ஆடும் நாற்காலிகள்



குறுநாவல் மூலம்: ஜெயகாந்தன்

நாடக ஆக்கம்: அ.ராமசாமி


காட்சி.1

 

     மேடை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முன்பகுதி வீட்டின் கீழ்தளம் பின்பகுதி வீட்டின் மொட்டை மாடி. மேடை முற்றமேடையாக -மூன்றுபக்கமும் பார்வையாளா்கள் அமரும்படி இருப்பது நல்லது. பெட்டிவடிவ மேடையாயினும் முன் சொன்னபடி பிரித்துக்கொள்ளலாம்.

 மேடையின் பின்பகுதியின் மையத்தில் குறிப்பிட்ட இடத்தில் விளக்கின் ஒளி. அந்த ஒளி மேஜை விளக்கின் ஒளியாகக் கூட இருக்கலாம். அந்த வெளிச்சத்தில் எழுதி முடித்த தாள்களை எடுத்து வாசிக்கிறார் ஒருவா்.

அந்தச் சின்ன பங்களா, தெருவிலிருக்கும் மற்ற வீடுகளுடன் கோபித்துக் கொண்டு ஒதுங்கி நிற்பது மாதிரிச் சற்று உள்ளடங்கித் தனித்திருந்தது. ரகசியங்களைத் தன்னுள் மறைத்துக் கொண்டிருக்கிற கள்ளன் மாதிரி….

    அந்த வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் எப்போதும் அடைக்கப்பட்டிருக்கின்றன. வீடு பூட்டியிருந்தாலும் உள்ளே ஆட்கள் இருப்பார்கள். வேலைக்காரா்கள் சமையற்காரக் கிழவி. இன்னும் அந்த வீட்டிற்குச் சொந்தக்காரியான அலங்கார வல்லியம்மாள் – ராவ்பகதுா் மகிழ்மாறன் பிள்ளையவா்களின் புதல்வி அவள் ஒரு சூதாடியோடு இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்ததின் அடையாளங்களான.

மிஸ்.எம்.ஜானகி, எம்.ஏ.,

எம். ஆடலாசன், பி.ஓ.எல்.,

மிஸ்.எம்.செல்லம். பி.ஏ.பி.டி.

    இவா்களோடு முத்துமாணிக்கமும் இருந்தான். அலங்காரவல்லியின் மூத்தமகன், இப்பொழுது இங்கு இல்லை. விரைவில் வருவான். ஆம் ஒருநாள் வரத்தான் செய்வான். அவன் வருகைக்காக அந்த ஒரு நாற்காலி ஆடாமல் இருக்கிறது. மற்ற நாற்காலிகள் ஆடிக்கொண்டிருக்கின்றன அவா்களைச் சுமந்தபடி….

    இப்பொழுது அவா்மீது விழுந்த வெளிச்சம் குறைகிறது. முன்பகுதியில் வெளிச்சம் பரவுகிறது.

    நடுவில் உயரம் குறைவான பெரிய வட்ட மேஜை. அதனைச் சுற்றி வரிசையாக ஐந்து ராக்சிங் சோ். நான்கு சோ்களில் முன்னா் சொன்ன நால்வரும் ஒரே அசைவில் தாளகதியில் ஆடிக் கொண்டிருக்கின்றனா். மேஜையின் மீது ஆங்கில தமிழ் வார, தினப் பத்திரிகைகள், ஒருபக்கத்தில் ரேடியோ, இன்னொரு புறம் டெலிபோன். யாரும் பேசவில்லை. செல்வம் கையில் நூல்கண்டும் பின்னல் ஊசியும். அம்மா கையில் பெரிய தடியான புத்தகம். ஜானகியிடம் வாரப்பத்திரிகை ஆடலரசன் ஒன்றுமில்லாமல் கூரையைப் பார்த்தபடி… கிர்…கிர்… என்ற சப்தம் மட்டும்.

   திரும்பவும் ஒளி, படிப்பவன் மீது படா்கிறது. முன்பகுதி இருட்டாகிறது, படிக்கும் சத்தம் அலங்கார வல்லியம்மாள் வெளியில் போகும்போதெல்லாம் இரும்புப் பெட்டியில் பொக்கிஷங்களை வைத்துப் பூட்டிச்செல்வது போல, தனது குழந்தைகளை வைத்துப் பூட்டிக்கொண்டுதான் செல்வான். அவா்கள் குழந்தைகளாக இருந்த போது தனது சூதாடிக் கணவனிடமிருந்து அவா்களைக் காப்பாற்றுவதற்காகக் கைக்கொண்ட பழக்கம் இன்னும் தொடா்கிறது. அப்படிப் பூட்டுவது சரியல்ல என்று இதுவரை அவா்கள் யாருமே கேட்டதில்லை. ஏன்….?

    பழக்கத்தால் படிந்துவிட்ட பணிவா? பாதுகாப்புத் தானே என்ற சமாதானமா? அம்மாவின் மனசு புண்பட்டு விடலாகாது என்ற பாசமா?    

                               தெரியாது, தெரியாது, தெரியாது!

ஆனால் அது அப்படித்தான் நடந்து வருகிறது. திரும்பவும் ஒளி குறைய அலங்கார வல்லியம்மாள் வீட்டின் வாசற்படியில் நின்று பார்த்தபடியே…..

அலங்       :  சின்னவனே… அடீ செல்வம்… அம்மா ஜானகி… (உள்ளிருந்து)

மூவரும்   :   வந்துட்டேங்க அம்மா.

அலங்        :   வாங்க நல்ல சகுனம்…

                       (அவா்கள் வருகிறார்கள்)

அலங்       :  ஜாக்கிரதையா போயிட்டு வாங்க… ஜாக்கிரதை.

                     (ஜானகியை மட்டும் இழுத்து முத்தமிட்டு             

அனுப்புகிறாள். ..  அவா்கள் மறையும்வரை நின்று  பார்க்கிறாள்.)

(வெளிச்சம் முன்பகுதியில் குறைய, பின்பகுதியில் குவிகிறது. படித்தவன் எழுதிக்கொண்டிருக்கிறான். சிகரெட் பற்றவைத்தபடியே யோசிக்கிறான். ஒளி குறைகிறது. முன்பகுதியில் வெளிச்சம், வீட்டின் சுவா்க்கடிகாரம் ஐந்து அடிக்கிறது. அலங்கார வல்லியம்மாள் வாசலில் வந்து நிற்கிறாள். செல்லம் முதலில் வருகிறாள். உள்ளே போகிறாள். டெலிபோன் மணி அடிக்கிறது. செல்லம் எடுக்கிறாள்.)

செல்லம்  : அம்மா… அண்ணா வர இன்னும் அரை மணிநேரம் ஆகுமாம்…

அலங்       : என்னவாம்.

செல்லம்  : கல்லூரியில் ஏதோ விழாவாம்.

அலங்       : ஜானகியே இன்னுங் காணலியே… அதோ வந்துவிட்டாள், அம்மா.

(இருவரும் உள்ளே போய்த் திரும்பும் பொழுது முகம் கழுவி வருகின்றனா். ஆடலரசனும் வந்துவிடுகிறான். மணி ஐந்தரை ஆகிறது.)

 நாற்காலியில் அமா்கின்றனா். சமையற்காரி. டீயை வைத்துவிட்டு யாரையும் பார்க்காமல் போய்விடுகிறாள். நாற்காலிகள் ஆடுகின்றன. கிர்….. கிர்… சத்தம் . யாரும் தேநீா் அருந்தவில்லை)

அலங்       :  முருகா! என்னப்பனே….

(சொல்லிவிட்டு கண்ணீா் விடுகிறாள்). ஆடலரசன் முகத்தை கைகளில் புதைத்துக் கொள்கிறார்)

ஜானகி  : அம்மா… என்னங்கம்மா… எதுக்குங்க அம்மா அழறீங்க?.... அழாதீங்க

                  அம்மா…

(அம்மாவின் தாடையைத் தூக்கிப் பிடித்துச் சொல்கிறாள் செல்லம் நூல்கண்டைப் போட்டுவிட்டு அம்மாவின் நாலடியில். அவள் கண்களிலும் கண்ணீா்).

அலங்  :    என் கண்ணுங்களா…. அழாதீங்க ராஜா! அம்மா..

                    ஒண்ணுமில்ல கண்ணு…..மனசு சரியா இல்லேம்மா… நீங்க அழுதா

                    என்னால தாங்க முடியாது.. என் செல்லம் தங்கம்….

(அழுகை மாறி… சிறிது புன்னகை வருகிறது  

செல்ல   : ஏனம்மா.. இப்படி. தீடீரென்று நீங்க அழ ஆரம்பிச்சா.

                    குழந்தைங்க நாங்க என்ன செய்வோம்.

 அலங் :     பழச நெனச்சாலும்…. உலக நடப்ப நெனச்சாலும் எனக்குப்

                    பயமாத்தான் இருக்கு… அழறதத் தவிர வேற எனக்குத் தோணல

உங்க தாத்தா ராவ்பகதூா் மகிழ்மாறன் பிள்ளை பெரிய தமிழ்ப்புலவர்… தாசில்தார். ஆசாரம், தெய்வபக்தி.. ரொம்ப உயா்ந்த குடும்பம்.. உங்க அப்பா (அமைதி.. வெறித்த பார்வையுடன்) சூதாடி அவரோட வாழ்நத அந்த இருபத்தஞ்சு வருஷம். நரகம் ஆனா அந்த நரக்திலதான் நீங்க கிடைச்சீங்க சிப்பியில முத்து வௌயறமாதிரி.. தாமரை சேத்தில முளைக்கிறமாதிரி… ஆனா… அந்த சிப்பியின் வாடை.. சேற்றின் நாற்றம்.. ஓ.. நரகம் (திரும்பவும் அழுதுவிடுவாள் போல் தோன்றுகிறது ஜானகி அவளின் தலையை வாருகிறாள்) நாமெல்லாம் கவரிமான் மாதிரி வாழறவங்க. இப்ப இருக்கிறவங்க நம்மளப் பாத்தா சிரிப்பாங்க. ஆமா. அவங்களைச் சொல்லிக் குத்தமில்ல….அவங்க வழி அது. இது நம்ம வழி.. தனிவழி… ஒத்தத் தனி மனுஷியா ஒங்க நாலுபேரையும் வச்சிக்கிட்டு என்ன பாடு பட்டிருக்கேன் தெரியுமா. அந்த முருகனுக்குத் தான் தெரியும்.

                    (சொல்லிக்கொண்டு கண்கலங்குகிறாள்)

ஜானகி   :  அம்மா எதுக்கு இதல்லாம்…திரும்பத் திரும்ப இதையே பேசி.

                     மனசப் புண்படுத்திக்கணும்.

செல்லம்  : ஆமா. இவை பெரிய்ய மனுசி. அம்மாவுக்கு யோசனை சொல்ல

                     வந்துட்டா.

ஆடலரச  : (தன் நிலையில் அசைவற்று இருந்தவன்)  முருகா… முருகா…

(கண்ணை மூடியபடி சொல்லுகிறான். மற்றவா்கள் அந்த வார்த்தையில் கட்டுண்டவா்கள் போல் சொல்கின்றனா். கண்ணை மூடியபடி அலங்கார வல்லியம்மாள், முருகனைப் பற்றிய ஒருபாடலின் முதல் அடியைப் பாட அவா்கள் பின் தொடா்கின்றனா்)

பாடல் ஒலி மெதுவாகக் குறைய.. ஒளியும் குறைகிறது. மேடையின் மேல்பகுதியில் எழுதுகிறவன் படிக்கத் தொடங்குகிறான்.)

இது அந்த வீட்டின் மாலைப் பொழுது இதே போலும் ..வேறாகவும் நாட்களை அவா்கள் நகா்த்துகிறார்கள். அமைதியும், அன்பும் நிலவும் தீடிரென்று சச்சரவும் ஏற்படும். சிறிது நேரத்தில் திரும்பவும் அமைதியும் அன்பும்.

(திரும்பும் முன்பகுதியில் வெளிச்சம் நாற்காலிகள் ஆடியபடி இருக்கின்றன. கிர்… கிர்.. சத்தம் ஆடாமல் இருக்கின்ற நாற்காலியின் மீது ஒளி பாய்கிறது மயங்கிய வெளிச்சத்திலிருந்து ஜானகியின் குரல்)

ஜானகி   : பெரியண்ணா எப்பம்மா வருவாரு?.

(கேட்டபடிய அம்மாவுடன் அருகில் வர அவளை அணைத்தபடியே)

அலங்  :  முருகன் அருளாலே சீக்கிரம் வந்துடுவானம்மா. அவனுக்கு ஒரு     

குறையுமில்லே. ஒரு நோயுமில்லே நேத்துகூட நான் போனப்ப உன்னைப்பத்தி எவ்வளவோ விசாரிச்சானே… (அமைதி பார்வையை மேல்விதானத்தில் பதித்து) அவன் வேதாந்தி அம்மா. உங்க தாத்தா மாதிரி அவன் ஒரு ஞானி அம்மா. அவன் எங்கே இருந்தா என்ன? அவன் இருக்கிற இடம் கோயிலாயிடாதோ.

(சொல்லிக் கொண்டே ஒரு பாட்டிலிலிருந்து மாத்திரைகளை எடுத்து ஆளுக்கு ஒன்றாகத் தருகிறாள். மற்ற இருவரும் சாப்பிட்டு விட, ஜானகி மட்டும் சிணுக்கத்துடன்)

ஜானகி  :  என்னங்க அம்மா, இது எதுக்கு அம்மா.

அலங்     : ம்… என்ன வெளையாடறியா? எதுக்கு? என்னத்துக்குன்னு

எனக்குத் தெரியும். பகலெல்லாம் போயி ஆபிஸ்லே உழைச்சி அலுத்து வா்ர உடம்பு கொஞ்சம் நிம்மதியா ரெஸ்ட் எடுக்க வேணாமா? அதுக்குத்தான் இது..

(ஜானகி வாங்கிச் சாப்பிடுகிறாள். மற்ற இருவரும் நாற்காலியில் ஆடத் தொடங்கி விட்டனா். அலங்காரம் உள்ளே சென்று விடுகிறாள். ஜானகியும் ஆடத் தொடங்குகிறாள். மூவரும் தூங்கத் தொடங்குகின்றனா். மூன்று நாற்காலிகள் நின்றுவிட்டன. தாமதமாக வந்த அலங்காரம் இன்னும் தூங்கவில்லை. அவள் நாற்காலி மட்டும் ஆடிக்கொண்டே இருக்கிறது. இருள் வந்தபிறகும் கிர்.. கிர்.. சத்தம் மட்டும் கேட்கிறது)

(திரும்பவும் எழுதுபவன் மேல் வெளிச்சம் அவன் எழுதவும் இல்லை. படிக்கவும் இல்லை. பார்வையாளா்களைப் பார்த்துக் கேட்கிறான்)

 அந்த அம்மாள் ஏன் இப்படி ஆடுகிறாள்?

