ஒரு கலைஞனுக்காகக் காத்திருத்தல்
மகாத்மாவுக்காகக் காத்திருத்தல் ஆர்.கே. நாராயணன் எழுதிய கதையின் பெயர். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர் என்பதாக அறியப்பட்ட ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன் பிறப்பால் தமிழர். ஆனால் வாழ்ந்தது கர்நாடகத்தில். அவரது பெரும்பாலான கதைகளின் களனாக இருக்கும் மால்குடி என்ற புனைவு நகரம் கர்நாடகக் கிராமங்களின் சாயலையும் இந்திய நகரங்களின் பொதுத் தன்மையையும் கொண்டது. இந்திய வறுமையையும் அறியாமையையும் மட்டுமே எழுதி உலகச் சந்தையில் விற்றுக் காசாக்கிக் கொண்டார் என்று யாரும் அவரைக் குற்றம் சொல்லி விட முடியாது. எளிய வாழ்க்கையை வாழும் இந்திய மனிதர்களின் அறியாமையின் பலவீனத்தை எழுதுகிறாரா? அல்லது அந்த அறியாமையின் காரணமாக உண்டாகும் ஆன்ம பலத்தை எழுதுகிறாரா? எனக் கண்டறிய முடியாத- பிரித்துப் பார்க்க முடியாத எழுத்து அவருடையது. இதையெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி உலகத்திற்குச் சொன்னார் அவர்.
எளிய மனிதர்களை எழுதுவதற்கேற்ற எளிமையான ஆங்கிலத்தை தனது படைப்பு மொழியாகக் கொண்டார் என்பது ஆர்.கே. நாராயணனின் மிகப்பெரிய பலம். 35 நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டுள்ள ஆர்.கே.நாராயணனைப் பலரும் பல கதைகளுக்காகப் பாராட்டுவார்கள். ஆனால் நான் அவரை நான் நினைத்துக் கொள்வது மகாத்மாவுக்காகக் காத்திருத்தல் (Waiting for Mahatma) என்ற தலைப்புக்காகவும் அப்புனைகதை எழுப்பிய விசாரணைகளுக்காகவும் என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.
ஆர்.கே.நாராயணனின் மகாத்மாவுக்குக் காத்திருத்தல் என்ற தலைப்பும் நூலும் நினைவுக்கு வரும்போது கூடவே ஐரிஷ் நாடக ஆசிரியர் சாமுவேல் பெக்கட் எழுதிய கோதாவுக்குக் காத்திருத்தல் ( Waiting for Godat) என்ற நாடகமும் நினைவுக்கு வரும். குழந்தைமைப் பருவத்தைக் கடந்தவுடன் ஒழுக்க விதிகளுக்குள் அகப்படும் மனிதன் ஒவ்வொரு நாளையும் கடப்பது கடவுள் தரப்போகும் கடைசித் தீர்ப்புக்காகத்தான் என்பதைக் குறியீடாகக் காட்டும் அந்த நாடகத்தை எழுதிய பெக்கட் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர். கடைசித் தீர்ப்பு நாள் அல்லது நியாயத் தீர்ப்பு நாள் என்பது கிறித்தவ மத நம்பிக்கை சார்ந்த ஒரு தொன்மம். ஒவ்வொரு கணத்தையும் நிமிடங்களையும் தனக்காக வாழ்வதாக நம்பும் மனிதர்கள் அப்படி வாழ்வதாக நம்புவது ஒரு மாயைதான்; உண்மையில் ஒவ்வொரு நாளையும் மனிதர்கள் கடவுள் வழங்கப் போகும் பரலோக ராஜ்ஜியம் என்னும் கொடை வாழ்வு அல்லது சாத்தானின் இருள் உலகம் என்னும் தண்டனை வாழ்வு என்பதை நினைத்து நினைத்துப் பெருமித உணர்வுக்குள்ளும் குற்றவுணர்ச்சிக்குள்ளும் தான் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழக அரசு திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு அளித்த வரிச்சலுகையை மறுபரிசீலனை செய்ய உள்ளது என்ற பட்ஜெட் அறிவிப்பு செய்த போது ஆர்.கே.நாராயணனும் சாமுவேல் பெக்கட்டும் அவர்களின் தலைப்புக்களுக்காக நினைவுக்கு வந்தார்கள்.
