ஆண்டின் கடைசி நாளிலிருந்து இன்னொரு ஆண்டின் முதல் நாளுக்கு
2026 ஆம் ஆண்டை இதற்கு முந்திய ஆண்டு போல நகர்த்தக் கூடாது என்று நினைக்கிறேன். அதனை உறுதி ஏற்பு என்று சொல்லத்தோன்றவில்லை. 1980 ஆம் ஆண்டிலிருந்து எழுதி வரும் எனக்கு தொடர்ச்சியாக ஒன்றில் ஆழமாக எழுதிப் புதையும் மனநிலை இல்லை என்று 45 ஆண்டுகளுக்குப் பின்னர் உறைக்கின்றது. அந்த மனநிலை இருந்திருந்தால் தொடங்கிய நாவல்களை முடித்திருக்கலாம். எழுத நினைத்த இன்னும் சில நாடகங்களை எழுதி நூலாக்கியிருக்கலாம். என்னிடம் இருப்பது தாவித்தாவிச் செல்லும் மனநிலை என்று புரிந்திருக்கிறது. இதைக் கைவிட வேண்டும் என நினைக்கிறேன். அரசியல், சினிமா, நாடகம், இலக்கியம், ஊடகக் கவனம் என அவ்வப்போது எழுதித் தாண்டியிருக்கிறேன் கடந்த காலத்தை.
2026 ஆம் ஆண்டை அப்படிக் கடக்கக்கூடாது என்று நினைக்கும்போது கடந்த ஆண்டின் குறிப்புகளாக இவை நிற்கின்றன. இவையெல்லாம் எழுதப்பட்டு எனது அ.ராமசாமி எழுத்துகள் என்ற வலைப்பக்கத்தில் இருப்பவை. 2025 -நினைவுக்குறிப்புகள்
* இது பயணங்களின் ஆண்டு -
பணி ஓய்வுக் காலத்தைக் கழிப்பது எனத் திட்டமிட்டு வந்த பயணம் இது. மகள் இருக்கும் அமெரிக்காவிலும் மகன் இருக்கும் கனடாவில் சில மாதங்கள் இருக்கலாம் எனத் திட்டமிட்டுக் கிளம்பி வந்து ஆண்டின் இறுதியில் 45 நாட்களைக் கழித்துள்ளேன். இன்னும் சில மாதங்கள் இங்கேதான்.
அயல்பயணத்தைத் தாண்டி உள்நாட்டுப் பயணமாக டெல்லிக்குச் சென்ற நாட்களும் நினைவில் இருக்கின்றன. ஓய்வுக்குப்பின்னும் தொடரும் சில பொறுப்புகள் காரணமாகவும் சொந்தப் பணிகள் காரணமாகவும் ஐந்து தடவை டெல்லிக்குப் போய் வந்ததும் கல்வி மற்றும் கருத்தரங்குகள் தொடர்பில் இரண்டு தடவை சென்னைக்கும் சேலம்,சிதம்பரம், நெல்லை, யெனச் சுற்றித் திரிந்ததும் இந்த ஆண்டின் நினைவில் இருப்பவை.
பேரன், மகள், மருமகன் ஆகியோர் வந்ததால் மூணாரு மலையில் சுற்றிய நாட்கள் பசுமையானவை.
**வழக்கம்போல வாசிப்பது தொடர்ந்தன என்றாலும் முந்திய ஆண்டுகளோடு ஒப்பிடக்குறைவுதான். அவற்றை எழுதிவிடுவது இன்னும் குறைந்துவிட்டது. வாசித்த நாவல்கள் 6 ஆனால் எழுதியவை இரண்டு பற்றித்தான். வழக்கம்போல வாரம் ஐந்து சிறுகதைகள் வாசித்தாலும் எழுதி வைத்த குறிப்புகள் குறைவு. கவிதைகளை வாசிக்கும்போது எழுதத்தோன்றும்; ஆனால் தள்ளிப்போய் நினைவிலிருந்து விலகிவிடும் தன்மை அதிகமாகிவிட்டது.
*** சினிமாக்களைப் பார்ப்பது அதிகரித்திருக்கிறது.
திரையரங்கம் சென்று பார்ப்பது குறைந்தும் இணையச்செயலிகளில் பார்ப்பது அதிகரித்தும் இருக்கிறது.
