ஜெயமோகனின் கட்டுரைக்கு எதிர்வினையும் அவரது மாடன் மோட்சமும்
ஜெயமோகனின் தன்முனைப்பு
தான் பங்கேற்கும் செயல்பாடுகளைச் சரியென வாதாடுதல், தனது கலை, இலக்கியப்பார்வையும் திறனாய்வு முறையும் மட்டுமே அப்பழுக்கற்றது எனத் தன்னை முன்னிறுத்துதல் எப்போதும் அவரிடம் உண்டு. தான் எழுதத் தொடங்கியவுடன் வெகுஜன இதழியலின் தேவையை நியாயப்படுத்தியது தொடங்கி, தான் வசனம் எழுதியவுடன் தமிழ்ச் சினிமாவின் நேர்மறைத் தன்மையைப் பாராட்டியது வரை நடந்தவை தான். இப்போது அவரது 'மாடன் மோட்சம்' கதை மலையாளத்தில் நாடகமாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஓராண்டு முழுவதும் நிகழ்த்தப்படுவதாக இப்போது எழுதுகின்றார். ஆம் இப்போதுதான் (நாளைய நாடகம்,/டிசம்பர், 28) ஜெயமோகன் எழுதுகின்றார். ஏனென்றால் இன்று (ஜனவரி, 3 ) அந்த நாடகம் சென்னையில் நடக்க இருக்கின்றது. அதனைப் பார்க்க வைக்கும் நோக்கம் அதற்குள் இருக்கிறது. அவரது கதையைத் தழுவிய "நாடகத்தைப் பாருங்கள்" எனச் சொல்வது தவறல்ல. அதற்காகத் தமிழின் சோதனை நாடகங்களையும் முதன்மையான நாடக இயக்குநரும் பயிற்சி ஆசிரியருமான சே.ராமானுஜத்தையும் எதிர்த்து எழுதிக் கூட்டம் சேர்க்க வேண்டும் என்பது என்ன வகை வாதம் என்று தெரியவில்லை.
பேரா.சே.ராமானுஜம்
சே.ராமானுஜம் சிறந்த நாடகாசியர் என்று அவரும் சொல்லிக் கொண்டதில்லை; அவரது நாடகங்களை வாசித்தவர்களும் சொன்னதில்லை. அவையெல்லாம் ஆற்றுகைப் பனுவல்கள்தான். ஆனால் அவரது இயக்கத்தில் மேடையேற்றப்பட்ட தமிழ் நாடகங்கள் தந்த காட்சியின்பங்களும் கருத்தியல் விவாதங்களும் சமகாலத்தன்மைகளும் மறுக்க முடியாதவை. தமிழ்நாட்டில் அவர் பணியாற்றிய தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறைக்காகவும், சென்னையில் இயங்கிய கூத்துப்பட்டறைக்காகவும், பாண்டிச்சேரி பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பள்ளிக்காகவும் அவர் இயக்கித் தந்த நாடகங்களைப் பார்க்காமலேயே அவரை வெறும் 'ட்ரெயினர்' எனச் சொல்வதும், அதற்குச் சுந்தரராமசாமியைத் துணைக்கழைப்பதும் வழக்கமான ஜெயமோகனின் உத்திதான்.

அரங்கியல் துறையில் 'ட்ரெயினர்' ஆக இருப்பது ஒன்றும் எளிதான காரியமல்ல. அவரது டிரெயினிங்கில் - பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டு நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் ஆனவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் அதிகம். இந்தியா முழுவதிலும் - இந்திய மொழிகள் பலவற்றிலும் இருக்கின்றார்கள். முதன்மையான எண்ணிக்கையில் மலையாளிகள் தான் இருக்கின்றார்கள். கன்னடத்தின் நீநாசமும் டெல்லியின் தேசிய நாடகப்பள்ளியும் அவரை அழைத்துப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டது. பயிற்சியாளராகவும் இயக்குநராகவும் தன்னை நிறுவிய தமிழ் ஆளுமை சே.ராமானுஜம்.
