கவனம் பெறுதல்
சிறப்பான அங்கீகாரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் செய்யும் பணிகளை அன்றாடப் பணிகளாகக் கொண்டவர்கள் ஆசிரியர்களும் பத்திரிகையாளர்களும். அந்தப்பணியோடு தொடர்புடைய வேறொன்றைச் செய்யும்போது கவனிக்கப்படுவதும் பாராட்டப்படுவதும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பமாகிவிடும். மகிழ்ச்சியளிக்கக் கூடிய திருப்பங்களை இந்த வாரத்தில் பெற்ற இவ்விருவரையும் பாராட்டுகிறேன்.
நான் கற்ற மலையாளத்தை வைத்துக்கொண்டு சில நாடகங்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். அவையெல்லாம் புதுச்சேரியில் பணியாற்றியபோது செய்தவை. மாணவர்களின் தேர்வுக்கான நாடகத் தயாரிப்புக்காகச் செய்தவை. அவற்றை மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. தழுவல் என்றுதான் சொல்லவேண்டும். சி.ஜே. தாமஸின் குற்றம் எண்27/1128,. ஜி.சங்கரப்பிள்ளையின் விடுதலை போன்றனவற்றைத் தழுவலாக்கம் செய்துள்ளேன்.
சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருதுகள் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படும் நூல்களுக்குத் தரக்கூடாது; இந்தியமொழிகளிலிருந்து இன்னொரு இந்தியமொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுவதற்கே தரப்படவேண்டும் என்று ஒருமுறை சாகித்திய அகாதெமிக்குக் கடிதம் எழுதியுள்ளேன். ஏனென்றால் அந்த அமைப்பே இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கான அமைப்பு என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது எனது தரப்பு வாதமாக இருந்தது.
*********************************
நேர்காணல்காரருக்கு ஒரு நேர்காணல்
பள்ளிப்படிப்புக் காலத்திலிருந்தே நானும் இலக்கியவாசிப்பைச் செய்திருந்த போதிலும், எழுதுபவர்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டானதில்லை. எந்தவொரு எழுத்தாளரையும் சந்திப்பதற்காகவும் ஊர்தேடி, வீடுதேடிப்போனதில்லை. ஆனால் நான் இருந்த நகரங்களுக்குப் பேச்சாளர்களாகவோ இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவோ வந்தவர்களைப் பார்த்து அறிமுகம் செய்து பேசியிருக்கிறேன் என்பதைத் தாண்டிய நெருக்கத்தைத் தேடியதில்லை. வாசிப்பது பனுவலை மட்டுமே என்ற தன்னறிவு உண்டாகிவிட்ட நிலையில் எழுத்தாளர்கள் மீது ஆச்சரியம் கொள்ள எதுவுமில்லை என்ற மனநிலைதான் ஆய்வு/திறனாய்வு மனப்பான்மையை உண்டாக்கிவிட்டது என்று இப்போது தோன்றுகிறது.பௌத்த அய்யனார் முற்றிலும் மாறானவர் என்பதை நானறிவேன் என்றாலும் இந்த நேர்காணல் அதனை உறுதியாகப் பதிவுசெய்துள்ளது.
இலக்கியவாசகராக உணரத்தொடங்கும் ஒருவர் கலைஞர்கள்/ எழுத்தாளர்கள் உருவாக்கும் பிம்பத்தைக் கேள்விகளற்று ரசித்து, கொண்டாடித் தீர்த்த பயணத்தில் ஏற்படும் சலிப்பையும் எழுத்தாளர்களின் ஆளுமைகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நம்பிக்கைச் சிதைவுகளையும் இந்த நேர்காணலில் நாம் வாசிக்கலாம். அந்த வகையில் பௌத்த அய்யனாரின் இந்த நேர்காணல் வாசிக்க வேண்டிய ஒன்று.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது
சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருது (தமிழ்) பெற்றுள்ளார் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் பா.விமலா. கடந்த ஆண்டு திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் மொழிபெயர்ப்பு சார்ந்த கட்டுரை ஒன்றை வாசித்தார். அதன் தொடர்ச்சியில் அவரது முனைவர் பட்டம், மொழிபெயர்ப்புகள் குறித்த அறிமுகம் உண்டு . மலையாளத்தில் ஜமீலா எழுதிய 'எண்ட ஆணுங்கள்' என்ற தன் வரலாற்று நூலைத் தமிழில் மொழி பெயர்த்ததற்காக இந்த ஆண்டுக்கான (2024) விருதாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாராட்டும் வாழ்த்தும்.
தமிழ்ப்பேராசிரியர்கள் இன்னொரு மொழியைக்கற்று மொழிபெயர்ப்பு செய்து விருதுபெறுகிறார்கள் என்பதில் தமிழ்ப்பேராசிரியராகக் கூடுதல் மகிழ்ச்சி . எனது ஆய்வு இளவலும் பேராசிரியருமான பா.ஆனந்தகுமார் தனது ஆய்வுப்பட்டத்திற்காகவே மலையாளமும் தெலுங்கும் கற்றுத்தேறி மொழிபெயர்ப்புகள் செய்தார். குஞ்ஞுன்னி கவிதைகளைச் சிறப்பாக மொழிபெயர்த்தவர். மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் எந்திரம் நாவலை மொழிபெயர்ப்பு செய்ததற்காக சாகித்திய விருதுபெற்றவர். 1990 முதல் வழங்கப்படும் மொழிபெயர்ப்பு விருதுகளில் கவிஞர்களான சிற்பி, தமிழ்நாடன், திறனாய்வாளர் பூரணச்சந்திரன் போன்ற தமிழ்ப்பேராசிரியர்களும் விருதுபெற்றவர்கள். இன்னொரு மொழி கற்று மொழிபெயர்ப்பில் ஈடுபடும் தமிழ்ப்பேராசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 10 பேர் கொண்ட குறும்பட்டியலில் மோ.செந்தில்குமார், எம்.எ.சுசிலா, க. மாரியப்பன் என இன்னும் மூன்றுபேர் உள்ளனர். பத்தில் நான்கு என்பது குறிப்பிடத்தக்க எண்ணிக்கை.

