வாசிப்பின் அடுக்குகளுக்குள் பயணித்தல்
எழுதப்படும் ஒரு பனுவலின் போக்கில் “மேற்கோள்” குறிக்குள் இடப்படும் ஒரு சொல் வழக்கமான பொருளிலிருந்து குறிப்பான பொருளொன்றுக்கு நகர்கிறது. அந்த நகர்வின் மூலம் எழுதுபவர் வாசிப்பவர்களின் கூடுதல் கவனத்தையும் நிதானமான வாசிப்பையும் கோருகிறார் எனக்கொள்ள வேண்டும். கலைப்பேச்சு என்ற தலைப்பிட்டுத் தொகுக்கப்பட்டுள்ள 33 கட்டுரைகளும் வெவ்வேறு காரணங்களையிட்டு “மேற்கோள்” குறிக்குள் நிற்பனவாக இருக்கின்றன. நூலின் கட்டுரைத் தலைப்புகளைப் பார்வையிடும்போது அதை நீங்கள் உணரலாம். அதில்லாமல் கட்டுரைகளை வாசிக்கும்போது கண்ணில் தட்டுப்படும் மேற்கோள் குறிக்குள் நிற்கும் கலைச்சொற்களின் பாவிப்பைக் கடக்கும்போதும் நீங்கள் நின்று நகரவேண்டியிருப்பதை உணரலாம்.
பொதுவான வாசிப்பில் கட்டுரை எழுத்து, கவிதை, நாடகம், புனைகதை போன்ற இலக்கிய வடிவங்களைவிட எளிய வடிவம் எனவும், ஒற்றை வாசிப்புக்குரிய வடிவம் எனவும் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை கட்டுரை எழுத்திற்குள் பலவகையான வேறுபாடுகள் உள்ளன என்பதை அறியாதவர்களின் கூற்று. போதனை, விவரணை, முன்வைப்பு, காட்சிப்படுத்தல் முதலான நோக்கங்களுக்காக எழுதப்படும் கட்டுரைகள் அந்தக் கூற்றோடு பொருந்திப் போகலாம். அவை ஒரே வாசிப்பில் எழுதியவரின் நோக்கத்தை வாசிப்பவர்களிடம் கடத்திவிடும் தன்மையை – மொழியமைப்பைக் கொண்டிருக்கலாம். ஆனால் அதிலிருந்து வேறுபட்டவை விமரிசனக் கட்டுரைகள் என அறியப்படும் திறனாய்வுக் கட்டுரைகள். திறனாய்வுக் கட்டுரைகளைப் போலவே கூடுதல் அடுக்குகளைக் கொண்டவை அறிவுத்தளங்களை முன்வைக்கும் கருத்தியல் விளக்கக்கட்டுரைகள்.
ரூபன் சிவராஜாவின் கலைப்பேச்சு தொகுதிக்குள் இவ்விருவகைக் கட்டுரைகளும் சம அளவில் இடம் பெற்றுள்ளன. கலைப்பேச்சு என்ற பொதுத்தலைப்புக்குள் கலைகளின் அனைத்து வகைப்பாடுகளையும் பேசுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு அவற்றின் எல்லாப் பரிமாணங்களையும் திறனாய்வுக்கட்டுரைகளையும் இத்தொகுப்பில் இடம்பெறச் செய்துள்ளார். எழுத்திலக்கியங்களான கவிதை, புனைகதை, நாடகமென அறியப்படும் இலக்கிய வகைமைகள் வாசிப்பின் வழியாக மனிதர்களின் தன்னிலைகளை விசாரணை செய்வன. ஆனால் காட்சிக் கலைகளாகவும் கேட்புக்கலைகளாகவும் விளங்கும் அரங்கியல், திரைப்படம், இசை போன்றன ஒரே பார்வையில் அல்லது ஒரே காட்சிப்படுத்தலில் பார்வையாளர்களின் மனதிற்குள் நுழைந்து ஆற்றுப்படுத்துதலையோ, கிளர்ச்சியையோ உருவாக்கிவிட கூடியன.

