பிப்ரவரி 24, 2011

இன அடையாளங்களைத் தாண்டி..


இலங்கையில் நிகழ்ந்து வந்த யுத்தம் 
பேரினவாதக் கருத்தியலை 
மெல்லமெல்ல ஏற்றுக் கொள்ளச் செய்வதில் 
வெற்றி பெற்றுள்ளது. 
முடிவுக்கு வந்த யுத்தத்தின் பிந்திய மௌனங்கள் 
அதற்கு முழுச்சாட்சி. 
ஆனால் மௌனங்கள் கலையும் ஓசைகளும் கேட்கவே செய்கின்றன 
என்பதை அவ்வப்போது வரும் தகவல் குறிப்புகள்
சொல்லித்தான் காட்டுகின்றன. 
இன்று காலை எனக்கு வந்த 
இந்தக் கடிதம் எனக்குச் 
சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன்
அ.ராமசாமி


பிப்ரவரி 15, 2011

ஐயா, உங்கள் காலம் முடிந்து போய் விட்டது


அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்ய முடியாமல் திகைத்து நிற்கும் அவரிடம் அப்படிச் சிரித்துக் கொண்டே பேசியிருக்கக் கூடாது என்பது இப்போது உறைக்கிறது. சிரித்துக் கொண்டே சொன்ன போது அவர் நிச்சயம் கோபம் அடையவே செய்திருப்பார்.

பிப்ரவரி 06, 2011

எல்லை கடக்கும் உரிமைகள்


“ஆ.ராசா மீது குற்றம் சாட்ட எந்த முகாந்திரமும் இல்லை” “ நீதி தேவர்களாகும் ஊடகக்காரர்கள்” ஒன்று குற்றம் சாட்டும் வாக்கியம்;இன்னொன்று தீர்ப்பு வழங்கும் வாக்கியம். ‘பத்ரி சேஷாத்ரி’ எழுதியதை இமையம் வெளியிட்டுள்ளார். பத்ரி சேஷாத்ரியின் இணையமுகவரியின் வழியாகப்பதிவிறக்கம் செய்யப்பட்டு அவரின் அனுமதியுடன் வெளியிடப் பட்டுள்ளது. விலை.ரூ.10/-

பிப்ரவரி 05, 2011

சசிகுமாரின் ஈசன் : சமகாலத் தமிழ்வாழ்வின் பெருந்துயரம்


வெற்றியை மட்டுமே கொண்டாடும் நமது திரைப்பட உலகமும்
, பார்வையாளர் மனமும் தோல்விப் படம் எடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வெற்றியாளரின் அடுத்த பாய்ச்சலை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றன. இந்த மனநிலை திரைப்படம் சார்ந்தது மட்டுமல்ல. போட்டிகள் நிரம்பிய மனித வாழ்க்கையின்பல தளங்களின் இயக்கங்களும் இப்படித்தான் இருக்கின்றன.