இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இருத்தலையும் இருத்தல் நிமித்தங்களின் வண்ணங்களையும் வரைதல்..தேன்மொழி தாஸின் கவிதைகள்-

படம்
பத்து ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பெயர்- தேன்மொழிதாஸ்- என்ற பெயர் ஒரு கவியின் பெயராகப் பதிந்திருந்தது என்றாலும், பலராலும் சொல்லப்பட்டு உருவான தமிழ்க்கவிதைப்போக்கு ஒன்றிற்குள் இருக்கும் அடையாள வெளிப்பாடாகவோ, நானே வாசித்து உருவாக்கிக்கொண்ட தனித்துவமான கவியின் அடையாளமாகவோ அந்தப் பெயர் பதிந்திருக்கவில்லை. என்றாலும் பதிந்திருந்தது.  வாசகப்பரப்பில் ஒரு கவியின்/எழுத்தாளரின் பெயர் பதிந்துவிடப் பல காரணங்கள் இருக்கின்றன. போகிற போக்கில் விமரிசகன் குறிப்பிடும் ஒரு பெயரின் பின்னால் இருக்கும் எழுத்துகள், வாசிப்பவர்களிடம் தன்னை வாசிக்கும்படி முறையிடுகின்றன. ஆனால் அந்தப்பெயரும் அவரது எழுத்துகளும் தொடர்ச்சியாக நினைவுக்குள் ஆழமாய் நின்றுவிட, விமரிசகனின் அந்தக் குறிப்புமட்டும் போதாது. தீவிரமான வாசகராகத் தன்னைக் கருதிக்கொள்பவர் அந்தப் பெயரோடு வரும் எழுத்துகளைப் படிக்கும்போது விமரிசகன் சொன்ன காரணங்களோடு உரசிப்பார்க்கவே செய்வார்கள். முழுமையும் பொருந்துவதோடு, புதிய திறப்புகளையும், பரப்புகளையும் காட்டும் நிலையில் இருப்பதாக நினைத்தால், அந்தக் கவியை அல்லது எழுத்தாளரைத் தேடி வாசிக்கும் பட்டியலில் சேர்த்துக்க

படம் தரும் நினைவுகள்: 1

படம்
பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகப்பள்ளி மாணவர்களுக்குத் திரைப்படம் சார்ந்த நடிப்பையும் கற்றுத்தரவேண்டும் என்ற விவாதம் எங்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. துறையில் உடன் பணியாற்றிய வ. ஆறுமுகத்திற்கு அதில் உடன்பாடில்லை. கே ஏ குணசேகரன் என்னோடு ஒத்துப் போனார். அவரே நாசரை அழைக்கலாம் என்று முன்மொழிந்தார். அவரது தொலைபேசி எண்ணை வாங்கி தொடர்புகொண்டு பேசியும் விட்டார். அழைத்துவருவதற்கு வாகனம் அனுப்ப வேண்டுமா? என்று கேட்டபோது, தேவையில்லை நானே எனது காரில் வந்துவிடுவேன். உடன் நண்பர்களும் வருவார்கள் என்று சொல்லிவிட்டதாகக் குணசேகரன் சொன்னார். அவரும் அவரோடு வரும் நண்பர்களும் தங்கும் விதமாக அறைகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் இரண்டு நாட்கள் தங்கி மாணவர்களோடு பயிற்சி செய்யலாம் என்றும் சொல்லியிருப்பதாக குணசேகரன் வழியாகத் தெரிந்துகொண்டேன்.

படம் தரும் நினைவுகள் -3

படம்
இந்தப்படம் எடுத்த ஆண்டு 2000 அல்லது 2001 ஆக இருக்க வாய்ப்புண்டு. திருநெல்வேலி பாளையங் கோட்டையில் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு எதிரில் இருக்கும் எம். எல்.பிள்ளை நகரில் குடியிருந்த காலம். தமிழ் இலக்கிய வரலாற்றறிஞர்களில் ஒருவரான கா.சு.பிள்ளையைத் திருநெல்வேலிக்காரர்கள் எம்.எல். பிள்ளையாக நினைவில் வைத்திருக்கிறார்கள். நீண்ட ஆஸ்திரேலிய வாழ்க்கையின் இடையில் தமிழகம் வந்தபோது என்னைப் பார்ப்பதற்காகவே நெல்லைக்கு வந்தார்   பத்தண்ணா என்றழைக்கப்பட்ட இளைய பத்மநாதன்.  அவரது முதல் அறிமுகம் 1987.

ஓரத்து இருக்கைப் பயணங்கள்

மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் நடுப்பகுதியில் இடதுபக்க ஓரத்தில் நான் அமர்ந்திருந்தேன். மதுரையில் ஏறிய பயணிகளில் பாதிப்பேர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை இருக்கும் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டனர். அதனால் சாத்தூரில் ஏறுபவர்களுக்குத் தேர்வு செய்து இருக்கைகளைப் பிடிக்க வாய்ப்பு இருந்தது. சாத்தூரில் ஏறிய பயணிகளில் அந்தக் குடும்பமும் ஒன்றாக இருந்தது. அரை டிக்கெட் வாங்க வேண்டிய சிறுமி, சிறுவன் உள்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் அது. வேகமாக ஏறிய சிறுமி ஓடி வந்து எனது இருக்கைக்கு முன்னால் இருந்த வலது பக்க ஓரத்தைப் பிடித்துக் கொண்டாள்.