இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலக்கிய இதழ்கள் :விடுதலைக்கு முன்னும்பின்னுமான சிற்றிதழ்ப் போக்குகள்

அம்ருதா, அரும்பு, உயிர்மை, பேசும் புதிய சக்தி, காக்கைச் சிறகினிலே, புதிய கோடாங்கி, உங்கள் நூலகம், புத்தகம் பேசுது முதலான மாத இதழ்கள் எனது முகவரிக்கு ஒவ்வொரு மாதத்தொடக்கத்திலும் வந்துவிடுகின்றன. இவற்றில் தொடர்ந்து எழுதுகிறேன் அல்லது எப்போதாவது எழுதுவேன் என்பதற்காக அதன் ஆசிரியர்கள் அனுப்பி வைக்கிறார்கள். காலச்சுவடு, தீராநதி இரண்டிலும் எழுதினால் அந்த மாதம் மட்டும் அனுப்புவார்கள். மற்ற மாதங்களில் கடைக்குப் போய் வாங்கிக்கொள்ள வேண்டும். நான் மாணவனாக இருந்த காலத்திலில் தொடர்ச்சியாக வாங்கி வாசித்த தாமரை, செம்மலர் போன்றனவற்றை நிறுத்தி கால் ஆண்டுக்கும் மேலாகி விட்டது. மாணவர்கள் சிலரிடம் வாங்கும்படி சொன்னால் வாங்க மறுக்கிறார்கள். வாங்க மறுக்கும் அவர்கள் சந்தா கட்டிக் காலச்சுவடு, விகடன் தடம், உயிர் எழுத்து, தீராநதி போன்றனவற்றை வாங்கிப் படிக்கிறார்கள். அவர்களிடமிருந்து பண்டமாற்றாக வாங்கிப் படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.   1990- களின் தொடக்கத்தில் அறிமுகமான உலகமயம், தாராளமயம், தனியார் மயம் என்ற மூன்றின் தாக்கங்கள் இலக்கிய இதழ்களுக்கு வந்து சேர 10 ஆண்டுகள் தேவைப் பட்டன. எழுத்

உமாமகேஸ்வரியின் சிறுகதைக்கலை

படம்
உமாமகேஸ்வரியின் ஸீஸா:மனவோட்டத்தின் உருவகம் நீண்ட காலமாகப் புனைகதைப் பரப்பில் இயங்கிவரும் உமாமகேஸ்வரியின் தொடக்கநிலைப் பொது அடையாளமாக வெளிப்பட்டது குடும்பவெளி. நகர வாழ்க்கையில் இருக்கும் நடுத்தரவர்க்கக் குடும்பங்களை எழுதுபவர் என்றோ, கிராமப்புறங்களில் இயங்கும் கூட்டுக்குடும்பத்தை எழுதுபவர் என்றோ பொத்தாம் பொதுவாக அடையாளப்படுத்த முடியாத வகையில் அவரால் முன்வைக்கப்பட்ட குடும்பவெளிகள் இருந்தன. தொடர்ந்து வாசிக்கும்போது அவரால் முன்வைக்கப்படும் பெண்கள், தமிழ்க் குடும்பவெளிக்குள் வித்தியாசமான விருப்பங்களோடும், மனவியல் ஓட்டங்களோடும் நெரிபடும் பெண்களாக இருப்பதை அடையாளப்படுத்த முடிந்தது. அந்த வேறுபட்ட தெரிவுகளுக்காகவும், தெரிவுசெய்த பெண்களின் மனவோட்டங்களையும் சின்னச் சின்னச் செயல்பாடுகளையும் விவரிக்கும் மொழிக்காகவும் அவரது கதைகளைத் தொடர்ந்து ஒருவரால் வாசிக்க முடியும்.

வாக்களிப்பும் எண்ணிக்கையும்

இந்தியா ஒன்றுபோல் சிந்திக்கிறது; ஒன்றுபோல் வாக்களிக்கிறது எனச் சொல்லிக்கொண்டிருப்பதின் அபத்தத்தைக் கைவிடவேண்டிய காலம் நமது காலம். ஆனால் இந்திய தேசியவாதத்தின் முரட்டுப் பக்தர்கள் அந்த அபத்தத்தைத் தொடரவே செய்வார்கள் என்பது குரூர உண்மை. தமிழ்நாட்டின் சட்டமன்றத்தேர்தல் ஏப்ரல் 6 இல் முடிந்தது. எட்டுக்கட்டங்களாக நடக்கும் மேற்கு வங்கத் தேர்தல் முடிந்தபின் எண்ணிக்கை நடக்க வேண்டும்; இல்லையென்றால் தமிழ்நாட்டின் முடிவு அங்கே பிரதிபலிக்கும்; பாதிப்பை உண்டாக்கும் எனச் சொல்லப்படுகிறது; நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை அபத்தமானது. நாடாளுமன்றத்தேர்தல்களும் சட்டமன்றத் தேர்தல்களும் ஒன்றாக நடந்த கால கட்டத்திலேயே தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்றன தனித்தனியாகச் சிந்தித்து வாக்களித்த மாநிலங்கள். மாநிலத்தை யார் கையில் அளிக்க வேண்டும்; மத்தியில் யார் அதிகாரத்திற்கு வரவேண்டும் எனத் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். இந்திரா காந்தியின் அவசரநிலைக்குப் பிந்திய தேர்தல்களில் தமிழ்நாடு முழுக்கவும் இந்திய மனபோக்குக்கு மாறாகவே வாக்களித்துக் கொண்டிருக்கிறது. அதன் உச்சநிலை வெளிப்பாடு 2019 நாடாளுமன்றத்தேர்தல்.   பக்க

சட்டமன்றத்தேர்தல் -2021: சில குறிப்புகள்

படம்
இந்தத்தேர்தல் அறிவிப்புக்குப் பின் முகநூலில் எழுதிய குறிப்புகள் இங்கே தொகுதியாகத் தரப்பட்டுள்ளன. வாசிப்புக்கு நேரமிருப்பவர்கள் வாசித்துப்பார்க்கலாம்