தொப்புள்கொடி உறவு என்னும் சொல்லாடல்

இந்தியாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் பிரச்சினை அயலக உறவுத்துறையின் வழிகாட்டுதலில் கவனமாகும் ஒரு பிரச்சினை மட்டுமே. எப்போதும் அதுமட்டுமே. ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தமிழர்களுக்கும் சமமற்ற இரண்டு இனங்களின் உரிமை மற்றும் தன்னாட்சி சார்ந்த முரண்பாடுகளின் சிக்கல். இவ்விரண்டும் கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் சந்தித்துக் கொண்டதேயில்லை. சந்தித்துக் கொள்ளும் ஒன்றாக ஆகிவிடக்கூடாது என்பதில் இந்தியஅரசு/அதிகாரவர்க்கம் கவனத்தோடு இருந்தது; இருக்கிறது.