இடுகைகள்

ஜனவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சல்லிக்கட்டு: சில குறிப்புகள்

ஒழிக ! வாழ்க!! குரல்களின் ஒலியளவு ======================================== ஒவ்வொருமொழியிலும் சொற்கள் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. அவை பெயர்(Noun) வினை(Verb). இவ்விரண்டையும் கூடுதல் அர்த்தப்படுத்தப்படுவனவே இடைச்சொற்களும் உரிச்சொற்களும். தமிழில் மட்டுமே இடை, உரி என்பன தனிப்பட்ட வகையாக இருக்கின்றன. இவைகளைப் பெரும்பாலான மொழிகள் முன்னொட்டுகளாகவும் சில மொழிமொழிகளில் பின்னொட்டுகளாகச் சொல்லப்படுகின்றன. வாழ்க!, ஒழிக! இவை வினைமுற்றுகள். வேண்டும்! வேண்டாம் ! இவையும் வினைமுற்றுகளே  முன்னிரண்டும் வியங்கோள் வினைமுற்றுகள் பின்னிரண்டும் ஏவல் வினைமுற்றுகள்

பொங்கல் : எனது நினைவுகள்

மதுரை மாவட்டக்கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். சல்லிக்கட்டு தனியான விளையாட்டு அல்ல. போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என 3 நாட்கள் கொண்டாடப்படும் விழாவொன்றின் பகுதி அது. மாடுகளும் ஆடுகளும் கோழிகளும் வளர்க்கப்பட்ட வீடுகளில் - கிராமங்களில் சாதிகள் வேறுபாடுகளை நினைக்காமல் கொண்டாடிய விழா பொங்கல் திருவிழா. வெள்ளையடித்தல், வீடு மெழுகுதல், புது அடுப்புப்போடுதல் தொடங்கி ஆடுமாடுகளும் கன்று காலிகளும் உழவுகருவிகளும் வண்டிகளும் கழுவிச் சுத்தமாக்கப்படும்போது பழையன கழிக்கப்படும். அந்தநாள் போகி.

தமிழ் சினிமா: தமிழ் பத்திரிகைகள் தமிழ் உயிரியின் கனவுலகக் கட்டமைவுகள்

இயக்குநா் ஷங்கரின் “ஜீன்ஸ்“ வெளியிடப்பட்டு எல்லா ஊா்களிலும் நூறு நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. படம் வெளியாகிப் பத்து நாட்களுக்குப் பின் நண்பா் ஒருவரிடம் “ஜீன்ஸ் பார்த்தாச்சா? என்று கேட்டேன். “படம் புட்டுக்கும் போல இருக்கே; பத்திரிகைகயெல்லாம் சரியா எழுதலியே?“ என்று சொன்னவா். “கதை வேணும்; கதையில் மெஸேஜ் இருக்கணும்; பாட்டுகளை மட்டும் நம்பிப் படம் எடுத்தா லாலா கடைக்கே அல்வாதான்“ என்று அடித்துப் பேசினார். நண்பா் படம் பாரத்து விட்டார் என்று நினைத்தேன். ஆனால், தொடா்ந்து பேசும் போது ஷங்கரோட “சோஷியல் டச் படத்தில் இல்லைன்னாலும், நாசரும் ராதிகாவும் பின்னயிருக்காங்களாம் அதுக்கும் மேல் 50 கிலோ, தாஜ்மகால் வேற…. ஒரு தடவை படத்த பார்த்திட வேண்டியதுதான்“ என்றார் இப்பொழுது அவா் படத்தைப் பார்க்கவில்லை என்பது உறுதியாயிற்று.

சல்லிக்கட்டு - பொங்கல் - புத்தாண்டு.

படம்
பண்பாட்டுத் தளத்தை முதன்மைப்படுத்தித் தமிழ் நாட்டின் ஆட்சியை த் திராவிட முன்னேற்றக் கழகம் பிடித்து அரைநூற்றாண்டு ஆண்டு ஆகப்போகிறது. ஆயிரத்தித் தொள்ளாயிரத்து அறுபத்தியேழில் சி.என். அண்ணாதுரை முதல்வராக ஆனவுடன் முதன்மை அளித்துச் செய்தவைகள் இரண்டு. ஒன்று சென்னை மாகாணம் என அழைக்கப் பட்ட பெயரைத் தமிழ்நாடு என மாற்றும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இரண்டாவது படியரிசித் திட்டத்தை நிறைவேற்றியது. இந்த இரண்டில் ஒன்று லட்சியம் சார்ந்தது ; இன்னொன்று வாக்குறுதிகள் சார்ந்தது.

புதிய மாதவி: மாற்றுத் தொன்மங்களை அர்த்தமாக்குபவர்

படம்
இந்தக் கவிதையை மாணாக்கர்களிடம் வாசிக்க்க் கொடுத்தபோது அவர்கள் புரியவில்லை என்று சொன்னார்கள். புரியவில்லை என்றால் எது புரியவில்லை என்று கேள்வியை எழுப்பினேன். அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. “ கவிதை, நவீனக் கவிதை புரியவில்லை” எனச் சொல்லும் பலரிடமும் ‘எது புரியவில்லை ‘ என்ற கேள்விக்குப் பதில் இருப்பதில்லை.   மரபான   முறையில்   செய்யுளை   அர்த்தப்படுத்துவதற்காகத்   தேடிக்   கண்ட்டையும்   அருஞ்சொல்   எதுவும்  இக்கவிதையில்    இல்லை .  அப்படி   இருந்தால்   அதன்   பொருளைச்   சொல்வதன்   மூலம்   கவிதையை   அர்த்தப்படுத்தலாம் . அப்படிப் பொருள் சொல்வது அல்லது அர்த்தப்படுத்துவதுதான் கவிதையின் புரிதலா? என்ற அடுத்த கேள்வி எழும்