ரவி என்ற இளம் நடிகர் நடித்த முதல் படத்தின் பெயர் ஜெயம் . இச்சொல் வெற்றி என்ற பொருள் தரும் ஒரு வடமொழிச் சொல். அப்படம் வியாபார ரீதியில் வெற்றிப் படமாக அமைந்ததால் தனது பெயருடன் அதைச் சேர்த்துக் கொண்டார் ரவி. இவர் நடித்து அடுத்துத் திரைக்கு வந்த படத்தின் பெயர் something something எனக்கும் உனக்கும் . இத்தலைப்பில் இருந்த ஆங்கில எழுத்துக்களைப் பின்னர் சம்திங் சம்திங் எனத் தமிழ் எழுத்துக்களாக மாற்றி அச்சிட்டனர். ஆங்கிலத்தில் இருந்த something something என்பதும் இல்லை .தமிழில் எழுதப்பட்ட சம்திங் சம்திங் என்ற இரட்டைக் கிளவியும் இல்லை .
முதல் வாரத்தில் பாதி ஆங்கில எழுத்துகள்; பாதி தமிழ் எழுத்துக்கள். அடுத்த வாரம் மொத்தமும் தமிழ் எழுத்துக்கள் ; ஆனால் உச்சரிப்பு ஆங்கிலம். மூன்றாவது வாரத்தில் ஆங்கில எழுத்துக்களும் போய் விட்டன; ஆங்கில உச்சரிப்புச் சொற்களும் போய்விட்டன. வெறும் எனக்கும் உனக்கும் மட்டும்தான். முதல் வாரத்திற்குப் பின்னர் நடந்த மாற்றம் படத்தின் பார்வையாளர்களுக்குக் கூடுதலாகப் புரியும் தலைப்பைத் தர வேண்டும் என்ற ஆர்வம் எனச் சொல்லலாம். ஆனால் மூன்றாவது வாரத்தில் ஆங்கிலம் காணாமல் போனதற்குக் காரணம் பார்வையாளர்கள் அல்ல; அரசாங்கம் அறிவித்த கேளிக்கை வரி ரத்து என்ற சலுகையைப் பெற்றுவிட வேண்டும் என்ற ஆசை தான். அந்தப் படம் கேளிக்கை வரி ரத்து என்ற சலுகையைப் பெற்றதா என்று தெரியவில்லை.
அதைப் போலவே அந்தச் சலுகையைப் பெற்றுவிடும் துடிப்பில் எடுத்து முடித்த படங்களும், எடுத்துக் கொண்டிருந்த படங்களுக்கும் தமிழ்ப் பெயர்களை நமது இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தேடிய கதை கடந்த ஓராண்டாக நடந்தது. சூர்யா நடித்து வெளிவந்த ஜில்லென்று ஒரு காதல், சில்லென்று ஒரு காதல் என ஒரேயொரு எழுத்தை மாற்றிக் கொண்டதால் சுத்தத் தமிழ்ப் படமாக மாறிக் கொண்டது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி,என்ற படத்தின் பெயரில் உள்ள கடைசி எழுத்து ஜியை மட்டும் மாற்றியிருந்தால் சிவாசி ஆகி- தமிழாக ஆகி- வரிச் சலுகையப் பெற்றிருக்கலாம். கமல்ஹாசன் பத்து வேடங்கள் ஏற்று நடித்த தசாவதாரம், பத்துப் பிறப்புகள் எனப் பெயர் சூட்டிக் கொண்டு வரிச்சலுகை கேட்டிருந்திருக்கலாம்.
