புள்ளிவிவர ஆய்வுகளின் தேவை.

தொடர்ந்து வாசிக்கும் உயிர்மை, காலச்சுவடு இதழ்களில் இடம்பெற்ற சிறுகதைகள் சார்ந்து புள்ளிவிவரப் பட்டியல்களை இணைத்துள்ளேன்.. இந்தப் பட்டியல்கள் மூலம் சில புள்ளி விவரங்கள் கிடைக்கின்றன.

 ஓராண்டிற்குள் (2024)உயிர்மை மொத்தமாக 57 சிறுகதைகளை வெளியிட்டுள்ளது. காலச்சுவடு 19 சிறுகதைகளை வெளியிட்டுள்ளது. இவ்விரண்டின் சிறுகதைகளைப் பெரும்பாலும் வாசித்துள்ளேன். பாதிக்கும் மேலான கதைகள் குறித்து முகநூலில் குறிப்புகளும் எழுதியிருப்பேன். வாசிக்கும் எல்லாவற்றையும் எழுத நேரம் கிடைப்பதில்லைஉயிர்மையில் வந்துள்ள 57 கதைகளை எழுதிய எழுத்தாளர்களின் எண்ணிக்கை 32 பேர். அவர்களின் ஒரு கதை மட்டும் எழுதியவர்களாக 20 பேர் இருக்கிறார்கள். இரண்டு கதைகள் எழுதியவர்களின் எண்ணிக்கை 7 ; மூன்று கதைகள் எழுதியவர்களின் எண்ணிக்கை 2. நான்கு கதைகளை எழுதியவராக ஒருவரும், ஐந்து கதைகள் எழுதியவராக ஒருவரும் இருக்கிறார்கள். அதிக எண்ணிக்கையாக 8 எட்டுக்கதைகளை எழுதியவராக ஒருவர் இருக்கிறார். எண்ணிக்கை சார்ந்து உயிர்மையில் சிறுகதை எழுதும் வாய்ப்புப்பெற்று முதலிடம் பிடித்துள்ளவர் சரவணன் சந்திரன். 32 பேரில் பெண் எழுத்தாளர்கள் 5 பேர்தான். அந்த ஐந்துபேரில் அனுராதா ஆனந்த் மட்டும் 2 கதைகளை எழுதியுள்ளார். மற்ற நான்குபேரும் தலா ஒரு கதையையே எழுதியுள்ளனர். இரண்டு பேர் தமிழகத்திற்கு வெளியே இருந்து எழுதியவர்களாக இரண்டுபேர் இருக்கிறார்கள். சித்துராஜ் பொன் ராஜ் சிங்கப்பூரைச் சேர்ந்தவர், பிரமிளா ப்ரதீபன் இலங்கையைச் சேர்ந்தவர்.

காலச்சுவடு வெளியிட்டுள்ள 19 கதைகளை எழுதியவர்களின் எண்ணிக்கை 17. பெரும்பாலும் தலா ஒரு கதையையே எழுதியுள்ளனர். இரண்டு பேர் – வாசந்தியும் அரவிந்தனும் மட்டுமே தலா 2 கதைகளை எழுதியிருக்கிறார்கள். 17 பேரில் 4 பேர் பெண்கள். தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்து எழுதியவர்களாக மாஜிதா, பொ.கருணாகரமூர்த்தி, மலேசியா ஶ்ரீகாந்தன், சுஜா செல்லப்பன் இருக்கிறார்கள். ஹேமி கிருஷ் கூட அமெரிக்காவில் இருக்கும் தமிழ்நாட்டுக்காரர் என்றாலும் அவரது கதையில் அயல்நாட்டு வெளி இடம்பெறவில்லை.

உயிர்மை, காலச்சுவடு ஆகிய இரண்டு இதழ்களிலும் எழுதியவர்களாக வண்ணநிலவன், வாசந்தி, பெருமாள் முருகன், யுவன் சந்திரசேகர் முதலான மூத்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். கார்த்திக் பாலசுப்ரமணியம், விஜயராவணன் என இளையதலைமுறை எழுத்தாளர்கள் இரண்டு இதழிலும் எழுதியுள்ளனர். .

