இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவனிக்கப்படுவதின் பின்னணிகள்

படம்
நிகழ்வுகளும் தகவல்களும்  வெளிப்பாடுகளும் சேர்ந்து வரலாற்றை உருவாக்குகின்றன.சொல்லப்படும் தகவல்களும் நடக்கின்ற நிகழ்வுகளும் உடன்பாடுநிலை வரலாற்றை உருவாக்கவா..? எதிர்மறை நிலை வரலாற்றை உருவாக்கவா.? என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டியது அதில் பங்கேற்பவர்களின் தன்னுணர்வு சார்ந்த ஒன்று. இன்னும் சொல்வதானால் பங்கேற்கிறவர்களின் நோக்கம் சார்ந்தவைகளும் கூட.

தேர்தல் காலச் சொல்லாடல்கள்

படம்
வேறுபாடுகளைக் கூர்தீட்டி மதம் இனம் மொழி சாதி மண் மட்டையெனப் பேசிக் கொலைகளை நியாயப்படுத்துகிறது பெரும்பான்மை வாதமென்னும் பாசிசம்

இலக்கிய இதழ்கள் :விடுதலைக்கு முன்னும்பின்னுமான சிற்றிதழ்ப் போக்குகள்

படம்
அம்ருதா, அரும்பு, உயிர்மை, பேசும் புதிய சக்தி, காக்கைச் சிறகினிலே, புதிய கோடாங்கி, உங்கள் நூலகம், புத்தகம் பேசுது முதலான மாத இதழ்கள் எனது முகவரிக்கு ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் வந்துவிடுகின்றன. இவற்றில் தொடர்ந்து எழுதுகிறேன் அல்லது எப்போதாவது எழுதுவேன் என்பதற்காக அதன் ஆசிரியர்கள் அனுப்பி வைக்கிறார்கள். காலச்சுவடு, தீராநதி இரண்டிலும் எழுதினால் அந்த மாதம் மட்டும் அனுப்புவார்கள். மற்ற மாதங்களில் கடைக்குப் போய் வாங்கிக்கொள்ள வேண்டும்.

வாசிப்புக்குறிப்புகள்

படம்
இரண்டு வாசிப்புக்குறிப்புகளும் அச்சாக இருக்கும் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெறுவதற்காக எழுதப்பெற்ற குறிப்புகள். அந்நூல்கள் வரும்போது அவற்றை வாசிக்க இக்குறிப்புகள் உதவலாம். இல்லையென்றாலும் இவ்விருவரின் சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கும்போது இக்குறிப்புகள் உள்வாங்கி நீங்கள் வாசிக்கலாம்.

மக்கள் நலக்கூட்டணி என்ற கானல் நீர்

எப்போதும் தேர்தல்களைத் தொடங்கிவைக்கும் வேலையை ஊடகங்கள் தான் செய்கின்றன. 24x7 செய்தி அலைவரிசைகளுக்கு நீண்ட நாள் தீனியாக இருக்கக்கூடியவை விபத்துகளோ, கலவரங்களோ, சாதனைகளோ, கொண்டாட்டங்களோ அல்ல. அவையெல்லாம் ஒரு நாள் பசிக்கான தீனிதான். தேர்தல் களியாட்டங்கள் நீண்ட நாளைக்கான உணவுச் சேகரிப்பு. எடுத்து எடுத்துப் பரிமாறலாம். முதல் தந்ததையே அடுத்தநாள் புதிதுபோலப் பரிமாறலாம். முதன்மை உணவை மாற்றாமல், கூட்டு, பொரியல் மாற்றம், ஊறுகாய், அப்பளம் மாற்றம், சாம்பார், சட்னி மாற்றம் என மாற்றங்களைச் செய்துகொண்டே இருக்கலாம். சொம்பில் நீரை வைத்து இலை போடுவதில் தொடங்கி உப்பு, ஊறுகாய், அவியல், பொரியல், கூட்டு, அப்பளம், பாயசம் எனப் பரிமாறியபின் சோற்றைப் பரிமாறும் விருந்துச் சாப்பாடுபோல. கடந்த ஐந்து மாதங்களாகப் பரிமாறிக் கொண்டிருக்கும் செய்தி அலைவரிசைகளுக்குத் தொடர்ந்து தீனிபோட முடியாமல் தவிப்பவை அரசியல் கட்சிகள். கூட்டணிக்குக் கணக்குகள், கட்சிமாற்றங்கள், ரகசிய சந்திப்புகள், வெளிப்படையான சவால்கள், புதுப்புது கட்சிகளை உருவாக்குதல் என ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் விருந்துகளும் பரிமாற்றங்களும் நடக்கின்றன. கூட்டணி உர...

கனவுலக நடப்பியலின் சாத்தியங்கள் : ஜீனத்தின் கொதிகலன் சிறுகதையை முன்வைத்து

படம்
காமத்தை எழுதுதலின் போக்குகள் ஜீனத் எழுதிக் கோணங்கியின் கல்குதிரை இதழில் (39/2024) வந்துள்ள கொதிகலன் சிறுகதையை அச்சில் வாசிக்கவில்லை. அண்மையில் அவரது முகநூல் பதிவேற்றத்தின் வழியாக அறிந்த பின்னரே வாசித்தேன். வாசித்து முடித்தவுடன் மணிக்கொடி கால (1933 -1950) எழுத்தாளர்களில் கு.ப.ராஜகோபாலனின் பெண் பாத்திரத்தேர்வுகள் நினைவுக்கு வந்தன. காமம் சார்ந்த உடலியல் தேவைகளின் போதாமையால் தவிக்கும் பெண் பாத்திரங்களைத் தெரிவு செய்த தொடக்கக்காலச் சிறுகதை எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன். அந்தப் போக்கைப் பின்னரும் பலர் தொடர்ந்தனர்.