வேற்று மொழிச் சொல்லோ வாக்கியமோ தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் எழுதப்பட்டால் தமிழ்த் தலைப்பைத் தாங்கிய படமாக ஆகி விடுமா..?இந்தப் படங்களின் உள்ளடக்கத்தில் எந்தவித மாற்றமும் நிகழாமல், கதை சொல்லலில், கதைக்களன்களில், கதை நிகழும் காலத்தைக் காட்டுவதில், காட்சிகளை உருவாக்கி அடுக்குவதில் எனப் பட உருவாக்க முறைகளில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமலேயே -வெறும் தலைப்பு மாற்றத்திலேயே தமிழ்ப் படம் உருவாகிவிடும் என நினைப்பது ஆச்சரியம் தரும் போக்கல்லாமல் வேறல்ல. அப்படியான ஒரு போக்கின் வெளிப்பாடு தானே கௌதம மேனன் தனது படத்திற்கு வாரணம் ஆயிரம் எனப் பெயரிட்டது.
ஒரு மொழியின் வளர்ச்சியில் பெயர்களுக்கும் பெயர்ச்சொற்களுக்கும் முக்கியமான இடமுண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. மேலோட்டமாகப் பார்த்தால் பெயர்கள் வெறும் அடையாளங்கள் போலத் தோன்றலாம். ஆனால் நிதானமாக யோசித்தால் பெயர்களும் பெயர்ச்சொற்களும் வெறும் அடையாளங்கள் மட்டும் அல்ல. அவைதான் அந்தப் படைப்பின் அர்த்தமும் கூட. பெயரிடும்போது வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் சேர்த்துப் பெயரிடுதல் முழுமையான பெயரிடல் முறையாக அமையும்.
கால்குலேட்டரைக் கணிப்பான் எனத் தமிழ்ப் படுத்திய போது அந்தக் கருவி கணக்கிடுதல் என்னும் பணியைச் செய்வதற்கு ஆதாரமான கருவி என்ற அர்த்தத்துடன் பெயரிடப் பட்டது.ஆனால் கம்ப்யூட்டர் வந்தபோது கணக்கிடுதலுடன் கூடுதல் வேலைகளைச் செய்யும் கருவி என்று புரிந்ததால் கணிப்பான் சுருக்கப்பட்டு கணிணி என்ற சொல் அதன் பெயராக ஆகியது. கம்ப்யூட்டர் செய்யும் எல்லாப் பணிகளையும் குறிக்கும் அர்த்தம் இச்சொல்லிற்கு இல்லை என்றாலும் கணக்கு, கணிதம், கணியன் எனப் பழைய தமிழ்ச்சொற்களுக்குள் கணிணியின் சில பணிகளின் அர்த்தம் கிடைக்கும் என்பதால் ஓரளவு பொருத்தமாக கருதப் படுகிறது.
பெயரிடுதலில் மொழியின் வளர்ச்சி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை; ஆனால் சினிமாவின் பெயர் களைத் தமிழில் வைப்பதால் மட்டுமே மொழி வளர்ச்சி அடையப் போவதில்லை. அதுவும் அரசு தரும் வரிச்சலுகைக்காக மட்டும் பெயர்களை மாற்றும் இவர்கள் நோக்கம் உள்ளடக்க மாற்றம் அல்ல; வெறும் பெயர் மாற்றம் மட்டும் தான். அந்தப் படத்தின் கதைப்போக்கும் ,காட்சி அமைப்புக்களும், சொல்லும் நீதியும், உண்டாக்கும் உணர்ச்சிகளும் எந்த விதத்திலும் இந்தப் பெயர் மாற்றத்தால் மாறிவிடப் போவதில்லை. வழக்கமான ஆறு பாட்டு, நாலு சண்டை, இடையிடையே நகைச்சுவைக் காட்சிகள் எனக் கட்டமைக்கப்படும் தமிழ் சினிமா என்னும் பண்டம் உண்டாக்கப் போவது வழக்கமான பிற்போக்குத் தனமான கருத்துக்களைத் தான். அப்பண்டத்தின் பெயர் தமிழில் இருப்பதால் என்ன விளைவு ஏற்படப் போகிறது. இதற்கு ஏன் வரி விலக்கு அளிக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கு வர வேண்டிய பணத்தை மக்கள் விரோத சினிமாவிற்கு இதுவரை வழங்கியதே பொறுப்புள்ள அரசின் வேலை அல்ல.
