மனிதநேயமும் தமிழ்ப்புனைகதைகளும்

மேற்கு ஐரோப்பிய நாடுகள்

இத்தாலியின் பின்னிடைக்கால எழுத்தாளர்களான தாந்தே பிரான்ஸ் நாட்டில் மனிதநேயம் அறிமுகமான பொழுது அதனை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றிய அறிஞர் டச் கிளரிக் டெஸிடெரஸ் எராஸ்மஸ்க்ஷ். இவரே இங்கிலாந்திலும் மனிதநேயக்கருத்தோட்டம் அறிமுகமாகக் காரணமாகவும் இருந்தார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் எராஸ்மஸ்ஸால் அறிமுகப்படுத்தப் பட்ட மனிதநேயம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் செவ்வியல் இலக்கிய வல்லுநர்களான வில்லியம் க்ரொசின்

பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்த மனிதநேயக் கருத்தோட்டம் எலிசபெத்தியன் கால இலக்கியங்களின் வழியாகவும் பண்பாட்டின் வழியாகவும் ஆங்கிலம் பேசப்பட்ட நிலப்பரப்பெங்கும் பரவியது. ஐரோப்பிய இலக்கியத்தின் மிகமுக்கியமான காலகட்டம் மனிதநேயம் சார்ந்த மறுமலர்ச்சி காலகட்டம்தான். தொடக்கத்தில் பொத்தாம் பொதுவான மனிதநேயம் எனப் பேசிய இலக்கியங்கள் பின்னர் படிப்படியாக உழைக்கும் மக்களின் சார்பான மனிதநேயமாகவும் பெண்களின் சார்பான வெளிப்பாடுகளாகவும் மாறியது உலக இலக்கியத்தின் வரலாறு.

ஆங்கிலக்கல்வி மற்றும் சிந்தனைமுறைமேல் இன்று நம்மில் பலருக்கும் பலவிதமான காரணங்களுக்காக விமரிசனங்கள் இருக்கக் கூடும். ஆனால் அவை தான் இந்திய மனிதனை உலகச் சமுதாயத்திற்குரியவனாக ஆக்கியது என்பதை மறுத்துவிடமுடியாது. ஆங்கிலேயர்களின் இந்திய வருகைக்குப்பின்னால் வணிக நோக்கமும் காலனியாதிக்க விருப்பங்களும் இருந்தன. அதன் காரணமாக இந்தியப் பொருளாதார வாழ்வு எதிர்பாராத மாற்றங்களைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் பண்பாட்டுவாழ்வில் அதன் தாக்கம் பலவிதமான நேர்மறையான அம்சங்களை உண்டாக்கி வைத்தன. ஆங்கிலக் கல்வி அதன் மொழியினூடாக வளமான இலக்கியப் பக்கங்களையும் இந்தியர்களுக்கு அறிமுகம் செய்தது. குறிப்பாக ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் ஐரோப்பாவின் மனிதநேயக் கவிகளும் அறிமுகமானதை எதிர்மறை அம்சங்களாக இன்றும்கூடக் கணித்து விட முடியாது. அந்த அறிமுகத்தின் பின்விளைவுகளே பாரதியும் புதுமைப்பித்தனும் திராவிட இயக்கச் சிந்தனைகளும்

விடுதலைக்குப் பிந்திய இந்திய எழுத்துகளில் அனைத்துத் தரப்பினரும் மனிதநேய நிலைப்பாட்டோடு எழுதினர் என்றாலும், இடதுசாரிக் கருத்தியலை அறிந்த எழுத்தாளர்கள் தன்னுணர்வுடன் பின்பற்றினர். தன்னுணர்வின்றி நிகழும் சூழலுக்கேற்பச் சார்பெடுக்கும் வலதுசாரிகளிடம் அத்தீவிரம் இருந்ததில்லை. உலகம் முழுக்க இடதுசாரி அரசியல் மீது விமரிசனங்கள் எழுந்தபோது மனிதநேயக் கருத்தியல் மற்றும் எழுத்துகள் மீதும் விமரிசனங்கள் எழுப்பப்பட்டன. மனிதநேய எழுத்தின் வெளிப்பாட்டு வடிவமாக நடப்பியலே அதிகமாக இருக்கிறது. எனவே நடப்பியலும் மனித நேயமும் கூடுதலான விமரிசனங்களை எதிர்கொண்ட போக்குகளாக எங்கும் அல்லாடிக் கொண்டே இருக்கின்றன. என்றாலும் தவிர்க்க முடியாதனவாக இருக்கின்றன.