தமிழ்ச் சினிமாவும் தமிழக வரலாறும்

படம்
ஒரு கதை ======= மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் மகாத்மா காந்தியைப் பாடமாகப் படித்ததற்கு முன்பே எனக்குக் காந்தியாரைத் தெரியும். இத்தனைக்கும் நான், இந்திய விடுதலைக்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்துப் பிறந்தவன். எனக்குத் தெரிந்த காந்தியார், தச்சபட்டியென்னும் எனது கிராமத்தோடு ஐந்து கிராமங்களை அடக்கிய பஞ்சாயத்தின் தலைவர். அவரது உண்மையான பெயரை, எனது மூத்த அண்ணனின் திருமணப்பத்திரிகையில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். அதிலும்கூட காந்தியார் என்ற ‘............’, அவர்களது தலைமையில் என்று அச்சிடப்பட்டிருந்தது. அச்சிடப்பட்ட அந்த உண்மைப்பெயரும் அன்றோடு மறந்துவிட்டது. அதற்கு முன்பும் பின்பும் எனது நினைவில் இருக்கும் பெயர் காந்தியார் தான்.

தாய்(க்)கிழவி: கதாபாத்திரங்களால் பின்னப்பட்ட சினிமா.

படம்
சினிமாவின் வணிகவெற்றிக்கு உதவுவதில் முதல் இடம் வலுவான திரைக்கதையாக்கம். வலுவான திரைக்கதையாக்கத்தில் நாயகப்பாத்திரம்  X எதிர்நிலைப் பாத்திரம்  உருவாக்கப்பட்டு முரண்பாட்டை வளர்த்து உச்சநிலையில் நாயகத்தனம் வெற்றி பெற்றது எனக் கட்டமைக்கப்பட்ட காட்சிகள் இருக்கும். முரண்பாட்டின் வளர்ச்சியை ஒற்றைக்காட்சியாக அமைக்காமல் காதல், காதலுக்கு எதிர்ப்பு, ரத்த உறவுகளிடையே பாசம், அப்பாசத்தில் உண்டாகும் விரிசல், கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தெரியாதவர்களின் தோல்வி, தோல்வியில் துவண்டவர்களுக்கு உதவி, அவர்களை மீட்டெடுத்தல் எனப்   பல குணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்புக் கொண்ட நாயகப் பாத்திரத்தின் வெற்றி என்பது ஏற்கத்தக்க வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. திரளான பார்வையாளர்களைச் சென்றடையும் என நம்பப்படுகின்றது. இவ்வகைப் படங்களில் நட்சத்திர நடிகர்கள் நடித்து அவ்வெற்றியைத் தங்களின் நடிப்புக்குக் கிடைத்த வெற்றியாக முன்வைக்கின்றனர்.

அரசியல் குடும்பங்களின் இருண்ட காலம்

படம்
சுதந்திர இந்தியாவில் ஐந்தாண்டுக்கொரு முறை தேர்தல் என்பது நடைமுறைக்கு வந்தது தொடங்கித் தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியிடம் தோல்வியைச் சந்தித்தது. கூட்டணி வெற்றி பெற்றது என்றாலும் திராவிட முன்னேற்றக் கழகம் தனியாகவே ஆட்சியை அமைத்தது என்பது வரலாறு. அந்த வரலாறு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்போதிருந்து எல்லாத் தேர்தல்களிலும் ஏதாவது ஒரு கூட்டணி தான் வெற்றி பெறுகிறது. ஆனால் ஆட்சி அமைப்பது அக்கூட்டணிக்குத் தலைமை தங்கும் கட்சி மட்டும் தான். கூட்டணியில் தனியொரு கட்சிக்குப் போதிய எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்புக் கிடைத்து விடும் நிலையில் தனியே ஆட்சி அமைப்பதைக் கூட்டணிக் கட்சிகளால் தட்டிக் கேட்க முடியாது; தடுத்து விடவும் முடியாது. இந்த நிலையையும் தாண்டி 2006 இல் ஆட்சி அமைக்கத் தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையைத் தனியொரு கட்சியாகத் திமுக பெற்றிராத போதிலும், அதன் தலைவர் மு.கருணாநிதி ஐந்து ஆண்டுகாலம் வெற்றிகரமாக ஆட்சியை நடத்தி முடித்து விட்டார். தற்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தா...

இருமொழிகளில் ஒரு கவிதைத் தொகுப்பு

படம்
காண்மதி நீவிர்... கண்டா வரச்சொல்லுங்க... செவ்வியல் கவிதைகளில் ஆங்காங்கே விளித்துச் சொல்லும் சொற்றொடராக இருக்கும் ஒன்று காண்மதி. கண்டது தானே? என்ற வினாவும் விடையும் உள்ளடக்கிய ஒரு சொற்றொடர். அதனைத் தொடர்ந்து வரும் ‘நீவிர்’ என்பது முன்னிலைப் பன்மை. நீங்கள் கண்டுகொள்ளுங்கள் என்று ஒன்றைக் குறித்துச் சொல்வதாகவோ, நீங்கள் பார்த்தீர்களா? என அறியா வினாவாகவோ கேட்கும் தன்மையிலானது. பெரும்பிரிவிலோ, சிறுபிரிவிலோ தனித்திருக்கும் தலைவியின் மனம் தலைவனைத் தேடிக் கொண்டிருக்கும்போது உருவாகும் வினாச் சொற்றொடர். இவர்கள் எல்லாம் பார்த்திருப்பார்கள்; நான் தான் பார்க்கவில்லை; ஆனால் பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது.