இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொலையும் கடவுளும் தூரமாகப் போகும் காதலும்

புதிதாக வரும் சமூகக் கட்டமைப்பு தரும் பலன்களை அனுபவித்துக்கொண்டே அதற்கெதிராகச் செயல்படுவதில் வல்லவர்கள் இந்தியர்கள். அதிலும் குறிப்பாகச் சமூகக் கட்டமைப்பில் மேல்தளங்களில் இருக்கும் ஆதிக்கசாதிகள்/ உயர்வர்க்கத்தினர் இந்தத் தள்ளாட்டத்தில் சிக்கியவர்களாகவே இருக்கிறார்கள். பிரித்தானியர்களின் ஆங்கிலக் கல்வியைப் பயன்படுத்திக் கொண்டே - ஆங்கில மொழியைத் தனதாக்கிக் கொண்டே அதற்கெதிராகப் போராட்டங்களை நடத்திய மேல்மட்ட இந்தியர்களின் மனநிலை காலனியாதிக்கத்திற்குப் பின்னரும் மாறவில்லை.

திறனாய்வுக்கலையையும் வளர்க்கலாம்

படம்
ஆத்மநாம் அறக்கட்டளை தனது ஐந்தாம் ஆண்டுக் கவிதை விருதுக்கான முக்கியமான கட்டத்தை முடித்திருக்கிறது. முதல் கட்டம் விருதுத் தேர்வுக்குழுவை அறிவித்துப் போட்டியில் பங்கேற்கக் கவிதைத் தொகுப்புகளைப் பெற்றதாக இருந்திருக்கும். அப்படி வந்த 31 கவிதைத் தொகுப்புகளிலிருந்து ஒன்பது பேரைக் குறும்பட்டியலாக அறிவித்திருக்கிறது. கவிதைத் தொகுப்புகளுக்குப் பதிலாகக் கவிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

நினைக்கப்பட வேண்டிய இருவேறு நாடக எழுத்தாளர்கள்: கிரிஷ் கர்நாட். கிரேஸி மோகன்

படம்
  கிரிஷ் கர்னாட் ஒருநாள் விடுமுறையும் மூன்று நாள் துக்கமும் எனத் தனது மாநிலத்தின் இலக்கிய அடையாளமாகத் திகழ்ந்த கிரிஷ் கர்நாடின் மரணச் செய்தியைச் சொல்லியிருக்கிறது கர்நாடக மாநிலம். தனது 81 – வயதில் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகரில் மரணம் அடைந்துள்ள கிரிஷ் கர்னாடின் தாய்மொழி கன்னடம் என்றாலும் அவர் பிறந்த ஊர் (1938) மந்தெரன் இப்போதுள்ள மகாராட்டிர மாநிலத்திற்குள் இருக்கிறது.

கவிதைக்குள் கதைகள்

கதைசொல்லும் கவிதைகள் கதைத் தன்மைகொண்ட கவிதைகளுக்குத் தமிழில் தொடர்ச்சி எதுவும் இல்லை, ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு காரணங்களுக்காகக் கவிதை, தமிழில் எட்டுத்தொகையாகத் தொகுக்கப்பட்ட கவிதைகளைத் தாண்டி பத்துப்பாட்டாகத் தொகுக்கப்பட்டவைகளில் ஒருவிதக் கதைத் தன்மை இருப்பதாக உணரலாம். ஆனால் அவை கதைகள் அல்ல. அந்த மரபு நீட்சியைச் சிற்றிலக்கியங்களின் சில வடிவங்களில் பார்க்க முடியும். ஏங்கும் பெண்களின் கதையை, காத்திருக்கும் தலைவிகளின் கதைகள் அவற்றில் இருக்கின்றன. நவீனத்துவத்தின் வரவிற்குப் பிந்திய கவிதைவடிவம், கதைசொல்வதில் பல காரணங்களைப் பின்பற்றியுள்ளது.

