இடுகைகள்

ஆகஸ்ட், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சொல்லும் செயலும் வேறெனக் கொண்டால்..?:சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள்

படம்
2009 தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த போது இலங்கைப் பிரச்சினை உறுதியாகத் திசை திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதை மனம் சொல்லத் தொடங்கியது. தீவிரமாக நடந்த ஈழ யுத்தம் தேர்தலுக்கு முந்திய நாள் ஒரு முடிவுக்கு வந்து விட்டது போலச் சர்வதேச ஊடகங்கள் செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தன.ஒரு வேளை இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி மாறிப் புதிய ஆட்சி வந்தால் இலங்கைப் பிரச்சினை வேறு வடிவம் எடுக்கக் கூடும் எனக் கருதிய இலங்கை அரசு தீவிரமாகப் போரை நடத்தி முடித்து விட்டுத் தேர்தல் முடிவோடு சேர்த்து சொல்ல வேண்டும் எனக் காத்திருந்தது போல முல்லைத் தீவு வெற்றியைக் காங்கிரஸின் வெற்றியோடு சேர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தது.எனக்குக் கால் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப் பட்ட அந்தக் கதையைத் திரும்பவும் எடுத்து வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. எடுத்து வாசித்து விட்டு அடையாளத்திற்கு ஒரு தாளில், “சொல்லும் செயலும் வேறெனக் கொண்டால்” என எழுதி மூடி வைத்திருக்கிறேன். கதையின் தலைப்பு: ஒரு லட்சம் புத்தகங்கள். எழுதியவர் சுஜாதா. எழுதப் பட்ட ஆண்டு 1982. 

ஆணெழுதும் பெண்ணெழுத்து : ஜெயந்தனின் அவள்

ஜெயந்தனுக்கு அந்தக் கதைக்கு ஒரு தலைப்பு வைக்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. கதையின் தலைப்பே அவள் என்பது தான். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு நிகழ்வாக மாறி விட்ட இலக்கியச் சிந்தனை, 1981 இல் வந்த சிறுகதைகளில் ஆகச் சிறந்த கதையாகத் தேர்வு செய்த கதை இது. தேர்வு செய்தவர் கிராமப் புற மனிதர்களை விதம் விதமாக எழுதிக் காட்டிய கி.ராஜநாராயணன்.

பயணத்தின் நினைவுகள் :அம்பையின் வாகனம்.

சென்னை போன்ற பெருநகரங்களுக்கு அடிக்கடி செல்லும் இக்கால மனிதர்கள் அம்பையின் இந்தக் கதையைக் காலப் பொருத்தமற்றது எனச் சொல்வார்கள். அல்லது பழைய கதை என்றாவது சொல்லக்கூடும். வாகனம் என்று தலைப்பிட்டு அம்பை எழுதிய அந்தக் கதை அவ்வளவு பழைய கதை அல்ல. பன்னிரண்டு வருடங்கள் தான் ஆகிறது.

குறியீட்டுக் கதைகள் தரும் சுதந்திரம்:சுந்தரராமசாமியின் பல்லக்குத்தூக்கிகளும் மேல்பார்வையும்.

படம்
குறியீட்டுத் தன்மை கொண்டதாக நவீன நாடகப் பிரதி ஒன்றை உருவாக்க வேண்டும் என முடிவு செய்த பின், தேர்வு செய்த கதை பல்லக்குத்தூக்கிகள். தமிழில் நவீன நாடகத்தைப் பிரதி வடிவில் ஆரம்பித்து வைத்தவர் ந.முத்துசாமி. அவரது தொடக்க நாடகங்களான நாற்காலிக்காரர், காலம் காலமாக,அப்பாவும் பிள்ளையும் ஆகிய மூன்று நாடகங்களும் அடங்கிய நாற்காலிக்காரர் தொகுப்பை வாசிக்கும் ஒருவர் நவீன நாடகம் என்பது கதைத் தன்மையைக் கைவிட்ட - குறியீட்டுத் தன்மை கொண்டதே நவீன நாடகம் என்று புரிந்து கொள்வார். பல்லக்குத்தூக்கிகள் சிறுகதையை நாடகமாக ஆக்கியதற்கு முன்பு ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் நாடகத்தைப் பயிற்சியாகவும், இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களைப் பாடமாகவும் படித்திருந்தேன். ந.முத்துசாமியின் பாணியிலிருந்து மாறுபட்டது இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள். அவரது தொடக்ககால நாடகங்களான பசி, மழை, போர்வை போர்த்திய உடல்கள் போன்றவற்றில் ஒருவித கதைத் தன்மை உண்டு.

நல்ல மேய்ப்பர்கள் : பிரபஞ்சனின் மரி என்னும் ஆட்டுக்குட்டி

முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வெளி வந்து மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து சிறப்புத் தேர்வுகள் நடைபெறும். பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெறாமல் போன மாணவர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அந்தச் சிறப்புத் தேர்வை எழுதித் தேர்வு பெற்று அடுத்த கல்வி ஆண்டுத் தொடக்கத்தில் கல்லூரிக்குள் நுழைவார்கள். பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி அடையாத வர்களுக்கு அந்த ஓராண்டு ஒரு விதத்தில் தண்டனை தான். இந்தத் தண்டனைக் காலத்தில் பலர் திசை மாறிப் போகும் வாய்ப்புக்களே அதிகம்.

ஈழம்:மாற்றுவிவாதங்களை முன் வைக்கும் கருத்துரைகள்

1.ஈழம்:தேவை- ஒரு நேர்மறையான மீளாய்வு , புதிய ஜனநாயகம் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, ஜுன்,2009 110.இரண்டாம் தளம், 63,என்.எஸ்.கே.சாலை,கோடம்பாக்கம், சென்னை-600 024 2.ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் புதிய ஜனநாயகம் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, ஜுன்,2009 110.இரண்டாம் தளம், 63,என்.எஸ்.கே.சாலை,கோடம்பாக்கம், சென்னை-600024 3.இந்திய அரசே நியாயந்தானா? முதல்பதிப்பு: ஏப்ரல், 2009,சி.மகேந்திரன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142,ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014 ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்து அரசியல் விடுதலை அடைந்துள்ள பின்காலனிய நாடுகளில் இன்றளவும் தொடரும் உள்நாட்டுப் பிரச்சினைகளின் மூலத்தைத் தேடிப் போனால் அவற்றின் தொடக்கப் புள்ளியாக, காலனிய ஆதிக்கவாதிகளின் தேச உருவாக்கமே காரணமாக இருப்பதை அறியலாம். காலனிய ஆதிக்கவாதிகள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஒன்றிணைத்து ஏற்படுத்திய தேசம் என்னும் ஒற்றைக் கட்டுமானம் தொடர்ந்து தன்னைத் தக்க வைக்க முடியாமல் தவிக்கும் தவிப்பின் விளைவுகள் பலவிதமானவை.