 அது என்ன மாத்திரை?

 பெரியண்ணா எங்கே? அவருக்கு என்ன நோ்ந்துள்ளது.

 இந்தக் கேள்விகளை இந்தப் பிள்ளைகள் அந்த அம்மாளிடம் ஏன்   

 கேட்கவில்லை.

                  அந்தப் பிள்ளைகளுக்கு இத்தனை வயதுக்கு மேலும் தன்னைத்தவிர

  ஒரு துணையை தாம்பத்திய உறவை ஏற்படுத்த வேண்டும் என்று   

  அவா்களுக்கு ஏன் தோன்றவில்லை.

அவா்கள் சிந்திப்பதில்லையா?

அல்லது

அலங்கார வல்லியம்மாள் சிந்திக்கவிடவில்லையா?

 அந்தக் கிர்… கிர்… சத்தம் என்ன

 சொல்கிறது.. தெரியாது தெரியாது தெரியாது என்று  

 சொல்கிறதோ..                     

II

            

காலைநேர அவசரம். ஆடலரசனும், செல்லமும் இங்கும் அங்கும் நடமாடுகின்றனா். உள்நோக்கி

 அலங்   : என்ன ஜானகி, நேரமாகலையா.

ஜானகி :  இன்னக்கி ஆபிஸ் போகல அம்மா. லீவு நிறைய இருக்கு வயிறும்

                   சரியில்ல இன்னக்கி லீவு போட்டுறேன்.  (குரல் மட்டும் வருகிறது)

அலங்     : சரி உன்னிஷ்டம்.  நானும் வெளியே போயிட்டு வா்ரேன்.

                   திரும்பவரச் சாயந்தரம் ஆகும் . வெளியே பூட்டிட்டு சாவியைக்

                  குடுக்கிறெ வாங்கிக்க

(ஜன்னல் வழியே சாவியை வாங்கி மேஜையில் வைத்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்து மெல்ல ஆடிக் கொண்டிருக்கிறாள்… வெளியே இருந்து ஒரு சினிமாப்பாடல்..)

என்ன சுகம், என்ன சுகம்

உன்னிடம் நான் கண்ட சுகம்.

(ஜானகி எழுந்து சுற்றும் முற்றும் பார்த்து தனியே இருப்பதை உணா்கிறாள். ஒரு சிலிர்ப்பு)

ஜானகி  :  (முணுகலாக) அம்மா இல்லையே அம்மா தான் இல்லையே.

(ரேடியோவைத் திருக அந்தப்பாடலின் தொடா்ச்சி…. அப்படியே விட்டுவிட்டு நாற்காலியில் அமா்கிறாள். பாடலின் தாளகதிக்கேற்ப ஆடுகிறாள்… உடம்பில் ஒருவித சிலிர்ப்பு… பாடலின் அா்த்தங்கள் புரிந்த விதத்தில் கண்களில் ஒருவிதமான கண்ணீா். ஆனால் உதட்டில் சிரிப்பு….பலத்த சிரிப்பு)

பாடல் முடிந்து ரேடியோவிலிருந்து அடுத்ததாக என்ற அறிவிப்பு.. துள்ளி எழுந்த ஜானகி ரேடியோவை நிறுத்திவிட்டு…)

ஜானகி   : வல்கா்.   த்தூ… என்னசுகம்..

                   உன்னிடம் கண்ட சுகம்.

தேன்கனிக்கேட்டை

 சொர்க்கம்….

 சீ… என்ன அநாகரிகம்…

(ஜன்னல்களையும் மூடிவிட்டு நாற்காலியில் அமா்ந்து ஒரு வாரஇதழைப் புரட்டுகிறாள். ஒரு பக்கத்தைப் புரட்டிப் படித்தவுடன் மனசுக்குள் சிரிப்பு)

ஜானகி   : வ் மிஸ்ச்சுவஸ். மென் ஆா் வெரி மிஸ்ச்சுவஸ். எஸ். ஆல்

                    ஆப் தெம்…

(சிறிதுநேரம் யோசனை எழுந்து அவளது கைப்பையைத் திறந்து அதிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்துப் படிக்கிறாள்)

ஏ.பி. சுந்தரம் போட்டோ கிராபா்ஸ் (சொல்லிக் கொண்டு நடக்கிறாள். பிறகு டெலிபோன் அருகே சென்று ரிசிவரை எடுத்து இரண்டு நம்பரைச் சுழட்டி, பின் தயங்கி வைக்கிறாள்.. தனக்குத்தானே)

ஜானகி  : வாட் இஸ் ராங் இன் இட்? என்ன தப்பு அதிலே..? சுந்தரம் என்

 காலேஜ்மேட் வெரி நைஸ் பெல்லோ …நான் அன்னக்கி

                  அவனைப் பார்த்ததா அம்மாகிட்டே கூடச் சொன்னேனே.

அம்மாவே ஒண்ணும் சொல்லலியே. ஒய் நாட் ஐ இன்வைட்

ஹிம் ஒய்நாட்?

(டயல் செய்கிறாள்.. ஆவலோடு ரீசிவரைக் காதில் வைத்தபடி.. வயா்வையைத் துடைத்தபடி… உடம்பில் ஏற்பட்ட சிலிர்ப்பை உணா்ந்தபடி)

ஜானகி  : சுந்தரம் தான் பேசுறீங்களா? நான் ஜானகி.

(மறுபுறம் குரல்… அமைதி)

வீட்டுக்கு வா்ரதாச் சொன்னீங்களே!  மறந்துட்டீங்களா? ஒய் நாட் யூ ஜாய்ன் அஸ். ஃபார் எடீ…. திஸ் ஈவ்னிங் ?

(மறுபுறம் குரல் … அமைதி)

தெரியாட்டா என்ன? நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என் மதா் ஸிஸ்டா் அண்ட் பிரதா். எஸ்.எஸ். ஐ ஆம் தி லாஸ்ட்.

ஒண்ணு  செய்யலாமே. இப்போ ஒங்களுக்கு வேலை ஒண்ணும் இல்லையே. இப்போ வீட்டிலெ  யாருமே இல்லை…  நான் மட்டுந்தான் போர் அடிச்சிக்கிட்டு ஒக்காந்திருக்கேன்.. வா்ரீங்களா

(மறுபுறம் குரல்)

ஆமா இப்பவே யூ நோ மை அட்ரஸ் அன்னக்கிக் கொடுத்தேனே நெம்பா் , பிளேகிரவுண்டுக்கு ஐஸ்ட் ஆப்போஸிட், ஒ. கே... தேங்க் யூ.. நான் காத்துக்கிட்டு இருக்கேன் ஏமாத்திடக் கூடாது.

(ரீஸீவரை வைத்துவிட்டு ஹாலை ஒழுங்குபடுத்துகிறாள். தீடீரென ஒரு பதற்றம் ..சாவியைக் கையில் எடுத்துக்கொண்டு உலவுகிறாள்.)

ஜானகி  : நான் ஒரு இடியட்! அவரைப் போன் பண்ணி  வரச்சொல்லிட்டேன்  

வீடு வெளியில் பூட்டிக் கிடக்கு..  யாரும் இல்லையின்னு திரும்பிப் போயிட்டா்? ஜன்னலைத் திறந்து சாவியெக் குடுத்துத் திறக்கச் சொல்லலாம். ஆனா அவா் என்ன நினைப்பார்? என்ன நெனைப்பார்? எங்கம்மா எப்பவும் அப்படித்தான் பாதுகாப்புக்காக வைச்சுப் பூட்டிட்டுப் போவாங்கன்னு சொல்லிட வேண்டியது தானே! என்மேலே சந்தேகப்பட்டு அம்மா பூட்டிக்கிட்டுப் போறாங்கன்னு நெனச்சிக்குவாரோ?.. ஐயோ புத்திசாலியே! அப்படீன்னா என்கிட்டேயே அந்தச் சாவியெக் குடுத்திட்டுப் போவாங்களா .  அம்மா? நீங்க தான் இப்ப உள்ளே வரமுடியுமா? என்று கேட்க வேண்டியது தான்.

                 (கார்ச்சத்தம் காரின் ஹாரன் ஒலி. ஜானகி ஜன்னலைத் திறந்து)

ஜானகி  : மிஸ்டா் சுந்தரம்  கமான்.. இந்தாங்க சாவி .. வீடு பூட்டி இருக்கேன்னு

                   திகைச்சுட்டீங்களா? ஓப்பன் இட்.. பிளீஸ்… கம் இன்...

(அவன் நாகரிகமான உடையில், வந்தவுடன் வீட்டை ஒரு சுற்றுப் பார்க்கிறான். ஒரு நாற்காலியில் உட்காரப் போனபோது)

ஜானகி  : பிளீஸ், பிளீஸ்.. இதில் உட்காருங்க .. இதில்... தட், இஸ் எ. ராக்கிங் சோ்…

ஜானகி  : திஸ் இஸ் ஆல்ஸோ ராக்கிங் சோ்…

ஜானகி  : ஐ ஆம் ஸாரி .. அது…  எங்க..  பெரியண்ணாவோடது.  ஸோ ஜென்ரலி

                   -  நாங்க யாரும் அதில உட்கார்றது இல்லே…  ஹி…. ஹி….

சுந்தரம்   : தாங்க் யூ!....  . இந்த டைட்ஸோட அதில உட்

                     கார்றதும் கஷ்டம் தான்…    நான் அந்த நாற்காலிகள்லே ஒண்ணை   

                     எடுத்துப் போட்டுக்கலாமா?

(அவன் எடுக்கச் செல்கிறான், அதற்குள்)

ஜானகி : இருங்க நான் கொண்டு வர்றேன் (அவள் கொண்டுவர

         அதில் அமர்கிறான் ஜானகி அவனைப் பார்த்துச் சிரிக்க, 

         அவனுக்குத் தர்மசங்கடமான உணர்வு)

 தெரியுமா உங்களுக்கு? நான் ஏன் உங்களை அழைத்தேன்  

 என்று தெரியுமா?

         (அவன் தோளை உயர்த்தி உதட்டைப் பிதுக்கி தெரியாது   

         என்பதை உணர்த்துகிறான்)

ஜானகி : நீங்கள் ஒரு போட்டோகிராபர்..  இல்லையா?

சுந்தரம் : எஸ்..

ஜானகி : நான் சில போட்டோகிராப்களை உங்களிடம் காட்ட வேண்டும்.. .   

அதற்காகத்தான் உங்களை அழைத்தேன். வெயிட் எமினிட். (சொல்லிவிட்டு உள்ளே போகிறாள். சுந்தரம் பாக்கெட்டிலிருந்து சிகரெட் சேஸைத் திறந்து எடுத்து, நெருப்புப்பெட்டி, ஆஸ்ட்ரே இல்லாதது கண்டு திரும்பவும் உள்ளே வைத்து விடுகிறான். அவள் உள்ளேயிருந்து நோட்டுப் புத்தகம் ஒன்றுடன் வருகிறாள். அதிலிருந்து இரண்டு போட்டோக்களை எடுத்து மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

சுந்தரம் : அம்மா எங்கே போயிருக்காங்க?

ஜானகி : (ஒருவித அதிர்ச்சியுடன்) டிட் யூ ஸே சம்திங் அபௌட் மை

         மதர்?

சுந்தரம் : ஒண்ணுமில்லே அம்மா எங்கே போயிருக்காங்கண்ணு

          கேட்டேன்.

ஜானகி : (கலவரத்துடன்) ஒய்?.. ஏன்?.. என்னத்துக்கு? எதுக்கு என்

         அம்மாவைப் பத்திக் கேக்கறீங்க?..

சுந்தரம் : ஹி... ஹி... சும்மா தான் ஜஸ்ட்... ஒரு இன்டர்மேஷன் - நத்திங்   

         பா்ட்டிகுலர்... (திணறலுடன்)

ஜானகி : மிஸ்டர் சுந்தரம் - இந்த விஷயத்திலே வெளையாடாதீங்க. எங்க

  வீட்டிலே என் அண்ணன், அக்கா எல்லோரும் இருக்கும்போது     

  நீங்க அம்மாவைப்பத்தி மட்டும் கேட்டீங்களே. என்ன   

  காரணம்? பிளீஸ்…. மறைக்காம சொல்லுங்க.

சுந்தரம் : ஆம் ஸாரி. நான் எதையும் மீன் பண்ணிக் கேக்கலே

 ஜானகி. பிளீஸ் என்னை நம்புங்க. நான் மத்தவங்க விஷயத்திலே தலையிடறதே பிடிக்காதவன். நன் கேட்டது தப்புன்னா மன்னிச்சுடுங்க. உள்நோக்கம் எதுவுமில்லாமதான் நான் கேட்கிறேன்.

ஜானகி : (கலங்கிய கண்களுடன்) ஆம் ஸாரி, சுந்தரம் பிளீஸ்

         என்னைப் பாருங்க.

(அவனருகில் சென்று தொட்டுத் திருப்புகிறாள். அவள் உணர்ச்சி வசப்பட்டு நிற்பதைக் கண்டு)

சுந்தரம் : ஜானகி, வாட் இஸ் திஸ்?

ஜானகி : ம் பின்னே என்ன? நீங்க கேட்டது தப்புன்னா, நான்

சொன்னேன்? கேக்கக் கூடாதுன்னா சொன்னேன்? நீங்க அதுக்காக எவ்வளவு புண்பட்டு மன்னிச்சுக்குங்க, பிறர் விஷயத்திலே நான் தலையிடறதில்லேன்னு என்னவோ மடமடன்னு பேசிட்டீங்க.

சுந்தரம் : சரி எங்கே, அந்தப் போட்டோகிராப்ஸ் - என்கிட்டே காட்டனும்னு

          சொன்னீங்களே, எங்கே?

ஜானகி : நோ! தரமாட்டேன். நீங்க கேட்டீங்களே முதல்லே,

அம்மாவைப்பத்தி திரும்பவும் கேட்டாத்தான் தருவேன். திரும்ப நீங்க கேட்டாத்தான் உங்களுக்கு கோவமில்லைன்னு நான் நம்புவேன்….. ம்….கேளுங்க கேளுங்களேன்!.

(அழுதுவிடுவாள் போல் சொல்கிறாள்)

சுந்தரம் : அம்மா எங்கே போயிருக்காங்க? (சும்மா கேட்கும் பாவனை)

ஜானகி : (திருப்தியுடன்) அம்மா கோயிலுக்குப் போயிருக்காங்க

ஆறுமணிக்கு வருவாங்க. போதுமா? (சந்தோஷத்துடன்) எஸ். ரியலி…. கோயிலுக்குத் தான் போயிருக்காங்க..

