பிப்ரவரி 10, 2017

பனிக்கால வாடையல்ல; அக்கினிக்கால வெக்கை

முன்னுரையாக ஒரு தன்னிலை விளக்கம்
கூட்டத்தில் ஒருவனாக இருப்பேன். கூட்டத்தோடு கூட்டமாக இருக்கவே விரும்புவேன். இணையமுடியாத கூட்டங்களைக் கூட வேடிக்கை பார்க்க ஆசைப்படுபவன். உள்ளூர்த் திருவிழாக்கள் மட்டுமல்ல; உலகத் திருவிழாக்களையும் பார்த்திருக்கிறேன்மதுரையின் சித்திரைத் திருவிழாவில் பல ஆண்டுகள் பங்கேற்றுத் திரிந்தவன். திருவிழாக்களில் மட்டுமல்ல; தேர்தல்கள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பரிப்புகள், அடக்குமுறைகள், புறக்கணிப்புகள், பலியிடல்கள், கொண்டாட்டங்கள் எனப்பலவிதமான கூட்டங்களைப் பார்த்திருக்கிறேன்; பங்கேற்றிருக்கிறேன்.