திற்கு வைக்கப்படும் பட்டுக் கயிறு அந்தப் பக்கத்தில் - 391 இருக்கும்படி வைத்துவிட்டு, கண்களை ஒருசேர மூடி விழித்திருந்தேன்.

பொருட்படுத்தப்படாத படங்களுக்குள் கவனிக்கப்பட்ட பாடல்கள் : வெகுமக்கள் ரசனையின் ஒரு பரிமாணம்

படம்
2 006 ஆம் ஆண்டிற்கான வசூல் வெற்றி – சூபர் ஹிட் படம் – எது? என்ற போட்டியில் இறங்கும் படம் இன்னும் வரவில்லை. இந்த ஆண்டு முடிய இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த ஆண்டின் சூப்பா் ஹிட் பாடல் எது? என்பது முடிவாகிவிட்டது. வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த தென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்…… என்று தொடங்கும் சித்திரம் பேசுதடி படத்தின்   பாடலோடு போட்டியிட்டு முதலிடத்தைப் பிடிக்கும் பாடல் இந்த வருடத்திற்குள் இன்னொன்று வரும் என்று தோன்றவில்லை. எப்.எம். தொடங்கிப் பாடல்களை ஒளிபரப்பும் இசை அலைவரிசைகள் எல்லாவற்றிலும் இந்தப் பாடல் வரிகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

காதல்: உண்மையின் மீது கட்டப்படும் விமரிசனம்

படம்
’காதல்’ – தமிழ் சினிமாவின் அடிப்படைக் கச்சாப்பொருள். காதலுக்குத் தமிழ் சினிமா செய்துள்ள மரியாதை கொஞ்சமல்ல. காரண காரியங்களோடும் காரணங்காரியங்கள் இல்லாமலும் ஓா் ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் ஏற்படுவதையும் அக்காதலைக் கல்யாணத்தில் முடித்துச் சுபம் போடுவதையும் விதம்விதமாகச் சொல்லிப் பார்ப்பதற்குத் தமிழ்ச் சினிமா சலிப்பே அடைந்ததில்லை. காதல் என்ற சொல்லோடு முன்னொட்டோ பின்னொட்டோ சோ்த்து விதம்விதமாகத் தலைப்பும் வைத்துப் பாரத்துவிட்டு இப்பொழுது ’காதல்’ என்ற பெயரிலேயே ஒரு படத்தையும் வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவுலகில் பிரமாண்டப் படங்களுக்குப் பெயா்போன ஷங்கரின் தயாரிப்பில் அவரிடம் உதவி இயக்குநராயிருந்த பாலாஜி சக்திவேல் அந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஊடகங்களும் அரசியலும்: மறத்தல் கொடியது ; மறக்கடித்தல் அதனினும் கொடியது

  தொலைக் காட்சி செய்தி அலைவரிசைகளின் கவனத்திலிருந்து கர்நாடகம் விலகிச் சென்று விட்டது. அம் மாநிலத்தில் இரண்டு மாதத்திற்குள் இரண்டாவது தடவையாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல் செய்யப்பட்டு விட்டது. ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் அரசியல்¢ கட்சிகள் செய்த சித்து விளையாட்டுக்கள் எல்லாம் மறந்து போகும். திரும்பவும் தேர்தல் வரும் போது கட்சிகளும் தலைவர்களும் புதிய கோஷங்களோடு வருவார்கள். ஊடகங்களும் பழையனவற்றை மறந்து விட்டு புதிய கோஷங்களின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து மக்கள் முன்னால் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையைச் செய்யத் தயாராக இருக்கின்றன. இப்போது ஊடகங்களின் பார்வை கர்நாடகத்திலிருந்து மேற்கு வங்காள மாநிலத்தின் பக்கம் திசை திரும்பி விட்டது.

கலகக்காரா் தோழா் பெரியார்

படம்
  ‘ நிஜ நாடகக் குழு‘ வினா் கடைசியாக நடத்திய இந்த நாடகத்தின் பெயா் கலகக்காரா் தோழா் பெரியார். அவா்களின் அடுத்த நாடகம் அண்ணல் அம்பேத்கா் பற்றியா….? எதிர்பார்ப்போம்.                            (வே. மதிமாறன் 2003 செப்டம்பா், தலித் முரசு 11) நவீன நாடகம் என்றாலே உள்ளடக்கத்தை விடவும் வடிவத்திற்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதால் நாடகத்திற்குப் போவதா…..? வேண்டாமா? எனத் தடுமாறிய மதிமாறன் குழப்பம் தீா்ந்து பாராட்டியுள்ள வரிகள்.      “இந்த நாடகம் எளிமையான, நோ்த்தியான வடிவத்தோடு இருக்கிறது. சுருங்கச் சொன்னால் வடிவத்தையும் தாண்டி உணா்வோடு வெளிப்படுகிறது உள்ளடக்கம்.“      

மாற்றம் ; அது ஒன்றே மாறாத விதி.

அவர்கள் என்னிடம் தந்த துண்டறிக்கை 17 வது மாவட்ட மாநாடு எனச் சொன்னது.மாநாடுகள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு முறையும் இத்தகைய துண்டறிக்கையோடு அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு முறை வரும் பொழுதும் கடந்த முறை வந்த மாணவர்களில் யாராவது ஒருவர் இருப்பார்; மற்றவர்கள் புதியவர்களாக இருப்பார்கள். என்றாலும் தொடர்ச்சி விட்டுப் போனதாகத் தெரியவில்லை. மாவட்ட மாநாடு, மாநில மாநாடு அல்லது ஒரு விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சி என வழக்கமான வேலைத் திட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. வினைகள் அதே தடத்தில் நடந்து கொண்டும்¢ இருக்கின்றன.

பொதுக்கல்வியே போதுமென்ற மனநிலை..

படம்
பெண்களின் கல்வியில் தமிழகம் காட்டி வரும் அக்கறைகள் மெச்சத் தக்கவையாக உள்ளன. தமிழக அரசு இலவச சைக்கிள், உதவித் தொகை போன்றன கொடுப்பதின் மூலம் காட்டும் அக்கறைகளைச் சொல்லவில்லை. பெற்றோர்கள் காட்டும் அக்கறைகளையே சொல்கிறேன்.ஆண்களுக்குச் சமமாகவும் பலநேரங்களில் ஆண்களைத் தாண்டியும் பெண்கள் படித்துப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.