(எதையோ எடுக்கச் சென்றவள். திரும்பவந்து)

தயவு செஞ்சு இன்னக்கி நீங்க என்னை எதுவுமே கேள்வியே கேக்கக் கூடாது. நான் சொல்றதெ மட்டும் கேட்டுக்கணும் பிளீஸ்! ஒரு காரணமாத்தான் நான் இப்படிக் கேட்டுக்கிறேன். தப்பா நெனக்காதீங்க... அப்புறம் போகப்போக நான் எல்லாமே சொல்லுவேன். உங்ககிட்டே எதையுமே மறைக்க எனக்கு விருப்பமில்லே... ஆனா... நீங்களா எந்தக் கேள்வியும் என்னைக் கேட்கக் கூடாது என்ன? சரிதானா? ம்.. சரிதானா?

சுந்தரம் : ரொம்ப சரி, இன்னக்கி என்ன? என்னிக்குமே நான் எந்தக்

          கேள்வியும் உங்கிட்டே கேட்காம இருக்கேன். போதுமா?

ஜானகி :  பாத்தீங்களா, பாத்தீங்களா... நீங்க கோவிச்சுக்கிட்டீங்க - நான்

          என்னைக்குமே நீங்க எதுவுமே கேக்கக்கூடாதுன்னா

          சொன்னேன்?

சுந்தரம் : சரி… சரி…. இன்னக்கி மட்டும் தான். ஜானகி  நானும்

          உங்ககிட்டே ஒண்ணு கேட்டுக்கலாமா?

ஜானகி : ம்.. கேளுங்களேன்

சுந்தரம் : நான் எதுக்காகவும் கோவச்சுக்கமாட்டேன். உங்களைத் தப்பா

     நெனச்சுக்கக மாட்டேன். நான் தப்பா நெனச்சுக் கிட்டதாகவோ,   

     கோவச்சுக்கிட்டதாகவோ நீங்க நெனச்சிக்கக் கூடாது. . கே!

ஜானகி : . கே. அப்பா! என்ன சாமர்த்தியம்! சரி. நம்ப போட்டோ

         விஷயத்தைத் தொடரலாமா?

சுந்தரம் : ... எஸ்

ஜானகி : (போட்டோ ஒன்றைக் கொடுத்து) முதல்ல இதைப் பாருங்க.

சுந்தரம் : அடெ... இது நம்ப ராமநாதன் இல்லே?

ஜானகி : ம்.. நோ மோர் க்வெஸ்சன்ஸ்….

சுந்தரம் : ஆம் ஸாரி…. நானும் இவனும் டிகிரியில கிளாஸ்மேட்னு

          சொல்ல வந்தேன்.

ஜானகி : எனக்குத் தெரியாதாக்கும். நானும் அங்கே தானே படிச்சேன்.

என் குருப் வேறே. நீங்கதான் டிகிரியோட டிஸ்கன்டின்யூ பண்ணிட்டீங்க. அவர் எம். . வரைக்கும் எனக்கு காலேஜ்மேட், கிளாஸ்மேட் ஆச்சே…. அது இருக்கட்டும். இந்தப் போட்டோவைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?       

சுந்தரம் : எஸ், வெல் டேக்கன் ஆஸ் போட்டோகிராபர். கேன் ஸே

          திஸ் மச்!

(ஜானகி அவன் சாமர்த்தியத்தைப் பாராட்டும் விதமாக உதட்டைக் கடித்து, அடுத்த போட்டேவைத் தருகிறாள் பார்த்துவிட்டுத் தருகிறான்)

ஜானகி : நோ கமென்ட்ஸ்

சுந்தரம்: ஈக்குவலி குட்.

ஜானகி : சுந்தரம், ஆனாலும் நீங்க ரொம்ப கிளவர் - டூமச் டீப் பெர்சன்  -

                    ராதர் கன்னிங்!

         (அவன் காதைத் திருகுகிறாள்)

சுந்தரம் : (திகைப்பு கலந்த அதிர்ச்சியில் பெண்ணின் ஸ்பரிசத்தை

          உணர்கிறான் ஜானகி ஒரு பெருமூச்சுடன் சிரித்துக் கொண்டு).

ஜானகி : உங்களுக்குப் புரியுதா. நாம ரெண்டு பேருமே நடிக்கிறோம்.

         ஆமா.. சும்மா ஒரு ஆக்ட்! எல்லாம் ஹமபக்! (சிரித்துக்கொண்டு)

நான் அந்தப் போட்டோக்களை போட்டோகிராபர் எப்படி எடுத்திருக்கான்னு அபிப்பிராயம் கேட்கத் தான் உங்களைக் கூப்பிட்டேன்னு நீங்க நெஜமாவே நம்புறீங்களா? நாம நம்ப ரெண்டு பேரையும் முட்டாள்களாக்குகிற விளையாட்டுக்கு ஒரு முடிவு கட்டிட்டு, விஷயத்துக்கு வருவோம். டு யூ நோ திஸ் பெர்சன்ஸ்? வாட் இஸ் யுவர் ஒப்பினியன் ஆன் தெர். தெரிஞ்சதத் தயவுசெய்து ஒளிக்காமல் சொல்ல வேண்டும்.

சுந்தரம் : ஜானகி நீங்கள் எவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசுறீங்க

தெரியுமா..? நம்மோடு படிச்சவங்கிற நெனப்பு மாறி ஒரு ஆபிஸர் முன்னாலே இருக்கோம்கிற மரியாதை உணர்ச்சிதான் எனக்கு இப்போ ஏற்படுது.

ஜானகி : ஏய்... டோண்ட் எஸ்கேப் ப்ரம் அவர் டாக்.. (எச்சரிக்கைக்காக

         விரலைக் காட்டுகிறாள்)

சுந்தரம் : நோ..... நோ.. நாட் அட் ஆல்! இதிலே தப்பிச்சு ஓட எனக்கென்ன

இருக்கு? தப்பிச்சு ஓடினவன்களிலேயே ஒருத்தனைத்தான் எனக்குத் தெரியும். தெரியும்னா என்ன? தெரியும்னு சொல்லிக்கிற அளவுக்குத் தெரியும். என்னைவிட உங்களுக்கு அதிகமாத் தெரியும். ஆனால் அந்த ராமநாதன் அப்பவே பெரிய ரோமியோ.

ஜானகி : (கடுமையுடன்) ரோமியோ... எல்லாம் காலேஜ்லே டீஸண்டான

கேர்ல் ஸ்டேனஸ் கிடைச்சா ரோமியோ மாதிரி வேஷம்  போடுவானுங்க. யூ… நோ…. கடைசிலே அந்த ராமநாதன் கதை என்னாச்சு தெரியுமா? சை! ஒரு சரியான கண்ட்ரி புரூட். சாமந்திப் பூ… இலுப்ப எண்ணெய். எலிவால் சடைதான் அவனுக்கு ஜீலியட்டாக வந்து வாச்சுது. எல்லாம் பணத்துக்காக முறையாம். பொண்ணாம் மொதல்ல எங்கே போச்சு அந்தப் புத்தி? ஒரு முழத்துக்கு எனக்கு லெட்டர் எழுதினான். லவ் லெட்டர்.. வில் Nஷா தட்டு யூ ஸம் டைம். இதுக்கு என்ன பேரு? பணத்துக்காகப் போய் பண்ணிக்கிட்டானே அதுக்கு என்ன அர்த்தம்? அதுக்காகத்தான் ஆம்பிளை பிராஸ்டிட் யூஷன்னு பேரு. இட்ஸ் ஆல் ரைட்.

(சுந்தரம் யோசனையிலிருக்கிறான் அருகில் வந்து ஜானகி)

ஜானகி : மிஸ்டர் சுந்தரம். இதைப்பத்தியெல்லாம் நான் இதுவரைக்கும்

யார்கிட்டேயும் பேசினதில்லே. இதைப் பத்தியெல்லாம் பேசறதுக்கு எனக்கு யாருமில்லே. எங்க அம்மா - எங்க அம்மா... நாங்களெல்லாம் அவங்ககிட்டே எதையுமே ஒளிக்காம மறைக்காம நடக்கிறதையெல்லாம் தெனம் தெனம் வந்து உண்மையா ஒப்பிக்கிறதாக நெனச்சிக்கிட்டு இருக்காங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் ரொம்ப விஷயத்தை அவங்ககிட்டேயிருந்து மறைச்சிருக்கேன். ஆனால் ஒண்ணு> நான் ஒரு தப்பும் செஞ்சதில்லே பிலீவ்மீ! சுந்தரம் நான் ஒரு தப்பும் செஞ்சதே இல்லை. ஆனால் இந்த அளவு நடந்ததைக்கூட எங்க அம்மா தாங்கமாட்டாங்க... அப்படியே அவமானத்தாலே நொறுங்கிப் போயிடுவாங்க. அதனால்தான் நான் இதை மறைச்சு வச்சிருக்கேன். பாவம் அம்மா! நான் அவங்களுக்கு எவ்வளவு பெரிய துரோகம் செய்துட்டேன்! இப்பவும் என்னைக் குழந்தையா நினைச்சு நம்புறாங்க. அம்மா.. ஷீ இஸ் கிரேட் ஸோல் அம்மா.

(இரண்டு கைகளிலும் முகம் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழ ஆரம்பிக்கிறாள். அவன் ஆறுதல் சொல்பவன் போல் அருகில் வந்து> ஆனால் அப்படியே நின்று விடுகிறான்)

ஜானகி : ஆம் ஸாரி……. எனக்கு அம்மாதான் உலகம். அம்மாதான்                    

தெய்வம்.. அவங்க மனசு கஷ்டப்படாமலிருந்தா அது ஒண்ணு போதும். வாழ்க்கையிலே வேறெ ஒண்ணுமே வேண்டாம். யூ மஸ்ட் மீட் ஹெர். எங்களை வளர்த்து ஆளாக்கறதுக்காக…. ! என்ன பாடுபட்டிருக்காங்க. ஒரு சந்தர்ப்பத்திலே உங்களுக்கு அதெல்லாம் விவரமாச் சொல்றேன்.

(புழுக்கத்தை உணர்கிறாள்)

இங்கே ரொம்ப புழுக்கமா இல்லே. மாடிக்குப் போகலாமா?

(கதவைச் சாத்தச் சென்றவள், சாத்தும் முன்)

நீங்க மொதல்லே மேலே போங்க

(அவன் மேலே போகிறான். கதவை மூடுகிறாள் படியருகே வந்து, மேல்நோக்கி)

ஜானகி : nஷல் பிரிங் யு கப் ஆப் டீ..?

சுந்தரம் : (மேலிருந்து) வோண்ட் மைண்ட்.

(சுந்தரம் அருகிலிருக்கும் ப்ளே கிரவுண்டைப் பார்க்கிறான். அங்கிருந்து பந்தை அடிக்கும் சத்தம் வருகிறது. தட்டில் கப் அண்ட் ஸாஸரில் டீ எடுத்து வருகிறாள். ஜானகி சுந்தரம் அதை வாங்கி வைக்கிறான். ஆனால் அவனது பார்வை மைதானத்திக்  அவள் பார்வையும் சேர்கிறது. மைதானத்தை ரசித்த வாறே, டீயை அருந்துகின்றனா். தீடீரென்று டீ கப்பை வைத்துவிட்டு)

ஜானகி : எஸ்... லைக்ட் ஹிம்... ஏன் நான் அவரை லவ் பண்ணினேன்னு    

சொல்லலாம் லவ் ங் கறதுக்கு என்ன அர்த்தம்னு நீங்க நெனக்கறீங்கன்னு எனக்குத் தெரியாது. நான் நெனக்கிற அர்த்தப்படி அவரைக் காதலிச்சேன். மிஸ்டர் சுந்தரம் காதல்ங்கிறதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க! ஒரு இண்டலக்சுவல் லெவ்லே நான் கேக்கிறேன். அதுபத்தின சாதாரண அர்த்தம் யாருக்குத்தான் தெரியாது... டோண்ட் மீன் தட்.

சுந்தரம் : அப்படியா? எனக்கு அதோட சாதாரண அர்த்தம் தானே

         தெரியும் காதல்னா...

ஜானகி : பிளீஸ்…. டோண்ட்! போதுமே. நான் ஒண்ணும்

         அதைக்கேக்கல்லே. ஹவ் மிஸ்ச்சுவஸ்! மென் ஆர் மிஸ்ச்சுவஸ்...

         எவ்வரி ஒன் ஆப் தெம்!

சுந்தரம் : நான் குறும்பாகவோ குத்தலாகவோ அப்படிச் சொல்லலை.

எனக்கு அதன் சாதாரண அர்த்தம் தான் தெரியும் இண்டலச்சுவலா, அசாதாரணமா என்ன அர்த்தம்னு நீங்க சொன்னா நான் கேட்டுக்கிறேன்.

(யோசனை விளக்குவதற்கான முஸ்தீபுகளுடன்)

ஜானகி : காதல்ங்றது செக்ஸ் இல்லே. காதல் உயர்வானது,

தெய்வீகமானது. செக்ஸ் அசிங்கமானது. மிருகத்தனமானது. உடம்பின்மேல் தான் காதல்னா எல்லாருமே எல்லாரையுமே காதலிக்க முடியுமே. உடலை நோய் பிடிக்கிறமாதிரி, உடல் நஞ்சி போறமாதிரி உடல் அழிஞ்சி போகிறமாதிரி அந்தக் காதலையும் நோய் பிடிக்கும். உடம்பு மாதிரியே அதுவும் நஞ்சிபோய் அழிஞ்சிபோகும். அலசி ஆராய்ஞ்சு, பிரிச்சு, திறந்து பர்க்கிறதுன்னு ஆரம்பிச்சா ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க உடம்பையே நேசிக்க முடியாது. அப்படி இருக்கும் போது, இன்னொரு உடம்பின் மேலே வர்ரதுக்கு காதல்ங்கற புனிதமான வார்த்தையை உபயோகிக்கலாமா? அதுக்குப் போதான் இன், பாக்சுவே~ன் - சபலம்!

(சுந்தரம் தலையைச் சொறிந்து கொள்ளுகிறான்)

அந்த ரோமியோ ராமநாதன் என்மேலே வச்சிருந்தது காதல் இல்லே, சபலம். இந்த உடம்பின் மேலே தான் அவனுக்கு விருப்பம். ஆனா அதை மறைச்சான் நாடகமாடினான். என்மேலே கவிதை எழுதினான். நாணும் அதை நம்பிட்டேன் இரண்டு வருசம் மணிக்கணக்கா தனிமையில் உட்கார்ந்து பேசுவோம்.

