நிகரி விருது - முன்னும் பின்னும்
வழக்கமாக வரும் தொலைபேசி அழைப்புப் போலத்தான் அந்த அழைப்பும் வந்தது. ரவிக்குமார் தொலைபேசியில் அழைத்தார். நிகரி விருது உருவாக்கம் பற்றிச் சொன்னார் ரவிக்குமார். பூனா ஒப்பந்த நாளான செப்டம்பர் 24 இல் விருது வழங்க வேண்டும் என்றார். கூட்டம் திண்டிவனம் அல்லது விழுப்புரம் என்றார். ”சரி ரவி! நான் அந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன்” என்றேன் கேட்டேன். ” உங்களுக்குத் தான் அந்த விருது; உங்களோடு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் விருது வழங்கப் போகிறோம். கல்யாணியிடம் பேசிவிட்டேன். உங்களுக்கு அந்த விருதைப் பெற்றுக் கொள்வதில் ஏதாவது தயக்கம் இருக்கிறதா? இருந்தால் சொல்லி விடுங்கள்” என்று சொல்லி விட்டு நிறுத்தினார்.
தமிழ்நாட்டில் விருதுகள் வழங்குவதில் உள் அரசியல் இருப்பது போல அவற்றை ஏற்பதிலும் நிராகரிப்பதிலும் கூட எல்லாவகை அரசியலும் இருக்கின்றன என்பது எனக்கும் தெரியும்; ரவிக்குமாருக்கும் தெரியும் என்பதால் அந்தக் கேள்வியைக் கேட்கிறார் எனப் புரிந்து கொண்டேன். அதனால் தயக்கம் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறேன் எனச் சொல்லி விட்டு அதன் பிறகு என்னைவிட இன்னொருவரைத் தேடி விருது வழங்கலாமே என்றேன். “ இல்லை இந்த வகை விருதுக்கு இன்னொருவரைத் தேட வேண்டியதில்லை; நீங்களே பொருத்தமானவர்” என்று ரவிக்குமார் சொன்ன போது ‘ நான் என்ன வகையில் பொருத்தமானவன் ‘ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதை விருது மேடையில் பேசிவிடலாம் என்று நினைத்து க் கொண்டிருந்தேன். ரவிக்குமார் அறிவிப்புச் செய்து அறிக்கையை வெளியிட்டுவிட்டார்.

நிகரி சமத்துவ ஆசிரியர் விருது
இந்தியாவில் தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதென அறிவிக்கப் பட்டிருக்கிறது. பாடநூல்களிலும் அதை அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கிடையே சாதி அடிப்படையில் பேதம் பாராட்டுவது எவ்வளவு பெரிய கொடுமை! சமூக நீதிக்குப் பேர்போன தமிழ்நாட்டில் நினைத்தே பார்க்கமுடியாத வடிவங்களில் கல்வி நிறுவனங்களில் தீண்டாமை நிலவிக் கொண்டிருக்கிறது.
அம்பேத்கர், தான் படிக்கும்போது மற்ற பிள்ளைகளோடு சமமாக உட்கார அனுமதிக்கப்படவில்லையென்பதையும் தான் உட்காருவதற்காக வீட்டிலிருந்து சாக்குத் துண்டு ஒன்றை எடுத்துவரும்படித் தமது ஆசிரியர் சொன்னதையும் எழுதியிருக்கிறார். மறைந்த கங்கிரஸ் தலைவர் எல்.இளையபெருமாள், தான் படிக்கும்போது பள்ளியில் ‘ பறையன் பானை’ என எழுதப்பட்ட பானை ஒன்று வைக்கப்பட்டிருந்தது எனவும் அதில்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று விதி இருந்தது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அம்பேத்கர் மற்றும் இளையபெருமாள் காலத்திலிருந்ததைப் போலவே சமத்துவமற்ற நிலை இன்றும் தொடர்கிறது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் சத்துணவு சமைத்தால் அதை தலித் அல்லாத சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகள் சாப்பிடுவதில்லை என்ற நிலை பல ஊர்களில் இருக்கிறது. அதன்காரணமாக சத்துணவுப் பணியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவதையும் செய்திகள் தெரிவிக்கின்றன.இத்தகைய பாகுபாடுகள் தமிழ்நாட்டில் மட்டும் நிலவவில்லை, இந்தியா முழுவதும் இந்த நிலை இருக்கிறது. இது களையப்படவேண்டும் என்பதற்காக திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையில் செயல்படும் தேசிய ஆலோசனைக் குழு
(National Advisory Council - NAC) ஒரு துணைக்குழுவை அமைத்து சில பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பியது.ஆனால் அந்தப் பரிந்துரைகள் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை.

பள்ளிகளில் மட்டுமின்றி உயர்கல்வி நிறுவனங்களிலும் இத்தகைய பாகுபாடுகள் தொடர்கின்றன. குறிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் சொல்லவொண்ணா இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அவ்வாறு இடையூறுகளுக்கு உள்ளான தலித் மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொண்ட செய்திகளை நாம் அறிவோம்.
இத்தகைய பாகுபாடுகளைப் போக்குவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும் ஆங்காங்கே எந்தவித எதிர்பார்ப்புமின்றி தலித் அல்லாத சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் இந்த நிலையை எதிர்த்துத் தம்மால் இயன்ற வழிகளில் போராடிவருகின்றனர். தலித் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவித்து வருகின்றனர். சந்தடியில்லாமல் அவர்கள் ஆற்றிவரும் பணி மகத்தானது.
கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும்தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்து கௌரவிக்க முடிவுசெய்துள்ளோம். தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். இது ‘ நிகரி’ விருது என அழைக்கப்படும்.
இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் இந்த ஆண்டுமுதல் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் இந்த ஆண்டுமுதல் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான விருது கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் திரு தா.பாலு , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் திரு அ..ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. அதற்கான விழா விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் .
