முகநூல் உருவாக்கிய இரண்டு எழுத்தாளர்கள்
நமது காலச் சமூக ஊடகங்கள் பலருக்கும் பலவிதமான திறப்புகளைச் செய்கின்றன. ஒற்றைத்தள வாசிப்புக்குப்பதிலாகப் பலதள வாசிப்புகளைத் தரும் இயல்பு தானாகவே அவை உருவாக்கித்தருகின்றன. வாசிப்பைப் போலவே தனக்குள் இருக்கும் எழுத்தார்வத்திற்கும் திறப்புகளை வழங்குகின்றன. ஆசிரியத்துவத்தணிக்கை இல்லாமல் தாங்கள் எழுதியதைத் தங்கள் விருப்பம்போல வெளியிடலாம். அப்படியான வெளிப்பாட்டில் தொடர்ச்சியாகக் கண்டடையும் ஓர்மையால் ஒருவர் தனது எழுத்துப் பாணியைக் கண்டடைய முடியும். அப்படிக் கண்டடைந்த இருவரின் எழுத்துகளுக்குச் சிறிய அளவில் தூண்டுகோலாக இருந்துள்ளேன்.
ஜமீலா ராசிக்கின் இதுவொரு பிறைக்காலம்
அச்சிதழ்களில் எழுதும் வாய்ப்புகள், நூலாக்கம், வெளியீட்டு முறை போன்றன அவர்களுக்குக் கைக்கெட்டாதன என நினைத்துக் கொண்டிருந்த எண்ணங்களை மாற்றிக் கையிலொரு வெளியீட்டு ஊடகமாக முகநூல் வந்தது. முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் வரவால் கிடைத்த வாசிப்பு, எழுத்துகளின்/எழுத்தாளர்களின் அறிமுகம், உரையாடல் வாய்ப்பு, வெளிப்படுத்தலாம் என்ற நம்பிக்கை போன்றனவற்றைக் கெட்டியாகப் பிடித்து எழுதியவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதைக் கடந்த 15 ஆண்டுகளாகப் பார்க்கிறேன்.
எழுத்தின் தொடக்கநிலை என்பது ஒருவிதத்தில் தன்னனுபவங்களாகவே இருக்கும். ஆனால் தானும் தனது சொந்த வாழ்க்கையும் அதில் வெளிப்பட்டு விடக்கூடாது என்ற அச்சம் பெண்களின் தொடக்க எழுத்தில் இருப்பதும் தவிர்க்க முடியாதது. அதனைக் களைந்து தன்நிலை வெளிப்பாட்டைப் பொதுநிலைப்பட்டதாக மாற்றுவதற்கு ஓர் ஊக்கப்படுத்துதல் தேவை. அந்த ஊக்கப்படுத்துதல் சொந்தக் குடும்பத்திலிருந்தும் நட்பு வட்டத்திலிருந்தும் கிடைக்கும்போது ஒரு பெண் தன்னை எழுத்தாளராக உணரத்தொடங்குவது நடந்துவிடும்;அவரது எழுத்தின் பரப்பு விரிந்துவிடும் வாய்ப்புகள் உருவாகிவிடும். இது என்னுடைய ஆசிரியத்தொழில் அனுபவங்களும் கூட.
******
எழுத்தாளர்களின் பனுவல்களை வாசிப்பதற்கு அச்சிதழ்களையும் இணைய இதழ்களையும் நாடும் நான், எனது முகநூல் நட்பில் இருக்கும் அறிமுகம் இல்லாதவர்களின் நிலைத்தகவல்களையும் வாசிப்பதுண்டு. விரிவான நிலைத்தகவல்களாக இருக்கும்போது அதற்குப் பின்னூட்டங்களையும் இட்டதுண்டு. ஜமீலா ராசிக்கின் இருப்பு சென்னையாக இருந்தபோதும் அவரது ஆரம்பகால நிலைத் தகவல்களில் பிறந்த ஊரின் நினைவுகள் வெளிப்பட்டது. அது நான் பணியாற்றிக்கொண்டிருந்த நெல்லைப்பகுதியின் வாசனையோடு இருந்தது. அதனாலேயே அவரை எழுதத் தூண்டி எழுத்தாளராக்க நினைத்ததுண்டு. திரும்பத்திரும்ப எழுத்தாளராக வாழ்த்து எனச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அந்த வாழ்த்து இப்போது நிறைவேறியுள்ளது.
