இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலகத்தமிழ் இலக்கிய வரைபடம் என்னும் கருத்துரு

படம்
இலங்கைத்தீவிலும் இந்தியத்துணைக் கண்டத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர்கள் வாழ்கிறார்கள். கலை, இலக்கியப் பனுவல்களை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்மொழியின் ஆரம்பகால நிலப்பகுதி இன்று இரண்டு நாடுகளுக்குள் இருக்கும் பகுதிகளாக இருக்கின்றன.

வீரத்திலிருந்து காமம் நோக்கி : புலம்பெயர்ப்புனைவுகளின் நகர்வுகள்

படம்
இலக்கியப்பரப்பில் புலப்பெயர்வு (daispora) இலக்கியங்கள் என்ற அடையாளம் பழையது. ஆனால் தமிழ் இலக்கியப் பரப்பில் அதன் வருகை – அடையாளப்படுத்துதல் தனி ஈழத்துக்கான போருக்குப் பின்னான புலப்பெயர்வின் வழியாகவே நிகழ்ந்தது. அதற்கும் முன்பே காலனிய காலத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் தமிழர்கள் ஐரோப்பியர்களின் காலனியாதிக்கக் கண்டங்களுக்கும் நாடுகளுக்கும் புலம் பெயர்க்கப்பட்டார்கள் என்பது வரலாறு.

சி. அண்ணாமலையின் வெங்காயம் : மதத்தில் மறையும் மாமத யானை

படம்
நாடகக்காரரும் நாடகம் பற்றிய பதிவுகளைப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துசெய்து வருபவருமான சி.அண்ணாமலை எழுதி காவ்யா வெளியிட்டுள்ள நாடகம் வெங்காயம்.வெங்காயம் -பெரியார் பற்றிய நாடகம் என்ற குறிப்புடன் வந்துள்ள இந்த நாடகப்பிரதியைப் பற்றிப் பேசத் தொடங்கும் போது மிகுந்த எச்சரிக்கையோடு பேச வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழ் நாட்டில் நவீன நாடகத்தளத்தில் செயல்படுகிறவர்களாகக் கருதிக் கொள்ளும் பலரும் நாடகத்தைப் பற்றிய விமரிசனங்களையும், நாடகப் பிரதிகளைப் பற்றிய விமரிசனங்களையும், விமரிசனங்களாகக் கருதி விவாதிப்பதில்லை என்பது எனது சொந்த அனுபவம்.

அரங்கியல்: அடையாளங்களும் ஆளுமைகளும்

படம்
நாடகக் கலை இந்தியாவிலும் இலங்கையிலும் கல்வித்துறைசார் படிப்பு. நாடகக்கலை மட்டுமல்ல; நடனம், இசை போன்ற நிகழ்த்துக்கலைகளும், ஓவியம்,சிற்பம் போன்ற நுண்கலைகளும், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், காணொளித்தொகுப்புகளாகச் சமூக ஊடகங்களில் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் இருநிலை ஊடகக்கலைகளும் கூடக் கல்வித்துறைப் பாடங்களாக மாற்றம் பெற்றுள்ளன.

கவனிக்கத்தக்க பொறுப்பளிப்பு

படம்
  கலைமாமணி விருதுகள் வழங்கப்படும்போது தினசரிகளில் இடம்பெறும் அமைப்பாக -   உச்சரிக்கப்படும் பெயராகத் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இருந்து வருகிறது. விருது வழங்கப்படுவதற்கான காரணங்களை முன்வைக்காமலும், குறிப்பிட்ட எண்ணிகையைப் பின்பற்றாமலும் வழங்கப்படும் ஒரு விருதுக்குப் பெரிய கவனிப்பும் மரியாதையும் பொதுச்சமூகத்தில் இருப்பதில்லை. தமிழக அரசின் இயல் இசைநாடக மன்றம் வழங்கும் கலைமாமணி விருதும் அப்படியானதொரு விருதாகவே இருந்து வருகிறது.

24 மணிநேரத்துக்குப் பதில் 12 மணிநேரம்

படம்
கோடைக்கானலுக்குப் போன பத்துப் பயணங்களில் இந்தப் பயணமே மிகக் குறுகிய நேரப்பயணம். இதற்கு முந்திய குறுகிய பயணமாக இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன்     நள்ளிரவில் தொடங்கி நள்ளிரவில் முடித்த அந்தப் பயணம்தான்.

காண்மதி நீவிர் ; கண்டா வரச்சொல்லுங்க...

படம்
இரண்டு வாரங்களுக்கு முன்பு எழுத்தாளர் இமையம் (2020 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் சாகித்ய அகாடெமி விருது எழுத்தாளர்) எழுதிய கதையொன்றுடன், நீலம் மாத இதழ் (வெளியீடு: இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் அமைப்பு) கைக்கு கிடைத்தது. பொதுவாக, இமையத்தின் சிறுகதைகளைக் கிடைத்தவுடன் வாசித்து விடுவதுண்டு. அவரது முதல் நாவலான கோவேறு கழுதைகள் ஏற்படுத்திய தாக்கம் அது. கோவேறு கழுதைகளை வாசித்துவிட்டு, புதுவைக்கு வந்த இமையத்தைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த நாளில் தொடங்கிய நட்பு கால்நூற்றாண்டுக் காலமாகத் தொடர்கிறது.

மொழி: வல்லான்கை ஆயுதம்

படம்
பேச்சு இயல்பான நிலையில் தகவல் பரிமாற்றமாக இருக்கிறது. தகவல் சொல்லும் மொழி, அடை, உரி, போன்ற முன்னொட்டுகளைக் குறைவாகவே பயன்படுத்தும். அடைமொழிகள் இல்லாத, உரிச்சொற்கள் பயன்படுத்தாத மொழியின் வழியாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் மனிதர்கள், அதிலிருந்து தங்களுக்குப் பயன்படுவனவற்றை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். மற்றவைகளை விட்டுவிட்டு விலகிப்போவார்கள்.