கருத்தியல் அரசியலும் அரசியல் கருத்துகளும்

இரட்டை எதிர்வு எல்லாவற்றையும் இரட்டையாகப் பார்ப்பது சிக்கலானது என்றாலும் அப்படிப் பார்க்கும்படி உண்டாகும் நெருக்கடியிலிருந்து தமிழகம் விலகி விடாமல் தவிக்கிறது. அந்தத் தவிப்பு சரியா? தவறா? என்பதை நிகழ்வுகளின் முடிவுகள் தான் சொல்கின்றன. முன்கூட்டிய கணிப்புகள் எப்போதும் தவறாகி விடுகின்றன. இதனைத் தமிழ்நாட்டின் தனித்துவம் என்று தான் சொல்லவேண்டும். இங்கே இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என வாதம் செய்பவர்கள் தங்களின் கண்களுக்குப் பக்கப்பட்டை போட்டுக்கொண்டு பயணிப்பவர்களாக இருக்கலாம். இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என்பதைவிட இரட்டை எதிர்வாகவே தமிழ்மனம் இயங்குகிறது

எண் விளையாட்டு

இந்தியாவில் எப்போதும் பேசுபொருளாக இருப்பது இட ஒதுக்கீடு என்னும் எண் விளையாட்டு. மைய அரசுப் பங்கீடு 1 +1 . ஒதுக்கப்படும் பங்கீடு 50 சதவீதம். ஒதுக்கப்படாத பங்கு 50. ஒதுக்கப்படாத 50 சதவீத இடங்களில் அனைவரும் போட்டியிட்டுத் தங்களின் திறமையின் அடிப்படையில் இடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒதுக்கப்பட்ட 50 சதவீத இடங்களில் பழங்குடியினருக்கு 7.5% , சமூக ஒதுக்குதல் அடிப்படையிலான பட்டியல் இனத்தவருக்கு 15%, பிற பிற்பட்டோருக்கு 27.5 %.

குடும்பப் பெண்கள் பாடசாலைகள் : கு.ப. சேது அம்மாளின் குலவதி

படம்
பெண்ணெழுத்து பல தளங்களில் விரிந்துள்ளது. தமிழ்ப் புனைகதையில் பலகட்டங்களைக் கடந்துள்ளது. பெண்களை எழுத வேண்டும் என்பதற்காகவே பெண்கள் எழுதத் தொடங்கினார்கள் எனச் சொல்ல முடியாது. ஆண்கள் செய்யும் வினைகளைப் போலவே பெண்களும் ஆற்றமுடியும் என்று காட்டுவதற்காகப் பெண்களும் எழுதத் தொடங்கினார்கள். இருபாலாரின் எழுத்திலும் வரும் ஆண்களும் பெண்களும் ஒன்றுபோல் எழுதப்படவில்லை என்ற உணர்வு தலைதூக்கிய நிலையில் பெண்ணெழுத்து – பெண்கள் எழுதிய பெண்ணெழுத்து உருவாகியிருக்கிறது.

இரு சினிமா ஆளுமைகளின் மரணங்கள்

படம்
  அருண்மொழி இனி இல்லையா? ஆர் யூ இன் சென்னை - R U N Chennai - என்று கேள்வியாகக் குறுந்தகவல் வரும்போதெல்லாம் தொலைபேசி எடுத்துப் பேசும் நேரம் நீண்டுகொண்டே போகும். தொடக்கத்தில் என்னை நீ கலாய்ப்பதும்; உன்னை நான் கலாய்ப்பதுமாக நீளும் அந்த உரையாடல்கள் அண்மையில் பார்த்த நாடகம், சினிமா, புத்தகம் என்று நீண்டு எப்போது சென்னை வருகிறீர்கள்?

நாட்டரசியல் : மூன்று குறிப்புகள்

24 மணிநேரத்திறப்பு என்னும் அடுத்த கட்ட நகர்வு 24 மணி நேரமும் கடைகள்/வணிக நிறுவனங்கள்  திறந்திருக்கும். தமிழ்ச் சமூகம் நுகர்வுச் சமூகமாக மாறுகிறது என்பதைச் சட்டப்படி முன்வைத்துள்ளது. இந்த அறிவிக்கை. இந்த அறிவிக்கையில் கட்டுப்பாடுகள் இல்லை. பொதுவாக வரையறைகளில் மட்டுமே விதிவிலக்குகளும் கட்டுப்பாடுகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். வரையறுப்பதற்கு மாறாகத் திறப்புகளில் இவை இருப்பதில்லை.