எல்லாச் சமயங்களின் நடைமுறைக்கும் வாழ்வியலுக்கும் தேசம், மொழி சார்ந்த அடையாளங்கள் உண்டு என்பதை நான் உணர்ந்துள்ளேன். இந்தியக் கிறித்தவத்திற்குள்ளேயே வேறுபாடுகள் உண்டு என்பதை உணர்ந்திருந்த எனக்கு ஐரோப்பியக் கிறித்தவத்தின் வேறுபாட்டைப் போலந்து நாட்டிலிருந்த இரண்டு ஆண்டுகள் உணர்த்தியது. அதன் பின்னர் கனடாவிலும் அமெரிக்காவில் செய்த பயணங்கள் அந்த வேறுபாட்டை உறுதி செய்தன. அதே தன்மையிலான வேறுபாட்டை இசுலாமும் கொண்டிருக்கிறது. இந்து சமயமும் புத்தச் சமயமும் கொண்டிருக்கின்றன என்பதை வாசிப்பின் வழியாகவும் நேரடிப்பயணங்கள் வழியாகவும் உணர்ந்துள்ளேன்.
இந்நூலின் தனித்த அடையாளமாக இருப்பது வட்டாரப்பண்பாட்டு அடையாளங்கள் நிரம்பிய தன்வரலாற்றுத் தன்மை என நினைக்கிறேன். அதனை நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கும் ஜமீலா ராசிக், அடுத்தடுத்து எழுதப்போகும் நூல்களில் வெவ்வேறு இலக்கிய வகைப்பாட்டில் எழுதி வெளிப்படுவார் எனச் சொல்லமுடியும். ஏனென்றால், எதையும் நிதானமாகக் கவனித்து விவரிக்கும் சொல்முறை அவரிடம் இருக்கிறது. அதற்குள் புனைவுத்தன்மையை உருவாக்க முயன்றால், நல்ல நாவல்களை அவரால் எழுதமுடியும். வாழ்த்தும் பாராட்டும்.
Jameelah Razik is with ஹெர் ஸ்டோரிஸ் .
நிபுணமதியின் தீஞ்சுனை நீர்
நிபுணமதியின் மூன்றாவது நூல். புனைவல்லாத உரைநடைக்குள் புனைவின் தன்மையை ஏற்றும்போது உரைநடை இலக்கியத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் மாயம் நடந்துவிடும். அந்த மாயத்தை இந்த நூலை வாசிக்கும்போது ஒவ்வொருவரும் உணரலாம். இந்த நூலின் தன்மையில் தான் முதலிரண்டு நூல்களையும் செய்தார். அவற்றை (சிலை ஒளிந்த கற்கள், முதிராக்கதிர்) வெளியிட்ட டிஸ்கவரி புக்பேலஸ் தான் இதனையும் வெளியிட்டுள்ளது.