அதையெல்லாம் நெனச்சாவே பயமாயிருக்கு.. இன்னி வரைக்கும் நான் யார்கிட்டேயும் சொன்னதேயில்லை. இந்த வெட்கக்கேட்டை ஏனோ தெரியலை... மிஸ்டர் சுந்தரம். உங்கிட்டெ இதெல்லாம் சொல்லலாம்னு ஒரு நம்பிக்கை சுந்தரம் ஸீ என் கையைத் தொட்டுப் பாருங்களேன். எப்படிச் சில்லிட்டுப் போயிடுச்சி பாத்;தீங்களா. என் உடம்பே நடுங்குது

(அவன் கைகளைப் பிடித்து தன்கைகளுக்குள் வைத்துக் கொள்கிறாள்)

ஜானகி : (திணறலும்….. வறட்சியும் கலந்து) நான் அவனோட பீச்சுக்குப்

போயிருந்தேன். அவன் என்னென்னமோ பேசினான். நாளைக்கு மகாபலிபுரம் போகலாமான்னு கேட்டான். காலேஜ் ஸ்டூடன்ட்ஸோட எக்ஸ்கர்ஷன் போறேன்னு வீட்டிலெ பொய் சொல்லிடுன்னு சொல்லிக் கொடுத்தான். (கடுகடுப்புடன்) ஸீ! எங்க அம்மாகிட்டெ நான் பொய் சொல்லணுமாம்! ஹோட்டல்லெ ரூமெல்லாம் ஏற்பாடு பண்றதாச் சொன்னான். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். அப்புறம் என்ன பயம், என்று சொல்லிக்கொண்டே அவன் என்ன செய்தான் தெரியுமா? யூ ரோ ஃபள் வாட் ஹீ அட்டெம்ப்டெட்?. ஹி ட்ரைட்டு கிஸ் மீ.. ! ஹாரியிள். அங்க பிடிச்ச ஓட்டம் மரினா பஸ் ஸ்டாண்டுக்கு வந்துதான் நின்னேன். ஓடறப்போ கால் தடுக்குச்சு, ஸ்லீப்பரை விட்டிட்டேன். எல்லாரும் பாக்குறாங்க. (அதை நினைத்துக் கொண்டு) அந்த ஸேம்ளஸ்பெல்லோ ஸ்லிப்பரைத் தூக்கிக்கிட்டு ஓடிவந்தவன் கால்கிட்டே போட்டுட்டு அழறான். நான் அவனை அவமானப்படுத்திட்டேனாம். எப்படி இருக்கு? இவன் என்னை அவமானப்படுத்தப் பார்த்தான். அதுக்கு நான் மாட்டேன்னா, எனக்கு இதயமே இல்லையாம். என் முகத்திலேயே முழிக்கமாட்டானாம். போய்விட்டான். இட்ஸ் ஆல் ரைட் ஹீ கேர்ஸ் அண்ட் தட் வாஸ் தீ எண்ட். (நெஞ்சை குமட்டும் உணர்வுகளுடன்)

யூ நோ, லைக் மென். இதுக்கு அர்த்தம் நான் எந்த அளவுக்கு வேணும்னாலும் உடன்படுவேன் என்கிறதில்லே, இதை எந்த ஆம்பளையும் புரிஞ்சுக்க மாட்டேன்கிறான். இட் இஸ் தி பிட்டி. ஏனோ நீங்கள் அந்த ரகமான ஆண் இல்லைன்னு என் மனசுக்குப்பட்டது. அதனால்தான் இவ்வளவு தூரம் நான் உங்களோட பழகறேன். ஆம் ரைட்?

சுந்தரம் : மேலே சொல்லுங்க (சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்கிறான்)

ஜானகி : ம்.. சொன்னாதான்.! நான் உங்களை அப்படி நம்பினது

         சரிதானே? வில் யூ மிஸ்பிவேரவ் லைக் தட்? வில் யூ...?

(அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தவாறே)

சுந்தரம் : இவ்வளவும் நீங்க சொன்ன பிறகு எனக்கென்ன பயித்தியமா?        

அது மாதிரித் தப்பெல்லாம் நான் பண்ணமாட்டேன். என்னை நீங்க நம்பலாம். உண்மையைச் சொல்றதுன்னா நீங்க என் கண்ணைத் திறந்து விட்டிருக்கீங்க. ஏன்னா முதல்லே நீங்க கூப்பிட்டபோதும் நான் இங்கே வந்தபோதும் இந்த காதல்ங்கிறதுக்கு உள்ள சாதாரண அர்த்தத்தை நம்பித்தான் வந்தேன். அதுக்கு இவ்வளவு அசாதாரணமான அர்த்தங்கள் உண்டுன்னு இப்பத்தான் புரிஞ்சுது. எப்படியோ உங்க நம்பிக்கைக்குப் பர்த்திரமானவனா நான் ஆனதை நினைச்சு சந்தோஷப்படறேன். தாங்யூ வெரிமச் ஆமா.. அந்த ரெண்டாவது படத்தைப் பத்தி நீங்க சொல்லவே இல்லையே?

(வாலிபால் விளையாட்டின் சத்தம்.. பந்தை அடிக்கும் ஓசை கேட்கிறது. ஜானகி எழுந்து போய்ப் பார்க்கிறாள். கேள்வி மனதில் பதியாததுபோல்)

ஜானகி : இதுவும் அதே கதை;தான் இதேன்னா இதே மாதிரி

இன்னொருவிதம்... படத்திலே இருக்கிற ரெண்டு பேரு மட்டும்தானா...? எல்லாருமே உலகத்திலிருக்கிற எல்லா ஆண்பிள்ளைகளுமே ஒரே மாதிரிதான்!....

(சொல்லியவள் சுந்தரத்தின் கைகளைப் பிடித்து இறுக்கி அந்தப் பந்துக்குப் பதிலாக தான் அடிக்கப்படுவதாக உணர்கிறாள்)

ஜானகி : சுந்தரம்! பிளீஸ் ஹெல்ப் மீ... நோ... கெந்நாட் ஸ்டாண்ட் இட்..

         நோ.                           

         (கீழே செல்ல அவசரப்படுகிறாள்)

சுந்தரம் : என்ன? என்ன நடந்தது! ஏன் இப்படித் தீடீரென்று.

ஜானகி : பிளீஸ்.. என்னை எதுவும் கேட்காதீர்கள். என்று

சொல்லியிருக்கிறேன். கீழே போகலாம். ஹெல்ப் மீ.. நான் கீழே வந்து சொல்றேன்.

(கீழே ஹாலில் பேணுக்குச் கீழே உட்கார்ந்து வியர்வை ஒற்றிக்கொள்கிறாள். கொஞ்சம் ஆசுவாசுமாகிறாள்)

சுந்தரம் : (நிதானமாக) வாட் ஹாப்பண்ட்? ஏன் இப்படி?

ஜானகி : அது அப்படித்தான் - முன்னே ஒருநாள் நான் ஒரு கனவு

கண்டேன். அதில் இந்த மாதிரிதான் கிரவுண்டிலே திண்டு முண்டா பத்து இருபது பேர் ராப்பசங்க மாதிரி வாலிபால் ஆடறாங்க. ஆனால் பந்து இல்லே பந்துக்குப் பதிலா நான். இரண்டு பக்கத்திலேருந்தும் மாறிமாறி ஆகாசத்திலே என்னைத் தூக்கித் தூக்கிப் போட்டு ஐயோ! வாட் ஹாரிபிள் ட்ரீம்.

(நாற்காலியில் சாய்கிறாள். கண்ணை முடியவள் பின்னர் விழித்து அந்நியனைப் போல அவனைப் பார்த்து.. அவசரமாக எழுகிறாள்) அம்மா (என்று முனகலுடன்)

சுந்தரம் : கோயிலுக்குத்தானே போயிருக்காங்க வந்திருவாங்க

ஜானகி : ஐயோ.. அதைத்தானே நானும் சொல்றேன். பிளீஸ் நீங்க

போயிடுங்க. தயவுசெய்து உடனே போயிடுங்க தப்பா நினைச்சுக்காதீங்க. நான் உங்களை மறக்கவே மாட்டேன். அம்மா எல்லாம் இருக்கும் போது ஒருநாள் நீங்க வரணும். நீங்க அடிக்கடி வரணும். இப்போ தயவு செஞ்சி உடனே போயிடுங்க. பிளீஸ் பிளீஸ் (அவள் வெளியே தள்ளவதுபோல் சொல்லி) அனுப்புகிறாள். கதவைகச் சாத்தியவள் அவசரமாக ஜன்னலைத் திறந்து.

ஜானகி : மிஸ்டர் சுந்தரம்! பிளீஸ். ஒன் செகண்ட். பிளீஸ் லாக் இட்.

         (பூட்டிவிட்டு சாவியைத் தருகிறான். சாவியைப் பெற்ற ஜானகி  

         சீரியோ சொல்லி அனுப்புகிறாள். கார் புறப்படும் சத்தம்.

          ஜானகி நாற்காலியில் அமர்ந்து ஆடுகிறாள். கிர்... கிர்.. சத்தம்).

 

                                       III                           

 

(எழுதுபவன் மீது வெளிச்சம். எழுதியதை வைத்து விட்டு)

எழுத்  : ஜானகிக்கு என்ன வந்தது. ஒரு அந்நியனிடம் அவ்வளவையும்

கொட்டித் தீர்க்க வேண்டும் என்று தள்ளியது எது? இந்த வி~யம் அவள் அம்மாவுக்கு தெரியாமலே போய்விடுமா? போய்விடும் என்றால் ஏன் இவ்வளவையும் அவனிடம் பேச வேண்டும். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யார் பதில் சொல்வது. அந்த ஆடும் நாற்காலிதான் சொல்ல வேண்டும்.

(ஒளி குறைந்து கீழ்தளத்தில் வெளிச்சம் பரவும்போது செல்லம் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருக்கிறாள். நாற்காலி லேசாக ஆடுகிறது. ஆடலரசன் பனியனுடன், துண்டை தோளிலிருந்து எடுத்து நாற்காலியில் போட்டுவிட்டு அமர்கிறார். நெற்றியில் விபூதிப்பட்டை. அலங்கார வல்லி பத்திரிகையைப் புரட்டியவ ண்ணம் ஆடுகிறாள். ஜானகி இஸ்திரி பண்ணிக் கொண்டிருக்கிறாள்)

ஜானகி : சின்னவனே மத்தியானம் சாப்பிட்டியா? தயிர் சாதத்துக்கு

         ஊறுகாய் மட்டும் தான் வெச்சிருந்தேன். சரி இன்னக்கி ஒங்க

         காலேஜிலே என்ன விசேஷம்?

எழுத்  : சின்னவனே மத்தியானம் சாப்பிட்டியா? துயிர் சாதத்துக்கு

ஊறுகாய் மட்டும்தான் வெச்சிருந்தேன் சரி இன்னக்கி ஒங்க காலேஜிலே என்ன விசேஷம்?

ஆடல்  : ஒன்றுமில்லை. எது நடந்தாலும் எமக்கென்னவென்று இருந்து

விடுவதால் இப்போது வரவர ஏதும் என் கண்ணோட்டத்தில் தென்படுவதில்லை. ஆனாலும் இன்று எங்கள் கல்லூரி முதல்வரின் தனியறையில் நடக்கொணா நிகழ்ச்சியொன்று நடந்துவிட்டது. அம்மா, அதனை நான் எவ்விதம் எடுத்துத் தங்களுக்கு உரைப்பேன்!

(அலங்கார வல்லியின் முகத்தில் கதை கேட்கும் ஆர்வம் ஜானகிக்கும் அதே ஆர்வம்.. அயர்ன்பாக்ஸின் வயரைப் பிடுங்கியபடி)

ஜானகி : அம்மா இந்தத் தனித்தமிழ் போதும்னு சின்னண்ணா கிட்டே

                    சொல்லுங்கம்மா, அப்பதான் அவங்க சொல்லபோற விஷயம்

         கேக்கச் சுவையாக இருக்கும்.

                 (துணிகளை எடுத்துக் கொண்டு உள்ளே போகும்போது பிளீஸ்.

         அண்ணா பிளீஸ்…)

அலங் : ஆமாண்டா சின்னவனே! இந்தத் தமிழ் கொஞ்சம் நாழிதான்            

கேக்க நல்லா இருக்கு. அதுவும் ஒண்ணுமே விஷயமில்லாட்டிக் கேட்டுக்கிட்டிருக்கலாம். அது ஒரு காலம் உங்க தாத்தா அந்தக் காலத்திலே அப்படித் தான் பேசுவார். அப்போ இருந்த புலமை என்ன! அறிவென்ன? அந்தச் சபைக்கு அந்தபாசை அந்தக் காலத்திலே அற்புதமா பொருந்தி இருந்தது. இந்தக் காலத்திலேதான் எல்லாம் கெட்டுப்போனது போல் நம்பி தமிழும் கெட்டுப்போச்சு. போகட்டும் என்ன நடந்தது உங்க பிரின்ஸிபால் ரூம்லே சொல்லு!.

ஜானகி : இரு.. இரு சின்னண்ணா - நானும் வந்துட்டேன்! (சொல்லிக்

         கொண்டு அவசரமாக வந்தவள் அயர்ன்பாக்ஸை தன்

         கட்டுவரல் மீது வைத்து அழுத்தி விடுகிறாள் ஐயோ“.

அலங்  : அம்மா. ஜானகி என்னம்மா.

 (ஆடலரசனும் ஒடிவந்து கையைப் பிடித்துப் பதற்றப்  

 படுகிறாள். உட்கார்ந்திருந்த செல்லம் திகைப்புடன் எழுந்து)

செல்லம் : என்னடி ஜானகி, என்ன ஆச்சு! பாத்துத் தொடக்கூடாதோ?

அம்மா அவளுக்கு ஒண்ணும் ஆபத்து இல்லீங்களே? (கையை   ஊதிக்கொண்டிருக்கும் ஜானகியிடமிருந்து அம்மாவிடம் திரும்பி) அம்மா ஆயின்ட்மெண்ட் ஏதாவது போடலாங்களா?

அலங்  : (கோபத்துடன்) எல்லாம் எனக்குத் தெரியும், பெரிசா  

ஆயிண்ட்மெண்ட் கண்டுட்டியோ? (தாம்பாளத்தை எடுத்து கண்ணை மூடி விபூதியை எடுத்துக்கொண்டு ஜானகியின் அருகில் வந்து)

இதுதான் மருந்துக்கெல்லாம் பெரிய மருந்து இதோ சரியாப் போச்சு! ஒண்ணுமில்லேம்மா. கொஞ்ச நாழியிலே எல்லாம் சரியாப்போயிடும். உனக்குத் தான் பூ மாதிரி உடம்பாச்சே! இதல்லாம் நீ எதுக்கு செய்யரே எதுக்கு இருக்கா வேலைக்கா தடிச்சி. அவள்கிட்டே விடவேண்டியதுதானே இந்த வேலையெல்லாம்.. வா வா என் கண்ணு ஸ்.ஸ்ஸ் (முத்தமிட்டு அணைக்கிறாள்)

அலங்   : சரி, அது கிடக்கட்டும். உங்க பிரின்ஸ்பால் ரூம்லே என்னமோ

          நடந்ததுன்னு சொல்ல வந்தியே அதைச்சொல்லு.

