இடுகைகள்

நவம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உள்ளூர் விளையாட்டுகள் அழிந்து கிரிக்கெட் உருவானது.

படம்
இந்தியாவில் நடக்கும் மாற்றங்களின் பின்னணியில் ’சமஸ்கிருதமயமாதல்’ என்னும் மனநிலை செயல்படுவதாக எம். என். ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுவார். இந்திய சாதியக் கட்டமைப்பு அடுக்கின் உச்சத்தில் இருப்பதாக நம்பப்பட்ட பிராமணர்களின் பண்பாட்டு நடவடிக்கைகளைச் சொந்தமாக்குவதன் மூலம் தங்களையும் பிராமணர்களாகக் கருதிக் கொள்ளும் மனநிலை வெளிப்பாடு என்பது அவரது கருத்து.

தமிழ்ச்சினிமா அரசியலான கதை

படம்
”கோயில் வேண்டாம் என்று சொல்லவில்லை; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக் கூடாது என்று தான் சொல்கிறேன்” எனப் பராசக்தியில் குணசேகரனை (சிவாஜி) ஆவேச வசனம் பேச வைத்தததின் மூலம், தமிழக அரசியலோடு நேரடித் தொடர்பு கொண்டது தமிழ்ச் சினிமா. அந்தவகையில் முதற்காரணம் மு.கருணாநிதிதான். அன்று முதல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் பயன்படும் வெற்றிகரமான ஆயுதமாகத் தமிழ்ச் சினிமா தமிழக அரசியலின் இணையாகவே கருதப்படுகிறது.

கல்வியில் கொள்கையின்மை

நிகழ்கால வாழ்க்கைமுறை ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தந்துள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல். தன்னை வெளிக்காட்ட -தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன.

உயர்கல்வி சந்திக்கும் சிக்கல்கள்

உயர்கல்வியில் காலத்தின் தேவைக்கேற்பச் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும் செய்வதற்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் அமைப்புகள் இருக்கின்றன. பல்கலைக்கழக மானியக்குழு, மாநில உயர்கல்வி மன்றம், அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி மன்றம் போன்ற பெயர்களில் இயங்கும் இந்த அமைப்புகளே அவ்வப்போது பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வழிகாட்டு நெறிகளையும் விதிகளையும் உருவாக்கித் தருகின்றன. பல்கலைக்கழகங்கள் அவற்றை உள்வாங்கிக் கொண்டு அவை இயங்கும் வட்டாரத்திற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்குவது, தேர்வுகளை நடத்துவது, பட்டங்களை வழங்குவது எனப் பணிகளைச் செய்கின்றன. இப்பணிகளைச் செய்ய ஒவ்வொரு அமைப்பிலும் நியமன உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுமாக கல்விநிலைக்குழு, ஆட்சிப்பேரவை, ஆட்சி மன்றக்குழு எனச் சிற்றதிகாரம், பேரதிகாரம் நிரம்பிய அமைப்புகள் செயல்படுகின்றன. அவற்றின் தலைவராக இருப்பவர்களே துணைவேந்தர்கள்.

கலைப்பாடங்களின் அழிவு

ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னும் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கற்றுத்தந்த பாடங்கள் மூன்று பெரும் பிரிவுகளாகவே இருந்தன, இன்றளவும் கூடப் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அறிவியல் புலம், சமூக அறிவியல் புலம், மொழிப்புலம் என மூன்று புலங்கள் தான் இருக்கின்றன.ஆனால் இம்மூன்று புலங்களும் பல்வேறு துறைகளைக் கண்டறிந்து வளர்ச்சி பெற்ற நிலையைத் தொண்ணூறுகள் வரை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் காண முடியும்,

தமிழ் வாழ்க்கை ஏன் தமிழ்ப் படத்தில் இல்லை

படம்
தமிழில் பெயர் வைத்தாலேயே தமிழ்ச் சினிமாவாக ஆகி விடும் என்று கருதிய தமிழக அரசின் நம்பிக்கையை மூட நம்பிக்கையாக ஆக்கியது தமிழ்த் திரையுலகம். ரோபோ என்ற பெயருக்குப் பதிலாக எந்திரன் என்றொரு பெயரைச் சூட்டி வரி விலக்குப் பெற்று கல்லாக் கட்டும் வல்லமை அவர்களிடம் உண்டு. சினிமா என்றாலே லாபம் ஈட்டும் தொழில் மட்டுமே என நினைக்கும் சினிமாத் தயாரிப்பாளர்களிடமிருந்து தமிழ் வாழ்வும், தமிழ் மண்ணும், தமிழ்ச் சமூகமும் தமிழ் மனமும் பதிவாகும் என எதிர்பார்ப்பது அதிகப்படியான ஆசை தான்.

பெரிய முள்ளை பதினோரு தடவை சுற்றிக் கொள்ளுங்கள்

படம்
‘ டாடா மோட்டார்ஸ் ’ சந்திரசேகர் காரில் என்னை அழைத்துப் போகவில்லை என்றால் இறகுப் பந்து ( ஷட்டில் ) விளையாடப் போயிருக்க மாட்டேன் .   வார்சாவுக்குப் போனதிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாமல் போய்க் கொண்டிருக்கிறேன் . வீட்டிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த விளையாட்டு மைதானத்திற்கு நடந்து போக முடியாது . பஸ்ஸில் போவதென்றாலும் ஒரே பஸ்ஸில் போய்த் திரும்ப முடியாது .

குளியலறையில் குளிக்கக் கூடாது.

