இடுகைகள்

அக்டோபர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கேள்விகளா? குற்றச்சாட்டுகளா?

எழுத்தாளர் இமையம் 22-10-2013 தேதியிட்ட தி இந்து நாளிதழுக்கு எழுதி அனுப்பிய கட்டுரையை அப்படியே தருகிறேன். அதில் நிகழ்காலத் தமிழ் எழுத்தாளர்களை நோக்கி எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவை. அவைகளைக் கேள்விகள் என நினைப்பதை விடக் குற்றச்சாட்டுகள் என்றே கொள்ள வேண்டும். சொரணையுள்ள கதைக்காரர்கள் முன் வந்து விவாதிக்க வேண்டும். அப்படியெல்லாம் நமது புனைகதை எழுத்தாளர்கள் முன் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்றாலும் ஆசை தான்.

மொழி இலக்கியப் பாடத் திட்டங்கள் உருவாக்கலுக்கான பயிலரங்கு

எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி இலக்கியக் கல்விக்கான பாடத்திட்ட உருவாக்கம் என்னும் பொருளில் இருநாள் பயிலரங்கு ஒன்றை நடத்திடத் திட்டமிட்டுள்ளோம்.  பாடத்திட்டக் குழுக்கள் சார்ந்த பங்கேற்பாளர்கள், மாணவப் பிரதிநிதிகள், மதிப்பீட்டாளர்கள், வல்லுநர்கள், கருத்துரையாளர்கள் என ஐவகைப் பிரிவினர் இடம் பெறுவிதமாகத் திட்டமிடப்பட உள்ளது 

பாண்டிச்சேரித் தொடர்பு

படம்
எனது நீண்ட நாள் நண்பர் ரவிக்குமார் நடத்திக் கொண்டிருக்கும் மணற்கேணி ஆய்விதழின் சார்பில் உருவாக்கி அளிக்கும் நிகரி = சமம் விருதை முதல் ஆண்டிலேயே நான் பெறுகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் "நமது நண்பர்; அதனால் விருது அளிக்கிறார்" எனப் பலரும் எண்ணக்கூடும் என்ற நினைப்பும் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நினைப்போடு இந்த விருதுக்கு நான் எப்படிப் பொருத்தமானவன் என நினைத்துப் பார்க்கிறேன்.