இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செல்லக்குட்டிகளும் சுட்டிப் பையன்களும்

படம்
சாத்தான்குளம் இடைத்தோ்தலுக்காக நான்கு நாட்கள் தங்கித் தீவிரப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார் ஜெயலலிதா. கிராமம் கிராமமாகச் சென்று வாக்குறுதிகளையும் உடனடிப் பயன்களையும் வழங்கிக் கொண்டிருந்தார். அவரது அமைச்சரவை சகாக்களும் இரவு பகல் பாராது அயராது உழைத்துக்கொண்டிருந்தனா். அம்மா ஆறுமுகனேரியில் தனியார் விருந்தில்லத்தில் தங்கியிருக்க, தொண்டா்களும் பிரமுகா்களும் திருநெல்வேலி - பாளையங்கோட்டை எனப் பக்கத்தது நகரங்களில் தங்கிப் பணியாற்றிக் கொண்டிருந்தனா். நான் குடியிருக்கும் வீடு திருநெல்வேலி - சாத்தான்குளம் போகும் பாதையில் தான் இருக்கிறது. அந்தப் பத்து நாள் பரபரப்பு எங்கள் சாலையிலேயே இருந்தது.

நியோகா: பழைய தர்மத்திற்குள் புதிய விடியல்

படம்
ஈழவிடுதலை , தனி நாடு போன்றவற்றிற்கான போராட்ட ம் மற்றும் போர் நிகழ்வுகளையும், அதன் விளைவான புலப்பெயர் வுகளை யும் பின்னணியா க க்கொண்ட புனைகதைகள் நிறைய வாசிக்கக் கிடைக்கின்றன. அவ்வப்போது திரைப்படங்களாகவும் வந்து கொண்டுள்ளன. கனடாவில் வாழும் சிறுகதை ஆசிரியர், அரங்கவியலாளர் கறுப்புசுமதி யின் இயக்கத்தில் உருவான நியோகா என்ற சினிமா அப்படியானதொரு படம்.   2016 இல் கனடாவில் வெளியான அந்தப் படத்தின் திறப்பு பொதுப்பார்வையாளர்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை சுமதியின் முகநூல் வழியாகப் படித்த தால் இணையத்தில் அந்தப் படத்தைப் பார்த்தேன்.

மரத்தில் மறைந்த மாமத யானை

படம்
முதல் நேர்காணலிலேயே நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. அதனைத் தவறு விட்டதன் பின்னணியில் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்ற எனது லட்சியம் இருந்தது. இப்படி நான் நினைத்துக் கொண்டிருப்பதை ’நிறைவேறாத செயலுக்கான கற்பனை வடிவம்’ என்பது போல அண்ணன் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்த அந்த வார்த்தைகள் உறுதி செய்து கொண்டிருந்தன.   “ அன்னைக்கி ஒரு 20 ஆயிரம் பொரட்ட முடியாமப் போச்சேப்பா.. பொரட்டிக் கட்டியிருந்தா க லெ க்டரா ஆயிருப்பே..இல்ல” இந்த வார்த்தைகளை எனக்கு ஆறுதலாகச் சொல்வதாக அவர் நினைத்தாலும் அவரது இயலாமையும் அதில் இருப்பதாக நினைத்தார். 1983 இல் அரசாங்க வேலையைத் தவற விட்டது தொடங்கி 1989 இல் இன்னொரு அரசாங்க வேலையைக் கைப்பற்றுவது வரை-நூறு தடவையாவது- சொல்லி இருப்பார். பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் அரசாங்கச் சம்பளம் வாங்கும் வேலையில் சேர்ந்த பின்புதான் அந்த  புலம்பலை நிறுத்தினார்.  

மிதந்த கனவு - முதல் விமானப்பயணம்

முதல் விமானப்பயணத்திற்கான வாய்ப்பொன்றைப் பல்கலைக்கழகம் 2000 ஆம் ஆண்டிலேயே உருவாக்கிந்தது. எனது பெரும் ஆய்வுத்திட்டத்தின் நேரடி அளிப்பிற்காகப் பல்கலைக்கழக மானியக்குழுவின் தேர்வுக்குழுவின் முன்னால் இருக்க வேண்டும். அதற்கு விமானத்தில் போகலாம். குறிப்பிட்ட வகையினச் செலவு முறையில் செலவழித்துவிட்டு, ரசீதுகளைச் சேர்த்துப் பல்கலைக்கழகத்திற்கு அளித்தால் அச்செலவுத்தொகையைப்  பல்கலைக்கழகம்  திட்ட நிதி யிலிருந்து வழங்கும். விமானத்தில் செல்லும் வகையில் செலவழிக்க அந்த நேரத்தில் பணம் இல்லாத தால் ஆகாயவழிப்பயணத்தைத் தவிர்த்து தரைவழிப்பயணத்தையே விரும்பினேன். அத்தோடு ரயிலில் போய்வரும் பயண அனுபவங்கள் சில நாட்களைக் கொண்டது என்பதும் ஒரு காரணம்.

கற்றல், கற்பித்தல், திட்டமிடுதல்

ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் எழுத்து, செயல்பாடு, திட்டமிடல், முன்னெடுப்பு எனப் பல நிலைகளில் கல்விப்புலத்திற்குள் செயல்பட்டவன் என்ற நிலையில் நான் பணியாற்றிய பல்கலைக்கழகங்களைத் தாண்டிப் பிற பல்கலைக்கழகங்களிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் தமிழியல் சார்ந்து மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் கல்விப்புலத் திட்டமிடல்களில் கருத்துரைப்பவனாகவும் இருந்துள்ளேன். அதன் காரணமாகப் பல நேரங்களில் கல்வியுலகச் சிக்கல்களைப் பற்றிய கருத்துரைகளை எழுதியுள்ளேன். அப்படியெழுதிய சில குறிப்புகளின் தொகுப்பு தப்பும் குறிகள் மருத்துவராகிச் சமூகத்திற்குப் பணியாற்றியே தீர்வது என்ற விடாப்பிடியான கொள்கையைப் பதின்வயதுப் பிள்ளைகளிடம் பாலோடும் பால்ச்சோறோடும் சேர்த்து ஊட்டி வளர்க்கும் தமிழ்ப் பெற்றோர்களின் கனவுகள் சென்ற ஆண்டே தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு (NEET) என்னும் குயுக்தியான ஆயுதத்தால் சிதைக்கப் பட்டது சென்ற ஆண்டுக் கதை. பள்ளிப்படிப்புக்காகவும் தனிப் பயிற்சிக்காகவும் செலவழித்த மொத்தப் பணமும் வீணானது பற்றிக் கவலைப் பட்டவர்கள் அந்த நுழைவுத்தேர்வு - தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று போராடினார்கள். தடுக்

பாலாஜியைப் பார்த்தநாள்

படம்
கோயில்களுக்குப் போவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பதைத் தெரிந்து கொண்ட எனது உறவினர்கள் பலமுறை என்னை அழைத்திருக்கிறார்கள். அவர்களின் அழைப்பை நிராகரிக்க ஏதாவது ஒரு காரணமும் வேலையும் இருந்துகொண்டே இருந்தது. அவற்றைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கலாம். அந்த வாய்ப்பை நான் அவர்களுக்குத் தரவே இல்லை. உறவினர்களின் அழைப்பை மட்டும் அல்ல; திருவேங்கடவனின் அழைப்பையே இரண்டுமுறை நிராகரித்திருக்கிறேன்.

வாழ்க வாழ்க: திரள் மக்கள் அரசியலின் பேருருக்காட்சிகளும் சிற்றுரு நகர்வுகளும்

படம்
நம்கால அரசியல் நடவடிக்கைகளின் உச்சமாகத் திகழுவது தேர்தல் பரப்புரைகள். கட்சித்தலைமை கலந்துகொள்ளும்  பரப்புரை ஒன்றின் குறுக்குவெட்டுத்தோற்றத்தை வாசிப்பவர்களின் முன் விரிக்கும் எழுத்துப்புனைவின் அனைத்துச் சாத்தியங்களையும் தனதாக்கியிருக்கிறது இமையத்தின் இந்தப் புனைகதை.   சின்னக் கண்டியாங்குப்பத் துப் பெண்கள் விருத்தாசலம் நகரின் புறநகர் பகுதியான மணலூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ‘500 ரூபாய், ஒரு சேலை’ என்று பேசி அழைத்துச் செல்லப்படும்போது உருவாகும் கூட்டு மனநிலையில் தொடங்கி,  கூட்ட மைதானத்தில் கிடைக்கும் துயரம், கொண்டாட்டம், அவமானம், குற்றவுணர்வு, அச்சம் எனப்பல்வேறு உணர்வுகளின் அடுக்குகளும், சந்திக்கும் அவலங்களும் ஆவலாதிகளும் அவதானங்களும் விவரிப்புகளாகவும் உரையாடல்களாகவும் காட்சிப்படுத்தல்களாகவும் எழுதப் பெற்றுள்ளன.

கல்விப்புலப்பார்வைகொண்ட க்ரியா ராமகிருஷ்ணன்

படம்
ஒரு மொழியாசிரியனுக்கு தாய்மொழியாக இருப்பவர்களுக்கு மொழியைக் கற்பிக்கும்போது அதிகம் தேவைப்படாத அகராதிகள், இரண்டாம், மூன்றாம் மொழியாக ஒரு மொழியைக் கற்பிக்கும்போது தேவைப்படுகிறது என்பது அனுபவம் சார்ந்த உண்மை. தமிழ்மொழி சார்ந்த    அந்த அனுபவத்திற்குப் பெருந்துணையாக இப்போதும் இருப்பது க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள  தற்காலத்தமிழ் அகராதியும் மரபுத்தொடர் அகராதியும்  என்பது சொல்லப்பட வேண்டிய ஒன்று. அதனைச் சாத்தியமாக்கியவர்  ராமகிருஷ்ணன்.

சொல்லும் செயலும் -

படம்
கோழிமுந்தியதா? முட்டை முந்தியதா? என்ற குதர்க்கம் தான் நமது வாழ்க்கை நிகழ்வுகள். பெரும் நிகழ்வாயினும் சிறுநிகழ்வாயினும் எது முந்தியது என்று கேட்டால் சொற்களாக இருக்கின்றன. சாதாரணவாக்கியமாகவோ, கேள்வியாகவோ, கெஞ்சுதலாகவோ, ஆணையாகவோ சொல்லப்பட்ட சொற்களே காரணங்களாக இருந்து காரியங்களை - நிகழ்வுகளை உருவாக்குகின்றன. நிகழ்வுகள் உருவானபின் நாம் வேறுவகையான சொற்களால் உரையாடல் தொடங்குகிறோம். அன்றாட நடப்புகள் என்பவை சொல்லப்படுவதால் நிகழ்கின்றன; நிகழ்வதால் சொல்லப்படுகின்றன.

சாருவுக்கு ஒரு வாசிப்பு

படம்
நண்பர் சாருநிவேதிதா கோவிட் 19 கால எழுத்துகளாகத் தொடர்ந்து எழுதிவரும் -பூச்சி - குறிப்புகளில் இன்று ஹெலன் சிஸு- ரீடரின் விலைபற்றி எழுதியிருக்கிறார்: ஹெலன் சிஸூ ரீடர் கிடைத்து விட்டது. இனி நாடகத் தொகுப்பு மட்டும்தான் தேவை.

கொரோனாவோடு வாழ்ந்தது - ஜூன்

  பாவம் காவலர்கள் ===================== கொரோனாவிற்கு முன்னால் வீட்டிலிருந்தே நடந்து போவேன் . இப்போது சாலைகளில் - கடைப்பகுதிகளில் வாக்கூடுகள் இல்லாமல் அலையும் மனிதர்கள் இருப்பதால் வாகனத்தில் சென்று ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அந்தச் சாலைகளில் மாலை நடை . ஊரைவிட்டு விலகி இருக்கும் அந்தப் பகுதியை வீட்டுவசதி வாரியத்தின் வழியாக மனைகள் போட்டு விற்பதற்காகப் போடப்பட்ட சாலைகள் உண்டு . 10 ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்ட தார்ச்சாலைகள் பெயர்ந்து சரளைகளாக இருக்கும் அந்தப் பகுதியில் இப்போது முன்புபோல் நடப்பவர்கள் கூட்டம் இல்லை என்றாலும் ஜூன் முதல் தேதியிலிருந்து மாலை நடைக்காக முகக்கவசத்தோடு ஆட்கள் வரத்தொடங்கியுள்ளனர் .

சிட்டுக்குருவியின் அழகும் வல்லூறின் வலிமையும்

எது நல்லது? பரப்பளவில் பெரிய தேசமாக இருப்பதா? சிறிய தேசங்களாக மாறிக்கொள்வதா? என்ற கேள்வி எழும்போது பாடம் படித்துக்கொள்ள எடுத்துக்காட்டுகள் நிறைய இருக்கின்றன, பெருந்தேசத்தின் குடிமக்களாக இருப்பதின் நன்மைகள் பற்றிக் கனடியர்கள் அறிவார்கள். அமெரிக்கர்களுக்கும் பெரிய அளவு வருத்தங்கள் இருந்ததில்லை. சோவியத் யூனியனாக உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே வருத்தங்களோடுதான் ஒவ்வொரு தேசிய இனமும் இருந்தன. சீனர்களுக்கும் இன்னும்கூடச் சொல்லும் நினைப்பு இல்லை. இந்தியர்களும் அதே நிலையில் தான் தொடர்கிறார்கள். இதற்கு மாறாகச் சின்னச்சின்ன நாடுகளாக இருப்பதின் மகிழ்ச்சியை ஐரோப்பாவின் பால்டிக் நாடுகளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. இத்தாலி, ஸ்பெயின், துருக்கி போன்றன வருத்தப்பட்டியலில் இருப்பவை. வளைகுடா நாடுகள் பரப்பளவு சிறியதாக இருப்பதின் நன்மைகளை அனுபவிக்கின்றன. ஆனால் ஆப்பிரிக்காவின் தேசங்கள் இரண்டுங்கெட்டான்களாக அல்லாடுகின்றன. தென்கிழக்காசிய நாடுகள் கூட சிறியதின் பலனில் சிரிக்கின்றன. ஆனால் இந்திய சிறியது கேட்கின் பெரியது நாடும்; பெரியது பார்க்கின் சிறியன தேறும் எனத் திரிசங்கு நிலையில் த

இவையெல்லாம் நாடகங்கள் அல்ல..

படம்
‘உலகம் ஒரு நாடகமேடை; அதில் நாம் அனைவரும் நடிகர்கள்’ என்ற புகழ் பெற்ற வாசகத்தை ஒவ்வொருவரும் பல தடவை கேட்டிருக்கலாம். நாடக மேதை சேக்ஸ்பியரின் -அஸ் யூ லைக் இட்( As you like it) நாடகத்தில் இடம்பெற்ற தனிமொழிக் கூற்றின் தொடக்கவரிகள்.  அந்த வாசகம் சொல்கிறவர்களின் கோணத்தில் பொருள் தரக்கூடிய வாசகம்.

நிகழ்த்துதலின் வண்ணங்கள் - மௌனகுருவும் சேரனும்

படம்
கலப்புகளிலிருந்து உருவாகும் புதுமை நாடகப்பேராசான் தான் செதுக்கிச் செய்த சில காட்சி அசைவுத்துணுக்குகளைத் தனது பிறந்த நாள் பரிசாக அனுப்பி வைத்தார். அவற்றைத்திரும்பத்தி ரும்பப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.நீங்களும் பார்க்கலாம்.

கொரோனாவுக்குப்பின் கல்வி: இணையவழிக் கற்பித்தல்

படம்
ஒப்புதலும் ஒவ்வாமையும் ----------------------------------------------------------------- பணி ஓய்வுபெற்று ஓராண்டு முடிந்து விட்டது. பணியில் இருந்திருந்தால் இணையவழிக்  கற்பித்தலில் ஈடுபட மனம் ஒவ்வாமையில் தவித்துப் போயிருப்பேன். கணினியைப் பயன்படுத்தும் பழக்கமும் அறிதலும் இல்லாததால் ஏற்படக்கூடிய தவிப்பு அல்ல. வகுப்பறைக் கற்பித்தலில் இருக்கும் மன ஒப்புதல், ஈடுபாடு காரணமாக ஏற்படும் தவிப்பு அது.

இட ஒதுக்கீடு- அடிப்படை உரிமையல்ல; அடிப்படைத் தேவை

படம்
எல்லாவற்றையும் இரட்டையாகப் பார்ப்பது சிக்கலானது என்றாலும் அப்படிப் பார்க்கும்படி உண்டாகும் நெருக்கடியிலிருந்து தமிழகம் விலகிவிடாமல் தவிக்கிறது. அந்தத்தவிப்பு சரியா? தவறா? என்பதை நிகழ்வுகளின் முடிவுகள் தான் சொல்கின்றன. முன்கூட்டிய கணிப்புகள் எப்போதும் தவறாகி விடுகின்றன. இதனைத் தமிழ்நாட்டின் தனித்துவம் என்று தான் சொல்லவேண்டும். இங்கே இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என வாதம் செய்பவர்கள் தங்களின் கண்களுக்குப் பக்கப்பட்டை போட்டுக்கொண்டு பயணிப்பவர்களாக இருக்கலாம். இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என்பதைவிட இரட்டை எதிர்வாகவே தமிழ்மனம் இயங்குகிறது

சேரன்: கவியின் பகுப்பாய்வு மனம்

படம்
இருப்பையும் சூழலையும் நிகழ்காலத்தில் மட்டும் விரித்துக்காட்டி விடுவது தன்னெழுச்சிக் கவிதைகளின் வெளிப்பாட்டுவடிவமாக இருக்கிறது. அவ்வடிவம் முன்னேயும் போவதில்லை; பின்னேயும் நகர்வதில்லை. ஒருவிதத்தில் காலத்தை உறையச்செய்துகொண்டு அங்கேயே முன்வைக்கும் காட்சிகளைப் படிமங்களாக்கி, பாத்திரங்களாக்கி, குறியீடுகளாக்கி வாசிப்பவர்களைத் தன்வசப்படுத்த நினைக்கின்றன. சமகாலத்தமிழில் -குறிப்பாகத் தமிழ்நாட்டில் கவிதை எழுதும் பலரும் இவ ்வகையான தன்னெழுச்சியில் - காலத்தை உறையச்செய்தே கவிதைகளைத் தருகின்றனர்.

காணிநிலம் என்னும் எழுத்தாளர் கிராமம்

படம்
நெல்லைப் புத்தகத்திருவிழா 2020, பிப்பிரவரி 1 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. வரும் திங்கட்கிழமை( 10/02/2020) நிறைவடையும். இந்தத் திருவிழாவின் சிறப்புநிலையாக ஒவ்வொரு நாளும் பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சாகித்திய அகாடெமி எழுத்தாளர்கள் மரியாதை செய்யப்படுகிறார்கள். இப்போது உயிருடன் இல்லை என்றாலும் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து மேடையில் அமரவைத்து, அவர்களைப் பற்றிய சுருக்கமான வரலாற்றைக் காணொளிக் காட்சியாக ஒளிபரப்பியபின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் மேடைக்கு வந்து புத்தாடை அளித்து, நினைவுப்பரிசு வழங்கிக் கைகுலுக்குகிறார்.ஒவ்வொருநாளும் இது நடந்துகொண்டிருக்கிறது.