இவற்றையெல்லாம் திறனாய்வுக்குட்படுத்தும் விமரிசகர், பார்வையாளர் என்ற நிலையிலிருந்து இன்னொரு தளத்திற்கு நகரவேண்டிய தேவை இருக்கிறது. பார்க்கப்போகும் அரங்கநிகழ்வு,இசைக்கச்சேரி, திரைப்படம் குறித்த முன் தேடல்களுடன் சென்றாகவேண்டும். சில நேரங்களில் தான் பேச நினைத்த சினிமா , கச்சேரி, அரங்காற்றுகை போன்றன பொதுநிலைப் பார்வையாளர்களிடம் உருவாக்கும் கருத்தோட்டங்களுக்கான காரணங்களையும் முன்வைக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் அவர் ஒரு தேடுதல் மிக்க வாசிப்பைச் செய்கிறார்.
தேடுதல் மிக்க வாசிப்பைச் செய்யும் விமரிசகனுக்குக் கலையின் தோற்றம், கலையின் இயங்குநிலை, கலையின் சமூகத்தாக்கம் குறித்த அடிப்படை அறிவு முதன்மையான தேவை. அத்தோடு கலையை இயக்கும் சமூக அறிவியல் துறைகளான தத்துவம், சமூகவியல், மானுடவியல், உளவியல் முதலான அறிவுத்துறைகளின் அடிப்படை அறிவும் தேவைப்படுகிறது. ரூபன் சிவராஜாவின் கலைப்பேச்சு தொகுப்பில் இடம்பெற்றுள்ள மூன்றிலொரு பங்கு கட்டுரைகள் அத்தகைய தன்மையில் அமைந்துள்ளன. அவை இத்தகைய அடிப்படை அறிவை வாசகர்களுக்கு நேரடியாகத் தருவதற்குப் பதிலாக விவாதிக்க எடுத்துக்கொண்ட நூல்கள் அல்லது நிகழ்வுகள் சார்ந்து பேசும் போக்கில் விவரிக்கின்றன.
ரூபன் சிவராஜாவின் கட்டுரைகளை இந்தத்தொகுதியின் வாயிலாக மட்டும் வாசித்தவனில்லை. அவர் எழுதும் இதழ்களின் வழியாகவும் இணையவெளியிலும் கடந்த 10 ஆண்டுகளாகக் கவனித்தும் வாசித்தும் வந்துள்ளேன். அந்தக் கட்டுரைகள் இரண்டு விதத்தில் வேறுபட்டனவாக இருக்கின்றன. முதலில் சொல்ல வேண்டிய அதன் ஆழமும் அகலமுமான விவரிப்பும் அதன் வழியாக உருவாக்கும் அடுக்குகளும். அதற்கு ஒரேயொரு கட்டுரையை மட்டும் எடுத்துக்காட்டிப் பேசலாம் நினைக்கிறேன். இன்னொன்று கடந்த 15 ஆண்டுகளாக நான் வாசித்து எழுதிக்கொண்டிருக்கும் புலம்பெயர் இலக்கியப்பனுவல்களோடு ரூபன் சிவராஜாவின் கட்டுரை எழுத்துகள் போட்டிபோடும் தன்மை.இதற்கு எடுத்துக்காட்டெல்லாம் சொல்லி விளக்கப்போவதில்லை. கட்டுரைகளின் தலைப்பே அதனை உணர்த்துவனவாக இருக்கின்றன.