பழந்தமிழ் இலக்கணம் பெயரிடல் பற்றிக் குறிப்பிடும் போது பொதுப் பெயர், சிறப்புப் பெயர் என இரண்டாகப் பிரித்துப் பேசிவிட்டு அவற்றை மேலும் காரணப்பெயர், இடுகுறிப்பெயர் என்றெல்லாம் வகைப்படுத்தி விரித்துப் பேசியுள்ளது. இந்த வகைப்பாடுகளும் விரித்தலும் மனிதர்களுக்கும் பொருட்களுக்கும் பெயரிடும்போது பின்பற்ற வேண்டியன மட்டும் அல்ல. ஒருவன் எழுதிய கவிதைக்கும் எடுக்கும் சினிமாவுக்கும் அரங்கேற்றும் நாடகத்திற்கும் பெயரிடும் போதும் கவனிக்க வேண்டியன தான்; ஆனால் ஒரு சிறிய வேறுபாட்டுடன்.
நுகர்பொருளாகத் தயாரிக்கப்படும் பொருட்களும்¢ கலைப்படைப்பாக உருவாக்கும் படைப்பும் அடிப்படையில் வேறுபாடு கொண்டவை என்பது உணரப்பட வேண்டும். நுகர்வோரைக் குறி வைத்துத் தயாரிக்கப் படும் பண்டங்கள் பெரும்பாலும் கண்ணையும் செவியையும் நோக்கிய பெயர்களைத் தேர்வு செய்கின்றன. சில நேரங்களில் வாயையும் கவனத்தில் கொள்கின்றன.எளிமையாகவும் கவர்ச்சியாகவும் உச்சரிக்கத் தக்க பெயர்களாகவும், திரும்பவும் சொல்லத்தக்க பெயர்களாகவும் பண்டங்களுக்குப் பெயரிடுவதையே வியாபாரக் கம்பெனிகள் நோக்கமாகக் கொள்கின்றன. பெப்சி, கோக் என இரண்டெழுத்துப் பெயர்கள் சூட்டப் படுவதில் உள்ள பின்னணி விரைவாகச் சொல்லத்தக்கதாக அமைய வேண்டும் என்பதுதான். தமிழ் சினிமாவிலும் இரண்டெழுத்து, மூன்றெழுத்துப் பெயர்களே அதிகம் வைக்கப் படுகின்றன. தொலைக்காட்சி அலைவரிசைகளுக்குப் பெயர் சூட்டும் தனியார்கள் கூட இரண்டெழுத்து, மூன்றெழுத்துப் பெயர்களையே அதிகம் நாடுகின்றனர். சன், ஜெயா, ராஜ், விஜய் எனச் சுருக்கமாக இருப்பது திரும்பத் திரும்பச் சொல்லப்பட வேண்டும் என்பதற்காகத்தான். இவையெல்லாம் வியாபாரத்தின் ஒரு கூறு; அவ்வளவு தான்.