அவர் ஒருங்கிணைத்து நடத்திய ஒன்றுக்கு மேற்பட்ட பயிலரங்கங்களில் பங்கேற்றுள்ளேன். அவர் இயக்கிய நாடகங்களுக்குப் பின்னரங்கில் அரங்கப்பொருள், ஒளியமைப்புப்பனிகளில் உதவி செய்துள்ளேன், குழுநிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளேன். நடிக்கவும் செய்துள்ளேன். ஜெயமோகன் தனது நண்பர் எனச் சொல்லும் இளங்கோ குமரவேலை நடிகனாக உருவாக்கியதில் சே.ராமானுஜத்தின் பங்கு உண்டு. அவரது நடிப்பில் இ.பா.வின் காலயந்திரத்தில் நடித்த அனுபவத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். நடப்பியல் நடிப்புக்கு ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் மெத்தட் ஆக்டிங் -Method Acting- பயிற்சி முறைகளின் பொருத்தப்பாட்டை அவரிடமிருந்தே குமரவேல் கற்றுக் கொண்டார். அவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முதல் பிரிவு மாணவர். சே.ராமானுஜத்தின் பயிற்சி முறை, இயக்கும் முறை, எழுத்துப் பனுவலை ஆற்றுகைப் பனுவலாக ஆக்கும் தன்மை என எதுவொன்றையும் பார்க்காமல் கருத்துச் சொல்வது கண்டிக்கத்தக்கது. சே.ராமானுஜத்தின் மாணவனாக இந்தக் கட்டுரையின் மீது எனது கண்டனங்களைச் சொல்கிறேன்.
******
கேரளத்தின் நாடகப்பண்பாடு
கேரளத்தில் ஜெயமோகனின் கதையைத் தழுவிய மாடன் மோட்சம் மட்டுமே ஓராண்டு முழுவதும் நடக்கின்றது என்பதில்லை. மலையாளத்தில் இயங்கும் நாடகக்குழுக்கள் ஒரு நாடகத்தைத் தயாரித்து முடிக்கக் குறைந்தது மூன்று மாதங்கள் எடுத்துக்கொள்கின்றன. முதல் மேடையேற்றத்துக்குப் பின்னர் கேரளத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அந்த நாடகத்தை மேடையேற்றும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார்கள். புதுச்சேரியில் பயின்ற மாணவர்கள் நீண்ட விடுமுறை எடுத்துக் கொண்டு அந்த நேரத்தில் போய்விடுவார்கள்.
மலையாளத்தில் இப்படியொரு நாடகப்பண்பாடு உயிர்ப்போடு இருக்கக் காரணங்கள் மூன்று நிறுவனங்கள். முதலாவது நிறுவனம் கேரள அரசு. பெருநகரங்களில் மட்டுமல்லாது சின்னச்சின்ன நகரங்களில் கூட நாடகம் நடனம், இசைக்கச்சேரி போன்ற நிகழ்த்துக்கலைகளை மேடையேற்றத்தக்க அரங்குகளை உருவாக்கி வைத்திருக்கின்றது. இரண்டாவதாக அரசின் நிதியளிப்பில் இயங்கும் கேரள சங்கீத் நாடக அகாடமியைச் சொல்லலாம். நாடகங்கள் தயாரிக்கவும், எழுதவும் பயிற்சி வகுப்புகள் நடக்கவும் மானியங்களை வழங்குகின்றது அகாடமி. மூன்றாவதாக நாடகக்கலையை வாழ்வதாரத்துடன் இணைத்துச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை கொண்ட கலைஞர்கள் அங்கே உருவாகிக் கொண்டே இருக்கின்றார்கள். அதன் பின்னணியில் பல்வேறு கலைக்குழுக்களும் தனியார் நிறுவனங்களும் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் சேர்ந்து செயல்பட நாடகத்துறைப் பயிற்சிகளைப் பெற்ற நாடகத்துறை மாணாக்கர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கான பயிற்சிகளையும் பட்டத்தையும் வழங்கும் திருச்சூர் நாடகப்பள்ளி அங்கு இருக்கின்றது.
திருச்சூர் நாடகப்பள்ளியின் தொடக்கம் முதலே அதன் இணை இயக்குநராக இருந்தவர் சே.ராமானுஜம். அவருக்கும் மேலாக - இயக்குநராக இருந்தவர் ஜி.சங்கரப்பிள்ளை. ஜி. சங்கரப்பிள்ளை நாடக ஆசிரியர் மட்டுமே. சே.ராமானுஜம் தான் அவரது நாடகங்களை இயக்கிக் காட்டிக் காட்சிப்படுத்தியவர். அவரது கறுத்த தெய்வத்தைத் தேடி சே.ராமானுஜத்தின் இயக்கத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து மேடையேறிய நாடகம். நானே இரண்டு தடவை பார்த்துள்ளேன். கேரளம் முழுவதும் நிகழ்த்தப்பட்ட நாடகம். அந்தக் காலத்தில் தான் காந்திகிராமத்தில் 70 நாட்கள் நாடகப்பட்டறை ஒன்று தேசிய நாடகப்பள்ளியின் உதவியுடன் காந்திகிராமத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது. திருச்சூர் நாடகப்பள்ளியிலிருந்து தான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியம் காலத்தில் தஞ்சைக்கு வந்தார். வந்த காலத்திலிருந்து அவர் நடத்திய பயிலரங்குகள் துறையின் எல்லைகளைத் தாண்டியவை. பல்வேறு இடங்களுக்கும் சென்று பயிலரங்குகள் நடத்தினார்; நடிகர்களை உருவாக்கினார். அவர் தன்னைப் பயிற்றுநர் -ட்ரெயினர் என்றே நம்பிச் செயல்பட்டார்.