படம்
வார்சாவிற்குக் கிளம்புவதற்கு முன்பு செய்து முடிக்க வேண்டும் எனப் போட்ட பட்டியலில் பாபநாசம் கீழணைக் குளியலும் ஒன்று. திருநெல்வேலிக்குப் போன பிறகு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவை பாபநாசம் கீழணையில் குளித்து வருகிறேன். ஏதாவது வாய்ப்புக் கிடைத்தால் பாபநாசம் போய் விடவே எப்போதும் விரும்புவேன். திருநெல்வேலிக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் விரும்புவது குற்றாலம் தான். ஆனால் குற்றாலம் எனக்கு அலுத்துப் போய்விட்டது. அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து குளித்து வெளியேறுவதில் ஏற்படும் எந்தப் பிரச்சினையும் பாபநாசத்தில் இல்லை. கீழணைக்குளியலைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் பாத்ரூமில் குளிக்கக் கூடாது என்ற தடையைச் சந்தித்ததைச் சொல்ல வேண்டும். வார்சாவிற்குப் போனவுடன் நாங்கள் சந்தித்த குளியல் அறைச் சம்பவம் சுவாரசியமானது. திருநெல்வேலியில் ஆத்திலும் அருவியிலும் குளிக்கும் வாய்ப்புகள் இருந்தாலும் தினசரிக் குளியல் என்னவோ வாளித்தண்ணீரை அள்ளி ஊற்றிக் குளிப்பதுதான். அதற்கு வார்சாவில் விடுதலை கிடைத்தது. கழிப்பறையோடு கூடிய குளியலறையில் ’பாத் டப்’ இருந்தது. வெந்நீரையும் தண்ணீரையும் நிரப்பிக் கொஞ்ச நேரம் மூச்சடக்கி

இந்தியவியல் துறைகளின் தேவை.

படம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையிலிருந்து போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் புலத்தில் தமிழ்ப் வந்திருக்கிறேன். இந்தியவியல் புலத்தில் போலந்து மாணவ மாணவி களுக்கு காலப்பழமையும் பாரம்பரிய வளமும் கொண்ட இந்தியாவின் செவ்வியல் மொழிகளான  சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றோடு இந்தி, பஞ்சாபி, வங்காளம் ஆகிய சார்பு மொழிகளையும் கற்பிக்கப் போலந்து பேராசிரியர்களும், இந்தியாவிலிருந்து வருகை தந்து குறிப்பிட்ட காலம் தங்கியிருந்து இம்மொழிகளின் நிகழ்கால இருப்பைக் கற்றுத்தரும் வருகை தரு பேராசிரியர்களும் இருக்கிறார்கள்.

வலதுசாரியாக மாறியாக வேண்டும்

படம்
பல்கலைக்கழகம் வரை அழைத்துச் செல்ல வந்து கொண்டிருந்த மாணவிகள் வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். வீட்டிலிருந்து கிளம்பிப்  பல்கலைக் கழகத்திற்கு வந்து சேரும் பாதையைப் புரிந்து கொண்டு விட்டேன் என்ற உறுதி எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. பாதை பிடிபட்டு விட்டது என்று நான் சொல்லவும் இல்லை; ஆனால் அந்த முடிவை அவர்களே எடுத்து விட்டார்கள். ஏதாவது பிரச்னை என்றால் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இரண்டு தொலைபேசி எண்களைக் கொடுத்து விட்டு வாபஸான போது கொஞ்சம் கலக்கமாகத் தான் இருந்தது.

பாரம்பரிய அரங்கைப் பயில்வது குறித்து

படம்
இந்தியாவில் இயங்கிவரும் நாடகப்பள்ளிகள் மேற்கத்திய அரங்க நுட்பங்களைப் பயிற்றுவிப்பதோடு, இந்திய அரங்கவியலையும் பயிற்றுவிக்கின்றன. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் 'முறைப்படுத்தப்பட்ட நடிப்புக் கோட்பாட்டை' கற்பிப்பது போலவே, பாரம்பரிய அரங்கில் நிகழ்த்துபவரின் உடல் மொழியையும் குரல் வளத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் இருக்கிறது. இந்த அடிப்படையில்தான் கர்நாடகத்திலுள்ள நாடகப்பள்ளிகள் யட்சகானத்தையும், கேரளத்தில் கதகளியையும் கூடியாடத்தையும் பயிற்றுவிக்கின்றன. பாரம்பரிய அரங்கிற்கான பயிற்சி, ஒரு நடிகனை குறிப்பிட்ட வகை நடிப்புக்கு மட்டுமே உரியவனாக மாற்றிவிடும் அபாயம் கொண்டவை, என்ற போதிலும், அதிலிருந்து விடுபட்டு நடிப்பின் பல பரிமாணங்களுக்கும் சென்றவர்களும் உண்டு. பாண்டிச்சேரி பல்கலக்கழக நாடகப்பள்ளியும் தனது மாணவர்களுக்குப் பாரம்பரிய அரங்கை முறையான நபர்களைக்கொண்டு பயிற்சி தருவதில் பின்வாங்கியதில்லை.  சில பல வாய்ப்புக்களின் மூலம் தமிழ்நாட்டில் பாரம்பரிய அரங்காக முன்னிருத்தப்பட்ட தெருக்கூத்து, இரண்டுமுறை மாணவர்களால் பயிலப்பட்டது. 1990ல் கலைமாமணி புரிசை கண்ணப்பத் தம்பிரான் ஒருமாதம