இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுதப்படுவது நிகழ்காலம் அல்ல; கடந்த காலம்

படம்
கடந்த காலத்தை எழுதிக்காட்டுதல் என்பதைக் கடந்த காலத்திற்குள் மறுபயணம் செய்வது என அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். நிகழ்த்தும் காலத்தில் வாழும் பார்வையாளர்களை மனதில் கொண்டு அவர்களை நோக்கிப் பேசும் நாடகக்கலைக்கு மட்டுமே உரியதாக நான் நினைக்கவில்லை. உலக மொழிகள் எல்லாவற்றிலும் பொது வடிவங்களாகத் திகழும் கதை, நாடகம், கவிதை, என்ற மூன்றோடும் தொடர்புடையதாகவே நினைக்கிறேன். இந்தப் பேச்சை அரங்கக் கலையை முன்வைத்து இலக்கியக்கலையைப் பற்றிய பேச்சாகவே நினைக்கிறேன். நிகழ்த்துகிறேன்

நான் வாழும் நகரம்:

பழைமையையும், மாற்றங்களையும் திருநெல்வேலியாகவும் பாளையங்கோட்டையாகவும் பிரித்துக்கோடு போடுவது தாமிரபரணி. ஒருவிதத்தில் வற்றாத நதி. எப்போதும் நீர் நகர்ந்து கொண்டேயிருக்கும்.

கீழடி: வரலாறும் போராட்டமும்

படம்
கீழடித் தொல்லியல் ஆய்வில் தொய்வு ஏற்படுத்தப்படுகிறது என்ற ஐயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஐயத்தை உறுதியாக நம்பியொரு போராட்டத்தை முன்னெடுக்கிறது இடதுசாரிக் கட்சியின் பண்பாட்டு அமைப்பான த.மு.எ.க.சங்கம். போராட்டத்தின் வழிமுறையாக “ பிடிமண் எடுப்பு” என்ற மரபுசார் சடங்கொன்றைக் கைக்கொண்டிருக்கிறது. கைக்கொண்ட சடங்கின் அடிப்படைத்தன்மையும், அதில் இணையக்கூடிய வெகுமக்களின் மனநிலையும் எத்தகையன என்பதை இப்போது சரியாகக் கணிக்கமுடியாது.

நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்: ப்ரசன்னா ராமஸ்வாமியின் அரங்கியல் முறைமைகள்

 2017, ஜூன் , 19 அன்று பெங்களூருவில் நான் பார்த்த கன்னட நாடகம் “ வர்த்தமானதெ சரிதே ”. அந்நாடகத்திற்கு நான் அழைக்கப்பெற்ற சிறப்புப்பார்வையாளன் . நான் மட்டுமல்ல ; கர்நாடகாவிலிருந்து இருவர் , தெலங்கானாவிலிருந்து , டெல்லியிலிருந்து தலா ஒருவர் என இன்னும் ஐந்து சிறப்பு அழைப்பாளர்கள் இருந்தனர் ; பொதுப்பார்வையாளர்களும் இருந்தனர் . அனைவரையும் இழுத்துவைத்துப் பார்த்து ரசிக்கச் செய்த நாடக நிகழ்வு அது .

தொடரும் கதைவெளி மனிதர்கள்

படம்
இப்படியான சிறுகதைத் தொகுதியை ஒரே மூச்சில் வாசித்துவிட முடியாது. ஒருவர் எழுதிய 14 கதைகளென்றால் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டே போகலாம். இரண்டு அல்லது மூன்றுநாளில் முடிந்துபோகும். அகநாழிகை பதிப்பக வெளியீடாக, ‘பொன்.வாசுதேவன்’ தேர்வுசெய்து தொகுத்துள்ள “விளிம்புக்கு அப்பால்” சிறுகதைத் தொகுதியில் 14 பேரின் 14 கதைகள் இருக்கின்றன.

அகத்திலிருந்து புறம்நோக்கிய நகர்வு

படம்
ஔவையும் கபிலனும் செவ்வியல் கவிதைகள் எழுதியவர்களுள் முக்கியமானவர்கள். அவர்கள் தொடங்கிவைத்த தமிழ்க்கவிதை மரபை இன்றும் தொடர்வது யாரெனத்தேடியது மனம். செவ்வியல் மரபாக நாம் நினைத்துக்கொள்ளும் - கட்டமைத்துக்கொள்ளும் - தொடக்கத்தின் முதன்மை ஆளுமைகளாக யாரையெல்லாம் சொல்லலாம் என்ற தேடலைச் செய்தது மனம். முதல் பெயராக வந்தவள் கவி ஔவை.

கமலென்னும் கட்டியங்காரன்

படம்
  முன்குறிப்புகளோடு ஒவ்வொரு பாத்திரத்தையும் காட்டி, அவர்களின் முன்னடையாளங்களோடு தொடர்புடைய ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமெனக் கலக்கியெடுத்து உருவாக்கப்பட்ட ஆரம்பம் புதுநிகழ்ச்சிக்கான ஆரம்பம் என்ற அளவில்தான் ஈர்த்தது. அந்தத் தொடக்கம், அடுத்தடுத்த வாரங்களில் நடந்த சின்னச்சின்ன நிகழ்வுகள் வழியாக நல்திற நாடகத்தின் முடிச்சாக(Conflict) மாறியது. அம்முடிச்சுக்குப்பின்னால் பிரிந்துநின்ற அணிச்சேர்க்கை ஒருகுடும்பத்திற்குள் பிரிந்துந ிற்கும் பங்காளிகள் அல்லது உறவுகள் என்பதைத்தாண்டியது.