மாடன் மோட்சம்
ஜெயமோகனின் மாடன் மோட்சம் கதையில் நாடகத்தன்மை இல்லை என்று ராமானுஜம் எந்தப் பொருளில் சொன்னார் என்று தெரியவில்லை. நான் சுந்தரராமசாமியின் பல்லக்குத்தூக்கிகளையும் புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகத்தையும் நாடகமாக்கியபோது இன்னும் என்னென்ன கதைகளை நாடகமாக்கலாம் என்று அவரோடு பேசியதுண்டு. ஜெயகாந்தனின் ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன, கோணங்கியின் மாயாண்டிக் கொத்தனின் ரசமட்டம் முதலான கதைகளைச் சொன்ன போது ஜெயமோகனின் கதைகளில் ஒன்றையும் குறிப்பிட்டேன். அது மாடன் மோட்சம் கதை தானா ? என்பதை இப்போது உறுதியாகச் சொல்லமுடியவில்லை.
மாடன் மோட்சம் கதை இடம்பெற்ற திசைகளின் நடுவே தொகுப்பு வெளியிட்டு விழா திருவண்ணாமலையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கலை, இலக்கிய இரவில் பல நிகழ்ச்சிகளுக்கு இடையே நடந்தது. பாண்டிச்சேரியிலிருந்து போயிருந்தேன். அங்கு வாங்கி அடுத்த நாள் வாசித்த கதை. கதை எழுதப்பெற்ற முறையில் காட்சி, அங்கம் என நாடகத்தின் கூறுகளும், புனைகதையிலிருந்து நாடகத்தை வேறுபடுத்தும் முதன்மையான கூறான உரையாடல்களும் இல்லையே தவிர, ஒரு நாடகப் பனுவலின் அனைத்துக் கூறுகளும் கொண்ட பனுவல் தான். கதை சொல்லியின் விவரிப்புகள் அனைத்தும் நடிகர்களின் பாவனைகளுக்கும் அசைவுகளுக்குமான குறிப்புகள் தான். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து எனப்பிரித்துப்பிரித்து - பிரிவுகளைக் கொண்ட கதை அது. இந்த எண்களைக் காட்சிகளாகக் கொள்ளலாம். ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு வெளியில் நடக்கும் நிகழ்வுகள். தொடக்கம், வளர்ச்சி, முரண், வீழ்ச்சி, முடிவு என்ற அரிஸ்டாடிலிய வடிவம் அதற்குள் இருந்தது. அரிஸ்டாடிலிய வடிவம் தான் பரதர் சொல்லும் வடிவமும்.
கதையில் பாத்திரங்களின் உரையாடல்கள் முழுவதும் தமிழ் வரிவடிவத்தில் எழுதப்பெற்ற மலையாள/ குமரித்தமிழ் வழக்காற்று மொழி. குறிப்பாக மாடனும் பூசாரியும் பேசும் உரையாடலக்ள் முழுமையாக மலையாளத்தில் உரையாடுவதுபோலவே இருக்கும். இந்தக் காரணத்தினாலேயே அந்தக் கதையை நாடகம் ஆக்காமல் கைவிட்டேன். மண்டைக்காடு நிகழ்வை நினைவூட்டும் காட்சிகளைக் கொண்ட அந்தக் கதையைக் கவனமாக மேடையேற்ற வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் ஆர் எஸ் எஸ் ஆதரவு நாடகமாக ஆகும் வாய்ப்புண்டு.

உரையாடலில் வெளிப்படும் அங்கதத்தொனியும் சொற்களும் சமயவாதிகளின் உள்நோக்கங்களைக் குறித்த விமர்சனங்கள் என்றாலும், அதிகமும் விமரிசிக்கப்பட்டது கிறித்தவ மதப் பரப்புரையாளர்களின் நடவடிக்கைகள்தான். அத்தோடு அரசின் கண் துடைப்பான சமர முயற்சிகளும் விமரிசனமாகப் பார்க்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் சநாதனக் கருத்தியல்கள் விவாதப்படும் இந்த நேரத்தில் மேடையேற்றப்பட வேண்டிய காட்சிகள் கொண்ட கதை என்பதை மறுப்பதற்கில்லை. இப்போது மேடையேற்றும் மலையாள நாடகக்குழு எப்படிப்பட்டதொரு வெளிப்பாட்டுத் தன்மையை - இண்டர்பிரெட்டேசனைத் தந்துள்ளார்கள் என்பதைப் பார்த்தால் தெரியும்.

கருத்துகள்