புலம்பெயர் இலக்கியமும் ஐக்கிய அமெரிக்கத் தமிழர்களும்
புலப்பெயர் இலக்கியம் -புரிதலுக்காக குறிப்பிட்ட ஒருமொழியைப் பேச்சுமொழியாகக் கொண்ட மனிதர்கள் புலம்பெயர்ந்து, வெவ்வேறு நிலவியல் பின்னணியில் வாழ நேர்வதில் மகிழ்ச்சிகளும் உண்டு; துயரங்களும் உண்டு. 'இது என்நாடு' என்ற எண்ணம் உண்டாக்கும் மகிழ்ச்சிக்குள்ளேயேகூட, எனது ஊரில் சுற்றமும் பந்துக்களும் சூழ வாழ முடியவில்லையே என்ற எண்ணங்களும் உருவாவதைத் தவிர்க்க முடியாது. இவ்வகை எண்ணங்களும் மனவுணர்களும் உலக இலக்கியத்தில் தொடர்ந்து எழுதப்படும் உரிப்பொருட்களாக உள்ளன. தமிழின் செவ்வியல் கவிதையியலில் ‘பிரிவும் பிரிவின் நிமித்த்மும்’ காரணமாக எழுதப்பெற்றவை பாலைத் திணைப்பாடல்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வெவ்வேறு இடங்களுக்குப் பிரிய நேர்ந்த மனிதர்களுக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தன.