இவரது எழுத்தார்வம் பலரும் பின்பற்றக்கூடிய ஒன்று. அவரது முகநூல் குறிப்புகளில் இருந்த அனுபவச்சரடும் நுட்பமான கவனிப்பு வெளிப்பாடும் குறித்து ஒரு பின்னூட்டம் எழுதியதின் தொடர்ச்சியில் உரையாடல் நிகழ்ந்தது. அதன் பிறகு சிறிய முகநூல் குறிப்புகளை விரிவாக எழுதத்தொடங்கினார். அப்படியெழுதும்போது ஒருவிதப் புனைவுத்தன்மையும் வாசிப்பவர்களுக்குச் சொல்வதற்கு ஒரு கருத்தும் இருப்பது புலனாகியது. எழுதியதைத் தொகுத்துப் பாருங்கள்; முடிந்தால் ஒரு பதிப்பாளரைப் பார்த்து வெளியிட முயற்சி செய்யுங்கள் என்று சொன்னேன். சொல்லிவிட்டு வேடியப்பனோடு தொடர்புகொள்ளலாம் என்றும் சொன்னேன். தனது எழுத்துப் பனுவல்களோடு வேடியப்பனைச் சந்தித்தவர் விடாப்பிடியாக அதனை நூலாக்கினார். அந்த நூல் விற்பனையிலும் சிறப்பாகவே இருந்துள்ளது. தொடர்ந்து முகநூலிலேயே எழுதித் தனது மூன்றாவது நூலைக்கொண்டுவந்துள்ளார். வாழ்ந்து பெற்ற அனுபவங்களோடு, தன்னைச் சுற்றி இருப்பவர்களின்/ கடந்த காலத்தில் இருந்தவர்களின் செயல்பாடுகளையும் எண்ணவோட்டங்களையும் எழுத்தில் கொண்டுவருகிறார். அத்தோடு ஒவ்வொரு நிகழ்வுகளின் மீதும் தனது பார்வைக்கோணத்தை வைக்கிறார். அந்தக் கோணங்களே வாசிப்பவர்களுக்குத் தேவையான திளைப்பையும் கருத்தையும் தருகின்றன. இத்தகைய நூல்களுக்கு ஒரு வாசகர் கூட்டம் இருக்கிறது.
Nibunamathy Duraisamy
ஜமீலா ராசிக்கின் இதுவொரு பிறைக்காலம்
அச்சிதழ்களில் எழுதும் வாய்ப்புகள், நூலாக்கம், வெளியீட்டு முறை போன்றன அவர்களுக்குக் கைக்கெட்டாதன என நினைத்துக் கொண்டிருந்த எண்ணங்களை மாற்றிக் கையிலொரு வெளியீட்டு ஊடகமாக முகநூல் வந்தது. முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் வரவால் கிடைத்த வாசிப்பு, எழுத்துகளின்/எழுத்தாளர்களின் அறிமுகம், உரையாடல் வாய்ப்பு, வெளிப்படுத்தலாம் என்ற நம்பிக்கை போன்றனவற்றைக் கெட்டியாகப் பிடித்து எழுதியவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதைக் கடந்த 15 ஆண்டுகளாகப் பார்க்கிறேன்.
எழுத்தின் தொடக்கநிலை என்பது ஒருவிதத்தில் தன்னனுபவங்களாகவே இருக்கும். ஆனால் தானும் தனது சொந்த வாழ்க்கையும் அதில் வெளிப்பட்டு விடக்கூடாது என்ற அச்சம் பெண்களின் தொடக்க எழுத்தில் இருப்பதும் தவிர்க்க முடியாதது. அதனைக் களைந்து தன்நிலை வெளிப்பாட்டைப் பொதுநிலைப்பட்டதாக மாற்றுவதற்கு ஓர் ஊக்கப்படுத்துதல் தேவை. அந்த ஊக்கப்படுத்துதல் சொந்தக் குடும்பத்திலிருந்தும் நட்பு வட்டத்திலிருந்தும் கிடைக்கும்போது ஒரு பெண் தன்னை எழுத்தாளராக உணரத்தொடங்குவது நடந்துவிடும்;அவரது எழுத்தின் பரப்பு விரிந்துவிடும் வாய்ப்புகள் உருவாகிவிடும். இது என்னுடைய ஆசிரியத்தொழில் அனுபவங்களும் கூட.