இவண்
ரவிக்குமார்
*******
இரண்டு வாரத்திற்குப் பின் விருதுக்கான அழைப்பிதழ் வந்தது. விழாவும் சிறப்பாக நடைபெற்றது. நிகரி- சமத்துவ ஆசிரியர் விருது வழங்கும் விழா 24.09.2013 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை ஆ.ரவிகார்த்திகேயன் வரவேற்றார்.சிறப்பான ஆய்வு இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் மணற்கேணி பல்வேறு ஆய்வரங்கங்களை இதற்கு முன் நடத்தியிருக்கிறது. ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விதமாகத் தற்போது எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டார்.
அடுத்து நோக்கவுரை ஆற்றிய ரவிக்குமார் இந்த விருது ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பதை விளக்கினார். வகுப்பறைகளில் நிலவும் பல்வேறுவிதமான பாகுபாடுகளிலும் மிகவும் கொடுமையானதாகச் சாதிய பாகுபாடு உள்ளதென்று கூறிய அவர், அத்தகைய பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அதற்காகப் பாடுபடுகிறவர்களைக் கௌரவிப்பதற்கும் தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ விருதுகள் அளிக்கப்படுகின்றன. ஒரு விருதை யார் கொடுக்கிறார்கள் என்பதைப்போலவே அது யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதும் முக்கியம். கல்விக் கூடங்களில் சமத்துவத்தை ஏற்படுத்த இதுவொரு சிறிய துவக்கம்தான், பலரும் இத்தகைய பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் விருதுபெற்ற ஆசிரியர் த.பாலு ஏற்புரையாற்றினார். அவர் பேசும்போது “அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வெளியே வந்து நல்ல காரியங்களைச் செய்வதைவிடவும் பள்ளியில் ஒழுங்காகப் பாடம் சொல்லிக்கொடுத்தாலே போதும். காசுகொடுத்துப் படிக்க முடியாத ஏழைப் பிள்ளைகள்தான் அரசுப் பள்ளிகளுக்கு வருகிறார்கள். அவர்களைப் நன்றாகப் படிக்க வைத்தால் அதுவே மிகச்சிறந்த சேவை. ரவிக்குமார் எந்த தளத்தில் செயல்பட்டாலும் அங்கே அடித்தளத்து மக்களுக்காக, யாரும் கண்டுகொள்ளாத மக்கள் தொகுதிக்காக, ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கிறார் என்பது முக்கியம். எனவேதான் அவர் கல்வித் தளத்தைத் தேர்ந்தெடுத்து அதில் பாகுபாடுகளுக்கு எதிராகச் செயல்படும் பள்ளி ஆசிரியருக்கும், கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் நிகரி என்கிற விருதைத் தனது சொந்த பங்களிப்பில் வழங்குகிறார்.
விருதுகள் என்றாலே ஒத்த கருத்துகளுக்கு இடமில்லாமல் பெரும்பாலும் சர்ச்சைகள் எழுவது உண்டு. பாரத் ரத்னா விருதை அளித்ததில்கூட எம்.ஜி.ஆருக்குப் பிறகுதான் அண்ணல் அம்பேதகருக்கு வழங்கினார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அத்தகைய விருதுகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியல் விருப்பு- வெறுப்புகள் நமக்குத் தெரிகிறது.ஆனால் ரவிக்குமார் ஒரு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தும் கட்சி அரசியல் அடையாளம் ஏதுமில்லாமல் இந்த நிகழ்வை நடத்துகிறார். என்னிடம் நற்கூறுகள் ஏதேனும் இருக்கிறதென்றால் அவை பலராலும் ஏற்படுத்தப்பட்டவை. குறிப்பாக பழமலையும் கல்யாணியும், கோச்சடை, ரகமத்துல்லா கான், லோகியா போன்ற பேராசிரியர்களும் ஏற்படுத்திய தாக்கம்தான் அதற்குக் காரணம்.குறிப்பிட்ட சிந்தனைப் போக்கும், இயக்கச் சூழலும் களச் செயல்பாடுகளும் சேர்ந்து உருவாக்கிய கூட்டு மனம்தான் நான். நிறைய செவிலித் தாய்களால் உருவாக்கப்பட்ட எனக்கு அளிக்கப்படும் விருது அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்படும் விருதுதுதான். இந்த விருதை அவர்கள் அனைவரின் சார்பில் நோபல் பரிசாக நினைத்து ஏற்றுக்கொள்கிறேன்.” என்றார்.
வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் கல்யாணி “ வகுப்பறையில் பல்வேறு பாகுபாடுகள் இருக்கின்றன. இந்த விருது வழங்கப்படுவது குறித்து கலந்துபேசுவதற்காக என்னை சந்திக்க வந்த ரவிக்குமார் ஆங்கிலத்தில் இருந்த அறிக்கை ஒன்றை என்னிடம் தந்துவிட்டுப் போனார். முதலில் அதை நான் படிக்கவில்லை. பிறகு ஒருநாள் எடுத்துப் பார்த்தேன். தேசிய ஆலோசனைக் கவுன்சில் வழங்கிய அறிக்கை அது. அதைப் படித்தபோதுதான் எத்தனை விதமான பாகுபாடுகள் இருக்கின்றன, அவற்றைக் களைவதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரிந்தது. அந்த அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். இந்த விருதை அளிக்க முடிவு செய்ததற்காக மணற்கேணி பத்திரிகையின் ஆசிரியர் ரவிக்குமாரைப் பாராட்டவேண்டும். எனக்கு தலித்தியப் பிரச்சனைகள் குறித்து இந்த அளவுக்கு புரிதல் ஏற்பட அவரும் ஒரு காரணம். எந்தவொரு விஷயத்தையும் மனதில் தைப்பதுபோல அவர் சொல்லுவார். இந்த நிகரி விருதுக்கான நினைவுப் பரிசை வடிவமைத்தவர் அவரது மகன் அதீதன். மிகச் சிறப்பாக அதைச் செய்திருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன்.”
”இந்த சமத்துவ ஆசிரியர் விருதைப் பெற்றிருக்கும் பாலு பள்ளி மாணவராக இருந்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கமானவர். அப்போதே நல்ல பேச்சாளர். சமச்சீர் கல்வியை அவர் சார்ந்திருந்த ஆசிரியர் சங்கம் ஏற்காதபோது தனது சொந்த முயற்சியில் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக துண்டறிக்கை வெளியிட்டு வினியோகித்தவர். பேராசிரியர் ராமசாமி தலித் பிரச்சனையில் நல்ல தெளிவான பார்வை கொண்டவர். அரசு அதிகாரிகளுக்கு எஸ்.சி/ எஸ்.டி பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் 2001 ஆம் ஆண்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டது. நான், ரவிக்குமார் போன்றவர்களெல்லாம் பயிற்சி கொடுத்தோம். திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி கொடுத்தபோது ராமசாமி அவர்களும் வந்து அதிகாரிகளுக்கு வகுப்பெடுத்தார்.”
”இங்கே சிறப்புரையாற்ற வந்திருக்கும் வசந்திதேவி அவர்கள்தான் நான் மனித உரிமைப் பணிகளில் ஈடுபடக் காரணம் என்று சொல்லலாம். கடலூர் சிறையில் இருந்த தமிழிந்தியன் என்ற கைதி எனக்கொரு கடிதம் எழுதினார்.அதை அறிந்த வசந்திதேவி அவர்கள்தான் என்னை உயர்நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று அங்கு இலவச சட்ட உதவி மையத்தின் செயலாளராக இருந்த திரு ராஜா அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பிறகுதான் மனித உரிமை தொடர்பான பிரச்சனைகளை நான் கையிலெடுத்தேன்.” என்று விளக்கியதோடு ”தலித்துகள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். அவற்றை எதிர்த்து அவர்கள் சாதி அடிப்படையில் திரள்வதற்கு நியாயமிருக்கிறது. ஆனால் பி.சி யோ அல்லது எம்.பி.சியோ அப்படி சாதி அடிப்படையில் திரளுவதற்கு எந்த நியாயமும் இப்போது இல்லை. முன்பு இருந்திருக்கலாம், இப்போது இல்லை என்பதுதான் எனது வலுவான கருத்து. சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் பற்றி ஆசிரியர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. இந்த விழாவுக்குப் பிறகாவது அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் முயற்சிக்கவேண்டும்” என்று கல்யாணி குறிப்பிட்டார்.
விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றிய முனைவர் வசந்திதேவி சுமார் ஒரு மணி நேரம் பேசினார். கல்வித்துறையில் நிலவும் பல்வேறுவிதமான சீர்கேடுகளையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். ”வர்க்க அடிப்படையிலான போராட்டம் வர்ண அடிப்படையிலான போராட்டம் என இனிமேல் பிரித்துப் பார்க்கக்கூடாது.இரண்டும் ஒன்றுதான் என அணுகவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மனது வைத்திருந்தால் இந்நேரம் அந்தப் பள்ளிகள்தான் தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த பள்ளிகளாக இருந்திருக்கவேண்டும்.ஆதிக்க சாதியினர் தலித் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுத் தருவதில் அக்கறைகாட்டவில்லை என நாம் குற்றம் சாட்டுகிறோம். அது உண்மைதான். ஆனால் தலித் ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள்? தமிழ்நாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான ஆசிரியர்களில் கணிசமானவர்கள் தலித் ஆசிரியர்களில்லையா? அவர்கள் தமது கடமையை சரியாகச் செய்யவேண்டும் என்று நாம் கேட்கவேண்டும்.” என அவர் வலியுறுத்தினார்.தொடர்ந்து, ”சில தலித் சிந்தனையாளர்கள் தலித் குழந்தைகள் ஆங்கிலத்தில் படிப்பது நல்லது என்கிறார்கள்.அது திசைதிருப்பும் கருத்து. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கற்பதில் எந்தத் தவறும் இல்லை.ஆனால் தாய்மொழிதான் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும். உலகின் பெரும்பாலான நாடுகளில் அப்படித்தான் இருக்கிறது.தலித் பிள்ளைகள் அத்தனைபேரும் ஆங்கிலத்தில் படித்து கர்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்குப் போக முடியுமா? அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளைத் திறப்பது ஆபத்தாகத்தான் முடியும். டென்னிஸ் த மெனேஸ் என்ற கார்ட்டூன் கதையில் டென்னிஸ் சொல்வான் ’நீ வெற்றிபெற வேண்டுமென்றால் விளையாட்டின் விதியை நீ தீர்மானிக்க வேண்டும்’. அதுபோலத்தான் தங்களுக்கு சாதகமான விதத்தில் கல்வியின் விதிகளை ஆளும் சாதியினரும் வர்க்கத்தினரும் வகுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற கல்வியைப் படியுங்கள் என்கிறார்கள்.” என்பதைச் சொல்லிவிட்டு, “நாம் சமூக நீதி என்றாலே இட ஒதுக்கீடு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அரசு வேலைவாய்ப்புகளில்தான் இட ஒதுக்கீடு.தனியார் துறையில் அது இல்லை. இப்போது அரசுத் துறைகளில் எங்கே வேலைவாய்ப்பு இருக்கிறது? தனியார் துறையில்தான் இருக்கிறது. இட ஒதுக்கீடு இருக்கும் இடத்தில் வேலை வாய்ப்பு இல்லை, வேலை வாய்ப்பு இருக்குமிடத்தில் இட ஒதுக்கீடு இல்லை.தனியார் துறைதான் இன்று அனைத்து சலுகைகளும் கொடுத்து ஊட்டி வளர்க்கப்படுகிறது.அங்கே உயர் சாதிக்கும் உயர் வர்க்கத்துக்கும்தான் இடம் கொடுப்பார்களே தவிர தலித் பிள்ளைகளுக்கு எங்கே வேலை கொடுப்பார்கள்?”,“இன்று நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் கொள்கைகள் யாருடைய நன்மைக்கு உருவாக்கப்படுகின்றன? இந்த நாட்டிலிருக்கும் கோடீஸ்வரர்களுக்காக உருவாக்கப்படுகின்றன. இந்த நாட்டின் இயற்கை வளங்களெல்லாம் கொள்ளையடிக்கப்படுகின்றன. இவையெல்லாம் மாற்றப்பட வேண்டுமென்றால் கல்வியால்தான் முடியும். அந்தக் கல்வியை நாம் பெறவேண்டும். 1964 இல் கோத்தாரி கமிஷன் உருவாக்கப்பட்டது. இந்த நாட்டில் எந்தத் துறையில் புரட்சி ஏற்படவேண்டுமென்றாலும் அதற்கு கல்வியிலே முதலில் புரட்சி ஏற்படவேண்டும் என்று அந்தக் கமிஷன் சொன்னது. அந்தக் கல்விப் புரட்சி உண்டாவதற்கு பொதுப் பள்ளி முறை, அருகமை பள்ளி முறை வந்தாகவேண்டும். அதுமட்டுமல்ல பள்ளிகள் யாவும் அரசாங்கத்தால்தான் நடத்தப்படவேண்டும். இதைக் கொண்டுவருவதற்கு நாம் போராடவேண்டும். அப்போதுதான் சாதியற்ற சமுதாயம் உருவாகும்” என்று விரிவான உரையை வழங்கினார் வசந்திதேவி பேசினார். எனது ஏற்புரையை எழுதிக் கொண்டு போயிருந்தேன், ஆனால் வாசிக்கவில்லை. நேரம் கருதிச் சில எண்ணங்களையும் குறிப்புகளையும் மட்டுமே மேடையில் பேசினேன். அன்றைய உரையைக் கேட்கும் கூட்டத்தின் முன்வரிசையில் பேராசிரியர்கள் பழமலை,ரஹமத்துல்லா கான், முன்னாள் விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், எழுத்தாளர் இமையம், உள்ளிட்ட சுமார் 300 பேர் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உமாபதி, ரவிகார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.
எழுதிக்கொண்டு போன உரை இது:
எனது நீண்ட நாள் நண்பர் ரவிக்குமார் நடத்திக் கொண்டிருக்கும் மணற்கேணி ஆய்விதழின் சார்பில் உருவாக்கி அளிக்கும் நிகரி = சமம் விருதை முதல் ஆண்டிலேயே நான் பெறுகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் "நமது நண்பர்; அதனால் விருது அளிக்கிறார்" எனப் பலரும் எண்ணக்கூடும் என்ற நினைப்பும் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நினைப்போடு இந்த விருதுக்கு நான் எப்படிப் பொருத்தமானவன் என நினைத்துப் பார்க்கிறேன்.
எனக்கும் ரவிக்குமாருக்கும் இடையேயுள்ள நட்பின் காலம் கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கால் நூற்றாண்டுக்கணக்கு கூட நேர்ச் சந்திப்பின் அடிப்படையில் சொல்லப்படும் கணக்குதான். பார்த்துக் கொள்ளாமலேயே நட்பாய் இருந்த காலத்தையும் கணக்கிட்டால் கால்நூற்றாண்டைத் தாண்டி விட்டது என்பதை உணர்கிறேன்,புதுவைப் பல்கலைக் கழக நாடகத்துறையின் ஆசிரியராகத் தேர்வு பெற்றுப் பணியில் சேர்ந்த மூன்றாவது நாள் அவரை நேரில் சந்தித்தேன். எங்கள் துறைக்கு மிக அருகில் இருந்த கட்டடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த சிண்டிகேட் வங்கியின் ஊழியராக அவர் இருந்தார். அந்தச் சந்திப்பு புதுச்சேரியில் ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்ற தேவைக்காக நடந்த சந்திப்பு அல்ல. அப்படியொரு தேவைக்காக என்றால் எனது முதல் விருப்பம் சிண்டிகேட் வங்கியாக இருந்திருக்காது. ரவிக்குமார் அங்கே வேலை செய்கிறார் என எனது நண்பரும் நான் தேர்வு செய்யப்பெற்ற அதே நாளில் நாடகத்துறையின் இணைப் பேராசிரியராய்த் தேர்வு செய்யப்பெற்ற கே.ஏ. குணசேகரன் சொன்னவுடன் போய்ப் பார்க்க வேண்டும் என நினைத்துச் சென்றேன். வங்கியின் வாடிக்கையாளனாக மாறினேன் என்பதைவிடத் தினசரி அந்த வங்கிக்குச் சென்று வரும் நபராக மாறினேன் என்பதுதான் சரியாக இருக்கும்.
மார்க்சீய – லெனினிய அமைப்புகள் இந்தியாவைப் பற்றி வரையறுத்துச் சொன்ன கருத்துகள் மீது நம்பிக்கை கொண்டவனாக மதுரையில் நண்பர்களோடு விவாதங்களில் ஈடுபட்ட காலங்களில் உச்சரிக்கப் பெற்ற பெயர்களில் ஒன்றாக ரவிக்குமார் என்ற பெயரும் இருந்தது. "கவிதையால் புரட்சியைக் கொண்டு வர முடியும்" என்ற நம்பிக்கையோடு அலைந்த அந்தக் காலம் தொட்டு ஏற்பட்ட அந்தப் பழக்கம் – நட்பு -ஒரே நேர்கோட்டில் செல்லாமல் வளைந்தும் நெளிந்தும் இடைவெளி விட்டும் தாவியும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒருவரது கருத்துகளோடும் நடவடிக்கைகளோடும் எனக்கு வேறுபாடு தோன்றுகிறது என்றாலும் நான் விட்டு விலகித் தூரப் போய்விடுபவன் அல்ல. அப்படித் தூரப் போய்விடும் மனம் இந்திய சமூகத்தின் பொது மனப் போக்கு.
வேண்டாதவனை விலக்கி வைக்கும் தீண்டாமைக்குள் சிக்கிய மனம் தான் விலகலைக் கடைப்பிடிக்கும். எல்லாவற்றையும் அதனதன் இருப்பில் ஏற்றுக் கொள்ளவும் சகித்துக் கொள்ளவும், தொடர்ந்து உரையாடல் நடத்தி மாறவும், மாற்றவும் செய்யும் மனம் பொதுமனத்தோடு விலகிய நிலைப்பாடு கொண்டது. நமக்குத் தேவை விலகலையும் ஒதுக்குதலையும் விட்டொழிக்கும் மனங்கள் தேவை. அதற்குப் பதிலாக உள்வாங்கும் மனத்தை உருவாக்கிக் கொள்ள நாம் பழக வேண்டும். உள்வாங்கும் மனங்களோடு சேர்ந்து உள்வாங்கும் அரசியலை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஏனென்றால் எல்லாவற்றையும் தேசம், மதம், சாதி, வெளி, மொழி என்னும் பேரடையாளங்களை முன் வைத்தோ, கருத்தியல் சார்ந்த மதிப்பீடுகளையும் எதிர்வுகளையும் முன்னிறுத்திச் சொல்லாடல்களை உருவாக்கும் சிற்றடையாளங்களாலோ விலக்கித் தூர எறியும் கருத்தோட்டங்களால் நாம் கட்டமைக்கப் பட்டிருக்கிறோம்; அத்தகைய அரசியலே நிகழ்காலத்தில் பயமுறுத்தும் அரசியலாக ஆகிக்கொண்டிருக்கிறது. விலக்கி வைக்கும் அரசியலுக்கு எதிராக உள்வாங்கும் அரசியலை முன் வைத்து வேலை செய்யும் தேவையை உணர வைத்தவர் அண்ணல் அம்பேத்கர். நவீன இந்தியச் சிந்தனையாளர்களில் முதன்மையானவரான அம்பேத்கரிடமிருந்து ஒட்டு மொத்த இந்திய சமூகம் கற்றுக் கொள்ள வேண்டியன ஏராளம் இருக்கின்றன.
புதுச்சேரியில் இருந்தவரை ரவிக்குமாருக்கும் எனக்கும் நேர்ப் பேச்சுகளாக இருந்த விவாதங்களும் உரையாடல்களும் திருநெல்வேலிக்குப் போனபின் தொலைபேசியைத் துணையாக்கிக் கொண்டன. இந்தக் கால் நூற்றாண்டுக் காலத்தில் நானும் ரவிக்குமாரும் பலவற்றை நேரிலும் தொலைபேசியிலும் விவாதித்திருக்கிறோம். விளக்கம் பெற்றிருக்கிறோம். திட்டமிட்டிருக்கிறோம். செயல்பட்டிருக்கிறோம். பொதுத்தளங்கள் என்றில்லாமல் குடும்பம் சார்ந்த முடிவுகளுக்காகக் கூட தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். அவரிடமிருந்து விலகியிருக்கிறேன் எனச் சொல்லிக் கொள்ளாமல் விலகி இருந்த காலத்திலும் கூட அவரது திட்டமிடலையும் விளக்கிக் கூறலையும் செயல்படுவதையும் செயல்படுத்துவதையும் கண்டு வியந்தவன் நான். கல்வித்துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இருக்க வேண்டிய உழைப்பும் வாசிப்பும் எழுத்தும் அவரிடம் இருப்பதை எப்போதும் பொறாமையோடு பார்த்துப் பெருமூச்சு விட்டிருக்கிறேன் . நிற்க.
இப்போது இரண்டு வாரங்களுக்கு முன்னால் போகலாம்.
1989 இல் புதுச்சேரி நாடகப்பள்ளிக்கு வருவதற்கு முன்பு என்னை நான் இடதுசாரிச் சிந்தனை கொண்டவனாக நினைத்துக் கொண்டிருந்தேன். அதனாலேயே முழுமையாக பிறப்பு அடிப்படையிலான சாதி வரையறையையும், அதே அடிப்படையைக் கொண்டு வழங்கப்படும் இட ஒதுக்கீடு என்னும் சலுகையின் மீதும் ஒருவித ஒவ்வாமை எனக்குள் இருந்தது. இட ஒதுக்கீட்டின்படி அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு வருபவர்கள் திறமையானவர்களின் இடத்தைப் பறித்துக் கொள்கிறார்கள்; அவர்களின் தகுதிக்கும் அதிகமான சலுகைகளைப் பெறுகிறார்கள் எனப் பொதுப்புத்தியில் இன்றளவும் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டம் எனக்குள்ளும் இருந்தது. ஆனால் அந்த எண்ண ஓட்டம் பாண்டிச்சேரியில் கிடைத்த நட்புச் சூழலாலும் விவாதங்களாலும் வாசிப்பாலும் தான் மாற்றம் பெற்றது.
இட ஒதுக்கீடு மட்டுமே சலுகை அல்ல என்பதும், இந்திய அரசாங்கம் பலவிதமான சலுகைகளைப் பலவிதமான பொருளாதார நிலையிலும் சமூகத் தட்டிலும் இருப்பவர்களுக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்பது புரிந்தது. சாதிய அடுக்குகளாகப் புரிந்து கொள்ளப்படும் இந்திய சமூக அமைப்பில் உயர்ந்த இடத்தில் இருப்பதாக நம்பும் பிராமணர்களுக்குக் கடந்த கால அரசுகளும், நிகழ்கால அரசுகளும் வழங்கிய- வழங்கும்- சலுகைகள், மானியங்கள் எப்போதும் தகுதியை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பது இப்போது எனக்குப் புரிகிறது. குறிப்பிட்ட வகையான பதவிகளுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் சலுகைகளும் மானியங்களும் விருதுகளும் கேள்விக்கப்பாற்பட்டவையாக இருப்பதை எனக்கு முழுமையாக உணர்த்தியது 1991 தொடங்கி கொண்டாடப்பெற்ற அம்பேத்கர் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் தான்.
பாண்டிச்சேரிக்குப் போவதற்கு முன்பு கட்டாயம் படிக்க வேண்டியவர்கள் பட்டியலில் பெரியாரும் அம்பேத்கரும் இருந்ததில்லை. பெரியாருடைய பேச்சுக்களையும் எழுத்துகளையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரது பேச்சுத் தொனிக்காகவும், எளிய சொற்களைப் பயன்படுத்திய மொழி ஆளுமைக்காகவும் வாசித்திருந்தேன். ஒரு இலக்கிய மாணவன் தெரிந்து கொள்ளவேண்டிய அளவு என்று அதைச் சொல்லலாம். அவரைச் சமூகப் போராளியாகவோ, தமிழ்ச் சமூகத்தின் போக்கில் பெரிதான அதிர்வுகளை உருவாக்கிய சிந்தனையாளராகவோ ஏற்றுக்கொண்டு வாசித்தவனில்லை. அம்பேத்கரைப் பற்றிய அறிவும் வாசிப்பும் பெரியாரைப் பற்றிய அறிதல் அளவுக்குக் கூட இருந்ததில்லை. இவ்விருவர் பக்கமும் போக வேண்டிய அவசியம் இல்லை என்று என்னைத் தடுத்து வைத்திருந்தது மாணவப் பருவம் தொடங்கி எனக்கிருந்த இடதுசாரிகளின் தொடர்பும், பல்கலைக்கழகத் தமிழியல் துறைகளுக்குள் இடதுசாரித்திறனாய்வு, செலுத்திய ஆதிக்கத்தின் விளைவும் என்று சொல்லலாம். எங்கெல்ஸையும் மார்க்ஸையும் உள்வாங்கிச் சமூகவியல் மற்றும் இலக்கியவியல் கோட்பாடுகளைத் தந்தவர்களையும் வாசித்த எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் அம்பேத்கரும் பெரியாரும் அந்நியர்கள் என்பது போன்ற எண்ணம் எப்படி? யாரால் உருவாக்கப் பெற்றது என்பது தனிக்கதை.
1989 இல் ஏற்பட்ட பாண்டிச்சேரி தொடர்பு தான் என்னை முற்றிலுமாக மாற்றிப் போட்டது. பாண்டிச்சேரியிலிருந்து 1997 இல் திருநெல்வேலிக்கு - நாடகத் துறையை விட்டு விட்டு இலக்கியத்துறை ஆசிரியனாகப் போன பின்பு என்னைப் பார்க்கும் பலரும்,“ ஐரோப்பிய இடதுசாரிகளுக்கு பிரெஞ்சுத் தொடர்பு ஏற்படுத்திய தாக்கம் போல” தமிழ் நாட்டிற்குள் பாண்டிச்சேரித் தொடர்புகள் காத்திரமான மாற்றங்களை உண்டாக்கி வருகிறது என்று சொல்வார்கள். அந்தக் கூற்று மற்றவர்களைப் பொருத்துச் சரியானதா என்று நான் சொல்ல முடியாது. என்னைப் பொறுத்த வரையில் முற்றிலும் பொருத்தமானது.
வர்க்க அரசியல், வர்க்க இலக்கியம், வர்க்க சமுதாயம் என்ற சொல்லாடல்களுக்குள் இருந்த என்னை தேசிய இன அரசியல், உடல் அரசியல், விளிம்புநிலை அரசியல், ஒடுக்கப்படுதல் மற்றும் ஒதுக்கப்படுதலின் அரசியல் எனப் பல தளங்களுக்குள் நகர்த்திக் கொண்டு வந்தது. இவை எல்லாவற்றையும் புரிந்து கொள்ள இந்திய சாதி அமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்; சாதி அமைப்பைப் புரிந்து கொள்ள அம்பேத்கரின் ஆய்வுகளை வாசித்தாக வேண்டும் என்ற நெருக்கடியை உணர்ந்தேன்; வாசித்தேன்; புரிந்து கொண்டேன். அதன் வெளிச்சத்தில் எனது எழுத்துகளின் தொனியை மாற்றிக் கொண்டேன். அதுவரை அம்பேத்கரைக் கேள்வி ஞானத்தின் வழியாகவே புரிந்து வைத்திருந்த நான் கார்ல் மார்க்ஸுக்கு இணையாக வாசித்தவராகவும் எழுதியவராகவும் அம்பேத்கரைச் சொல்லத் தயங்குவதில்லை இப்போது.
மாற்றத்தை முன் வைத்துச் செயல்படும் ஓர் அறிவுஜீவியின் நோக்கமும் வாசிப்பும் எழுத்தும் இவ்வளவு பரந்த பரப்பாக இருக்க வேண்டுமா? என்ற மலைப்பை அவர்கள் இருவரும் எனக்குள் உண்டாக்கியிருக்கிறார்கள். முதலாளித்துவ அரசு மற்றும் சோசலிச அரசு என்ற எதிர்நிலைக் கட்டுமானங்களை விமரிசனம் செய்வதில் தொடங்கி இந்திய அரசுருவாக்கத்தில் தேசிய இனப்பிரச்சினையின் இடம், இந்திய சமூக அமைப்பில் சாதியக் கருத்துரு, உலக அளவில் எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கும் பெண்கள் போராட்டம் மற்றும் விடுதலை, இவ்வகை அரசியல் செயல்பாடுகளோடு இணைந்தும் விலகியும் நிற்கும் கலை இலக்கியப் போக்குகள் பற்றியெல்லாம் கவனப்படுத்திய நிறப்பிரிகையின் செயல்பாடுகள் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த ரவிக்குமார், அம்பேத்கர் நூற்றாண்டின் எழுச்சியிலும் மையமாக இருந்தார். அவரது வீட்டில் தான் பல விவாதங்களின் ஆரம்பம் தொடங்கியது. அங்கு தொடங்கும் விவாதம் புதுச்சேரி வணிக அவை அல்லது பிரெஞ்சு இந்திய நிறுவன வளாகம் அல்லது பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பரப்பு என விரிந்தது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை ஆசிரியனாக இருந்த எனக்கு அம்பேத்கரின் நூற்றாண்டு சில வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. மதுரை நிஜநாடக இயக்கம் என்னிடத்தில் மூன்றாம் அரங்கு என அழைக்கப்பட்ட ஏழ்மை அரங்கின் தத்துவம் மற்றும் செயல்தளத்தை உருவாக்கிப் பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்திருந்தது. அதன் 20 க்கு மேற்பட்ட தெரு நாடகங்களில் நடிகனாகப் பங்கேற்ற அனுபவத்தோடு மதுரை நகரக் கல்லூரிகளில் மட்டுமல்லாமல், திருநெல்வேலி, விருதுநகர், அருப்புக் கோட்டை, திண்டுக்கல்,எனச் சிறுநகரங்களின் கல்வி வளாகங்களிலும் மேடையேற்றிய அனுபவம் எனக்குள் இருந்தது. மதுரை மாவட்டத்தின் பல கிராமங்களில் மக்களோடு இணைந்த இயக்கங்களுக்காகவும் நாடகங்கள் செய்திருந்தோம். அந்நாடகங்களில் பலவும் நடுத்தர வர்க்கம் சார்ந்த அமைப்பு எதிர்ப்பு, அமைப்புகளின் மீதான விமரிசனம் என்ற தளத்தில் அமைந்தவை. ஆனால் ஒரு நாடகம் மட்டும் முற்றிலும் விதிவிலக்கானது. ”நியாயங்கள்” என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட அந்த நாடகம் தமிழ்நாட்டில் பல்வேறு நாடகக் குழுக்களால் சில ஆயிரம் முறை நிகழ்த்தப் பெற்ற நாடகம். அந்த நாடகமும் கூட நீதித்துறையின் மீதான விமரிசனத்தை வைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டது என்றாலும் காட்சிப் படுத்தும் நிகழ்வுகளாக இருப்பன வெண்மணிச் சம்பவங்கள்.
1968 இல் கீழவெண்மணியில் 42 பேர் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள்; ஆனால் கொளுத்தியவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை தருவதற்குப் பதிலாக விடுதலையை வழங்கியது. அதற்கு நீதிமன்றம் சொல்லிய வார்த்தை “ சந்தேகத்தின் பலனை” அளிப்பது என்ற அடிப்படை. இந்திய நீதி மன்றங்களும் சமூகமும் எல்லா நேரமும் சந்தேகத்தின் பலனை உடையவர்களுக்குச் சாதகமாக அளிக்கின்றன என்ற நிலையை மாற்றி “ சந்தேகத்தின் பலனை ஆதிக்க சாதியினருக்கே அளிக்கின்றார்கள்” என்ற நிலைபாட்டில் அந்த நாடகத்தை புதுச்சேரியில் நண்பர்களோடு சேர்ந்து தொடங்கிய கூட்டுக்குரல் என்ற நாடகக் குழுவின் சார்பில் கம்பன் கலையரங்கத்திற்கு வெளியே தரையில் நிகழ்த்திக் காட்டினோம். பாடலும் வசனமும் நடிகர்களின் வியர்வை வழியும் உடலுமாக விரிந்த அந்த நாடக நிகழ்வு இந்தியாவில் வெண்மணியோடு முடிந்து போகவில்லை. பல்வேறு மாநிலங்களில் இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது என்று காட்ட அந்த நேரத்தில் ஆந்திரத்தின் சுண்டூரில் நடந்த வன்கொலைகளை நினைவூட்டி வளர்த்தெடுத்தோம்.நடக்கும் மோதல்கள் எல்லாவற்றிலும் இருப்பது ஆதிக்கச் சாதியினரின் திமிரும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான அணிகள் இல்லாமையும் தான் எனக் காட்டினோம். அந்த நிகழ்வுக்கு தொல். திருமாவளவன் ஒரு பார்வையாளராக வந்திருந்தார்.பார்த்துவிட்டுக் கைகொடுத்துக் கட்டிக்கொண்டார்.
1992 இல் தொடங்கிய நியாயங்கள் என்னும் நாடக மேடையேற்றம் தலித்திய அரங்கின் எல்லைகள் பலவற்றை உருவாக்கிக் காட்டி விட்டு 1997 இல் நான் திருநெல்வேலிக்குப் போனதோடு முடிந்து போனது. இந்து மதத்தில் “தண்ணீர்” எவ்வாறு சாதியிருப்பின் காரணியாக இருக்கிறது என்பதை ஒரு நாடகத்தில் சொன்னது போல பிரபஞ்சனின் அகலிகை என்ற பெண்ணிய நாடகத்தில் “ தாடகை” என்ற பாத்திரத்தை உருவாக்கியதின் மூலம் கறுப்பு வண்ணம் கொண்ட விளிம்பு மனிதர்களுக்கு எதிராக இந்து மதப்புனிதர்கள் நடத்திய யுத்தத்தையும் சொல்லாடல்களையும் முன் வைத்தோம். சமூக உணர்வு கொண்ட படைப்பாளிகளின் நியாயத்தை - குற்ற உணர்வைத் தூண்டும் விதமாக வடிவமைக்கப் பெற்ற வார்த்தை மிருகம் என்ற நாடகத்திற்குள் சிதம்பரம் அண்ணாமலை நகர் பத்மினியின் வாக்குமூலத்தை உள்ளடக்கிய பிரதியாக ரவிக்குமார் எழுதித் தர உடலரசியல், சாதி அரசியல், மொழி அரசியல் எனப் பல தளங்களில் சொல்லாடலை உருவாக்கிய மேடை நிகழ்வைத் தயாரித்தேன். இந்நாடகங்கள் எல்லாம் தலித் இயக்கம் எழுச்சி பெற்ற முதல் ஐந்தாண்டுகளில் பாண்டிச்சேரியில் மட்டுமல்லாமல் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி எனப் பல இடங்களில் நிகழ்த்தப்பெற்றதோடு மதுரையில் நடந்த எல்லா தலித் கலைஇரவுகளிலும் நிகழ்த்திக் காட்டப்பட்டது. தலித்திய அரங்கின் வரையறைகளை - எல்லைகளை விரிவாக்கிக் காட்டிய மேடை நிகழ்வுகள் அவை.