ஆனால் படைப்பு அதன் வாசகனை அல்லது பார்வையாளனை வெறும் நுகர்வோனாக மட்டும் கருது வதில்லை. அவனது செவிக்கும் கண்ணுக்கும் இதழுக்கும் வேலை தருகிறது என்றாலும் அவற்றை யெல்லாம் தாண்டி மனத்தோடு உறவு கொள்வதை நோக்கமாகக் கொள்கிறது. மனத்தோடு பேச வெறும் அடையாளம் போதாது ;ஆழமாகச் சென்று தங்கும் உள்ளர்த்தம் வேண்டும்.ஒரு படைப்பாளி தனது படைப்பில் உள்ளர்த்தத்தை உருவாக்கி விட்டு அதைக் கொஞ்சமும் உணர்த்தாமல் போனால் அந்தப் படைப்பின் நோக்கமும் நிறைவேறாது. இந்த நிலையில் உள்ளர்த்தத்தைக் கோடி காட்டும் விதமான குறியீடும் தர வேண்டும். அந்தக் குறியீடு தான் படைப்பின் பெயர் அல்லது தலைப்பு. ஜெயகாந்தனின் தலைப்புக்களான சில நேரங்களில் சில மனிதர்கள், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன போன்ற தலைப்புகள் சொல்ல வருவன பல ஆழமான அர்த்தங்களை. புதுமைப்பித்தனின் பொன்னகரம் அல்லது அகல்யா என்ற பெயர்கள் உணர்த்தியன அக்கதைகளின் ஆழமான உள்ளடக்கத்தின் முரண்களை. ஆனால் நமது சினிமாக்காரர்களின் தலைப்புகளின் நோக்கமோ வேறு. பார்வையாளர்களை அரங்கை நோக்கி இழுக்க வேண்டும் என்பது தான் முதன்மையான நோக்கம்.
தங்களின் இயக்கத்தில் உருவாகும் ஒரு படைப்பு தனது மொழியின் இயல்புகளோடும், அம்மொழி பேசும் மக்களின் இயல்புகளோடும் பொருந்தி நின்று அவர்களின் வாழ்க்கையை விசாரிக்கிறது எனக் கருதும் ஒரு இயக்குநர் தனது படத்தின் தலைப்பாக அல்லது பெயராக ஒரு தமிழ்ச் சொல்லை வைப்பது இயல்பான ஒரு நடைமுறை. அவ்வாறு வைக்காமல் வேற்று மொழிச் சொல்லைப் பெயராக வைக்கிறான் என்றால் அந்தப் படைப்பைத் தமிழின் இயல்பிலிருந்து உருவாக்கியிருக்க மாட்டான் என்று சுலபமாகச் சொல்லி விடலாம். அல்லது அந்தத் திரைப்படம் கலைப்படைப்பாக உருவாக்கப்படாமல் நுகரும் பண்டமாக உருவாக்கப் பட்டிருக்கும் எனக் கூறிவிடலாம். வேற்று மொழிசார்ந்த அல்லது வேறு பண்பாடு சார்ந்த பிரச்சினையைச் சொல்லும் ஒரு படைப்பை அந்த மொழியின் சாயல் கொண்ட தலைப்பால் அல்லது பெயரால் அழைப்பதும் , அறிந்து கொள்வதும் பெரிய தவறு என்றோ, இயல்புக்கு மாறானது என்றோ கருத வேண்டியதில்லை.
உலக அளவில் இடதுசாரிக் கலை இலக்கியம் வலுப்பெற்ற காலத்தில் கலை கலைக்காகவா? கலை வாழ்க்கைக்காகவா ? என்ற மாபெரும் விவாதம் நடைபெற்றது. அவ்விவாதத்தின் தொடர்ச்சியாக ஒரு படைப்பின் வடிவம் மற்றும் உள்ளடக்கம் பற்றியும், புறத்தூண்டல் மற்றும் அகத்தூண்டல் பற்றியும் விவாதங்கள் நடைபெற்றன. ஒரு படைப்பு பெயர், கதை கூறும் முறை, மொழி நடை போன்ற வடிவங்களுக்கு முக்கியத்துவம் தருவதை விட உள்ளடக்கத்திற்கும் உணர்த்தும் கருத்துக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்; அத்தகைய படைப்புகளே சமூகப் பொறுப்புள்ள படைப்புகளாக விளங்கக் கூடியன என்றெல்லாம் முடிவுகள் கூறப்பட்டன. தமிழ் நாட்டில் இடதுசாரி இயக்கங்களும் திராவிட இயக்கங்களும் அவ்வியக்கத்தைச் சார்ந்த எழுத்தாளர்களும் இத்தகைய முடிவுகளின் ஆதரவாளர்களாக இருந்தார்கள். இன்றும் கூட அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் ஆச்சரியமான ஓர் உண்மை என்னவென்றால் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயரிடுவது என்பது வடிவ மாற்றத்தின் ஒரு கூறு என்பதைக் கூட உணராமல் இருக்கிறார்கள் என்பது தான்.