******
எழுத்தாளர்களின் பனுவல்களை வாசிப்பதற்கு அச்சிதழ்களையும் இணைய இதழ்களையும் நாடும் நான், எனது முகநூல் நட்பில் இருக்கும் அறிமுகம் இல்லாதவர்களின் நிலைத்தகவல்களையும் வாசிப்பதுண்டு. விரிவான நிலைத்தகவல்களாக இருக்கும்போது அதற்குப் பின்னூட்டங்களையும் இட்டதுண்டு. ஜமீலா ராசிக்கின் இருப்பு சென்னையாக இருந்தபோதும் அவரது ஆரம்பகால நிலைத் தகவல்களில் பிறந்த ஊரின் நினைவுகள் வெளிப்பட்டது. அது நான் பணியாற்றிக்கொண்டிருந்த நெல்லைப்பகுதியின் வாசனையோடு இருந்தது. அதனாலேயே அவரை எழுதத் தூண்டி எழுத்தாளராக்க நினைத்ததுண்டு. திரும்பத்திரும்ப எழுத்தாளராக வாழ்த்து எனச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அந்த வாழ்த்து இப்போது நிறைவேறியுள்ளது.
எல்லாச் சமயங்களின் நடைமுறைக்கும் வாழ்வியலுக்கும் தேசம், மொழி சார்ந்த அடையாளங்கள் உண்டு என்பதை நான் உணர்ந்துள்ளேன். இந்தியக் கிறித்தவத்திற்குள்ளேயே வேறுபாடுகள் உண்டு என்பதை உணர்ந்திருந்த எனக்கு ஐரோப்பியக் கிறித்தவத்தின் வேறுபாட்டைப் போலந்து நாட்டிலிருந்த இரண்டு ஆண்டுகள் உணர்த்தியது. அதன் பின்னர் கனடாவிலும் அமெரிக்காவில் செய்த பயணங்கள் அந்த வேறுபாட்டை உறுதி செய்தன. அதே தன்மையிலான வேறுபாட்டை இசுலாமும் கொண்டிருக்கிறது. இந்து சமயமும் புத்தச் சமயமும் கொண்டிருக்கின்றன என்பதை வாசிப்பின் வழியாகவும் நேரடிப்பயணங்கள் வழியாகவும் உணர்ந்துள்ளேன்.
இந்நூலின் தனித்த அடையாளமாக இருப்பது வட்டாரப்பண்பாட்டு அடையாளங்கள் நிரம்பிய தன்வரலாற்றுத் தன்மை என நினைக்கிறேன். அதனை நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கும் ஜமீலா ராசிக், அடுத்தடுத்து எழுதப்போகும் நூல்களில் வெவ்வேறு இலக்கிய வகைப்பாட்டில் எழுதி வெளிப்படுவார் எனச் சொல்லமுடியும். ஏனென்றால், எதையும் நிதானமாகக் கவனித்து விவரிக்கும் சொல்முறை அவரிடம் இருக்கிறது. அதற்குள் புனைவுத்தன்மையை உருவாக்க முயன்றால், நல்ல நாவல்களை அவரால் எழுதமுடியும். வாழ்த்தும் பாராட்டும்.
Jameelah Razik is with ஹெர் ஸ்டோரிஸ் .
நான் முகநூலுக்கு வந்து தேடித் தேடி நண்பர்களை இணைத்துக் கொண்டிருந்த போது பேராசிரியர் அ. ராமசாமி அவர்களிடம் நட்புக் கோரிக்கை விடுத்து நட்பில் இணைந்தேன். அவர் அவருடைய பக்கத்தில் தரும் திறனாய்வுப் பதிவுகளைத் தொடர்ந்து வாசிப்பதுண்டு. என்னுடைய பதிவுகளை வாசித்து உங்களுடைய சொல்முறை நன்றாக உள்ளது. முயன்று எழுதுங்கள் என்று தொடக்கம் முதலே ஊக்கம் தந்தவர். இவ்வளவு பெரிய பேராசிரியர் நம்மைப் பாராட்டுகிறாரே என்று எவ்வளவு மகிழ்ந்திருப்பேன் !அது ஒரு பிறைக்காலம் புத்தகத்தின் மீதான அவருடைய பார்வை . மகிழ்ச்சியுடன் நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.என் மனமார்ந்த நன்றி சார்.
