இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாகித்திய அகாதெமியின் ‘யுவபுரஷ்கார்’

படம்
  விடுதலை பெற்ற இந்தியாவில் கலை, இலக்கிய வளர்ச்சிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட   அகாதெமிகளில் எழுத்துக்கலைகளுக்கான அமைப்பு சாகித்திய அகாதமி   (நுண்கலைகளுக்கானது லலித் கலா அகாதெமி; நிகழ்த்துக்கலைகளுக்கானது சங்கீத் நாடக   அகாதெமி). பல்வேறு நோக்கங்களுடன் 1954 இல் உருவாக்கப்பட்ட சாகித்திய அகாதெமி அடுத்த (1955) ஆண்டிலிருந்தே ஒவ்வொரு இந்திய மொழிக ளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை எழுதியவர்களுக்கு விருதுகள் வழங்கத் தொடங்கியது. அவ்விருது தேசிய அளவில் கிடைக்கும் அங்கீகாரம் என முன்வைக்கப்பட்ட நிலையில் அவ்விருதைப் பெற்றுக்கொள்ளும் போட்டி ஆரம்பமானது.   அதன் விருதுகள் வழங்கியதின் வழியாகவே சாகித்திய அகாதெமியின் இருப்பைப் பலரும் அறிந்துகொண்டார்கள். நூலுக்கு விருது எனச் சொல்லப்பட்டாலும் தொடக்கம் முதலே ஆளுமைகளுக்கு விருது என்பதே நடைமுறையாகத் தமிழில் இருந்து வந்துள்ளது. எப்போதாவது சில ஆண்டுகளில் விருதுக்குழுவினர் ஆளுமையைப் பின்னுக்குத் தள்ளி எழுத்தை அங்கீகரிப்பதாக நினைத்துக் கொண்டார்கள்.

நெல்லையின் கண்ணன்: பேச்சின் ரசிகர்

படம்
நெல்லையில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, அதற்குத் தமிழின் நாடக முன்னோடியான (மனோன்மணீயம்) சுந்தரனார் பெயரும் வைக்கப்பட்டாலும் ஆரம்பத்திலேயே தமிழ்த்துறை தொடங்கப்படவில்லை. 1991 இல் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆன பின்பே 1996 இல் தான் தமிழியல் துறை தொடங்கப்பட்டது. காலத்தாழ்ச்சியில் தமிழியல் துறை தொடங்கப்பட்ட பின்னணியில் உள்ளூர் தமிழ் அமைப்புகளும் ஆர்வலர்களும் இருந்தார்கள். “சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை இருக்கவேண்டியதின் காரணங்களைச் சுட்டிக்காட்டிப் பத்திரிகைகள் எழுதின” அப்படி எழுத வைத்தவர்களில் ஒருவராக நெல்லை கண்ணனும் இருந்தார் என அவரே சொன்னார்.

தமிழர்களின் அலைந்துழல்வுச் சித்திரங்கள்

படம்
  புலம்பெயர் இலக்கியங்கள் என்ற சொல்லாடல் கடந்த கால் நூற்றாண்டுக் காலமாகத் தமிழ் இலக்கியப்பரப்பிற்குள் தவிர்க்கமுடியாத சொல்லாடலாக மாறியிருக்கிறது.   இலக்கிய வகைமைப்பாட்டில் வரையறைகள் தேவையான ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்தச் சொல்லாடலின் வரவு தனி ஈழக்கோரிக்கைக்கான போராட்டங்கள், போர்கள், வெற்றிகள், தோல்விகள், அமைதிப் பேச்சுகள், மீறல்கள், உள்நாட்டுக்குள்ளேயே இடப்பெயர்வுகள், அகதி நிலை வாழ்க்கை என்பனவற்றோடு தொடர்புபற்றி நிற்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி வெவ்வேறு நாடுகளுக்குப் பெயர்ந்தவர்களைப் பற்றிய பதிவுகளாகவும் இருப்பின் துயரங்களாகவும் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்களின் விவரிப்புகளாகவும் எழுதப்பெற்ற கவிதைகளும் புனைகதைகளும் இப்போது தமிழின் புலம்பெயர் இலக்கியங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்

