சேவாலயத்தோடு சில நினைவுகள்

சீடு அமைப்பின் மார்கழிக்கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாகப் பிரபாகர் இயக்கிய ‘மனைவியர் பள்ளி’ நாடகம் (மோலியரின் மூலத்தைத் தழுவிய நாடகம்) ஷெனாய் நகரில் இருக்கும் சேவாலய வளாகத்தில் நடக்கிறது என்பதைக் கூகுள் வரைபடத்தோடு அனுப்பி வைத்தனர் பிரபாகரும் கார்த்திக்கும். பழைய அண்ணா பேருந்து நிலையம் வழியாகச் செல்லும் நகரப்பேருந்தில் ஏறினால் ஷெனாய் நகரில் இறங்கிக் கொள்ளலாம்.