நிகழ்வுகள் - நபர்கள்- நீதிகள்

மதுவும் மரணங்களும் மதுப்பழக்கம் தமிழ் வாழ்வின் பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது. நாற்பது நாள் இடைவெளிக்குப் பிறகு நீக்கப்பட்ட தடையின் வேகம், காட்டாற்று வெள்ளமாய்ப் பாய்ந்தது. குடியின் விளைவுகள் - தனிமனிதர்கள் மற்றும் சமூகநிலையில் ஏற்படும் விளைவுகள் பற்றி அறியாமல் நடப்பதல்ல குடிப்பழக்கம். அறிந்தே நடக்கும் ஒன்றை நிறுத்துவதற்குச் சட்டங்கள் எவ்வளவுதூரம் உதவும் என்பது கேள்விக்குறி. அதேபோல் பாவங்கள் எனச் சுட்டும் சமயநீதிகளும் வெற்றிபெற்றதாகப் புள்ளிவிவரங்கள் இல்லை. நீதிநூல்களும் சமயநம்பிக்கைகளும் பன்னெடுங்காலமாகப் பட்டியலிடப்பட்ட குற்றங்களை மனிதர்கள் நிறுத்திக்கொள்ளவில்லை. தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள். மீறலில் இருக்கும் கொண்டாட்ட மனநிலையோடு குற்றங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். இன்று திரும்பவும் மதுக்கூட விற்பனைகள் நிறுத்தப்படலாம். நீதிமன்றத்தின் இந்த இடையீடு மிகக் குறுகியகாலத் தடைதான். திரும்பவும் அணை திறக்கும்போது பெரும் சுழிப்புடன் ஓடும்

நாடகவியல் பேராசான் மௌனகுரு

படம்
ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் அவரது வாழ்க்கைக்குறிப்பு விவரங்களையும் அரங்கவியலில் அவரது செயல்பாடுகளையும் கொண்ட விவரப்பட்டியல் ஒன்றை அனுப்பித்தரமுடியுமா? என்று கேட்டு இணையவழிக்கடிதம் ஒன்றை அனுப்பினேன்.

தெய்வீகனின் மூன்று கதைகள்

புலம்பெயர் எழுத்தாளர்களில் கவனிக்கத்தக்க கதைகளை எழுதிவரும் ப.தெய்வீகன் ஆஸ்திரேலியாவில் வசிப்பவர். அவரது கதைகள் குறித்த பதிவுகள் இங்கே

முடிவிலிகளில் அலைபவர்களின் கவி அடையாளம்

தனியன்களின் தன்னிலைகள் நவீனத்துவக் கலைகளுக்குள் அலையும் பிம்பங்களாக இருக்கிறார்கள். வாழும் சூழலோடும், அன்றாட நடப்புகளோடும் முரண்படும் இத்தனியன்களின் அடையாளங்கள் சிலவற்றைத் தொகுத்துச் சொல்லமு டியும். ஈடுபாடுகொண்ட வெளிகள், ஆர்வங்கள், வினைகள், மனிதர்கள் என எதன்மீது அக்கறையற்றவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்வதால், மற்றவர்களைப் பற்றிய வெளிப்பாடுகளைத் தவிர்த்துவிட்டுத் தங்களையே பேசுபொருளாக்கிக் கொள்வார்கள்.

கனலியில் மூன்று சிறுகதைகள்

அண்மையில் பதிவேற்றம் பெற்றுள்ள கனலி -இணைய இதழில் மூன்று சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் கனலியில் புதிதாக எழுதப்பெற்ற கதைகளோடு புதையல் என ஏற்கெனவே வேறுவடிவில் வந்த ஒரு கதையைப் பெட்டகம் எனத் தலைப்பிட்டு வெளியிடுகிறார்கள். இந்த இதழ்ப் பெட்டகமாக வந்துள்ள கதை சு.வேணுகோபாலின் பூமாரியின் இன்றைய பொழுது.இந்தக் கனலிக்காகப் பெறப்பட்டுப் பதிவேற்றவை  பெருமாள் முருகனின் முத்தம்  இரா.கோபாலகிருஷ்ணனின் யோகம்  இரா முருகனின் ஒற்றைப்பயணி வரும் ரயில் நிலையம்.