தமிழில் பலரும் கலை, இலக்கிய விமரிசனக்கட்டுரைகளை எழுதுகிறார்கள். அவற்றிலிருந்து ரூபன் சிவராஜாவின் கட்டுரைகள் பல அடுக்குகளையும் ஆழமும் அகலமும் கொண்ட விவரிப்பையும் கொண்டிருப்பதை, ‘Mrs. Chatterjee vs Norway’ - ஹிந்தி திரைப்படம் நோர்வே குழந்தைகள் விவகார நிகழ்வு – பின்னணித் தகவல்களும் சமூக உளவியற் கண்ணோட்டமும் என்ற தலைப்பைக் கட்டுரையை வாசித்தபோது உணர்ந்து வியந்தேன். இந்தக் கட்டுரையின் பேசுபொருள் ஒரு சினிமாவின் பேசுபொருள் என்ற எல்லையைத் தாண்டிக் கால அளவிலும், நிலவெளி சார்ந்தும், விவாதிக்கும் அறிவுத்துறை சார்ந்தும் பல பரிமாணங்களிக் கொண்டது என்பதை அந்தக் கட்டுரையை வாசித்து முடித்தவுடன் என்னால் உணர முடிந்தது. அத்தோடு இந்தப் படத்தின் விவாதப்பொருள் உருவாக்கியதின் தொடர்ச்சியாக ஐரோப்பிய அரசுகள் – குறிப்பாக நார்வேஜிய ஊடகங்களும் அரசின் துறைகளும் காட்டிய கவன ஈர்ப்பையும் விவாதங்களையும் ரூபன் சிவராஜா முன்வைக்கும் முறை உடனடியாக என்னை, ஐரோப்பாவில் நான் இருந்த காலகட்டத்திற்கு அழைத்துச் சென்றது. 2011-2013 இல் வார்சாவில் இருந்தபோது இந்த விவாதம் ஐரோப்பா முழுவதும் விவாதிக்கப்பட்டது நினைவுக்கு வந்தது. நானும் கூட அது தொடர்பில் எனது மாணாக்கர்களோடு , ஒரு உரையாடலை நடத்தினேன். குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு, அரசின் விதிகள் உருவாக்கும் நெருக்கடி என்பன தனிநபர்கள் சார்ந்தன அல்ல; இருவேறு பண்பாட்டில் வளர்ந்த மனிதர்களின் பொறுப்பு சார்ந்தன என்று அந்த உரையாடலில் பேசியதும், மாணாக்கர்கள் எனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததும் நினைவுக்கு வந்தது. இப்படியான நினைவூட்டலைச் செய்வது பொதுவாகப் புனைவெழுத்துகளின் தன்மையாக இங்கே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ரூபன் சிவராஜா ஒரு சினிமாவின் விமரிசனத்தின் ஆழ, அகலங்களின் வழியாக அதனை உருவாக்கியுள்ளார். இத்தகைய ஆழ, அகலங்களை அவரது ஒவ்வொரு கட்டுரையும் கொண்டுள்ளன என்பதை நான் எடுத்துக் காட்டமுடியும். அதற்குப் பதிலாக நீங்கள் வாசிக்கும்போது உணர வேண்டும் என்பதே முக்கியம்.
கடந்த கால் நூற்றாண்டில் கிழக்கே ஆஸ்திரேலியா தொடங்கி மேற்கே கனடாவரை புலம்பெயர்ந்து வாழும் புனைவெழுத்துக்காரர்கள் அதிகமும் தங்களது நினைவுத் தொகுதிகளாக – ஞாபகங்களின் அடுக்குகளாக இலங்கையின் வெளிகளையே எழுதியுள்ளார்கள். அதே நேரம் அவர்கள் வாழும் நாடுகளின்/ நகரங்களின் வெளிகளையும் தட்பவெப்பத்தையும் சந்திக்கும் மனிதர்களோடு அந்நிலத்து மனிதர்களோடு ஏற்படும் உரசல்களையும் சிறிதளவு காட்டுவதின் வழியாகப் புலம்பெயர் நாட்டின் அடையாளங்களையும் எழுதிக்காட்டியுள்ளனர். அப்படியான எழுதிக்காட்டல்கள் ரூபன் சிவராஜா மாதிரியான விமரிசன எழுத்தாளர்களுக்குத் தேவையில்லை. ஆனால் அவர் தீர்மானகரமானத் தான் வாழும் நாட்டின் அடையாளங்களைத் தனது கட்டுரைகளில் எழுதிக்காட்டியுள்ளார். அந்த அடையாளங்கள் புனைவெழுத்துகளில் இடம்பிடிக்கும் நகரவெளிகளோ, தட்பவெட்பச் சூழல்களோ மனித மனங்களோ அல்லை. அவர் வாழும் ஐரோப்பிய நாடு நார்வே. நார்வே ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்த பொருளாதார நிலையையும் சமத்துவ எண்ணங்களையும் தாராளமனநிலையையும் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கொண்ட நாடு. ஐரோப்பிய மறுமலர்ச்சியின் – நவீனத்துவத்தின் உச்சங்களைத் தொடர்ந்து தக்கவைக்கும் கல்வி நிலையங்களையும் அறிவுத்துறைகளையும் வளர்த்துக் கொண்டிருக்கும் சூழலால் இப்போதும் மதிக்கத்தக்க நாடு.