படங்களுக்கான வரிச்சலுகையை மறுபரிசீலனை செய்யும் என்ற அறிவிப்பினை அடுத்து சில தினங்களில் தமிழக அரசின் கலை பண்பாட்டு நிறுவனமான இயல் இசை நாடக மன்றம் அறிவித்த கலைமாமணி விருதுகள் பட்டியலும் வந்தது. நூறு பேரை நெருங்கும் எண்ணிக்கையில் அந்தப் பட்டியல் இருந்தது. இந்த ஆண்டு என்றில்லை;கடந்த ஆண்டும் இப்படித்தான். ஒரு பெரும் எண்ணிக்கையிலான கலைமாமணிகள் அறிவிக்கப்பட்டனர். இந்த ஆட்சிதான் இப்படிச் செய்கிறது என்றில்லை. மூன்று ஆண்டுகளுக்கான விருதுகளை ஒரே நேரத்தில் அறிவித்தது இதற்கு முந்திய ஆட்சி. கலைமாமணி விருதுகள் கூடத் தேர்தலில் வாக்குகள் சேகரிக்கும் ஒன்றாகப் பார்க்கப்படும் அவலத்தை நோக்கி நகர்த்தப் பட்டுவிட்டதைத் தமிழகத்தின் துயரம் என்று தான் சொல்ல வேண்டும்.
பண்பாட்டு அரசியல் தளத்தின் மேல் எழுந்த திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து கலை பண்பாட்டு நடவடிக்கைகளில் – அவற்றிற்கான அங்கீகாரத்தைத் தருவதில் பின்பற்றும் கொள்கை வெகுமக்கள் ரசனையை மட்டும் அங்கீகரிப்பதாக இருக்கிறது என்பது விசித்திரமான முரண்பாடு. இதை அவ்வியக்கத்தின் அறிவாளிகளும், ஆதரவாளர்களும் உணர்ந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மு.கருணாநிதி என்ற தனது பெயருக்கு முன்னால் கலைஞர் என்ற பெயரைத் தாங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்து விட்ட ஒருவரது ஆட்சியில் கலை எது? என்பதைக் கண்டறிய முடியாமல் தவிப்பதும், அங்கீகரிக்கப் பட வேண்டிய கலைஞர்கள் யார்? என்பதை முடிவு செய்வதில் தெளிவற்ற பொத்தாம் பொதுவான போக்குகள் நிலவுவதைப் பார்த்த போது தான் இந்தக் கட்டுரைக்கான தலைப்பு- ஒரு கலைஞனுக்காகக் காத்திருத்தல் -நினைவுக்கு வந்தது.
திராவிட இயக்கத்தின் அடிப்படையான பண்பாட்டுக் கொள்கையிலிருந்து விலகாமல் தனது இலக்கியக் கொள்கையைப் பின்பற்றுவதில் எப்போதும் பயணம் செய்பவர் கலைஞர் மு.கருணாநிதி. அவரது சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், திரைப்பட வசனங்கள், கட்டுரைகள், பழைய இலக்கியங்களை இன்றைய நோக்கில் எழுதும் உரைக் கோவைகள் என எதிலும் அவரது இலக்கியம் பற்றிய கருத்திலிருந்து ஒரு போதும் விலகியவரல்ல மு.கருணாநிதி. அவரது இலக்கியக் கொள்கை மட்டுமே சரியானது என்ற ஒற்றைப் பார்வை கொண்டவரும்கூட கலைஞர்; வெவ்வேறு இலக்கியப் பார்வைகள் இருக்கின்றன; அவரவர் வாழ்க்கை நோக்கு, சிந்தனைத் தெளிவு என்பதற்கேற்ப இலக்கியக் கொள்கை மாறும் என்பதை ஏற்றுக் கொண்டவர் அவர். இல்லையென்றால் அவரால் ஜெயகாந்தனை படைப்பாளியாக அங்கீகரித்திருக்க முடியாது. இன்னும் சொல்வதென்றால், அவரது கவிதை பாணியைப் பின்பற்றாத கனிமொழியைக் கவிஞராக ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். கனிமொழியின் கவிதைகளிலிருந்து விலகிய தன்மைகள் கொண்ட கவி தமிழச்சி, கவி சல்மா ஆகியோரைக் கவிகளாக அங்கீகரித்திருக்க மாட்டார்.
