அந்த மூன்றும் இந்த மூன்றும்
காலச்சுவடுவில் மூன்று பெண் கதைகள் 2025 ஜூன் மாதக் காலச்சுவடுவில் மூன்று சிறுகதைகள் - பெருந்தேவி, சுஜா செல்லப்பன், சுஜாதா செல்வராஜ்- எனப்பெண்கள் எழுதிய கதைகள். மூன்று கதைகளிலும் பெண்களே மையப்பாத்திரங்கள். இம்மூன்று எழுத்தாளர்களின் எழுத்துகளை முன்பே வாசித்துள்ளேன். அவர்களுக்கென்று எழுதும் பாணி அல்லது கதைகளுக்கான வெளிகள் எனத் தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டவர்கள். அந்த அடையாளங்கள் இவற்றிலும் தொடர்கின்றன. கிராமிய வாழ்க்கையில் துயரங்களை ஏற்றுக் கடக்கும் இன்னொரு பெண்ணை - கணவனின் மரணத்திற்குப் பின்னர் விருப்பமில்லாமலேயே - சுற்றியிருப்பவர்களுக்காக வெள்ளைச்சேலையை ஏற்றுக் கொள்ளும் பெண்ணொருத்தியை - காளியப்பனின் மனைவி ராமாயியை எழுதிக் காட்டியுள்ளார் சுஜாதா செல்வராஜ். இந்தியப் பெண்களின் குடும்ப வாழ்க்கையின் அவலங்களுக்கு வடிகாலாக இருக்கும் தெய்வங்களின் மீதான நம்பிக்கைகளும் அவற்றுக்குச் செய்யும் சடங்குகளும் கூடப் பொய்த்துப்போகும் நிலையில் கையறு நிலையில் - செய்வதறியாது திகைத்து நிற்கும் பெண்ணொருத்தியை - செல்வி என்ற பெண்ணைத் தனது 'மயானக்கொள்ளை' கதையில் எழுதிக் காட்டியுள்ளார் பெருந்தேவி. இந்தக்...