நடப்பியல் இயக்கமும் தமிழ்ப் புனைகதைகளும்

 இலக்கிய இயக்கங்களில் அதிகம் கொண்டாடப்படாத இயக்கம் நடப்பியல் (Realisam) இயக்கம். ஆனால் நீண்ட கால வாழ்வையும் நிகழ்காலத் தேவையையும் கொண்ட இயக்கமாக இருப்பது. நடப்பியலின் சிறப்பு. அதன் விளைநிலம் புனைகதை. புனைகதையின் வரவோடு நடப்பியல் வந்ததா? நடப்பியலின் தோற்றத்தோடு புனைகதைகள் உருவாக்கப் பட்டனவா? என்ற ஐயத்தைத் 

சாராம்சமாகப் புனைகதை இலக்கியம் நடப்பியலோடு தொடர்புடையது. எழுதுபவர்களின் நோக்கத்திற்கேற்ப நடப்பியல் இயக்கத்தின் பாணியும் வேறுபட்டதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட இடத்தையும், அந்த இடத்தில் வாழும் மனிதர்களையும் எழுதிக் காட்டும் எழுத்தின் தன்மைக்கும், குறிப்பிட்ட காலத்தையும், அந்தக் காலம் பற்றிய பிரக்ஞையை உணர்ந்தவர்களாக மனிதர்களையும் எழுதும் எழுத்தின் தன்மைக்கும் வேறுபாடுகள் உண்டு. இரு வேறு காலத்தில் வாழும் மனிதர்களைச் சந்திக்கச் செய்யும் ஒவ்வொரு வகைமாதிரிக்கும் தமிழ்ப் புனைகதை யாசிரியர்களையும் அவர்களின் புனைகதைகளையும் உதாரணங்கள் காட்ட முடியும்.
இடங்களின் வழியாக மனிதர்களை எழுதிக்காட்டிய சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை, சா.கந்தசாமியின் சாயாவனம், கி.ராஜநாராயணனின் .கோபல்ல கிராமம், .இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி,.ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, அசோகமித்திரனின் 18 வது அட்சக்கோடு, நீல பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம், வண்ணநிலவனின் ரெயினிஸ் ஐயர் தெரு, பூமணியின் வெக்கை, தோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை, சுப்ரபாரதி மணியனின் சாயத்திரை, போன்றன ஒரு வகை மாதிரி. இந்தப் புனைகதைக்காரர்கள் நடப்பியல்வாதத்தை இடச்சித்திரிப்பின் வழியாக உருவாக்கிக்காட்டுவார்கள். காலம், வெளி, மனிதர்கள் என ஒவ்வொன்றையும் வருணித்து- விவரித்து உருவாக்கும் காட்சி சித்திரங்கள் அத்தகைய சூழலில் வசித்த வாசகர்களைத் தங்களின் சூழல் சொல்லப்படுகிறது என நம்பச் செய்துவிடும்.
இடங்கள் சார்ந்து மனிதர்களை முன்னிலைப்படுத்தாமல் இருவேறு காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனிதர்கள் சந்திக்கும் நிகழ்வுகளின் தொகுப்பாக நடப்பியலைப் பயன்படுத்திய எழுத்தின் மையத்தைக் குறிக்கப்பயன்படும் சொற்சேர்க்கையாக ‘தலைமுறை இடைவெளி’ என்பதைச் சொல்லலாம். தலைமுறை இடைவெளி என்பதை எப்போதும் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் முரணாகவே புரிந்து வைத்திருக்கிறோம்; அப்படியான புரிதலுக்குக் காரணம் "தலைமுறை” என்பது குடும்பத்தை எல்லையாகக் கொண்ட ஒரு சொல்லாக இருப்பது காரணமாக இருக்கலாம். ஒரு குடும்ப வெளிக்குள் நுழையும் புதுவகை பொருள் வரவு அதனால் கிடைக்கும் அறிவுத்தேடல், அதன் வழியாக ஏற்படும் அன்றாட வாழ்க்கை மாற்றங்கள், அதனால் உண்டாகும் புதுவகை நம்பிக்கைகள் ஆகியனவற்றைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு தலைமுறைக்கும், அதனைக் கண்டு முகம் சுழிக்கிற அல்லது எதிர்க்கிற பழைய வாழ்க்கை முறையின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகளை தலைமுறை இடைவெளி எனப் புரிந்துவைத்துள்ளோம். அந்தப் புரிதல் பிழையான ஒன்றல்ல.

இந்திய வாழ்க்கை முறையில் மேற்கத்திய கல்விமுறையால் ஏற்பட்ட இடப் பெயர்வுகளும் புதுவகை வேலை வாய்ப்புகளும் பெருமளவு மாற்றங்களை உண்டாக்கியுள்ளன. கூட்டுக் குடும்பங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துச் சிதைந்து கணவன், மனைவி, அவர்களின் குழந்தைகள் மட்டும் என்பதான தனிக் குடும்பங்கள் ஏற்படக் காரணமாக இருந்தது இந்த இடப் பெயர்வுகள் தான்.. அதன் தொடர்ச்சியாக ”உருவான “வேலைக்குப் போகும் பெண்கள்”” என்ற தனிவகையினரின் அடையாளம் வேறொரு வகை நெருக்கடியைக் குடும்ப அமைப்புக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