இந்தப் பின்னணியில் வாழும் ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழராகத் தனது நினைவுகளை – அறிவுத்துறைகள் சார்ந்த எண்ண ஓட்டங்களோடும் கலைப்பார்வையோடும் இணைத்து முன்வைப்பதைக் கவனமாகச் செய்துள்ளார். நார்வே நாட்டின் ஹென்ரிக் இப்சன் ஐரோப்பிய மறுமலர்ச்சி இலக்கியத்தின் தொடக்கமாகவும் உச்சமாகவும் இருப்பவர். அவரை மட்டுமல்ல; அவரை மேடையேற்றும் அரங்குகளை, அங்கிருந்து உலகத்திற்குத் தரப்பட்ட நவீனத்துவக் கவிதை மரபை, மானிடவியல் அறிவியலாளனை, பெண்ணியத்தின் பாலியல் விவாதங்களை என இந்நூலில் பேசப்பட்டுள்ள ஒவ்வொன்றும் கவனிக்கத்தக்க விவாதப்பொருள். அத்தோடு அந்நாட்டிற்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் அறிவுஜீவிகளும் கலைஞர்கள் நார்வேயின் தாக்கம்பெற்ற உருவாக்கிய செழுமைகளையும் விரிவாகத் தந்துள்ளார்.
முதன்மையாகத் தான் புலம்பெயர்ந்து வாழும் நார்வே நாட்டு நிகழ்வுகளைக் கவனப்படுத்துவதின் தொடர்பில் இரண்டு முக்கியமான எழுத்தாளர்களின் முழுமையான சித்திரங்களைத் தந்துள்ளார். ஒருவர் நீண்டகாலமாகக் கவிதை வடிவத்தில் செயல்பட்ட இளவாலை விஜயேந்திரன். தனக்கான கவி அடையாளத்தை உருவாக்கித் தந்த ஈழத்துக்கவிகள் ஒருவர். அவரது கவிதைகளைப் புதியவர்கள் வாசிப்பதற்கான அடிப்படைகளைத் தந்துள்ளது இந்நூலில் உள்ள கட்டுரை. இன்னொருவர் புனைவல்லாத எழுத்துத்துறையில் தொடர்ந்து பெரும்பங்களிப்புச் செய்த பேரா.ந.சண்முகரத்தினம். அவரது நான்கு நூல்கள் வெளியிடப்பட்ட நிகழ்வையொட்டி எழுதப்பெற்ற கட்டுரையும் கவனிக்கத்தக்க ஒன்று. நாவல், சிறுகதை போன்ற புனைவிலக்கியங்களில் பெரிதும் கவனம் செலுத்தாத ரூபன் சிவராஜா, முக்கியமெனக் கருதும் நாவல்களைப் பற்றிய தனது பார்வையையும் விரிவாகத் தந்துள்ளார். தொடர்ந்து போர்க்கால நாவல்களை எழுதிய குணா கவியழகனின் அண்மை நாவலான கடைசிக்கட்டில் போருக்குப் பிந்திய காலத்து வாழ்வியலை ஒரு மருத்துவமனையின் பின்னணியில் எழுதிக்காட்டிய நாவல் அந்நாவல் குறித்த கட்டுரையொன்றையும், நவமகனின் பெருநாவலான ‘போக்காளி’ குறித்த கட்டுரையும் புனைகதை வாசிப்பு முறை குறித்த அவரது பார்வைகளைத் தரும் கட்டுரைகள்.
கலைப்பேச்சு தொகுப்பில் ரூபன் சிவராஜா கவனப்படுத்தி எழுதியிருக்கும் அரங்கியல் மற்றும் நடனவியல் கட்டுரைகளின் தன்மையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் . அரங்கியலும் நடனவியலும் காட்சிக்கலை சார்ந்த அழகியலைக் கொண்டு பேசவேண்டியவை. நார்வேஜிய மொழிக் கலைவிழாக்களையும் அரங்க நிகழ்வுகளையும் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்புப்பெற்றுள்ள ரூபன், அவற்றைக் குறித்து அறிமுகக் கட்டுரைகளை எழுதாமல், அதற்குள் இயங்கும் ஐரோப்பியக் கருத்தியல்களையும் அழகியல்களை விளக்கிப் பேசுவதை விரிவாகச் செய்துள்ளார். ஐரோப்பிய நவீனத்துவத்தின் முன்னோடியும் நார்வேஜிய இலக்கியத்தின் பெருமிதமாகவும் விளங்கும் ஹென்றிக் இப்சன் குறித்த கட்டுரையை முதல் கட்டுரையாக வைத்துத் தொகுத்ததின் மூலம் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார் என்று கூடச் சொல்லலாம். அரங்கவியல் அனுபவங்களை விவாதிக்கும் கட்டுரைகள் முதன்மையாக அதனைக் காட்சிக்கலையாக உள்வாங்கி எழுதவேண்டும் என்பதை உணர்ந்து எழுதப்பட்டுள்ளன.