தனது கலையின் நோக்கம் எது? தனது எழுத்து எதற்குப் பயன்பட வேண்டும் என்பதில் தெளிவான கருத்தையும் தீர்க்கமான முடிவையும் கொண்ட கலைஞரின் ஆட்சி, அங்கீகரிக்கப் பட வேண்டிய கலைஞர்கள் யார் என்பதை முடிவு செய்வதில் இவ்வளவு குழப்பங்களோடு இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. அவரைத் தாண்டி இன்னொரு கலைஞனைத் தேடும் பயணத்தில் – தேடிக் கண்டு பிடித்து அங்கீகரிப்பதில் அவரது பங்களிப்பு- அவரது இலக்கியப் பார்வையை- கலைக்கோட்பாட்டை உள்வாங்கிய நபர்களின் பங்களிப்பு இல்லையோ என்ற சந்தேகம் தோன்றுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.
தமிழக மக்களுக்குப் பொழுது போக்கு அம்சத்துடன் கலையுணர்வைத் தருகிறோம் என்ற பெயரில் அவர்களின் தன்னிலையை மறக்கச் செய்யும் போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது திரையுலகம். எளிய மனிதர்களின் உழைப்பில் கிடைக்கும் பணத்தை அவர்கள் விழித்துக் கொண்டிருக்கும் போதே திருடும் கூட்டமாக இருக்கிறோம் என்ற தன்னுணர்வின்றி கிடைப்பதெல்லாம் லாபம்; லாபமெல்லாம் எங்கள் உழைப்பின் பலன் எனக் கருதுவது நமது திரையுலகம். அதற்குள் இருக்கும் ஒவ்வொரு நபரும் இந்த எண்ணத்தோடு தான் இயங்குகிறார்கள். விதி விலக்குகள் உண்டா என்று தேடுவதும், கலைஞன் என ஒருவன் அதற்குள் இருக்கிறானா எனத் தேடுவதும் ஒன்றுதான்.
தாங்கள் செய்வது சுரண்டுதலின் இன்னொரு வடிவம் என்பதை உணர்ந்து கொண்ட ஒரு மனிதன் திரைப்பட உலகத்தில் இருந்தால் முதலில் அதனை ஒத்துக் கொண்டு வெளி வர வேண்டும். நாங்கள் படம் தயாரிக்கிறோம்; அதற்குத் தமிழில் பெயரிடுவது எனது சொந்த அடையாளத்தின் வெளிப்பாடு; அதற்காகச் சலுகை அளிப்பதும், அதனைப் பெறுவதும் எனக்கு உவப்பானதல்ல என்று சொல்லவாவது செய்ய வேண்டும்; அதுதான் குறைந்த பட்ச நேர்மையாக இருக்கும். ஏற்பதற்குக் காட்டும் விருப்பத்தைப் போல, நிராகரிப்பதற்கும் தயாராக இருப்பதுதான் கலைஞனின் வெளிப்பாடு.
உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசை- இந்திய அளவில் மதிக்கப்படும் பத்ம விருதுகளை- மறுத்தவர் களையும், திருப்பி அனுப்பியவர்களையும் வரலாறு தனது பக்கங்களில் எழுதி வைத்திருக்கிறது. அப்படிப் பட்ட ஒரு கலைஞனைத் தமிழ் உலகம் எப்பொழுது உருவாக்கித் தரும்..? எனக்குத் தெரிய அரசும் அரசு நிறுவனமும் வழங்கிய விருதை- விருதுப் பணத்தை வேண்டாம் என மறுத்தவர்களாக இரண்டு பேர் மட்டுமே நினைவுக்கு வருகிறார்கள். ஒருவர் சி.சு.செல்லப்பா. இலக்கியம், இலக்கிய விமரிசனம், தீவிரமான இலக்கியப் பிரக்ஞையைத் தமிழில் உருவாக்குதல் எனத் தனது வாழ்நாள் முழுமையையும் ஒப்புக் கொடுத்தவர் அவர். தனியொரு படைப்பாளிக்கு ஒரு லட்சம் பரிசுத்தொகை என அறிவித்து இராஜராஜன் விருதை வழங்கிக் கொண்டிருந்த தமிழ்ப் பல்கலைக்கழகம் அந்த ஆண்டு தனியொரு படைப்பாளிக்குத் தொகையைத் தராமல் இருபது பேருக்குத் தலா ரூ 5000/- எனப் பிரித்துத் தர முன் வந்த போது அதை நிராகரித்தார். ஒரு லட்சம் ரூபாயையும் அரசின் அங்கீகாரத்தையும் தனியொருவனாகப் பெறும் தகுதி எனக்கில்லை என்று கருதுகிறது அரசாங்க நிறுவனமான பல்கலைக்கழகம். ஆனால் அந்தப் பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ள இருபது பேர்களில் ஒருவன் என்ற பார்வையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி நிராகரித்தார் சி.சு. செல்லப்பா.

கலைஞர்களாக இல்லாத- படைப்பாளியாக இல்லாத - கூட்டத்தோடு தன்னை அடையாளப்படுத்தும் கௌரவத்தை நிராகரிப்பது கலைஞனின் மனோபலம் சார்ந்தது. இத்தகைய மனோபலத்தோடு புனைகதையாசிரியரும் நாடகாசிரியருமான இந்திரா பார்த்தசாரதி ஒரு முறை தமிழக அரசு அறிவித்த கலைமாமணி விருதை நிராகரித்தார். ஆனால் இந்திய அளவில் தரப்பட்ட பல விருதுகளை எந்த மறுப்பும் இன்றிப் பெற்றுக் கொண்டவர் இந்திரா பார்த்தசாரதி என்ற நிலையில் அவரது நிராகரிப்பில் இருந்தது கலைஞன் என்னும் மனோபலமா? தருபவர்கள் யார் என்று பார்த்து நிராகரிக்கும் நுண் அரசியலா என்று பலரும் கேள்வி எழுப்பியதும் நினைவுக்கு வருகிறது.
தன்னிலை உணர்வு, படைப்பாக்கத் திறன், சமூகப் பொறுப்பு, நம்பும் ஒன்றைச் சொல்லத் தயங்காத ஆன்மபலம், சொன்னதைத் தனது வாழ்வின் வெளிப்பாடாகக் கொள்ளுதல் என விரியும் கலைஞனின் அடையாளத்தைப் பணம்,ஆடம்பர வாழ்க்கை, அதிகாரம் என அலையும் தமிழ்த் திரைப்பட உலகத்தினரிடம் எதிர்பார்ப்பது சரியில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான், யாராவது ஒருவர் தனது அடையாளம் கூட்டத்தின் அடையாளம் அல்ல; தனித்த அடையாளம்; அது கலைஞனின் அடையாளம் என வெளிப்படுத்தி விடுவார்கள் என எதிர்பார்ப்பதுதானே மனித வாழ்க்கையை அர்த்தப் படுத்துகிறது. எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்ற வாழ்க்கை அல்லவா.?

கருத்துகள்