படம்
தமிழ்க் கவிதையின் மரபைப் பற்றிப் பேசும் கல்வியாளர்கள் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் தமிழ் மரபின் தொடக்கம் எனக் கொள்வதில் பின் வாங்குவதில்லை. கல்வித்துறை சாராத இலக்கியத் திறனாய்வாளர்களும் கூடத் தமிழ்க் கவிதையியலின் தொடக்கம் இவையே என்பதை ஒத்துக் கொள்ளவே செய்வர். புதிய ஐரோப்பியத் திறனாய்வாளர்கள் அல்லது திறனாய்வுக்கோட்பாடுகள் எப்போதும் அரிஸ்டாட்டிலை மறந்துவிட்டுச் சொல்லாடல்களைத் தொடங்குவதில்லை. அவர் முன்வைத்த இலக்கிய அடிப்படைகளை உள்வாங்கியவர்களாகவும் அதிலிருந்து கிளர்ந்தெழுந்த கருத்தியல்களை முன்வைப்பவர்களாகவுமே தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். அரிஸ்டாடிலின் தொடர்ச்சி நான் அல்லது நானொரு புதிய அரிஸ்டாடிலியவாதி (New Aristotelian) என்று சொல்வதில் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறது; மகிழ்ச்சி இருக்கிறது.

இருவகைக் கவிதையாக்கம் - திட்டமிடலும் இன்மையும்

படம்
எழுத்தின் இயக்கம் இப்படிப்பட்டதுதான் என உறுதியாகச் சொல்லமுடியாது. கதைப் பின்னல் கொண்ட புனைகதை, நாடகம் போன்றனவற்றை முன் திட்டமிடலின்றி எழுதிவிட இயலாது. ஆனால் கவிதைக்குப் பெரிய அளவு முன் திட்டமிடல் தேவைப்படுவதில்லை. ஆனால் திட்டமிடாமல் எழுதிய கவிதைகளைப் பின்னர் ஒழுங்குபடுத்தும்போது ஒருவகைத் திட்டமிடல் அமையவே செய்யும். அண்மையில் முன்னுரைகள் எழுதுவதற்காக வாசித்த இவ்விரு பெண்கவிகளின் தொகுதிக்குள் ஒன்று முழுமையும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தன்மையைக் காணமுடிந்தது. இன்னொன்றில் பெரிய திட்டமிடல்கள் இன்றிய அன்றாட நிகழ்வுகளுக்குள் உணர்வுகளைத் தேக்கிவைக்கும் இயல்பைக் காணமுடிந்தது. 

இணைநேர்கோட்டுப் பயணிகள்

படம்
கடந்த ஐம்பதாண்டுத் தமிழ் அரங்கியலுக்குள் இருப்பதாக நினைப்பவர்கள் திருப்பத்திரும்ப உச்சரிக்கும் பெயர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எண்ணத்தொடங்கும்போதே முதல் கைவிரல்கள் மடங்குவதற்கு முன்பே வந்து விடக்கூடிய பெயர்களில் இவ்விரண்டு பெயர்களும் – சி.மௌனகுரு, இந்திரா பார்த்தசாரதி – கட்டாயம் இருக்கும். தமிழ் அரங்கியலுக்குள் இருப்பவர்கள் என்று சொன்னதை வைத்து, நடிகர்களாக, பின்னணிக் கலைஞர்களாக, இயக்குநர்களாக இருப்பவர்கள் என நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. தமிழ் மொழியைப் பாவித்து அரங்கியல் நிகழ்வுகள் நடக்கும்போது தவறாமல் பார்த்துவிடவேண்டும் என நினைக்கும் பார்வையாளர்களாக இருந்தால்கூடப் போதும் அவர்கள் இந்த இரண்டு பெயர்களையும் உச்சரித்து வியந்த பின் தான் நகரமுடியும்

பொன்னிநதி -சொல்லிலிருந்து காட்சிக்கு....

படம்
பொன்னியின் செல்வனில் இடம் பெறப்போகும் "பொன்னி நதி பார்க்கணும்” என்ற பாடலை நேற்று இரவு இரண்டு தடவை பார்த்தேன்; பின்னர் ஒரு தடவை கேட்டேன். இன்று காலையில் நடக்கும்போதும் இரண்டு தடவை ஒலிக்கோர்வையாகக் கேட்டேன். பிறகு காட்சி விரிவோடு ஒரு முறை பார்த்தேன். ”காவிரியாள் நீர்மடிக்கு .... ”என்ற சொல்லோடு அந்தக் காட்சி விரிகிறது என்றாலும் ‘பொன்னிநதி’ என்ற சொல்லோடுதான் பாடல் அழைக்கப்படப்போகிறது.