ஜானகி : ஆமா அண்ணா (கையை உதறிக்கொண்டே) சொல்லுங்க      

அண்ணா. நான் அதைக் கேக்கப் போற குஷியிலேதான் போயி அயர்ன்பாக்ஸிலே கையை வெச்சுட்டேன் சொல்லுங்கண்ணா.

செல்லம் : வேணாம் அண்ணா, வேணாம். அந்தப் பிரின்ஸ்பால்

         விவகாரமே நமக்கு வேணாம்.

(மூவரும் இவளைப் பார்க்கிறார்கள்)

சின்னண்ணா சொல்ல வந்த பிரின்ஸ்பால் ரூம் விஷயம் அவ்வளவு நல்ல விஷயம் இல்லே போலிருக்கு. அதனால் தான் அதெப்பத்திப் பேசப்போற சமயத்தில் ஜானகி கையில சூடுபட்டது. நல்லவேளை முருகன் அருள் அந்த வெஷயத்தப் பேச நினைச்சதுக்கே இப்படி ஒரு தண்டனை. அதனால் தான் சொல்றேன். என்னமோ என் மனசுக்குத் தோணுது. நீங்க சொல்லுங்க அம்மா. எனக்குத் தோண்றது சரியா, தப்பா -அம்மா?

அலங்  : (யோசித்து) உனக்குத் தோணினது ரொம்ப சரி. ஆமாம்பா

சின்னவனே, அச்தப் பிரின்ஸ்பால் விவகாரத்தை இத்தோடு விட்டுடு. விடுன்னா. இப்ப - இன்னக்கி விடுன்னேன். சகுனம் சரியில்லே. அதனாலே அப்புறமா சொல்லு. யாரை யார் விட முடியும். மண்டை இருக்கிறவரைக்கும் சளி விடறதில்லே. அதுக்காக தலைவலியை நாமே வரவழைச்சிக்கலாமா? மனுஷாளைப் பத்தித் தெரிஞ்சிக்கவும் வேண்டியிருக்கு. அவங்ககிட்டேயிருந்து தப்பிச் சுக்கவும் வேண்டியிருக்கு.

(எதையே எடுக்கமுனைந்து எழுகிறாள். திரும்பிச் செல்லத்தைப் பார்த்து)

செல்லம், உங்க ஸ்கூல்லேதான் விஷயங்களுக்குக் குறைச்சல் இல்லையே. உங்க இராப்ட் டீச்சா் ஒருத்தி போதுமே கதைகளை உற்பத்தி பண்றதுக்கு… சீ! எப்படித்தான் இந்தக் குரங்குக் கும்பலை நீ கட்டி மேய்க்கறியோ

செல்லம் : ஆமா கதை ஒண்ணு இருந்தாச் சொல்லலாம் எங்க

பள்ளிக்கூடத்திலே ஒரு நாளைக்கு நூறு விதமான, நூறு நூறு கதைங்க. எதைச் சொல்றது. எதை விடறது? ஒண்ணையும் கவனிக்கிறதில்ல சில கரும காண்டங்கள் கண் முன்னாடியே நடக்கும்போது கண்ணையும் மூடிக்கிட்டா கிளாஸ் எப்படி நடத்த முடியும்? இன்னிக்கு எனக்கு வந்த ஆத்திரத்திலே அந்த எருமை ருக்மிணியை ஸ்கூலை விட்டே டிஸ்மிஸ் பண்ணிடலாமான்னு நெனச்சேன் அப்புறம்.. யாராவது ஏன் டிஸ்மிஸ் பண்ணினேன்னு கேட்டா, நான் இல்லை என் வாயிலே அதை விவரிக்க வேண்டி வரும்?

அலங்   : என்ன என்ன அப்படி நடந்தது?

செல்லம் : ம். ஹீம் நான் சொல்ல மாட்டேன். சீ! எனக்கு வெட்கமா இருக்கு. ஐயெ! அசிங்கம். சின்ன அண்ணா! நீங்கொஞ்சம் அந்தப் பக்கம் போங்களேன்

ஆடலர   : ஏன், நான் இருந்தா என்னவாம்? பாருங்கம்மா என்னை மட்டும்

         அவள் யாரோ அன்னியன் மாதிரி நெனச்சுப்

         போகச்சொல்றதை.

அலங்  : என்னமும் பொம்பளைங்க சமாசாரமா இருக்கலாம்.. அதை

         எதுக்கு உன்கிட்டே சொல்லுவானேன்.?

ஆடல  : போங்கம்மா, நீங்களே என்னை இப்படி தள்ளி வெச்சிப்பேசினா -

அவளுக்கும் இளக்காரமா போகுது. நான் மட்டும் எங்கள் பிரின்ஸ்பால் ரூம்லே நடந்ததை - ஆம்பிளைகள் சமாச்சாரத்தைச் சொல்ல வந்தப்போ சொல்லு சொல்லுன்னு எல்லாரும் ருதிச்சீங்களே! நான் இங்கேதான் இருப்பேன்.

(பத்திரிகையை முகத்தில் வைத்து மறைத்துக் கொள்கிறான்)

செல்லம் : நானும் அப்புறமா சொல்றேன், அம்மா.

          (கண்களைச் சிமிட்டியபடியே பின்னலில் முனைகிறாள்)

ஜானகி  : அம்மா.. அம்மா..

அலங்   : என்னடி கண்ணு, கை எரியுதா? கொஞ்சம் நல்லெண்ணெய்

          தடவட்டுமா?

ஜானகி : ம்ஹீம்! அது இல்லேம்மா. நான் ஒரு விஷயம் சொல்லுவேன்   

 தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே! நான் தப்பு செய்யமாட்டேன்.

 தப்புன்னு தெரிஞ்சு செய்ய மாட்டேன் அம்மா. தப்பானா  

 சொல்லுங்க அம்மா!

அலங்  : என் கண்ணே (அணைத்தபடியே) உன்னாலே தப்பே செய்ய

முடியாதுடி. நான் உன்னை தப்பா நெனைப்போனா? என் ராஜாத்தி! எதுவானாலும் சொல்லம்மா. எதுவும் தப்பில்லே. நீ செய்தா அது தப்பா இருக்க முடியாது. சொல்லுடி கண்ணு

ஜானகி : அம்மா, நான் அன்னக்கி சொல்லல்லே சுந்தரம்னு என்கூட  

காலேஜ்லே படிச்சவானு, ரொம்ப நல்லவர் அம்மா, கொழந்தை மாதிரி. உனக்கு பாத்தா ரொம்பப் பிடிக்கும். நம் பெரியண்ணா மாதிரி குணம் அம்மா சாயங்காலம் இங்கே வந்திருந்தார் அம்மா.

(ஜானகி ஒருவர் ஒருவராகப் பார்க்கிறாள் பாருங்க அம்மா. இந்தச் சின்ன அண்ணன் மொறைக்கிறார்)

அலங்  : டேய் சின்னவனே! என்ன, கொழந்தையை பயமுறுத்திக்கிட்டு,

         அவன் கிடக்கிறான். நீ சொல்லும்மா, வந்து

ஜானகி  : வந்து.. வந்து உடனே போயிட்டார். அடடா யாரும் இல்லாத

நேரத்திலே வந்துட்டேனே. அம்மாவை அண்ணணையெல்லாம் பார்த்து அறிமுகம் செஞ்சுக்கணும்னுமான் வந்தேன். இன்னொரு சமயம் வர்ரேன்னு உடனே போயிட்டாரம்மா. தப்பாம்மா அது. சொல்லும்மா?

அலங்  : சீ சீ! இதிலே ஒண்ணும் தப்பு இல்லே. அதுசரி அவருக்கு நம்ப

         வீடு எப்படித் தெரியும்?

ஜானகி : அது..  அதும்மா நாந்தான் அன்னிக்கு எங்க ஆபீஸ் டீ

பார்ட்டியிலே போட்டே எடுக்க வந்தாரே அப்ப நம்ப பழைய காலேஜ் மேட்டாச்சேன்னு ரொம்ப நல்ல குணம்மா நாந்தான் அட்ரஸ் குடுத்தேன்.

அலங்  :  நீ வீட்டிலே இருப்பேன்னு - இன்னிக்கு எப்படி அம்மா

         அவருக்குத் தெரியும்?

ஜானகி : (குழப்பம், தடுமாற்றத்துடன்) ஆபிசுக்குப் போன்

பண்ணியிருப்பாரு. அங்கே நான் லீவிலே இருக்கிறதாச் சொல்லி இருப்பாங்க. இந்தம் பக்கம் ஏதோ வேலையா வந்தாராம். அப்படியே இங்கே வந்திருக்கலாம். என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்! வீடுதேடி வந்தவங்களை வாங்கன்னு கூப்பிட்டது தப்பா?

ஆடல்  : தப்புத்தான் யாருமில்லாத நேரத்திலே பூட்டி இருக்கிற

வீட்டுக்குள்ளேயிருந்து சாவியை எடுத்துக் குடுத்து உள்ளே வரச் சொன்னது தப்புதான். ஜன்னல் வழியாகவே பாத்து இன்னொரு சமயம் வாங்கன்னு சொல்ல வேண்டியதுதானே நீ செஞ்சது தப்புதான்.. தப்புதான், தப்புதான்.

ஜானகி : ம் மா பாருங்கம்மா. நீங்கசொல்லுங்கம்மா

தப்பாம்மா? தப்புன்னா உங்க கையாலேயே கொன்னு போடுங்க. என் மனசுக்குத் தெரியும். நான் பண்ணினது தப்பு இல்லே. நீங்க சொல்லுங்கம்மா? (கண்ணீர் விடுகிறாள்)

அலங்  : அவன் சொல்றதிலேயும் நியாயம் இருக்கும்;மா நானோ,

அவனோ உன்னைத்தப்பா நினைக்கமாட்டோம். இந்த உலகம் இருக்கே. அது பொல்லாததும்மா. உனக்கு உலகம் தெரியாதும்மா. அதுக்குத்தான் அவனும் சொல்றான்.

(அந்த நேரத்தில் ஆடலாசன். மாடிக்குப் போகிறான்)

ஜானகி : அம்மா! அந்த சுந்தரம் ரொம்ப் நல்லவரம்மா. அந்த

ராமநாதனைக்கூட அவருக்குத் தெரியும். அவனோட நான் ஃபிரண்ட்லியா இருந்ததுகூட அவருக்குத் தெரியும்.

ஆடல்  : (கையில் கப் அண்ட் ஸாஸர்களுடன்) அம்மா.. அம்மா.

(சிறிது அமைதி) வந்தாரு. உடனே போயிட்டாரு இல்லே (ஜானகி போல்) சொல்லுங்கம்மா.. தப்புங்களாம்மா ஒண்ணுமில்லேம்மா. டீ! டீபார்ட்டி நடந்திருக்கு ரூப் கார்டன்லே அதுக்குத்தான் லீசு போட்டுட்டு வீட்டிலே தனியா இருந்திருக்காங்க இந்த ஆபீசரம்மா.. நான் ஏன் மாடிக்குப் போனேன் தெரியுமா? அந்தப்பயல் இன்னும் இந்த வீட்டிலே இருக்கானோன்னு நெனச்சுத்தான் இன்னும் கூட எனக்குச் சந்தேகம்.

(கப் அண்ட் ஸாஸரை வைத்துவிட்டு ஜானகியின் பெட்ரூமில் போய்ப் பார்க்கிறான்)

ஜானகி : (கோபமாக) டாமிட்! யூ பாஸ்டர்ட்

          (கப் அண்ட் ஸாஸரை எடுத்து அவன் மீது எறிகிறாள்)

ஆடல்  :  (நடந்தவன் நின்று) பாத்தீங்களாம்மா. மரியாதை இல்லாம

          என்னைத் திட்டறா

ஜானகி  : போடா மரியாதை வேறே உனக்கு! இந்த உருட்டல் மெரட்டல்  

          எல்லாம் (செல்லத்தைக் காட்டி) அவள் கிட்டே வச்சுக்க.

செல்லம் : ஏண்டி என்னை இழுக்கறே

ஜானகி  : உன்னை ஏண்டி நான் இழுக்கிறேன்? உன்னை

          இழுக்கிறதுக்கு.

அலங்   : ம்... ஜானகி! என்ன வாய் ரொம்ப நீளுது. (அதட்டுகிறாள்)

ஜானகி  : என்னை எல்லோரும் சந்தேகப்படுங்க. கேவல் மாய்ப்பேசுங்க.

          நான் மட்டும் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறேன்.

அலங்  : ஏண்டாப்பா உனக்கு இப்போ சந்தோஷம்தானா? அனாவசியமா

நீ அவளை இப்படிச் சந்தேகப்படறது? நல்லாயிலே;லே. நம்ம பொண்ணுடா அவள். நீயே இப்படி நெனச்சா. பாக்கிறவங்க என்ன நெனப்பாங்க. எனக்குத் தெரியும். ஜானகி நீ ஏன் அழறே உன் நல்லதுக்குத்தானே அவன் சொல்றான். நாம எவ்வளவு அமைதியா இருந்தோம். எவனாவது ஒருத்தன் ஏதாவது ஒண்ணு வந்து அதைக் கொடுத்துடுதே! நான் நிம்மதியா இருந்தா இந்தத் தெய்வத்துக்குப் பொறுக்காது. எல்லாம் நான் இருக்கிறவரைக்கும் தானே! நான் போயிடறேன். அதுக்குப்புறம் எல்லாம் சரியாயிடும் மூருகா! என்னைச் சீக்கிரம் கொண்டு போயிரு.

ஜானகி  : ஏம்மா நீங்க வருத்தப்படறீங்க.

செல்லம் : அப்படியெல்லாம் சொல்லாதீங்கம்மா.

          (ஆடல் முகத்தைச் கைகளில் புதைத்துக் அமர்கிறான்)

அலங்  : என் வயத்தில் பொறந்த எதுவும் தப்பு செய்யாதுங்கிற

நம்பிக்கை எனக்கு உண்டு. ஜானகி சொல்ற மாதிரி ஒருவேளை அவன் நல்லவனாகவே இருக்கலாம். யார் பெத்த பிள்ளையோ? முகம் கூடத் தெரியாம நாம்ம அவனைத் எதுக்குத் தப்பா நெனைக்கணும்? எல்லாரும் ராமநாதன் மாதிரியேவா இருப்பாங்க. அவன்தான் திரும்ப வா்றதாச் சொல்லியிருக்கானே. அப்ப பாத்துக்கிறது. ஏண்டா சின்னவனே நீ என்ன சொல்றே?

ஆடல்  : நீங்க சொன்னா சரிதாம்மா.

அலங்  : (ஜானகி அறியாவண்ணம்) ஆள் எப்படின்ணு பாத்துக்குவோம்.

