இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒற்றை ரீல் இயக்கம்: மாற்று ரசனைக்கான முயற்சி

படம்
  மாற்றுகளை முன்வைத்தல் வெகுமக்கள் பண்பாடு வெறும் நுகர்வுப் பண்பாடாக மாறிவருகிறது; அதற்கு வெகுமக்களைத் தேடிச் செல்லும் ஊடகங்களும் நாடகங்களும் துணையாக இருப்பதோடு முக்கிய காரணிகளாகவும் இருக்கின்றன. அதனை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அறுபதுகளிலும் எழுபதுகளிலும் சில முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.வெகுமக்கள் இதழியலுக்கு மாற்றாகச் சிறுபத்திரிகைகள் என்ற கருத்தோட்டத்தின் தொடர்ச்சியாக, பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இலக்கியங்களுக்கு மாற்றாக தீவிர இலக்கியம் என்ற கருத்துக்களும் செயல்பாடுகள் முன் வைக்கப்பட்டன.

அடையாள அரசியலும் பெரும்பான்மை வாதமும்

படம்
தேர்தல் அரசியல் என்பது எண்களின் அரசியல். ஆனால் அதற்குள் செயல்படுவது கருத்தியல். கருத்தியல்கள் சார்புநிலைகொண்டவை. உலகம் முழுவதும் அதுதான். எந்தவொரு நாடும் விலக்கானவை அல்ல. இந்தியா உள்பட. பால், பாலினம், அதுசார்ந்து உருவாகும் உரிமை, சமத்துவம், விடுதலை என்ற சொல்லாடல்களும் பாலியல் அரசியலின் கருத்தியல்கள். அதைப்போலவே சமய நம்பிக்கைகள், சடங்குகள், சமயஞானம் என்பது தனிமனிதத்தன்னிலைகளை உருவாக்கும் அடையாளங்கள். சமயவியல் அரசியலின் கருத்தியல்கள். அடையாள அரசியல் உலக அளவில் - பின் நவத்துவம் சிந்தனையாகவும் வாழ்முறையாகவும் மாறியபின் கிளர்ந்தெழுந்த அரசியல் சொல்லாடல்கள். இவ்விரண்டையும் இந்தியச் சூழலில் பெரும்பான்மை அரசியல் முற்றாக நிராகரிக்கப் பார்க்கிறது. குறிப்பான இரண்டு எடுத்துக்காட்டுகளின் வழி விவாதிக்கலாம்.

மிதுனாவின் நுரைப்பூக்கள்: கரோனாக் காலத்துப் பொன்னகரம்

கனலியில் பதிவேற்றம் கண்டுள்ள ‘நுரைப்பூக்க ள் ’ கதையை எழுதியிருக்கும்  ‘ மிதுனா ’ உண்மையான பெயரா? புனைபெயரா? என்பது தெரியவில்லை. பெண்ணின் பெயர்போலத் தோன்றினாலும் ஆணாக இருக்கவும் வாய்ப்புண்டு என்ற சந்தேகமும் தோன்றுகிறது. அதே நேரத்தில் அவர் புதுமைப்பித்தனின் பொன்னகர ம் கதையை வாசித்தவர் என் பது உறுதியாகத் தெரிகிறது.  மிதுனாவின் நுரைப்பூக்களும் புதுமைப்பித்தனும் பொன்னகரமும் எல்லா விதத்திலும் ஒன்றுபோல -நகலாக - இருக்கின்றன என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் கதை அமைப்பும் பின்னணியும் எழுப்பும் கேள்வியும் அதன் வழியாக எழுப்பப்படும் விசாரணையும் ஒன்று என்ற வகையில் பொன்னகரத்தை வாசித்த மனத்தின் ஒரு வெளிப்பாடே நுரைப்பூக்கள் என்று உறுதியாகச் சொல்லமுடிகிறது.

நான் தீவிரவாதி; நீ பயங்கரவாதி

படம்
ஆட்சியில் இருக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களின் அரசை விமரிசிப்பவர்களைச் சுட்டும் சொல்லாகத் தீவிரவாதி என்பதைப் பயன்படுத்துகிறார்கள். தீவிரவாதி என்ற சுட்டுச் சொல் வெறுக்கத்தக்க சொல்லாக ஆக்கப்படுவதின் மூலம் அச்சொல்லால் சுட்டப்படுபவர்கள் வெறுக்கப்படவேண்டியவர்கள் என்பதோடு இல்லாமல் ஆக்கப்பட வேண்டியவர்கள் என்பது உணர்த்தப் படுகிறது. ஆனால் தீவிரவாதம் என்பது வெறும் செயல் மட்டுமல்ல. அது ஒரு கருத்தியல். தான் நம்பும் ஒரு கருத்தின் மீது வாழ்க்கை முறை மீது - சமூக அமைப்பின் மீது கொண்ட ஈடுபாட்டின் அளவைக்குறிக்கும் ஓர் அளவைச்  சொல். 

யதார்த்தா ராஜன் : மதுரைக்கு நல்ல சினிமாவைக் கொண்டுவந்தவர்

படம்
  நேற்று (15/92020) முழுவதும் மதுரை நண்பர்களின் அஞ்சலிக்குறிப்புகள் வாசித்து வாசித்து மனம் தவித்துக்கிடந்தது. முதல் தகவலாகப் பேராசிரியர் முரளி (மதுரைக்கல்லூரி)யின் நிலைத்தகவல் தான் சொன்னது. அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசியபிறகு ராஜனோடு பழகிய நாட்களையும் நட்பையும் அவரது வேலைகளையும் எழுத நினைத்து உட்கார்ந்த ஒவ்வொருமுறையும் எழுத முடியவில்லை. எதை எழுதுவது ? எதை விடுவது ?  

சி என் அண்ணாதுரை: நவீனத் தமிழ்நாடகவியலின் முன்னோடி

படம்
  இறப்புக்குப் பின்னும் எவ்வளவு காலம் நினைக்கப்படுகின்றனர் என்பதில் தான் மாமனிதர்களின் செயல்பாடுகள் அளக்கப்படுகின்றன. 1908, செப்டம்பர்,15 அன்று காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி தனது 61 ஆம் வயதில் மறைந்தார். மறைந்து 50 ஆண்டுகள் ஆன பின்பும் அவரது பிறந்த நாளைத் தமிழகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அவரை நினைப்பது என்பதன் மூலம் அவரது செயல்பாடுகளும் வழிகாட்டல்களும் நினைக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம்.

இன்று களப்பலி நாள்:தேசிய தரமதிப்பீட்டு நுழைவுத் தேர்வு

மருத்துவராகிச் சமூகத்திற்குப் பணியாற்றியே தீர்வது என்ற விடாப்பிடியான கொள்கையைப் பதின்வயதுப் பிள்ளைகளிடம் பாலோடும் பால்ச்சோறோடும் சேர்த்து ஊட்டி வளர்க்கும் தமிழ்ப் பெற்றோர்களின் கனவுகள் 2017 இல் சிதைக்கப்பட்டது. சிதைத்தது தேசிய தரமதிப்பீட்டு நுழைவுத் தேர்வு (NEET) என்னும் குயுக்தியான ஆயுதம்.

பாரதியென்னும் சி. சுப்ரமணிய பாரதி

படம்
31.08.2000 இல் திரையரங்கிற்கு வந்து விட்ட பாரதியை 12.09.2000 இல் பார்த்ததற்கு ஒரு காரணம் இருந்தது. 11.09.2000 அன்று அம்ஷன்குமார் இயக்கத்தில் வந்திருந்த சி. சுப்ரமணிய பாரதியைப் பார்த்து விடும் வாய்ப்பொன்றிருந்தது. நான் பணி செய்யும் பல்கலைக்கழகம் எட்டையபுரம் பாரதி மணி மண்டபத்தைத தத்தெடுக்கவும், எட்டையபுரத்தில் “பாரதி ஆவணக்காப்பகம்“ ஒன்றை நிறுவவும் திட்டமிட்டு, பாரதி நினைவு நாளில் (11, செப்டம்பா்) விழாவொன்றை நடத்தியது. அந்த விழாவின் ஒரு பகுதியாக அம்ஷன் குமாரின் சி. சுப்ரமணிய பாரதி காட்டப்பட்டது. அன்றும் அதற்கடுத்த நாளும் எனது மாணவிகள் மாணவா்களுடன் சி. சுப்ரமணிய பாரதியையும், ஞான. ராஜசேகரன் இயக்கிய “பாரதி“ யையம் பார்த்துவிடுவதாகத் திட்டம்.

ஊடகப்பேச்சுகளும் ஊடகத்தைப் பற்றிய பேச்சுகளும்

படம்
  வென்றிலன் என்றபோதும்’ நியூஸ் -18 தமிழ் - தொலைக் காட்சியிலிருந்து அதன் முதன்மைச் செய்தி ஆசிரியர் மு.குணசேகரன் வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து அரசியல் பிரிவுச் செய்தி ஆசிரியர் செந்தில்வேலின் வெளியேற்றம். இவர்களிருவரையும் பின்பற்றினார்   ஜீவசகாப்தன் . இம்மூவருக்கும் முன்பே   ஆசிஃப்.  ஒரு தொலைக்காட்சி ஊடகத்திலிருந்து நான்குபேர் வெளியேறியது பரவலான செய்திகளாக மாறுகிறது. சமூக ஊடகங்களில் அவர்களது வெளியேற்றங்கள் பேசப்பட்டன; விவாதிக்கப்படுகின்றன. இதேபோல அரசியல் விவாதங்களுக்கு ஓர் முறைமையையும் வடிவத்தையும் உருவாக்கித் தந்த திரு ஜென்ராம் அவர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்படாமல் கைவிடப் பட்ட நிகழ்வுகள் சின்னச் சின்ன முணுப்புகளாகவும், காவேரி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு அதன் முதன்மைச் செய்தி ஆசிரியராகப் பொறுப்பேற்று அவர் விலகியதும் பேசப்பட்டன.   புதிய தலைமுறையில் விவாத ஒருங்கிணைப்பாளராக இருந்த தியாகச்செம்மலின் விலகலும்கூட விவாதப் பொருளானது நினைவில் இருக்கிறது.

சினிமாவுக்கு ஓர் ஆசிரியர் - சினிமாவில் ஒரு நடிப்புமுறை- சினிமாவைப் படிக்க ஒரு பாடநூல்

படம்
சினிமாவை எப்போதும் பொழுதுபோக்காகவே நாம் நம்புகிறோம்; நினைக்கிறோம். அதனைக் கற்றுக் கொள்ளத் தேவையான அடிப்படை நூல்களை உருவாக்கவில்லை. ஒரு ஆளுமையின் ஆக்கமுறைமைகளைக் கல்வி அடிப்படையிலான அறியும் நூல்கள் இல்லை. தமிழ்/இந்திய அசைவுகளிலிருந்து நடிப்பு முறைமைகளை - நடிப்புக்கலைக்கூறுகளைக் கற்கும் பயிற்சி நூல்கள் நம்மிடம் இல்லை. பின்வரும் குறிப்புகள் அதனை நோக்கிய சில சுட்டிக்காட்டல்கள் மட்டுமே

கண்ணப்பத்தம்பிரான் என்னும் கலை ஆளுமை

படம்
  இந்த ப் படத்தில் முக்கியமான மனிதர்களின் முகங்களை மறைத்து எனது முகம் பெரிதாக இருக்கிறது. கறுப்புவெள்ளைப் படங்களின் காலம்.

அந்தக் கடலோரக் கிராமங்கள் எப்படி இருக்கின்றன

படம்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு. பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவியைக் கூடுதல் பொறுப்பாக கவனித்த காலகட்டம்.கல்லூரிகளில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் போவதில்லை என்றாலும் வருட த்தில் ஒரு தடவை நடக்கும் பத்துநாள் பயிற்சி முகாமிற்குச் செல்வதுண்டு. கல்லூரியில் செயல்படும் திட்டப்பணியாளர் தொடக்கவிழா அல்லது நிறைவுவிழாவிற்கு வரும்படி அழைப்பார். நான் அப்படியெல்லாம் செல்வதில்லை. ஏதாவதொரு எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது வருகிறேன் என்று சொல்லிவிடுவேன்.