****
நாடகங்கள் பார்க்கும் வாய்ப்பு அறவே இல்லாமல் போய்விட்டது. கோவை, சென்னை, புதுச்சேரி,போன்ற இடங்களிலிருந்து தகவல்கள் சொல்லப்பட்டாலும் அதற்கெனப் பயணம் செய்வதும் எழுதுவதும் நடக்கவில்லை. தூத்துக்குடிக்குப் போய் நாடகங்கள் பார்த்த ஒன்று மட்டும் திருப்தியான நாள்.
**** பண்பாட்டு வாசிப்புகள் நூலுக்காக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் இளவந்திகை விருதைத் தலைவர் தொல்.திருமாவளவனிடமிருந்து பெற்றதும், போரிலக்கிய வாசிப்புகள் நூலுக்காகத் தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் விருதைக் குன்றக்குடி அடிகளாரிடமிருந்து பெற்றுக்கொண்டதும் இந்த ஆண்டின் மகிழ்வான நினைவுகள். புக் ப்ரும்மாவில் வல்லுநராகக் கலந்து கொண்டதும்கூட.
***** எழுதப்பெற்றவை
------------------------
நுண்ணரசியலும் பேரரசியலும்
------------------------------------
1.நிர்வாக நடைமுறைகளும் நீதிபரிலானமும் - சில குறிப்புகள்/டிசம்பர் 21, 2025
2.இந்தியக் கிரிக்கெட்: விளையாட்டு -தேர்தல் அரசியல் – அதிகாரம்/நவம்பர் 25, 2025
3.வினையும் எதிர்வினையும்/நவம்பர் 24, 2025
4.நினைவழியா நாட்கள்/நவம்பர் 06, 2025
5.மந்தையின் ஆடுகள் : பற்றும் வெறியும்/அக்டோபர் 25, 2025
6.தண்டனைகளும் மன்னிப்பும்/அக்டோபர் 06, 2025
7.தூக்கம் தொலைந்த இரவானது/அக்டோபர் 05, 2025
8.திரளின் மனநிலைகள்/அக்டோபர் 04, 2025
9.அமெரிக்காவில் பணிவாய்ப்புக் குடிநுழைவுகள் - சில திருப்பங்கள்/செப்டம்பர் 21, 2025
10.துக்ளக் என்னும் அரசியல் மையம்/ஜூன் 07, 2025
11.மொழி அரசியல்: தொல்காப்பியம் Xஅகத்தியம் / ஐந்திரம் /இறையனார்/பிப்ரவரி 11, 2025
பங்கேற்புகள்
≈===========
1.பெறும் பிளவுகள் ஏற்பட்டுவிட்டன./அக்டோபர் 24, 2025
2.சேலத்தில் நான்கு நாட்கள்/மார்ச் 10, 2025
3.மூன்று குறிப்புகள் -ஒரு விளக்கம் -சில தகவல்கள்,/செப்டம்பர் 09, 2025
4.பெங்களூரில் புக்பிரும்மா இலக்கியவிழா/செப்டம்பர் 01, 2025
5.நிகழ்த்தும் கவிதைகளை எழுதுவது -பயிலரங்க அனுபவம்/ஆகஸ்ட் 31, 2025
6.சென்னைப்பயணத்தில் இரண்டு நிகழ்வுகள்/மார்ச் 24, 2025
கவிதைகள் பற்றி------------------
1.எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே./அக்டோபர் 03, 2025
2.நவீன கவிதைகளை வாசிக்கும்போது..../செப்டம்பர் 22, 2025
3.கலாப்ரியா : கவியாகவும் படைப்பாக்க ஆசிரியராகவும்...ஜூலை 28, 2025
4.வருத்தங்களற்ற பெண் தன்னிலைகள்/ஜூலை 04, 2025
5.சாருவின் நேரடிக்கவிதைகள்/ஏப்ரல் 25, 2025
சினிமாக்கள் பற்றி
------------------------
1.காளமாடன் என்னும் பைசன் :நிகழ்ந்தனவும் புனைவாக்கமும்/டிசம்பர் 12, 2025
2.தமயந்தியின் தன் விருப்ப சினிமாக்கள்/நவம்பர் 20, 2025
3.திரைப்பட ஆக்கம்- கவனமும் கவனமின்மையும்/நவம்பர் 08, 2025
4.கலையியல் எதிரிகள்/செப்டம்பர் 20, 2025
5.திரைப்படங்களைப் பார்த்தல் பொதுக்குறிப்புகளும் சிறப்புக்குறிப்பும்/செப்டம்பர் 14, 2025
6.பார்க்கத்தக்க இரண்டு சினிமா/ஜூலை 30, 2025
7.பொதுப்புத்தியை விவாதிக்கும் கலையியல் : டூரிஸ்ட் பேமிலியும் அயோத்தியும்/ஜூலை 05, 2025
8.உலகத்தமிழர்களை நோக்கிய தமிழ்ச் சினிமாக்கள்/ஜூன் 23, 2025
9.நல்ல சினிமாவாக ஆகத்தவறிய இரண்டு படங்கள்/மே 17, 2025
10.நெருப்பும் இன்னொரு நெருப்பும்- விழிப்புணர்வின் பெயரில் காமத்தூண்டல்/ஏப்ரல் 20, 2025
11.புஷ்பா-2 வெகுமக்களின் சினிமா/பிப்ரவரி 14, 2025
12.அடுத்தடுத்துப் பார்த்த சினிமாக்கள்/பிப்ரவரி 04, 2025
நாடகவியல்
-----------------
1.தூத்துக்குடியில் ஒரு நாடகவிழா/செப்டம்பர் 01, 2025
2.தந்தையும் மகனும் (கண்ணப்ப, சம்பந்த தம்பிரான்கள்) தாமரைத்திருக்கள்/ஜனவரி 27, 2025
சிறுகதைகள் வாசிப்பு
----------------------'------
1.இயல்பண்புவாதத்திலிருந்து நடப்பியலுக்கு: சுப்ரபாரதி மணியன் கெடா கறி/நவம்பர் 04, 2025
2.சரவணகார்த்திகேயனின் கதையாக்கம் – வாசித்த சில கதைகளை முன்வைத்து/ஆகஸ்ட் 13, 2025
3.அந்த மூன்றும் இந்த மூன்றும்/ஜூலை 01, 2025
4.திக்கு விஜயம்- பின்னணியால் அர்த்தங்கள் விரியும் ஒரு சிறுகதை/மே 12, 2025
5.சந்தேகத்தின் பலனை... -சல்மாவின் மறுபக்கம் கதை மீதொரு விவாதம்/மே 07, 2025
6.ஆதிக்க மனநிலையை விசாரித்தலும் அகத்தைப் பேசுதலும்/ஏப்ரல் 08, 2025
7.நவீனத்துவத்துவ நுழைவுகள் -இரண்டு சிறுகதை வாசிப்புகள்/ஜனவரி 21, 2025
நாவல்கள்
--------------
1.இயற்பண்பியல் எழுத்தின் நேர்மறை -அபிமானியின் மனசுக்காரன்/ஆகஸ்ட் 31, 2025
2.உப்பு வண்டிக்காரன் : சமகாலத்தை எழுதுவதின் வகை மாதிரி.பிப்ரவரி 06, 2025
நூல்களின் உலகம்
-------------------------
1.வாசிப்பின் அடுக்குகளுக்குள் பயணித்தல்/செப்டம்பர் 11, 2025
2.உதிரியாய்ச் சில குறிப்புகள்/ஜூன் 27, 2025
3.முகநூல் உருவாக்கிய இரண்டு எழுத்தாளர்கள்/ஜனவரி 26, 2025
நினைத்துக்கொள்ளப்பட்டவர்கள்
-------------------------------------------
1.ஈரோடு தமிழன்பனை நினைத்துக் கொள்கிறேன்/நவம்பர் 22, 2025
2.ரமேஷ் பிரேதன்:இது நினைவஞ்சலி அல்ல/அக்டோபர் 15, 2025
3.நாறும்பூநாதனை நினைத்துக்கொள்கிறேன்/மார்ச் 16, 2025

கருத்துகள்