ஜானகி : சரிம்மா.. நாளைக்கே வரச்சொல்றேன். அவரோட போன் நம்பர்

கூட கொடுத்திருக்காரு. நாளைக்கு அஞ்சரை மணிக்கு… எல்லாரும் சீக்கிரம் வந்துடணும். சின்ன அண்ணா, செல்ல அக்கா

(ஜானகி சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்து ஆடுகிறாள். அவர்களும் உட்கர்ந்து அசைகின்றனர். வெவ்வேறு தாளகதியில் நாற்காலிகள் ஆடுகின்றன)

                                       IV

 

(ஒளி வரும்போது நால்வரும் நாற்காலியில் ஆடிக்கொண்டிருக்கின்றனர். எதையோ நினைத்து எழுந்த ஜானகியின் பார்வை வாசல் பக்கம் செல்கிறது)

ஜானகி : அம்மா சின்ன அண்ணா.. செல்லக்கா.. அவர் வரார். மிஸ்டர்

சுந்தரம், சொன்னமாதிரியே எவ்வளவு பங்க்சுவலா வந்துட்டார். ரொம்ப நல்லவரும்மா.

அலங்  : (செல்லம் ஆடும் நாற்காலியைப் பிடித்து நிறுத்தி) ஏண்டி

கெடந்து குதிக்கிறே! மானம் வெக்கமெல்லாம் உதிர்ந்திடப்போகுது .பேசாம ஒருபக்கம் உட்காரு. ஒரு அந்நியன் முன்னால் இருக்கோம்கிற நெனப்பு இருக்கட்டும்

(ஆடலரசனைப் பார்த்து)

யாரும் நாற்காலியிலே அவன் போகிறவரைக்கும் ஆடக்கூடாது அது தப்பு. மரியாதைக்குறைவு. ஆமா.. இன்னொண்ணு. நான்தான் அவனோட பேசுவேன். நீங்க எல்லாம் கவனிச்சிக்கிட்டு இருங்க. அதுக்காக உம்முனு இருக்கவேணாம் .கேட்டா சாதாரணமாப் பதில் சொல்லுங்க. நாம அவன் ஆழம் பார்க்கத்தான் கூப்பிட்டு இருக்கோம். அவன் நம்மள ஆழம் பார்த்துட்டுப் போயிட இடம் கொடுக்கக் கூடாது.

(அவள் இன்ஸ்ட்ரக்ஷனுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போது அவன் நுழைகிறான்)

சுந்தரம் : ரொம்ப நாழியா காத்துக்கிட்டு இருக்கீங்களா! ஆம் லேட்?

         (கடிகாரத்தைப் பார்க்கிறான்)

ஜானகி : நோ.. நோ.. ரொம்ப கரெக்டா வந்திருக்கீங்க. மீட் மை மதர்   

அம்மா, இவர்தான்- மிஸ்டர் சுந்தரம் என் காலேஜ் மேட். இப்போ பெரிய லீடிங் போட்டோ கிராபர். பிளீஸ் கம் இன்!

அலங்   : வாங்க தம்பி, வாங்க. இவன் என் இரண்டாவது பையன்-   

ஆடலரசன். காலேஜ்ல லெக்சரரா இருக்கான். இவ என் பெரிய பெண் ஹைஸ்கூல் வெடிட் மிஸ்டரா இருக்கா- உக்காருங்க தம்பி. (ஜானகி உட்கார வேண்டாம் என்று சொன்ன நாற்காலியைக் காட்டுகிறாள். அவள் கைபட்டதால் அது ஆடுகிறது)

(சுந்தரத்தின் தயக்கத்தை உணர்ந்த ஜானகி)

ஜானகி : ஆம் ஸாரி மறந்து போயிட்டேன். அம்மா! அவங்களுக்கு

         இந்த நாற்காலிதான் கன்வீனியண்ட்னு நேத்தே சொன்னாங்க.

         பிளீஸ் ஸிட்டவுன்!

சுந்தரம் : தாங்க் யூ!... (அமர்கிறான்)

அலங்   : நேத்து நீங்க வந்தப்போ -நாங்க யாருமே இல்லை. வந்து உடனே போயிட்டீங்கன்னு ஜானகி சொன்னா. நீங்க தப்பா நெனச்சிக்கக் கூடாது. பொதுவாக எங்க குடும்பத்திலே எல்லாம் எப்படிப் பழக்கம்னா, முன்கூட்டியே சொல்லிட்டுத்தான் ஒருத்தர் வீட்டுக்குப் போறது அது எங்கப்பா காலத்திலேருந்து வந்த முறை. எங்கப்பா ராவ்பகதூர்.. கவரிமான்மாதிரி வாழறோம்.

சுந்தரம் : (தர்மசங்கடமும் குழப்பமும் கலந்து ஜானகியைப்  பார்க்கிறான். ஜானகி தலையை ஆட்டுகிறாள்.   எல்லாவற்றையும் கேட்டுக்கோங்க ஒன்பதுபோல்)

அலங்  :  இந்தக் குழந்தைகளை வெச்சிக்கிட்டு என்னபாடு பட்டிருக்கேன்

தெரியுமா? முருகனுக்குத்தான் தெரியும். அப்போ பெரியவனுக்கு எட்டு வயசு. இது ரெண்டும் அவனுக்கு ரெண்டு ரெண்டு வயசு கொறைச்சல். ஜானகி கைக் குழந்தை. தம்பி உங்களுக்கு வயசு என்ன?

சுந்தரம்  : முப்பத்தி நாலு.

அலங்  : (தலையை ஆட்டியபடி) ஆமா.. உங்களுக்கு நம்ப சின்னவன்   

வயசுதான் ஆகுது. அப்பல்லாம் இவ்வளவு வசதி கிடையாது. நாட்டிலேயும் பஞ்சம். இந்த நாலு குழந்தைகளையும் வச்சுக் காப்பாத்தணும். யாரும் கிடையாது. அப்பதான் என் அப்பாவும் காலமாயிட்டார்.

சுந்தரம் : அப்போ ஜானகியோட ஃபாதர் இல்லையா?

அலங்  : அதெல்லாம் விதி அப்பா விதி! அதுக்குமேலே என்னத்தைச்  

சொல்றது. நான் எங்க அப்பாவுக்கு ஆசைப் பெண்ணா வளர்ந்தேன். விதிதான் என்னைக் கொண்டுபோயி அந்த நரகத்திலே தள்ளிவிட்டது.

சுந்தரம் : அது நரகமானா இவ்வளவு அருமையான கொழந்தைங்க

        கெடச்சிருக்குமா?

அலங் : அதுதான் தம்பி தப்பு. வாழ்க்கைன்னா என்னன்னு

அனுபவிச்சிட்டேன் தம்பி. பதினாலு வயசிலே பெரியவனைப் பெத்தேன். என் கொழந்தைகள் எல்லாமே அருமையான கொழந்தைகள்தான். சிப்பியிலே தான் முத்து விளையுது? சேத்திலேதான் தாமரை பூக்குது. சிப்பியெக் கழுத்திலே போட்டுக்க முடியுமா? சேத்தெ அள்ளிப் பூசிக்க முடியுமா?

(சுந்தரம் பேச முடியாமல் இருக்கிறான்)

நான் எங்க குடும்பத்தைப் பத்தியேபேசிட்டேன்.உங்களைப்பத்தி ஜானகி சொன்னாள். நீங்க அவனோட படிச்சிங்கன்னு. அப்பா அம்மா எல்லாம் இருக்காங்களா? கல்யாணம் ஆச்சா?

சுந்தரம் : அம்மா அப்பா கிராமத்திலே இருக்காங்க. கல்யாணம்

பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்திக்கிட்டுத்தான் இருக்காங்க. எனக்குத்தான் கல்யாணம் வேணாம்னு தோணுது.

அலங்  : ஆமாம் தம்பி, நீ செர்ற மாதிரிதான் எங்க பெரியவனும்

வேண்டாம், வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருந்தான். அவன் பெரிய வேதாந்தி தம்பி- இப்ப சாமியாராவே ஆயிட்டான் த்சு.. த்சு.. (அமைதி) சரி. இப்படியே வந்த உங்களை உக்காத்தி வெச்சி போர் அடிச்சிக்கிட்டு இருக்கேன். வாங்க சாப்பிடலாம்.

(உள்ளே போய் விடுகிறார்கள். வெளிச்சம் மேலே எழுதுகிறவன் மேல் விழுகிறது. அவன் எழுதிக் கொண்டிருக்கிறான். திரும்பசும் கீழே ஒளி வரும்போது)

எங்களுக்கு எப்பவும் எளிமையான சாப்பாடுதான் பிடிக்கும் தம்பி. உங்கள் வழக்கமான டிபனுக்கு இது பிடிக்குதோ இல்லையோ!

சுந்தரம் : சாதாரணமா நான் சாயங்காலத்திலே டிபனே சாப்பிடறதில்லே.

வெறும் காப்பிதான். அப்பிடியெல்லாம் ஒண்ணும் கண்டிப்பான பிரின்ஸ்பிள் கிடையாது. இதைத்தான் சாப்பிடறது. இதைச் சாப்பிடறதில்லைன்னு. நீங்க கேட்டீங்களே, என்னமும் ஆகி எப்படியும் வாழறது எல்லோராலேயும் முடியுமான்னு. முடியும்ங்ற சாதாரண மனுசாளைச் சோ்ந்தவன் நான். நீங்க உட்காருங்க. (ஆடலரசனைப் பார்த்து)

என்னாலே முடியாதுங்கிறதுனால, பிரின்ஸிபிளோட வாழறவங்களைப் பார்த்து சந்தோஷப்படுவேன்.

ஆடல்   : ஆஹா! அது மிக உயர்ந்த பண்பு அது ஒரு மேம்பாடான

          நிலை (அம்மாவைப்பார்த்து)

சுந்தரம் : (செல்லத்தைப் பார்த்து) அவங்க பேசவே மாட்டேங்கிறாங்களே.

ஜானகி  : அவெ எப்பவும் அப்பிடித்தான். யார் கூடேயும் பேசவே

          மாட்டாள் - அப்படி ஒரு சுபாவம்.

அலங்  : என்னோட குழந்தைகள் ஒண்ணு ஒண்ணும் ஒவ்வொரு விதம்

தம்பி பெரியவனை நீங்க பார்க்கணுமே. அப்பிடிப் பிள்ளைகளை இந்தக் காலத்திலே பார்க்கவே முடியாது. அப்படியே அவங்க தாத்தா மாதிரி. இந்த நாலும் நான் பொத்தது தான். ஆனால் அவன் ஒரு தனி விதம்.

என்னப்பா நான் சொல்றது

ஆடல்  : ஆமாம்.. அவரை நெனச்சாலே கையெடுத்துக் கும்பிடத்தோணுது

         அம்மா.

அலங்  : அவனுக்கு நாற்பது வயசாகுது தம்பி. இன்னைக்கும் வீட்டிலே   

இருந்தா குழந்தைமாதிரி என் பக்கத்திலேதான் படுத்துத்தான் தூங்குவான். என்னைக் கேக்காம ஒரு காரியம் செய்ய மாட்டான். நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டான். எதுக்கு ஏன்னு ஒரு கேள்வி கூடக் கேட்கமாட்டான். (சொல்லிவிட்டுக் கண்ணைத் துடைத்துக் கொள்கிறாள் சோகமான அமைதி)

சுந்தரம் : இப்போ அவள் எங்கே இருக்காள்.

         (பதில் ஒருவரிடமிருந்தும் வராததால்)

ஆம் ஸாரி. உங்க மனசு டப்படும்படி நான் ஏதாவது கேட்டுட்டேனா?

அலங்  : இல்லை தம்பி.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. எங்க    

உயிருக்கு உயிரான ஒரு ஜீவனை ஒரு நாள்கூட வாழ்க்கையிலே பிரிஞ்சி பழக்கமில்லாத அவனைப் பிரிஞ்சிருக்குற வருத்தம் எப்பவும் தான் எங்களுக்கு இருக்கு

(நினைவில் அனைவரும் அமைதி)

அலங்  : படிச்ச பொண்ணு, பெரிய இடம், அழகா இருந்தா பண்ணி

வைச்சேன். அவனே வேதாந்தி அப்பா. அவனுக்குப் போயி ஒரு மிருகத்தைக் கட்டிவெச்சேன் தெரியாம செஞ்சுட்டேன்.. (அமைதி)

என்ன நடந்தது தெரியுமா? (சுந்தரம் முழிக்கிறான்) நடுராத்திரியிலே அம்மா அம்மான்னு என் குழந்தை கதறின சத்தம் கேட்டு ஓடிவந்தேன். அவன் முருகன் படத்துக்கு முன்னால் நின்று மாலைமாலையாக் கண்ணீர் விட்டான். அந்த ராட்சசி இடுப்பில கையெ வெச்சிட்டு ஏளனமாகப் பாக்கறா.. என்னடி பண்ணினேனு என் குழந்தையை ன்னு நான் கேட்டேன். என்ன தப்பு? கேக்கக்கூடாது. அதுக்கு அவள். யுவர் சன் இஸ் இம்பொட்டண்ட் ன்னு ஊர் பூராக் கேக்கற மாதிரி கத்தினா.. இன்னும் என்னன்னவோ சொன்னா (தனக்குள்) எனக்குவேணும். தம்பி எனக்கு வேணும்! (சத்தமாக)

இம்பொட்டன்ஸின்னா? காந்தியோட பிரம்மச்சரியம்? ஆதிசங்கரன் ராமகிரு~; பரமஹம்சா் இவாள்ளாம் இம்பொட்டண்டா.? ஆமா  ஏம்பையனும் அவங்களே மதிரி ஆயிட்டான்.

வேதாந்தியா ஆயிட்டான். (தனக்குள்) நாயும் பன்னியும்கூட இந்த பொட்டன்ஸியோட இருக்கு. நல்லவேளை சனிபோல வந்து பனிமாதிரி போயித் தொலைஞ்சா?

சுந்தரம் : இப்ப அவர் எங்க இருக்கார். அவரைப் பார்க்கணும் போல

          இருக்கே?

ஜானகி : (அண்ணனின் நினைவில்) ! வாட் ரைஸ் மேன் டூ முவ் வித்?

அலங்  : அவன் எங்கே இருந்தால் என்ன அப்பா? அவன் இருக்கிற இடம்

கோயில்! நான் கோயிலுக்குப் போரதே அவனுக்குத்தான் சிலசமயங்கள்லே அவன் அங்கே வருவான் - பக்கத்திலே எங்ககிராமம் - அங்கே இருக்கான் வருவான் வருவான். முருகன் அருளாலே சீக்கிரம் எங்களோட ஒருவனா இருக்க அவன் வந்துடுவான் தம்பி.