நிபுணமதியின் தீஞ்சுனை நீர்

இவரது எழுத்தார்வம் பலரும் பின்பற்றக்கூடிய ஒன்று. அவரது முகநூல் குறிப்புகளில் இருந்த அனுபவச்சரடும் நுட்பமான கவனிப்பு வெளிப்பாடும் குறித்து ஒரு பின்னூட்டம் எழுதியதின் தொடர்ச்சியில் உரையாடல் நிகழ்ந்தது. அதன் பிறகு சிறிய முகநூல் குறிப்புகளை விரிவாக எழுதத்தொடங்கினார். அப்படியெழுதும்போது ஒருவிதப் புனைவுத்தன்மையும் வாசிப்பவர்களுக்குச் சொல்வதற்கு ஒரு கருத்தும் இருப்பது புலனாகியது. எழுதியதைத் தொகுத்துப் பாருங்கள்; முடிந்தால் ஒரு பதிப்பாளரைப் பார்த்து வெளியிட முயற்சி செய்யுங்கள் என்று சொன்னேன். சொல்லிவிட்டு வேடியப்பனோடு தொடர்புகொள்ளலாம் என்றும் சொன்னேன். தனது எழுத்துப் பனுவல்களோடு வேடியப்பனைச் சந்தித்தவர் விடாப்பிடியாக அதனை நூலாக்கினார். அந்த நூல் விற்பனையிலும் சிறப்பாகவே இருந்துள்ளது. தொடர்ந்து முகநூலிலேயே எழுதித் தனது மூன்றாவது நூலைக்கொண்டுவந்துள்ளார். வாழ்ந்து பெற்ற அனுபவங்களோடு, தன்னைச் சுற்றி இருப்பவர்களின்/ கடந்த காலத்தில் இருந்தவர்களின் செயல்பாடுகளையும் எண்ணவோட்டங்களையும் எழுத்தில் கொண்டுவருகிறார். அத்தோடு ஒவ்வொரு நிகழ்வுகளின் மீதும் தனது பார்வைக்கோணத்தை வைக்கிறார். அந்தக் கோணங்களே வாசிப்பவர்களுக்குத் தேவையான திளைப்பையும் கருத்தையும் தருகின்றன. இத்தகைய நூல்களுக்கு ஒரு வாசகர் கூட்டம் இருக்கிறது.
Nibunamathy Duraisamy
மிக்க நன்றி சார்! உங்கள் பெயரைக் குறிப்பிடாமல் என் புத்தக அறிவிப்பைச் செய்ததில்லை! 31.12.24 அன்று நடந்த "தீஞ்சுனை நீர்"புத்தக வெளியீட்டு நிகழ்விலும் உங்களைக் குறித்துப் பேசினேன்."என் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் என் கட்டுரைகளைப் புத்தகமாக்கலாம் என்றபோது நான் காதில் வாங்கவே இல்லை! என் மீது கொண்ட அன்பினால் சொல்கிறார்கள் என்று ஒதுங்கி விட்டேன். நம்மைச் சுற்றியுள்ளவர்கள் சொல்வதை நாம் எப்போது கேட்டு இருக்கிறோம்?அப்போதுதான் பேராசிரியர். திரு. ராமசாமி அவர்கள் தொடர்பு கொண்டு புத்தகம் கொண்டு வரலாம் என்று சொல்லி திரு. Vediyappan M Munusamy அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். முதல் புத்தகம் வந்தது. அடுத்தடுத்த புத்தகங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. பேராசிரியருக்கு என் நன்றி!"
கருத்துகள்