இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அண்மைக் கதைகள் இரண்டு- 1.சரவணன் சந்திரன்

படம்
அவரது கதைககளுக்குள்  பெரும்பாலும் தன்னை ஒரு பாத்திரமாக்கி – கதைசொல்லும் இடத்தில் நிறுத்திக்கொண்டு சொல்கிறார். இந்தச் சொல்முறையில் கதைக்கு உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் கிடைக்கும் என்றாலும் புனைவுத்தன்மை குறைவு. எழுதுபவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும்போது புனைவுத்தன்மை குறைந்து கட்டுரையை நெருங்கிவிடும். இதனை முன்பே சில     தடவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். என்றாலும் அந்த சொல்முறை அவருக்கு உவப்பானதாகவும் நெருக்கமானதாகவும் இருப்பதாக நினைத்திருக்கலாம்.

இந்து சமயத்தைப் புதுப்பித்தல்: ஈசா யோகியின் மகாசிவராத்திரிகள்

படம்
சிவராத்திரிக்கு விழித்திருக்கவில்லை-2023 ------------------ ------------------------ ---------------------- வாசுதேவ்(ஜக்கி) கட்டியெழுப்பியிருக்கும் பேருருவான சிவனையும் வெள்ளியங்கிரியையும் போய்ப் பார்க்க வேண்டும் என்ற திட்டம் இன்னும் நிறைவேறவில்லை. கோவைக்கு வந்தவுடன் பார்க்க வேண்டிய இடங்கள் எனப் போட்ட பட்டியலில் அதுவும் உள்ளது. எட்டு மாதங்கள் ஆனபின்னும் எட்டாத இடமாகவே இருக்கிறது ஈஷா யோகமையமும் கானகப் பெருவெளியும்.

தண்ணீர்

தண்ணீர் தண்ணீர் தண்ணீர் தண்ணீர் தண்ணீர் தண்ணீர் *************** இது ஒரு ஆற்றுகைப் பனுவல் (PERFORMANCE TEXT) இப்பனுவலில் உள்ள கவிதை வரிகளை எழுதிய கவிகள் சி.சுப்பிரமணிய பாரதி வ.ஐ.ச.ஜெயபாலன் கோடாங்கி தேன்மொழிதாஸ் ஆதவன் தீட்சண்யா மகேஷ் பொன் ****** ஆற்றுகைப் பனுவலாக்கம் : அ.ராமசாமி