(சுந்தரம் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறான்)

அலங்  : நேரமாயிடுச்சில்லே.. உங்களைச் சந்திச்சதிலே எனக்கு ரொம்பச்

சந்தோஷம். நல்லவங்களைப் பார்க்கிறதே அரிதா இருக்குதே இந்த உலகத்திலே.

சுந்தரம்  : சரிங்க ரொம்ப நன்றி, நான் வர்ரேன் (கிளம்புகிறான்)

அலங்  : தம்பி ஒரு விஷயம். நீங்க என்னுடைய பிள்ளைமாதிரி. இந்த  

உலகம் உடன்பிறந்தவங்க பாசத்தையே புரிஞ்சுக்காது. தப்பா நெனச்சுக்காதீங்க. இவங்களை ஆபிஸீக்குப்; போன் பண்றதோ வெளியிலே பாக்கறதோ மட்டும் வேணாம் தம்பி. நான் உங்க தாய் மாதிரி. உலகம் தெரிஞ்சு சொல்றேன் நீங்க வீட்டுக்கு வாங்க. பேசிக்கிட்டு இருங்க. நான் சொல்றது என்ன தம்பி.

ஜானகி : சரிங்க அம்மா! மிஸ்டர் சுந்தரம் நீங்க அடிக்கடி வீட்டுக்கு

         வரணும்.

சுந்தரம் : சரி அப்படியே ஆகட்டும் (கிளம்புகிறார்) நால்வரும் உட்கார

         (நாற்காலிகள் ஆடஆரம்பிக்கின்றன)

  

V

                                                            

(வெளிச்சம் வரும்போது எழுத்தாளன் எழுதிக் கொண்டிருக்கிறான். எழுதுவதை நிறுத்திவிட்டுப் படிக்கிறான்)

எழுத்  : சுந்தரம் அந்த வீட்டுக்கு முதலில் வந்துபோய் இன்றொடு

இரண்டு மாதமாகிவிட்டது. அதற்குப் பின்னால் மூன்று முறை வந்து போய்விட்டான். முதல் சந்திப்பு போலவே அலங்கார வல்லியம்மாளின் நீண்ட சொற்பொழிவுகளைக் கேட்டுவிட்டுப் போவான். இன்று இன்னும் ஜானகி வரவில்லை. (ஆடலரசன் வந்து முகம் கழுவி விபூதி பூசி வருகிறார். செல்லம் பின்னால் வேலை செய்கிறாள்)

அலங்  : சின்னவனே, வா உக்காரு. இன்னிக்கும் பாத்தியா

         அவனோடதான் வர்ராளா.?

ஆடல்  : அம்மா இனிமேலும் என்னாலே உளவு பார்த்துத்திரிய முடியாது.

அதுக்கு அவசியமும் இல்லை. வெள்ளம் வருமுன்னே அணை போடனும். அவன் ஒரு திருடன் இங்கு வரும்போதெல்லாம் மகாயோக்கியன் மாதிரி வே~ம் போடறான். அங்கே ஒரே காதல். அவனைச் சொல்ல என்ன? இந்தக் கழுதெ ஜானகியெ என்னா பண்ணினாத் தேவலை.

அலங்  : ஆத்திரப்படாதேடா எனக்குத் தெரியும். அவ ஒண்ணும் தப்புப்

பண்ணிடமாட்டா. அவளால தப்பா நடக்க முடியாதுடா.. எப்படியிருந்தாலும் இன்னக்கி ஜானகியெக் கண்டிச்சிட வேண்டியதுதான்.

ஆடல்  : ரொம்ப அவமானமா இருக்கும்மா. நம்ப பெருமைக்கும்

தகுதிக்கும் இவளுக்கு ஒன்புத்தி இப்படிப் போகுது. எல்லா எழவும் எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சி. எந்தப்பக்கம் திரும்பினாலும் உன்தங்கச்சி ஜானகி உன தங்கச்சி ஜானகி? தனியா நடந்துபோற போதுகூட யாரோ சொல்லுறமாதிரி இருக்கு.

அலங்  : நாமெல்லாம் கவரிமான் மாதிரியடா தம்பி அவள் ஒரு தப்பும்

         பண்ணிட மாட்டா?

(அவள் வருகிறாள். ஒரு விதம குதூகலம் இருக்கிறது)

(உள்ளே போய் அவள் அறைக்குள் நுழையும் போது)

அலங்  : ஏய் ஜானகி.. , (கடுமையான குரல்) ம் இப்படி வாழ கிட்டே

         உன்னைக் கொஞ்சம் பார்க்கணும்.. (வருகிறாள் மேலிருந்து

         கீழாகப் பார்க்கிறாள்)

                    இன்னிக்குப் பீச்சுக்குப் போனியா)

ஜானகி  : அம்மா வந்து..

அலங்  : போனியா.

ஜானகி : ம் போனேன்.

ஆடல்  : தலை ஏன் கலைஞ்சிருக்குன்னு கேளுங்கம்மா.

ஜானகி : பீச்சிலே காத்து அடிக்குது. தலை கலையும்.

ஆடல்  : பொட்டுக்கூட காத்திலே கலையுமா?

ஜானகி : காத்திலே கலையாது. கைபட்டப்போ கலைஞ்சிருக்கும்.

         டோண்ட் அண்டர்ஸ்டாண்ட் தீஸ் கொஸ்சென்ஸ்.

ஆடல்  : யூ வில் அண்டர்ஸ்டாண்ட், யூ வில் அருகில் வந்து அவன்

         உன்னை முத்தமிடவில்லை?

ஜானகி : எயஸ் ஹி கிஸ்ட் மீ (கண்ணைமுடி உட்காருகிறாள்.

         சுகத்தை அனுபவிப்பவள் போல)

அலங்  : அடிப்பாதகி ஏன் வயித்திலே பொறந்து இப்படி மானங்கெட்டுப்

         போவேன்னு நான் நெனக்கலை முருகா..!

ஜானகி  : என்னம்மா இதிலே மானங்கெட்டுப் போச்சு. உன் வயித்திலே

மகன் மாதிரின்னு தானே சொன்னீங்க .அண்ணாவோட நான் பீச்சுக்குப் போனதில்லையா. செல்லத்த சின்ன அண்ணா முத்தமிட்டதில்லையா அந்த மாதிரிதான் இது நீங்க நெனக்கிற மாதிரி அவர் மோசமானவர் இல்லை. நான் முன்னாடியே கேட்டு வச்சிருக்கேன். ஹி வில் நெவர் மிஸ்பிஹேவ் ஒண்ணும் பயப்படாதீங்க.

ஆடல்  : அம்மா.. எல்லாம் அவன் சொல்லிக்கொடுத்திருக்கான்.

இதெல்லாம் இவள் பேச்சு இல்லை (குரலைமாற்றி) அம்மா எனக்குச் சந்தேகமா இருக்கு. இவளைக் கொண்டு போயி ஒரு லேடி டாக்டர் கிட்டே காட்டி செக் அப் பண்ணணும்.

ஜானகி : (பையையும் டிபன்பாக்கையும் வீசி) டூ இட் ப்ஸீஸ் டேக் மீ. டு   

டாக்டர்.. டாக்டர் கிட்டே கொண்டு போங்க. எனக்குத் தெரியணும் அதற்குத் தகுந்தவள் தானான்ணு.. என்னால் முடியுமான்னு உங்களெ என்ன கேக்கிறது. நானே போறேன். டாக்டர் சர்டிபிகேட் வாங்குவந்தா நம்புவீங்களா) நீங்க என்னை நம்புறதுக்காக இல்லே. நானே என்னை நம்புறதுக்காக ஆம் கேயிங் டு தி டாக்டர்.

அலங்  : ஜானகி என் கண்ணே (ஓடிப்பிடித்து) எனக்குத் தெரியாதாம்மா.

மாயைவிட டாக்டர் ரொம்பத் தெரிஞ்சவங்களே. அவன் கெடக்கிறான். அவன் கொணம் உனக்குத் தெரியாதா? வாடி என் மகளே. வா! உட்காரு ஆத்திரப்படாதே தப்பான வழியிலே போறேன்னு நான் நெனக்கலே மத்தவங்க பலமாதிரி பேசுவாங்களேன்னுதான்.ஜானகி : எதும்மாதப்பு எதும்மா பாவம்.. யூமீன் டுஸே, nசூக்ஸ் இஸ்

எஸின்..! செக்ஸ் பாவமா? அப்படின்னா நீ எப்பம்மா நாலு குழந்தைகள் பெத்தே? ஹவ்? ஹவ்? ஹவ் டிட் யூ கிவ் பெர்த் டூ ஃபோர் சில்ரன்?

ஆடல்  : (அந்நியனின் பாவனையில்) மிஸ், ஜானகி… (அருகில் வந்து)

         உங்களுக்கு வயசு இப்ப என்ன?

ஜானகி : ஆம் தா்ட்டி

ஆடல்  : தர்ட்டி முப்பது.. இதுவரைக்கும் இந்தமாதிரி ஒரு கேள்வியெ.  

உங்க அம்மாகிட்ட கேக்க ஏன் தோணலே! ஏன் இந்தக் கேள்வியெக் கேக்கச் சொன்னது அவன். ஸோ தட் அவன் ரொம்ப ஈஸியா தன் இச்சைக்கு உன்னைத் தயார் படுத்த முடியும்

ஜானகி : எஸ் அவர்தான் கேக்கச் சொன்னாள். நாங்க செக்ஸ்ங்கிறதப்

பத்தி டிஸ்கஸ் பண்ணினப்போ இந்த மாதிரி ஒரு கேள்வியை அவர் கேட்டார். எங்கம்மா ஒரு பாவம் பண்ணினவன்னு என்னாலே ஒப்புக் கொள்ள முடியல்லே.. கேள்வி எங்கே இருந்து வந்தால் என்ன? பதில் சொல்லு. அது பாவமா? அப்படின்னா அம்மா பாவிதானே? உலகமே பாவிகள் தானே? சொல்லேன் சின்னண்ணா.

அலங்  : நான் கொல்றேண்பு. உங்களைப் பெத்த பாவத்திற்கு நானே

சொல்றேன். அந்த நரகத்தைப் பத்தி (வயிற்றிலடித்துக் கொள்கிறாள்..)

ஆமா.. அது நரகம்டி.. நரகம்! என் உடம்பை ஒரு ஒநாய் கிழிச்சுத் தின்னமாதிரி நடந்துச்சு. ஒரு துர்தேவதைக்குப் பலிஆனா மாதிரி. அது ஒரு மிருகம் பெண்ணாப் பொறந்தவங்க. அந்த மிருகப்பசிக்கு இரையாகணும்! நாம இமைதான். (நிறுத்துகிறாள்) மிருகங்களுக்கு அது ருசி! இரைகளுக்கு அது வேதனை அந்தவேதனை உங்களைப் பெத்தப்பவும் இருந்துச்சு. உங்களைத் தரிசிப்பவும் இருந்துச்சு. இந்தப் பாழும் வயித்திலே உங்களைச் சுமந்தப்பவும் இருந்திச்சு. இப்பவும் இருக்கு. (அழுகிறாள்)

ஜானகி : அம்மா அம்மா.. என்னை மன்னிச்சுடுங்க அம்மா  

(மற்றசர்களும் தடுக்கிறார்கள். ஜானகியும் கைகளைப் பிடித்துக் கொள்கிறாள்)

(அலங்காரம் முருகன் படத்தருகில் சென்று வணங்கி விட்டுத் திரும்புகிறாள்)

அலங்  : ஜானகி, சின்னவனே, செல்லம் - உங்க எல்லோருக்கும்

சொல்றேன். நீங்க உங்க விருப்பப்படி யாரையாவது ஒழுங்கா கல்யாணம் செஞ்சுக்கணும்னா நான் ஒண்ணும் தடையா நிக்கமாட்டேன். சந்தோஷமா முடிச்சு வைக்கிறேன். அப்படி யாரும் நெனைக்காதீங்க.

ஆடல்  : ஏம்மா இப்படியெல்லாம் பேசறீங்க.

எங்களுக்கு நீங்க எங்களோட இருந்தா அது போதும் அம்மா.

செல்லம் : அமாம் அம்மா அவள் வேணும்னா கல்யாணம்

          செய்துக்கட்டும். நாம இப்படியே சந்தோஷமா இருப்போம்  

          அம்மா.

அலங்  : சரி ஜானகி! அவளை ஒரு நாளைக்கு இங்கே வரச் சொல்லு

நானே பேசறேன். ஆனா ஒண்ணு அவனையோ இந்த உலகத்தையோ நம்பி நீ எங்களைப் பிரிஞ்சிட்டா கஷ்டப்படுவே. ஒரு தாய்ங்கிற மொறையலே இவ்வளவுதான் உனக்கு நான் சொல்வேன். நீ வேணும்னா அவனையும் இங்கேயே உன்னோட வந்துடச் சொல்லு.

ஜானகி : (அம்மா வார்த்தையை நம்ப முடியாமல்) அம்மா (அவளை  

அணைத்துக்திட்டு சிரிக்கிறாள். அழுகிறாள் அழுதுகொண்டே சிரிக்கிறாள். தனது அறைக்கு ஒடுகிறாள். ஆடலரசன் கோபித்துக் கொண்டு திரும்புகிறான்.

அலங்  : பொறுமையாயிரு, ஒண்ணும் கெட்டுப் போகாது

          (இரண்டு நாற்காலிகள் தவிர மூன்று நாற்காலிகள். நபர்களுடன்

         ஆடுகின்றன)                      

VI

 

(ஒளி வரும்போது எழுத்தாளன் படிக்கத் தொடங்குகிறான்)

எழுத்  : இதுவரை ஆடாமல் இருந்த அந்த ஐந்தாவது நாற்காலியும்

ஆடப்போகிறது. ஆம் அவன் வந்துவிட்டான். இத்தனைக்காலமும் அந்தக் குடும்பத்தைப் பிரிந்திருந்த அந்த ஜீவன், வேதாந்தி என்றும் சந்நியாசி என்றும் அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்களே!, அந்தத் தாய் சொல் மீறாத் தனயன், முத்துமாணிக்கம் வந்தே விட்டான்.

(ஒளி முன்பகுதியில் வரும்போது அந்த நாற்காலியில் வெள்ளைப் பைஜாமாவில் அதேமாதிரி வெண்மையான சட்டையுடன், சிகரெட்டை இழுத்தவாறு அமர்ந்திருக்கிறான். மற்ற நாற்காலிகள் ஆடவில்லை உள்ளே இருந்து வந்தவாறு)

அலங்  : எனக்கு நம்பவே முடியேலேடா. நீ எப்படி இந்தக் கெட்ட

         பழக்கத்தைக் கத்துக்கிட்டே.

முத்து  : அம்மா.. தயவுசெஞ்சு என்னை மன்னிச்சுடுங்க அம்மா. இதை

மட்டும் தடுக்காதீங்கம்மா.. நீங்க வேண்டாம்னு சொன்னா சிகரெட்டை விட்டுடுவேன், ஆனா ரொம்பக் கஷ்டப்படுவேன், அம்மா.