நாடகத்துறை சார்ந்த செயல்பாடுகளில் அலுப்பு என்பதைவிடப் புதுச்சேரி நாடகப் பள்ளியில் பணியாற்றும் சூழலில் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் சோர்வினால், மையப் பல்கலைக்கழக வேலையை விட்டுவிட்டு இலக்கியத் துறைக்குத் திரும்பி விட வேண்டும் என நினைத்தேன். என்னைத் திறமையான நேர்காணலின் வழியாக உள்வாங்கிய துணைவேந்தர் மதிப்பிற்குரிய வே. வசந்திதேவி இந்த நிகரி விருதை வழங்கி அமர்ந்திருக்கிறார்கள். அவருக்குத் தெரியும் எனக்கு அந்தப் பல்கலைகழகத்தின் பணி வாய்ப்பை உருவாக்கியதில் தலித் இலக்கியம், தலித் அரசியல், தலித் இயக்கங்கள் பற்றி நான் கொடுத்த விளக்கங்கள் முக்கியப் பங்காற்றின என்பது. அரசுத்துறை அதிகாரிகளாக வந்திருந்த வல்லுநர்கள் முதலில் எனக்கு என்னவெல்லாம் தெரியும் எனக் கேள்வி கேட்பதை மாற்றிக் கொண்டு,”எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கும் தலித் இயக்கங்கள்” பற்றி என்னிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என ஆவலை வெளிப்படுத்தினார்கள். 55 நிமிடங்கள் நடந்த நேர்காணலில் முக்கால் மணி நேரம் தலித்தியம் பற்றி நான் பேச அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆம் தலித்தியம் சார்ந்து நான் புதுச்சேரியில் கற்றுக் கொண்டவை தான் திருநெல்வேலியில் என்னை இணைப் பேராசிரியராக மாற்றியது. அதையே எனது முதல் விருதாக - தலித்தியம் சார்ந்த எனது செயல்பாடுகளுக்குக் கிடைத்த முதல் விருதாக நினைக்கிறேன். இப்போது தரப்படும் நிகரி- சமத்துவ ஆசிரியர் விருது ஒரே காரணத்துக்காகத் தரப்படும் இரண்டாவது விருது என்று மகிழ்ச்சியாக இருக்கிறது.
திருநெல்வேலிக்குப் போன பிறகும் தலித்திலக்கியம், தலித்திய விமரிசனம் சார்ந்து தீவிரமாக இயங்க வேண்டிய நெருக்கடி ஒன்றை நண்பர் ரவிக்குமார் தான் உருவாக்கினார். 2000 இல் சென்னையில் நடந்த தமிழினி 2000 என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் தமிழகத்தில் தலித் இலக்கியம் என்ற கட்டுரையை வாசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அந்த வாய்ப்பு முதலில் தலித் விமரிசகராக அறியப்பட்ட ராஜ் கௌதமனிடம் வழங்கப்பட்டு அவரால் இயலாமல் என்னிடம் வந்து சேர்ந்தது. அவர் செய்யாததை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு ரவிக்குமார் பரிந்துரைக்க கருத்தரங்க அமைப்புக்குழு ஏற்றுக் கொண்டது. அந்தக் கட்டுரையை எழுதுவதற்காகத் தமிழில் எழுதப்பெற்ற தலித் எழுத்துகள் அனைத்தையும் தொகுத்து வாசித்தேன். அவற்றை விளக்கிக் காட்டவும் விமரிசனம் செய்யவும் தேவையான அடிப்படைகளையும் உருவாக்கிக் கொண்டு 50 பக்கக் கட்டுரை ஒன்றை எழுதித் தந்தேன். அந்தக் கட்டுரை தான் இன்றளவும் தமிழில் தலித் இலக்கியம் பற்றிய கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு அடிப்படையான தரவுகளைத் தந்து கொண்டிருக்கும் கட்டுரையாக இருக்கிறது.
தமிழில் எதாவது ஒரு எழுத்தாளரை மையப்படுத்தி வடிவம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்து தனக்கான நியாயங்களை முன்னிறுத்திக் கொண்டு மற்றவர்களை விலக்கி வைக்கும் -ஒதுக்கித் தள்ளும் திறனாய்வு முறையே தமிழில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்தன. அந்தக் கட்டுரை ஒதுங்குதலையும் ஒதுக்குதலையும் மையப்படுத்தாமல் உள்வாங்கும் திறனாய்வு முறையை அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக நவீனத் தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் போக்காக தலித் இலக்கியப் போக்கு இருக்கிறது என்பதைப் பல்வேறு கட்டுரைகள் வாயிலாகவும் கருத்தரங்கப் பொழிவுகள் வழியாகவும் உரையாடல்கள் மூலமும் நிறுவும் பணியைச் செய்துள்ளேன். இந்தச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப் பெற்ற அம்பேத்கரியல் மையத்தை மாற்றினேன். பல்கலைக்கழக மானியக் குழுவின் பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட நிதியிலிருந்து உருவாக்கப் பெற்ற மையம் எமது பல்கலைக்கழக வளாகத்தில் மாணாக்கர்களின் யாதொருவரும் பிறப்பு அடிப்படையிலான சாதியக் கருத்துகளாலும் எண்ணங்களாலும் ஒதுக்கப்படக் கூடாது என்ற வலுவான நிலைபாட்டை உருவாக்கித் தந்தது. தமிழ்நாட்டில் செயல்பட்ட அறிவுஜீவிகள், செயலாளிகள் அனைவரும் அந்த வளாகத்தில் வந்து ஆற்றிய உரைகளின், இலக்கியப் பதிவுகளின் தாக்கம் அது. அதன் மையமாக இருந்து -அம்பேத்கரியல் மையத்தின் இயக்குநராக இருந்து செயல்பட்ட அந்தக் காலம் எனது வாழ்க்கையின் நினைக்கத் தக்க காலம்.
ஒரு மனிதனின் நினைக்கத் தக்க காலத்தைத் அவனே நினைத்துக் கொள்வது போதுமானது தான். உவகை அளிப்பது தான். என்றாலும், மற்றவர்களும் நினைத்துப் பாராட்டுகிறார்கள்; அங்கீகரிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் என்பது உவகையினும் உவகை. அந்த உவகையிலும் உவகையான தருணத்தை மணற்கேணி ஆய்விதழ் வழங்கியிருக்கிறது. உவகையிலும் உவகையோடு இந்த விருதை - நிகர்நிலைச் சமூகத்தை உருவாக்கும் செயல்களைச் செய்யுங்கள்; தொடருங்கள் என ஆணையிட்டுச் சொல்லும் - நிகரி விருதைப் பெற்றுக் கொள்கிறேன். அதன் ஆணையை நெஞ்சினுள் நிறுத்திச் செயல்பட வேண்டும் என உறுதி கொள்கிறேன்.

கருத்துகள்