உப்பு வண்டிக்காரன் : சமகாலத்தை எழுதுவதின் வகை மாதிரி.

உப்பு வண்டிக்காரன் இமையத்தின் புதிய நாவல் (அக்டோபர், 2024). அவரது முதல் நாவல் கோவேறு கழுதைகள்(1994) வெளிவந்தபோது அவருக்கு வயது 30. வெளிவந்த சில மாதங்களுக்குள்ளேயே ஆதரவும் எதிர்ப்புமான விமரிசனங்களைப் பெற்றுக் கவனிக்கத்தக்க எழுத்தாளராக அவரை முன்வைத்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்ணொருத்தியின் துயரார்ந்த வாழ்க்கையைத் துன்பியல் உணர்வெழுச்சியோடு எழுதிக்காட்டியது. அதன் வடிவம், மொழிப்பயன்பாடு, மனிதாபிமானம் சார்ந்த உரிப்பொருள் நோக்கம் என பலவிதமான இலக்கியவியல் சிறப்புகள் கொண்டது என்பதைப் பலரும் சுட்டிக்காட்டினர். முதல் விமரிசனத்தை எழுதிய எழுத்தாளர் சுந்தரராமசாமி படைப்புக்கு விருதென்றால், இந்த ஆண்டின் சாகித்திய அகாடெமி விருதைக் கோவேறு கழுதைகளுக்கே தரவேண்டும் என எழுதினார். கோவேறு கழுதைகளைத் தொடர்ந்து ஆறுமுகம்(1999),செடல்(2005), எங்கதெ(2015), செல்லாத பணம்(2018), வாழ்க வாழ்க (2020),இப்போது உயிரோடிருக்கிறேன் (2022),நெஞ்சறுப்பு(2024) எனச் சீரான இடைவெளியில் நாவல்களை எழுதி வெளியிட்ட இமையத்தின் ஒன்பதாவது நாவல் உப்புவண்டிக்காரன். இந்த ஆண்டிலேயே வந்துள்ள இரண்டாவது நாவல். அவரது ஐந்தாவது நாவலான செல்லாத ...