அலங்  : பரவாயில்லேடா கண்ணா, ஊர்லே உலகத்திலே இருக்கிற  

பிள்ளைகள் பண்ற காரியத்துக்கு இது ஒண்ணும் தப்பில்லை. ஆனா ரொம்பப் பிடிக்காதே.. உன் உடம்பு தாங்காது கண்ணா.

முத்து  : சரிம்மா ரொம்ப இல்லை. (சிரிக்கிறான்) எங்கே அம்மா..

         தம்பி, ஜானகி, செல்லம் எல்லாம்..?

அலங்  : பூஜை அறையில் சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க

         வந்துடுவாங்க….

         (ஜானகி வருகிறாள்)

ஜானகி : இந்தரெண்டு நாளா நீங்க கூட இருக்கிறது எனக்கு எவ்வளவு

சந்தோஷமா இருக்கு தெரியுமா அண்ணா? ஆபீஸ் விட்டவுடனேயே பறந்து வந்துடலாம்hன்னு இருக்கு இனிமே எங்களைவிட்டுப் போகாதீங்க அண்ணா (அருகில் அவன் கையைப்பற்றிச் சொல்லிவிட்டு அமர்கிறாள்)

மற்றவர்களும் வருகிறார்கள்.

முத்து  : அம்மா.. ஆபிசுக்குப் போகணும்னு ரொம்ப ஆசையா

         இருக்கம்மா

அலங்  : இன்னம் ஒரு மாசமாகட்டும் என்ன கண்ணா அவசரம்?

முத்து  : ஆமாம்மா இன்னம் ஒரு மாசமாகட்டும்.

         (பழைய சாரின் வருகை. ஹாரன் ஒலி)

ஜானகி : அவர் வராரும்மா.

அலங்  : சரி, நீ உட்காரு. சனியன் மாதிரி இன்னக்கி இப்ப வந்துட்டானே

         (தனக்குள்)

முத்து  : யாரும்மா யார் வாராங்க.

ஜானகி : என்னோட ஃபிரண்ட் அண்ணா.

முத்து  : வரட்டுமே ஒரு ஃபிரண்ட் வந்தா சந்தோ~ம்தானே படணும்.

அலங்  : பெரியவனே, பேசாம உட்காரு எல்லாம் அப்புறம் நான் உனக்கு

விவரமாச் சொல்றேன். (கதவைத் திறந்து அவனைப் பார்க்காமலேயே திரும்பி விடுகிறாள். ஆடலரசனும், செல்லமும் அவனைக் கவனிக்காதவர் போல் இருக்கிறார்கள். ஜானகி எழுந்தோடி ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போடுகிறாள்)

முத்து  : வாங்க சுந்தரம்! மீட் மை பெரியண்ணா. அண்ணா மிஸ்டர்

சுந்தரம். என் காலேஜ் மேட். இப்ப ஸிட்டியிலேயெ லீடிங் போட்டோ கிராபர்.

முத்து  : ஹவ் டூ யூ டூ. ஆம் முத்துமாணிக்கம் கொஞ்ச நான்

உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியிலே இருந்தேன். நவ் ஆம் ஆல் ரைட். (ஜானகியிடம்) அம்மா. அவருக்கு டீ கொண்டு வந்து கொடேன்.

சுந்தரம் : பரவாயில்லை.. வேண்டாம் . இப்பத்தான் சாப்பிட்டேன்.

முத்து  : இட் இஸ் ஆல் ரைட் எனக்கு இப்போ செகண்ட் போஸ் டீ பேனதும்.. உங்களோட சேர்ந்து சாப்பிடலாம்னு. நீ கொண்டு வாம்மா..

(ஜானகி கொண்டு வருகிறாள்)

என்னம்மா, அவர் வந்திருக்கார். எல்லோரும் பேசாம உம்னு இருக்கிங்களே.

அலங்  : ம் பேசவேண்டியது நிறைய இருக்கு.. எப்படிப் பேசறதுன்னு

         யோசிக்கிறேன்.

(முத்து தனது சிகரெட் பாக்கெட்டை நீட்ட, தயங்கி ஒரு சிகரெட்டை எடுக்கிறான் சுந்தரம்)

சுந்தரம் : ரொம்ப நன்றி.

அலங்  : தம்பி! உங்களை நான் ரொம்ப நல்ல பிள்ளைன்னு நெனச்சு என்

மகளோட பழக அனுமதிச்சேன் ஆனா நீங்க என் வார்த்தையை மீறி அவளை இந்த வீட்டுக்கு வெளியிலேயும் அடிக்கடி சந்திச்சு இருக்கீங்க இது தப்புன்னு உங்களுக்குத் தோணுதா.

சுந்தரம் : இல்லை!

முத்து  : தட் இஸ் ரைட்! அதிலே என்ன தப்பு! அப்படியே இருந்தாலும்

நாம யார் அம்மா அவருக்கு உத்தரவு போடறத்துக்கு? நம்ம பொண்ணுகிட்டே தான் நாம்ப சொல்லலாம். அப்படி என்ன ஜானகி கொழந்தையா? அவள் ஒரு ஆபீசர். முப்பது வயசாகுது. அவளுக்குத் தெரியாதா?

அலங்  : உனக்குத் தெரியாது கண்ணா நீ பேசாம கவனி

         (சுந்தரமிடம்)

நீங்க மனசை ரொம்ப தூரம் கெடுத்திட்டீங்க. எது பாவம்னும் தப்புன்னும் இது நாள் வரைக்கும் நெனச்சி இருந்தாளோ, அதுவே சரின்னு அவ என்கிட்டே ஒரு தாய் என்கிற மரியாதைகூட இல்லாம கேள்விகேக்கச் சொல்லிக் குடுத்து இருக்கீங்க.

முத்து  : ! இட் இஸ் கொயட் இன்ட்ரஸ்டிங்!  என்ன விஷயம் அது!

சுந்தரம்  :   டிஸ்கஷன் அபேளட் செக்ஸ் ஜானகியோட வாதம் செக்ஸ். - ஒரு  

 ஸின் - பாவம்கிறது. நான் சொன்னேன். அப்படியானா நாம எல்லாருமே பாவிகள்தான். ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு தகப்பனும் பாவின்னா நாமும் பாவிகள்தாம். பாவம்கிறது செயல் மட்டும் இல்லே. நாம செய்தாலும் செய்யாவிட்டாலும் பாவத்திலே இருந்து மொசை்ச நாமும் பாவத்திலே சம்பந்தப்பட்டவங்க தானேன்னேன்.

முத்து  : எஸ்.. யூ ஆர் ரைட்.. யூ ஆர் வெரி சினியர்.

அலங்  : பெரியவனே. நீ கொஞ்கம் சும்மா இரு. இந்தா பாருங்க தம்பி,

நான் உங்கள வரச் சொன்னது இதுக்குத்தான். அவமனசை மாத்திப்பீட்டீங்க. இப்ப அவ உங்களைத்தான் கல்யாணம் செஞ்சிக்குவேன்னு சொல்றா.. (ஜானகி தலை குனிகிறாள் முத்து அதைப் பார்த்துச் சிரிக்கிறான்)

அதனாலே பார்க்கிறவங்க பலவிதமா பேசறதுக்கு இடம் வைக்காம உங்க முடிவைச் சொல்லிடணும். அதுக்கு முன்னே நான் சொல்றதையும் சொல்லிடறேன் அவகொழந்தை வெளையாட்டுத்தனமா ஏதோ கிளிப்பிள்ளை மாதிரி உங்களோட பேசினதை அவ சொல்றா.. எனக்கு அவளத் தெரியும். அதனால் ஒண்ணு செய்யணும்.

சுந்தரம் : என்ன செய்யணும்..

அலங்  : நீங்க இந்த வீட்டோட இருக்கணும். அவளை உங்களோட

         அனுப்பமுடியாது .அவளும் எங்களைப் பிரிஞ்சி இருக்க முடியாது.  

         அவளுக்காக நீங்க வேற ஒண்ணும் செய்ய வேண்டாம்.

(ஜானகி அவன் பதிலுக்கு ஏங்குகிறாள். ஆடல், செல்லம் இருவருக்கும் சரி சொல்லி விடுவானோ என்ற அச்சம் முத்துவுக்கு இது எப்படிச் சரியாகும் என்ற சிந்தனை)

சுந்தரம் : (கணைத்துக்கொண்டு) இதிலே நாம மூணு விஷயங்களை;

பார்க்கணும்! நான் இல்லே வேறு யாராயிருந்தாலும் ஜானகியெ கல்யாணம் செய்துக்க முடிவு செய்யும் முன்னாலே இந்த விஷயங்களைக் கவனிச்சே ஆகாணும் (நிறுத்துகிறான். அனைவர் கவனமும் அவன் மீது)

ஒண்ணு. கல்யாணம் பண்ணிக்கப்போர அந்த அவன் கல்யாணம்கிற ஒரு பந்தத்தைப்பத்தி என்னநினைக்கிறான்? அவன் அதுக்குத் தயாரா..? இல்லே யாரோ சொல்றதுக்காக அவன் இதுக்குச் சம்மதிக்காரானாங்கிறது.

முத்து :  எஸ் எஸ் யூ ஆர் ஸெண்ட் பெர்ஸண்ட் ரைட், அம்மா

சொன்னாங்கன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்;டப்பட்ட விஷயம் நானே இருக்கேன். சரி, வாட் நெக்ஸ்ட்?

சுந்தரம் : இரண்டு, உங்க பொண்ணு ஒரு தாம்பத்ய வாழக்கைக்கு,

ஒருவனுக்கு இன்ட்லெக்சுவல் லெவல்லே மட்டுமல்லே எல்லா லெவல்லேயும் ஒரு மனைவியா இருக்க எலிஜிபிள்தானா தகுதியுடையவள் தானாங்கா.

ஜனாகி : எஸ் மிஸ்டர் சுந்தரம், அதுக்காக நான் ஒரு டாக்டரைச் கூடக்

கன்ஸல்ட் பண்ணனும்னு நெனச்சேன். திஸ் இஸ் வெரி இம்பர்ட்டெண்ட் (தன்னம்பிக்கை இல்லாமல்)

சுந்தரம் : மூணாவது, அவங்க கல்யாணம் ஆன பிறகு அவங்களோட

புதுவாழ்க்கையைத் தொடங்கணுமே தவிர, உங்க ராக்கிங்சோ லைப் கூடவே கூடாது. இந்த வலையிலேயிருந்து விடுபடணும். (நிறுத்துகிறான் எல்லோர் முகத்திலும் - முத்து தவிர ஓர் அதிர்ச்சி) முப்பது வயசிலேயும் ஒருத்தி அம்மாவோட கொழந்தையாவே இருக்கணும்னு விரும்பினா –சரி ,அவ கொழந்தையாகவே இருக்கட்டும். அவ ஒரு தாயாக, மனைவியாக முடியாது. கூடாது. ஒருத்தி ஒருவனுக்கு மனைவி ஆயிட்டா மற்ற உறவுகளின் பிடி குறைஞ்சாத்தான் அந்தப் புதிய உறவு பலப்படும். இதையெல்லாம் நீங்க யோசிக்கணும் (அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை) அப்ப நான் என்ன உங்க பொண்ணுக்கு மணிமணியான மாப்பிள்ளை கிடைப்பான். ஜானகியின் வாழ்க்கையும் சொர்க்கமா இருக்கும்.. யோசிங்க.

முத்து  : இதிலே என்ன யோசிக்க இருக்கு? நீங்க ரொம்ப யோசிச்சுத்தான்

இவ்வளவும் சொல்றீங்கன்னு எனக்குப் புரியது. மிஸ்டர் சுந்தரம், யூ ஆர் ரைட் ஜானகி, நீ கொழந்தை இல்லே உனக்கு வயசு முப்பது நீதான் முடிவு செய்யணும். (அமைதி)

நீயா இதைச் சொல்றேன்னு கேக்கறியா.. ஆமா வாழ்க்கையை வாழணும் அம்மா. வாழ்க்கையை அழிச்சிக்கக் கூடாது. இட் இஸ் டூலேட் நான் அப்படித்தான் அதனாலதான் சொல்றேன் ஒன் ஷீட் லிவ். நான்

ஜானகி : அம்மா அம்மா உன்னை விட்டு நான் எங்கேயும் போகல்லே

அம்மா.

(தாயைத் தழுவிச் கொண்டு அழுகிறான். இருக்கையை விட்டு எழுந்த)

சுந்தரம் : தட் இஸ் தி என்ட் எனி ஹவ். மிஸ்டர் முத்துமாணிக்கம்

                    உங்களைச் சந்திச்சதிலே எனக்கு ரொம்பச் சந்தோஷம் குட்பை.

(கிளம்புகிறான் அலங்காரம் கதவைத் தாளிடுகிறாள் கார் போகிறது)

முத்து  : அம்மா.. அம்மா.. என்னை மன்னிச்சிடுங்க அம்மா நான் தப்பாப்

பேசிட்டேன். மன்னிச்சிடுங்கம்மா. (தாயைப் பார்தது அழுகிறான்)

எனக்குப் பயித்தியம்கிறது மறந்து போயிருச்சம்மா. ஹி.. ஹி எனக்கு இன்னும் சரியாகல்லே. அம்மா அந்த டாக்டருக்கு என்ன தெரியும். குழந்தையின் உடம்பை;த்? தாய்க்குத் தான் தெரியும் இல்லே அம்மா? அதுக்குத்தான் தாய் வேணும்கிறது. .. தாய் தாய் அம்மா! உனக்கு ஒரு அம்மா இல்லியே அம்மா.. அம்மா! (நாற்காலியில் குதித்து ஆடுகிறான். நாற்காலி கதியற்ற நிலையில் ஆடுகிறது)

(ஒளி குறைய அனைவரும் நாற்காலியில் முதலில் ஆடிய தாளகதியில் ஆடுகின்றனர். மங்கிய வெளிச்சம் இருக்கிறது. மேலே எழுத்தாளன் மீது வெளிச்சம்)

எழுத்     : கதையை எப்படி முடிப்பேன். ஜானகியைச் சுந்தரத்தோடு

சேர்த்து வைத்துக் கதையை முடித்து விடலாமா. எப்படிச் சேர்ப்பது அவள்தான் விரும்பவில்லையே இப்படியே, இப்போதைக்கு முடித்துவிடலாம்.

(அங்கும் ஒளி குறைந்து மங்கிய வெளிச்சம் பேனாவை மூடி எல்லாவற்றையும் எடுத்துவைக்கிறான். மேடை இருள்)

அந்த ஆடும் நாற்காலிகள் ஆடிக்கொண்டே இருக்கட்டும்.

 

 

 

 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்

எழுத்துக்குத் தடை என்னும் பேதமை: மாதொருபாகனை முன்வைத்து

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்