எனது ஆசைகளில் ஒன்று இந்திய மொழிகள் சிலவற்றைக் கற்றுக் கொண்டு அந்த மாநிலங்களுக்குள் பயணம் செய்ய வேண்டும் என்பது. அதற்காக முதலில் நான் கற்ற மொழி மலையாளம். பலதடவை கேரளத்திற்குள் பயணித்தபோது இன்னொரு மொழி பேசும் இடத்தில் இருப்பதான உணர்வைத் தராததை உணர்ந்துள்ளேன். கன்னடம், தெலுங்கு மொழிகள் வாசிக்கத் தெரியாது என்றாலும் பேச்சுமொழி தமிழோடு நெருக்கம் கொண்டவை என்பதால் பெரிய தடுமாற்றங்கள் இருப்பதில்லை. ஆனால் இந்தி தெரியாததால் டெல்லி, மும்பை, புனே போன்ற இந்தி நகரங்களில் இருந்தபோது மொழி தெரியாத மொழிப்பரப்புக்குள் இருக்கிறேன் என்பதை உணர்ந்துள்ளேன்.
நான் கற்ற மலையாளத்தை வைத்துக்கொண்டு சில நாடகங்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். அவையெல்லாம் புதுச்சேரியில் பணியாற்றியபோது செய்தவை. மாணவர்களின் தேர்வுக்கான நாடகத் தயாரிப்புக்காகச் செய்தவை. அவற்றை மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. தழுவல் என்றுதான் சொல்லவேண்டும். சி.ஜே. தாமஸின் குற்றம் எண்27/1128,. ஜி.சங்கரப்பிள்ளையின் விடுதலை போன்றனவற்றைத் தழுவலாக்கம் செய்துள்ளேன்.
சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருதுகள் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படும் நூல்களுக்குத் தரக்கூடாது; இந்தியமொழிகளிலிருந்து இன்னொரு இந்தியமொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுவதற்கே தரப்படவேண்டும் என்று ஒருமுறை சாகித்திய அகாதெமிக்குக் கடிதம் எழுதியுள்ளேன். ஏனென்றால் அந்த அமைப்பே இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கான அமைப்பு என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது எனது தரப்பு வாதமாக இருந்தது.
*********************************
நேர்காணல்காரருக்கு ஒரு நேர்காணல்
கவிதை, அனுபவக்கட்டுரை, மனச்சித்திரங்கள் என அவரின் எழுத்துகளை வாசிக்கத் தந்திருந்தபோதிலும் தனது அடையாளமாகப் பௌத்த அய்யனார் நினைப்பது எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் சந்தித்து விரிவான நேர்காணல்களாகப் பதிவு செய்வதைத்தான். இந்த அடையாளம் சார்ந்தே அதிகம் பேசியும் அய்யனாரின் விரிவான நேர்காணல் ஒன்றை இனிய உதயம் அட்டைப்படச் சிறப்பாக வெளியிட்டுள்ளது.
இந்த நேர்காணலை வாசிக்கும்போது அவர் சொல்லும் சில நிகழ்வுகளில் நானும் இருந்திருப்பேன் என்றே தோன்றுகிறது. புதுவைக்குப் பெயர்ந்து சென்ற1989 க்கு முன்பு,மதுரையில் நடந்த சந்திப்பு, நாடக நிகழ்வுகள், இலக்கியக் கூட்டங்கள் போன்றவற்றில் அவரது முகம் அறிமுகம். ஆனால் நண்பர்கள் என்ற நிலை ஏற்படவில்லை.

நான் அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது பேரா. சாலமன் பாப்பையாவைப் பார்க்க வந்தபோதும் ஹலோ சொன்ன நினைவிருக்கிறது. ஆனால் அவரை நெருக்கமாக உணரச்செய்தன அவர் எடுத்துப் பல்வேறு இதழ்களில் வந்த நேர்காணல்கள் தான். புதியபார்வை, தீராநதி, தலித், காலச்சுவடு எனப் பத்திரிகைகளில் வெளியிட்டவற்றைத் தாண்டி, அவரது 'நேர்காணல்' இதழில் கவனப்படுத்திய ஆளுமைகள் பலரும் எனக்கு விருப்பமானவர்கள். சில இதழ்களில் நானும் கூடப் பங்களிப்புச் செய்திருக்கிறேன். எனது நேர்காணல் ஒன்றைப் பதிவுசெய்து வெளியிட வேண்டும் என்ற விருப்பத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் அது நேரடிச்சந்திப்பாக நிகழாமல் இணையவழிச் சந்திப்பாகவே நடந்தது. நான் வார்சாவில் இருந்தபோது உரையாடிவிட்டு, வினாக்களை அனுப்பி விடைகளைப் பெற்றுத் தினமணியில் வெளியிட்டார். அந்த நேர்காணல் முழுவதும் வார்சாவில் இருந்த அனுபவங்களாக இருந்தன (பின்னூட்டத்தில் இணைப்பு உள்ளது)

கருத்துகள்