தனிக் குடும்பங்களையே சிதைத்து தனித்தனி உயிரிகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் முற்போக்கானவை; வரவேற்க வேண்டியவை எனப் பேசுகின்றவர்கள் பிந்திய தலைமுறையினர். இந்த மாற்றங்கள் நமது சமூகத்தின் கட்டமைப்பைச் சிதைப்பதோடு பண்பாட்டுக் குழப்பங்களையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தக் கூடியன; எனவே தடுத்து நிறுத்த வேண்டும் எனச் சொல்பவர்கள் முந்திய தலைமுறையினர். இவ்விரு தலைமுறையினரின் வாதப் பிரதிவாதங்களை எல்லாம் பேசக்கூடிய எழுத்துப் பிரதிகளையும் நிகழ்வுப் பிரதிகளையும் பற்றிய விவாதங்களின் போதும், விமரிசனத்தின் போதும் தலைமுறை இடைவெளி என்ற சொல்லாடலை அதிகம் பயன்படுத்துகின்றோம். இவ்வகை எழுத்துக்காரர்கள் தாங்கள் உருவாக்கும் பாத்திரங்களைப் பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். பாத்திரங்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். வாசிக்கிற வாசகர்கள் நம்மால் இப்படிப் பேச முடியுமா எனப் பிரமித்துப் போய் நிற்பார்கள்.

இந்தப் போக்கின் ஆகச் சிறந்த தமிழ்ப் படைப்பாளியாக நினைப்பது ஜெயகாந்தனை. அவரது மொத்த எழுத்துகளையும் இந்த அடிப்படையிலேயே வாசிக்க முடியும் .அவரது பாத்திரங்களின் உரையாடல்களில் வெளிப்படும் அறிவார்ந்த தன்மை பல நேரங்களில் அலுப்பூட்டினாலும், அந்தப் பாத்திரங்களைப் போல நான் இல்லையே என்று வாசிப்பவர்களுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும். அவரது ’பாரிசுக்குப்போ’ வை வாசிக்கும்போது நான் அப்படி உணர்ந்திருக்கிறேன். வாசிப்பவர்களுக்கு அப்படித்தோன்றாமல் போனால் அவர் தலைமுறை இடைவெளியின் முரண்பாட்டை உணராதவர் என்று அர்த்தம்.

மத்திய தரவர்க்க மனிதர்களை இப்படி உரையாட வைத்த நாவல்களை இந்திரா பார்த்தசாரதியும் எழுதியிருக்கிறார். சுஜாதா, வாசந்தி, சிவசங்கரி போன்றவர்களின் தொடர்கதைகளில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளத் தவிக்கும் பாத்திரங்களின் புலம்பல்களை நாம் கேட்க முடியும்.
தலைமுறை இடைவெளியின் காரணமாகக் குடும்ப எல்லைக்குள் ஏற்படும் முரண்பாட்டைக் கிராமிய வெளிக்குள் நகர்த்திய எழுத்தின் மாதிரியாகச் சிவகாமியின் பழையன கழிதலை வாசிக்கலாம். அவரது ஆனந்தாயியையும் அப்படியே வாசிக்கலாம். அந்த நகர்வு இந்தியக் கிராமிய வாழ்வின் மிக முக்கியமான முரண்பாட்டை சாதி என்ற சமூக நிறுவனத்தின் பகுதியாக மாற்றிய வேலையைத் தீவிரமாக மாற்றியபோது அந்த நடப்பியல் தலித்திய நடப்பியலாக மாறியது. அந்நடப்பியல் மனிதாபிமானத்தை உருவாக்குவதற்குப் பதிலாகக் குற்றவுணர்வுக்குள் தள்ளவிரும்பியது. பூமணியின் பிறகுவில் நுட்பமாக உருவாக்கப்பட்ட குற்றவுணர்வுத் தூண்டல், சோ. தர்மனின் தூர்வையிலும், அழகிய பெரியவனின் தகப்பன் கொடியிலும் படர்ந்தது. ஆனால் பூமணியில் வெக்கையில் கோபமாக வெளிப்பட்டது. இமையத்தின் கோவேறு கழுதைகளும் செடலும் அறியாமை நிரம்பிய கிராமிய வாழ்க்கைக்குள் பெண்ணை மையப்படுத்திய நடப்பியலாக நகர்த்தினார். அவரது நாவல்களில் நடப்பியல் என்பது நம்பிக்கையின் மீதான விமரிசனங்களாகவும் விரிக்கப்பட்டன.  
நடப்பியலின் களனாகப் புறவெளியையோ, எதிரெதிர் மனிதர்களையோ நிறுத்திக் காட்டுவதைத் தவிர்த்துவிட்டுத் தனது மனத்தையே வெளியாகவும் காலமாகவும் ஆக்கிக் கொண்டு வர்ணிப்பதும் நிகழ்த்துவதுமான எழுத்தின் அடையாளமாக ஆதவனின் காகித மலர்கள் எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சியைத் தமிழில் அதிகம் தொடர்வாரில்லை. அதனோடு இணைத்துப் பார்க்கத்தக்க ஒன்றாகக் எம்.வி.வெங்கட்ராமின் காதுகளைச் சொல்லலாம். 21 ஆம் நூற்றாண்டு முழுமையாக நடப்பியல் மீதான பிடிப்பை இழந்திருக்கிறது. அதன் மூலம் மனிதநேயப்பார்வையும் பின்வாங்கிக்கொண்டிருக்கிறது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்