அரங்கியல் கட்டுரைகளைவிடவும் கூடுதல் நுண்ணுணர்வு வெளிப்படும் மொழியொன்றில் நடனக் காட்சிகளின் நிகழ்வுகளை எழுதியுள்ளார். அவற்றில் ஒரு பார்வையாளராக மட்டும் இல்லாமல் தயாரிப்பு நிலையிலிருந்தே உடனிருந்து கவனித்து உணர்ந்த தன்மையை வாசிக்க முடிகிறது. தனது கலாசாதனா அமைப்பின் வழியாக நடனப்பயிற்சிகள் வழங்குவதோடு, பயிற்சிபெற்றவர்களைக் கொண்டு சோதனை ரீதியான நவீன நடன அரங்க நிகழ்வுகளைச் செய்துவருபவர் கவிதாலட்சுமி. இந்திய நடனக்கலை மரபான பரதக்கலையில் செய்ம்முறை பயிற்சி பெற்ற கவிதா, தமிழின் அரங்கச்செயல்பாடுகளைப் பேசும் தொல்காப்பிய மெய்ப்பாட்டியல், சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை போன்றனவற்றை ஆய்வுபூர்வமாகக் கற்று, நிகழ்காலத்துக்குரியனவாக மாற்றும் முயற்சியில் இருப்பவர். இந்த நோக்கத்தோடு அவர் மேடையேற்றிய நடன அரங்கேற்றங்களையும் ஆற்றுகைகளையும் உடனிருந்த கவனித்த – விவாதித்த அறிவுடன் எழுதப்பெற்ற கட்டுரைகள் தமிழ் அரங்கியல் ஆர்வலர்களுக்குப் பலவற்றை உணர்த்தவும் புதியனவற்றில் ஈடுபடவும் தூண்டக்கூடிய எழுத்துகள். அசையும் ஓவியங்களாக மாறும் மனித உடல்களும், அவ்வுடல்கள் தாங்கிய உடைகளும் ஒப்பனைகளும் சேர்ந்து உண்டாக்கும் புனைவுலகம் பார்வையாளர்களை உடனடியாக இன்னொரு கற்பனைப் பரப்புக்குள் எவ்வாறு நுழைத்துவிடக்கூடியன என்பதை எழுத்தில் சொல்வது எளிதன்று. ரூபன் சிவராஜா இந்தக் கட்டுரைகளில் அதனைத் தொட்டிருக்கிறார்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை – கலையியல், இலக்கியவியல், அரங்கியல், சமூக அறிவியல், நவீனத் தொழில்நுட்பம் என ஒவ்வொரு துறையிலும் நார்வே நாடு தனக்குக் கற்றுத் தந்துள்ளதை ரூபன் சிவராஜா தனது மொழியில் எழுதுவதின் மூலம் தனது மொழியை வளப்படுத்தியுள்ளார். தமிழ்பேசும்/ தமிழில் படிக்கும் மனிதர்களுக்கு நார்வேயின் நவீனத்துவ மனநிலைகளைக் கடத்தும் வேலையை கலைப்பேச்சு என்ற நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் வாசிக்கமுடிகிறது. தமிழில் இப்போது புனைகதைகளில் செயல்பட ஏராளமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் திறனாய்வின் பக்கம் வரப் பெரும்பாலும் தயக்கமே இருக்கிறது.இந்தக் கட்டுரைகளை வாசிக்கும் ஒருவருக்குத் திறனாய்வின் விரிவான எல்லைகளை அறிந்துகொள்வது கைவரப்பெறும். அதன் மூலம் திறனாய்வுப் புலத்தில் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தூண்டப்படவும் வாய்ப்புண்டு.

கருத்துகள்