இடுகைகள்

ஏப்ரல், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆற்றுகை

writtentext kum performance text kum vilakkam solla mudiuma si.  (ரிட்டன் டெக்ஸ்ட்க்கும்,பெர்பார்மென்ஸ் டெக்ஸ்ட்க்கும் விளக்கம் சொல்ல முடியுமா சார்)

விருதுகள் - வெகுமதிகள் - விளையாட்டுகள்

இந்தியாவில்மட்டுமல்ல உலகெங்கும் வழங்கப்படும் எல்லாவகை விருதுகளும் நபர்களின் விருப்பு வெறுப்புஅடிப்படையில் தான் தரப்படுகின்றன. விருதுகளை உருவாக்கியவர்களின் நோக்கம் சார்ந்த விருப்பு- வெறுப்பு ஒருவகை என்றால், விருதுக் குழுவில் இருக்கும் நபர்களின் விருப்பு - வெறுப்பு இன்னொருவகை.  இதற்காக அறிவிக்கப்படும் விருதுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளட வேண்டும் என அர்த்தமில்லை.

முகநூல் பதிவுகள் - இலக்கிய சேவைகள் - தமிழ் ஆய்வுகள் - நெஞ்சு நனைக்கும் நினைவுக்குறிப்புகள்

13 - 03-2015 அன்று இரவு 9 மணி வாக்கில் முகநூலில் நண்பர் பௌத்த அய்யனார் இப்படி ஒரு நிலைத்தகவல் போட்டார். · ஆண்டுக் கணக்கு முடிவு வந்து விட்டால் பேராசிரியர்கள் இலக்கியம் வளர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதைப் படித்த உடன் அதற்கு உடனடியாக நான் ஒரு எதிர்வினையைத் தர வேண்டும் என நினைத்து இப்படி எழுதினேன்: ஆண்டுக் கணக்கு இல்லை அய்யனார். மார்ச் 31 இல் முடியும் நிதியாண்டு முடியும் போது இலக்கியம் வளர்க்கும் பேராசிரியர்கள் மட்டும் தான் தெரியுமா உங்களுக்கு. வரலாறு விலங்கியல் உயிரி தொழில் நுட்பம் வளர்ப்பவர்களும் அப்போது தான் கிளம்புவார்கள். ஐனவரி புத்தகச் சந்தையில் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இலக்கியம் வளர்க்கக் குவியும் கணக்கு போல இதுவும் ஒரு கணக்கு தான்.   உடனடியாக எதிர்வினையாக எழுதியதற்குக் காரணம் அவர் இந்த நிலைத் தகவலைப் போட்ட 2 மணி நேரத்திற்கு முன்பு · உலகத்தமிழ் எழுத்தாளர்களுக்கிடையிலான பன்னாட்டுப் பரிவர்த்தனைக் கருத்தரங்கம் ஒன்று மதுரையில் தமிழக அரசு அமைப்பான உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சங்கம் விடுதியில் நடக்கும் கருத்தரங்கில் நாளை பிற...