இந்தப் புள்ளிவிவரங்கள் மேம்போக்கானவைதான். இதற்கும் மேலாகக் கதையை வாசித்து, உரிப்பொருள் அடிப்படையிலும் இலக்கியப் போக்குகள் அடிப்படையில், சொல்முறை சார்ந்தும் வகைமை அடிப்படையில் பல தகவல்களைச் சொல்லமுடியும். ( இதேபோல் நான் வாசிக்கும் நீலம், அம்ருதா, தலித், தமிழ்வெளி, காக்கைச் சிறகினிலே முதலான இதழ்களிலிருந்தும் புள்ளிவிவரங்கள் சார்ந்து பட்டியல்கள் உருவாக்கலாம்)

******

தமிழ் இலக்கியம் சார்ந்த புள்ளிவிவரங்களைத் தொகுத்து ஆண்டு தோறும் வெளியிடும் பணியைப் பல்கலைக்கழகங்களின் துறைகள் செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் கற்கை சார்ந்த பணிகளை மேற்கொண்டிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் பொதுநிலைப்பட்ட ஆய்வுத்திட்டங்களை மேற்கொள்வது சாத்தியமில்லை என்பது உணரப்பட்டது. இருந்தபோதிலும் ஒரு முயற்சியாகப் புள்ளிவிவர ஆய்வுத்தலைப்புகளை இரண்டு ஆண்டுகள் எம்பில் பட்டத்திற்கு வழங்கினேன். அப்போது வந்த மாத இதழ்களான காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, உயிரெழுத்து முதலான இதழ்களின் சிறுகதைகளைப் பட்டியலிட்டு உள்ளடக்கப்போக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. அந்த ஆய்வுகளைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை. ஏனென்றால் ஆய்வு மாணவர்களின் ஆய்வுக்காலம் ஓராண்டு என்பதால் தொடர்வதில் சிக்கல்கள் ஏற்பட்டன. முனைவர் பட்ட ஆய்வாளர்கள் அப்படியான ஆய்வுகளைச் செய்யலாம். நான் ஆய்வு செய்த காலத்தில் எனது நெறியாளர் தி.சு.நடராசன் வழிகாட்டலில் வள்ளியம்மாள் என்பவர் மொத்த எழுத்து இதழ்களையும் பட்டியலிட்டு உள்ளடக்கப் பகுப்பாய்வையும், புதுக்கவிதைக்கு அதன் பங்களிப்பைச் சிறப்பாகவும் ஆய்வு செய்தார்.

ஆய்வுப்பட்டங்களைத் தாண்டி பொதுத்திட்டமாக பெருந்திட்டங்களைச் செய்யும் ஆய்வு நிறுவனங்கள் இத்தகைய ஆய்வுத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்படியான நோக்கத்தோடுதான் அறிஞர் வ.அய். சுப்பிரமணியத்தின் வழிகாட்டல்கள் இருந்தன. இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டிற்குப் பின்னர் தொடங்கப்பட்ட உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு அப்படியொரு நோக்கம் இருந்ததைத் தொடக்க கால ஆய்வுத்திட்டங்களில் அறிய முடியும். பேரா. ச.வே.சுப்பிரமணியம் இயக்குநராக இருந்தபோது புள்ளிவிவரங்கள் சார்ந்து நிறைய தொகுப்புகள் கொண்டுவரப்பட்டன. பின்னர் அதில் தொய்வு ஏற்பட்டது. வ. அய். சுப்பிரமணியம் துணைவேந்தராக இருந்த காலத்துத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்த நோக்கத்திலும் முனைப்பு காட்டியது. பின்னர் வந்தவர்கள் திசைகளை மாற்றிவிட்டார்கள். திருவனந்தபுரத்திலும் புதுவையிலும் இருந்த மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனங்கள் மொழி சார்ந்து இத்தகைய ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டன. ஆனால் இப்போது இவையெல்லாமே ஆய்வு நிறுவனங்களாக இல்லாமல், கற்கை நிறுவனங்களாக மாறிப்போய்விட்டன. பெருந்திட்டங்கள் வழியாகவே கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், தொகைநூல்கள் , ஆதார நூல்கள், ஆவணங்கள் போன்றனவற்றை உருவாக்க முடியும்.

உயிர்மை மாத இதழ்

பட்டியல்மாதந்தோறும் வெளியான கதைகளும் ஆசிரியர்களும்

மாதம்

 தலைப்பும்     ஆசிரியரும்

எண்ணம்

ஜனவரி  

1.பார்க்க மறுத்த பறவைகள் -சுப்ரபாரதி மணியன்

2.பிறைசூடி -பூமா ஈஸ்வர மூர்த்தி

3.ப்ரெட் பஜ்ஜி -சரவணன் சந்திரன்

4.லாதி.கரீம்

5.மாமன் எங்கீங்க ஆயா? – வா.மு.கோமு

6.புனுகு -வண்ணதாசன்

7.கருப்பி என்கிற பாப்ஸ் -பெருமாள் முருகன்

8. அப்பாவின் சிநேகிதர்கள்-கலாப்ரியா

8

பிப்ரவரி

1.அனல் -சரவணன் சந்திரன்

2.நீலக்கோப்பைகள்கரன் கார்க்கி

3.தேசி காதல் கல்யாணம் -இரா.முருகவேள்

4.ஆர்மோனியம் -கலாப்ரியா

5.ரயில் புழு - கார்த்திக் பாலசுப்ரமணியம்

6.கண்ணாட்டி -ஷான் கருப்பசாமி

 

6

மார்ச்

1.டிரெண்டிங் இளைஞரின் கதை -மால்கம்

2.உண்டார் கண் -நர்சிம்

3. கொடிமரம் -கலாப்ரியா

4. கண்ணாமூச்சி -யுவன் சந்திரசேகர்

5.என் சாமி -வாசந்தி

6. ஐஸ் குயின்சித்துராஜ் பொன் ராஜ்

 

6

ஏப்ரல்

1.நாற்காலி -சுப்ரபாரதி மணியன்

2.மல்லக்குடிச்சவன் -வெற்பன்

3.யுத்தகாண்டம்அரிசங்கர்

4. சஞ்சலம் -சிவபாலன் இளங்கோ

5.பட்டாம் பூச்சியின் வாக்குமூலம் -சரவணன் சந்திரன்

6, அழைப்பு -ஜெயமோகன்

 

6

மே

1.லஞ்சம் -ஷான் கருப்பசாமி

2. தடுப்பாட்டம் -சரவணன் சந்திரன்

3.பொன்வண்டுப்புடவை -அனுராதா ஆனந்த்

 

சுரேஷ்குமார் இந்திரஜித்தின் குறுங்கதைகள்

3

ஜூன்

1.நாற்றம் -வண்ணநிலவன்

2.மயிலேறும்பெருமாள் -பூமா ஈஸ்வரமூர்த்தி

3.வெண்கலமணி -சரவணன் சந்திரன்

4.கடகம் -கலாப்ரியா

5.நகுதற்பொருட்டு -யுவன் சந்திரசேகர்

 

5

ஜூலை

1,மரப்பாச்சி -விஜயராவணன்

2 பிளிறல்சரவணன் சந்திரன்

3. அந்த நாள் அந்த ரயில் அந்த இரவு நேரப்பயணம்லோகேஷ் ரகுராமன்

4.தண்டகாரண்யத்தில் சீதை -இமையம்

 

இளங்கோ கிருஷ்ணன் நுண்கதைகள்

4

ஆகஸ்டு

1 தோரணை -சுப்ரபாரதி மணியன்

2 முடியாத கதை -இந்திரா பார்த்தசாரதி

3.தங்கமலர் -சரவணன் சந்திரன்

4.போர்ஹே ஒரு இன் ஜினியர்வா.மு.கோமு

5. இன்னொரு வீடுகார்ல் மார்க்ஸ்

5

செப்டம்பர்

1.ஓங்கல் -சரவணன் சந்திரன்

2. செம்மி -பெருமாள் முருகன்

3. மோட்ச தீபம் -கலாப்ரியா

 

3

அக்டோபர்

 

1.காணாமல் போனவர்களின் ரகசிய உலகம்மால்கம்

2.சாயல் -யுவன் சந்திரசேகர்

2

நவம்பர்

1.பிரியத்தின் ஹெர்பேரியம் -அழகிய பெரியவன்

2. மதி -பெருமாள் முருகன்

3.புத்தரின் பாதங்கள்அம்பை

3

டிசம்பர்

1 அம்மாவின் இளநீல டைப்ரைட்டர்- அனுராதா ஆனந்த்

2. வாழ்க்கை உயிர்பெற பாடுஅழகிய பெரியவன்

3 கொலைச்சொல்பிரமிளா ப்ரதீபன்

4.குஸக்கம்நஸீமா பர்வீன்

5.பொங்கி -பெருமாள் முருகன்

6. புல்லட் செல்வாகார்ல் மார்க்ஸ்

6

மொத்தம் -

 57

 

 

எண்

 எழுத்தாளர்

 கதைகள் வந்த மாதங்கள்

 எண்ணம்

1

சரவணன் சந்திரன்

ஜனவரி,பிப்ரவரி,ஏப்ரல்,மே,ஜூன், ஜூலை,ஆகஸ்டு,செப்டம்பர்

8

2

கலாப்ரியா

ஜனவரி, பிப்ரவரி,மார்ச்,ஜூன், செப்டம்பர்

5

3

பெருமாள் முருகன்

ஜனவரி, செப்டம்பர், நவம்பர்,டிசம்பர்

4

4

சுப்ரபாரதி மணியன்

ஜனவரி, ஏப்ரல், ஆகஸ்டு

3

5

யுவன் சந்திரசேகர்

மார்ச், ஜூன், அக்டோபர்

3

6

வா.மு.கோமு

ஜனவரி, ஆகஸ்டு

2

7

அனுராதா ஆனந்த்

மே,டிசம்பர்

2

8

ஷான் கருப்பசாமி

பிப்ரவரி,மே

2

9

ஜி.கார்ல் மார்க்ஸ்

ஆகஸ்டு,டிசம்பர்

2

10

மால்கம்

மார்ச், அக்டோபர்

2

11

பூமா ஈஸ்வரமூர்த்தி

ஜனவரி,ஜூன்

2

12

அழகிய பெரியவன்

 நவம்பர்,டிசம்பர்,

2

13

வண்ணதாசன்

ஜனவரி

1

14

அ.கரீம்

ஜனவரி

1

15

ஜெயமோகன்

ஏப்ரல்

1

16

இரா.முருகவேள்

பிப்ரவரி

1

17

கரன் கார்க்கி

பிப்ரவரி,

1

18

கார்த்திக் பாலசுப்ரமணியன்

பிப்ரவரி

1

19

நர்சிம்

மார்ச்

1

20

வாசந்தி

மார்ச்

1

21

சித்துராஜ் பொன் ராஜ்

மார்ச்

1

22

வெற்பன்

ஏப்ரல்

1

23

சிவபாலன் இளங்கோ

ஏப்ரல்

1

24

அரிசங்கர்

ஏப்ரல்

1

25

வண்ணநிலவன்

ஜூன்

1

26

விஜயராவணன்

ஜூலை

1

27

இமையம்

ஜூலை

1

28

லோகேஷ் இரகுராமன்

ஜூலை

1

29

இந்திரா பார்த்தசாரதி

ஆகஸ்டு

1

30

அம்பை

நவம்பர்

1

31

பிரமிளா ப்ரதீபன்

டிசம்பர்

1

32

நஸிமா பர்வீன்

டிசம்பர்

1

 

காலச்சுவடு/ மாதந்தோறும் கதைகள்

மாதம்

 தலைப்பு

ஆசிரியர்

ஜனவரி /2

1,பாம்பு

வாசந்தி

 

2.டைகர்

பெருமாள் முருகன்

பிப்ரவரி/3

3. சுவை

மாஜிதா

 

4.தோற்ற மயக்கம்

பொ.கருணாகரமூர்த்தி

 

5.விடுதலை

ஜீவன் பென்னி

மார்ச்/1

6 அலைக்கும் ஸலாம்

மலேசியா ஸ்ரீகாந்தன்

 

ஏப்ரல்/1

7.உதிர்ந்தவன்

யுவன் சந்திரசேகர்

மே/1

8எதிரி

செங்கதிர்

ஜூன்/2

9உறுத்தல்

வண்ணநிலவன்

 

 

10 சத்திய சோதனை

அரவிந்தன்

ஜூலை/1

11.கை

ஹேமிகிருஷ்

 

ஆகஸ்டு/1

12மிருகம்

 

கார்த்திக் பாலசுப்ரமணியன்

செப்டம்பர்/1

13கடுவன்களின் இரண்டாம் கதை

மீரான் மைதீன்

அக்டோபர்/1

14ஆரெயில் நெடுங்கொடி

விஜயராவணன்

நவம்பர்/2

15 அகலாது அணையாது

சுஜா செல்லப்பன்

 

16 சுழல்

கோபால கிருஷ்ணன்

டிசம்பர்/3

17. வாசந்தி

வாசந்தி

 

18.சங்கடம்

அரவிந்தன்

 

19. கொம்பு

திருச்செந்தாழை

மொத்தம் – 19 கதைகள்

எண்

 எழுத்தாளர்

 கதைகள் வந்த மாதங்கள்

 எண்ணம்

1

வாசந்தி

ஜனவரி, டிசம்பர்

2

2

பெருமாள் முருகன்

ஜனவரி

1

3

மாஜிதா

பிப்ரவரி

1

4

பொ.கருணாகரமூர்த்தி

பிப்ரவரி

1

5

ஜீவன் பென்னி

பிப்ரவரி

1

6

மலேசியா ஸ்ரீகாந்தன்

மார்ச்

1

7

யுவன் சந்திரசேகர்

ஏப்ரல்

1

8

செங்கதிர்

மே

1

9

அரவிந்தன்

ஜூன்,டிசம்பர்

2

10

வண்ணநிலவன்

ஜூன்

1

11

ஹேமிகிருஷ்

ஜூலை

1

12

கார்த்திக் பாலசுப்ரமணியன்

ஆகஸ்டு

1

13

மீரான் மைதீன்

செப்டம்பர்

1

14

விஜயராவணன்

அக்டோபர்

1

15

சுஜா செல்லப்பன்

நவம்பர்

1

16

கோபால கிருஷ்ணன்

நவம்பர்

1

17

 திருச்செந்தாழை

 டிசம்பர்

1

 

 

 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி