திரைப்பட ஆக்கம்- கவனமும் கவனமின்மையும்
சக்தி திருமகன்: கருத்தியல் தேர்வு மட்டும் போதாது
அரசியலின் சரி/ பிழை என்பதற்கேற்பத் தமிழ்நாட்டுப் பொதுமக்கள் தமிழ்ச் சினிமாக்களைப் பார்ப்பதுமில்லை; பார்த்துக் கொண்டாடுவதுமில்லை என்பதற்குப் பல உதாரணங்கள் முன்பே வந்து போயிருக்கின்றன. இப்போது வந்து அதிகம் பேசப்படாத சக்தி திருமகன் இன்னொரு உதாரணம்.
பெரியார் பேசிய பிராமண எதிர்ப்பு என்ற கருத்தியலை முழுமையாகப் பேசியிருக்கிறது இந்தச் சினிமா. பிராமணிய அறிவையும் தந்திரங்களையும் முழுமையாக நம்பிச் செயல்படும் அபயங்கர் கிருஷ்ணஸ்வாமி என்ற மையப்பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். அவரை எதிர்க்கும் கிட்டு பாத்திரம் எளிய பழங்குடிப்பின்னணி கொண்டது என்ற முரண் உருவாக்கப்பட்டுள்ளது.
வன்முறை, பாலியல் அத்துமீறல், லஞ்சம், அதிகார மீறல், என அனைத்தையும் தனது சமய/ சாதி அதிகாரத்தைக் கொண்டு செயல்படுத்திவிடும் அதிகாரத்தரகராக விளங்கும் அபயங்கர் மட்டுமில்லாமல், அவரின் கண்ணசைவில் செயல்படும் அதிகாரிகளும் அமைச்சர்களும் ஒன்றிய அரசிலும் மாநில அரசிலும் பரவிக்கிடப்பதாகக் காட்டுகிறது. அந்தப் பாத்திரங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உடை, ஒப்பனை போன்றன சமகால அரசியலில் பலரின் செயல்பாடுகளோடு பொருந்திப்போகின்றன. ஆனால் திரைக்கதை அமைப்பின் போதாமையும் வணிக சினிமாவுக்கான காட்சித்தன்மையும் அழகியலும் இல்லாத நிலையில் படம் பார்வையாளர்களிடம் ஒட்டாமல் விலகி நிற்கின்றது. தஞ்சைப்பின்னணியில் சுப்பையா என்ற பெரியாரியத்தொண்டர் (வாகை சந்திரசேகர்) பாத்திரத்தை உருவாக்கிப் பின்னோக்கில் கிட்டு என்ற நாயகப்பாத்திரத்தின் இளமைக்காலக் கதை சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருக்கும் எளிமையும் காட்சி அமைப்பும் மற்ற இடங்களில் காணப்படவே இல்லை.
விஜய் அந்தோனியின் படங்கள் ஒருவிதத்தில் ஷங்கரின் சினிமாக்களின் நகல்கள் தான். ஆனால் மோசமான நகல்கள். அவரிடம் இருக்கும் காட்சி அமைப்புகளோ, சொல்முறையோ, நடிகர் தேர்வோ, பாடல் காட்சிகளின் ஈர்ப்போ இருப்பதில்லை. விஜய் அந்தோனியும் தேர்ந்த நடிகனாக வெளிப்படுவதுமில்லை. இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல் பெரியாரியம், சமூக நீதி, பிராமண எதிர்ப்பு போன்றவற்றைக் காட்சிகளில் தூவினால் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாடப்போவதில்லை. ஒலிப்பதிவுகூடச் சரியாக இல்லை.
லோகெயெனும் பழியெடுக்கும் தொன்மம்.
*****
மனிதர்களை உடலாகவும் மனமாகவும் பிரித்துப் பேசும் சொல்லாடல்கள் எல்லா மொழிகளிலும் இருக்கின்றது. இந்தச் சொல்லாடல்களின் பின்னணியில் சமய நம்பிக்கைப் பார்வைகளும், அதனை எதிர்நிலையில் பார்க்கும் அறிவியல் பார்வையும் இருக்கின்றன. தாயைப்போலப் பிள்ளை, அப்பனை உரிச்சு வச்சிருக்கான் போன்ற மரபுத்தொடர்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம்; கேட்கிறோம். மரபணுக்களின் தொடர்ச்சியால் உருவாகும் உடலமைப்புகள் மீது மனிதர்களுக்கு ஐயமில்லை. அறிவியல் பார்வையும் அதனை மறுப்பதில்லை. தொடர்ச்சியான ஆய்வுகளைச் செய்கிறது.
தமிழிலும் அவ்வப்போது இதுபோன்ற படங்கள் வந்துள்ளன; வெற்றியும் பெற்றுள்ளன; தோல்வியும் அடைந்துள்ளன. தொன்மங்களிலிருந்து வேறுபட்டவை புராணங்களும் வரலாறும். அவற்றைத் தேர்வு செய்து திரைக்கதை ஆக்குவதிலும் இந்தத்திறன்களே தேவை.

வணிக வெற்றியை உறுதி செய்த மலையாள சினிமாவான லோகா ( LOKAH) வைத் திரைஅரங்கில் பார்க்கில் பார்க்கவில்லை. ஹாட்ஸ்டாரில் வந்தபின் பார்த்தேன். குற்றச் செயல்கள், ரகசியக்குழுக்கள், நல்லவர்களைக் காத்தல், தீயவர்களை அழித்தல் என்னும் எதிர்நிலைகளுக்கு வன்முறையைப் பயன்படுத்துதல் என்ற வணிகச்சூத்திர சினிமா. வழக்கமாக ஆண் பாத்திரத்தை மையமிட்டு உருவாக்கப்படும் கதைப்பின்னலுக்குப் பதிலாகப் பெண் பாத்திரத்தை மையமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. கச்சிதமான உடல்வாகு கல்யாணி பிரியதர்ஷன் என்ற நடிகை அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கச் செய்துள்ளார் இயக்குநர் டொமினிக் அருண். சமகால நிகழ்வுகளுக்குள் மையப்பாத்திரத்திரத்தின் முன்கதை ஒன்றைச் சேர்த்துள்ளார் இயக்குநர். அந்தக் கதை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவியிருக்கும் நீலி என்னும் தொன்மக்கதை. தமிழ்நாட்டில் 'பழையனூர் நீலி' எனவும் கேரளத்தில் கல்லியங்காட்டு நீலி எனும் பெயரிலும் அறியப்படும் இந்தக் கதை நாட்டார் வழிபாட்டு மரபில் தெய்வமாக - இசக்கி, காளி, யட்சி எனப் பரவிக்கிடக்கிறது. அந்த வகையில் இந்தியத் தன்மை (PAN INDIA )கொண்டது. இந்திய சினிமாவை இந்தியப்பரப்பிற்குரியதாக மாற்றும் நோக்கத்திற்குப் பயன்படும் கதை. இப்போது லோகா அத்தியாயம்-1/ சந்திராவாக இருக்கும் இந்தச் சினிமா இரண்டாவது அத்தியாயத்தில் இன்னொரு பெயரோடு வரலாம்.
*****
மனிதர்களை உடலாகவும் மனமாகவும் பிரித்துப் பேசும் சொல்லாடல்கள் எல்லா மொழிகளிலும் இருக்கின்றது. இந்தச் சொல்லாடல்களின் பின்னணியில் சமய நம்பிக்கைப் பார்வைகளும், அதனை எதிர்நிலையில் பார்க்கும் அறிவியல் பார்வையும் இருக்கின்றன. தாயைப்போலப் பிள்ளை, அப்பனை உரிச்சு வச்சிருக்கான் போன்ற மரபுத்தொடர்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம்; கேட்கிறோம். மரபணுக்களின் தொடர்ச்சியால் உருவாகும் உடலமைப்புகள் மீது மனிதர்களுக்கு ஐயமில்லை. அறிவியல் பார்வையும் அதனை மறுப்பதில்லை. தொடர்ச்சியான ஆய்வுகளைச் செய்கிறது.
தோலின் நிறம், மயிர்களின் தன்மை, முகத்தின் - முகத்திலுள்ள உறுப்புகளான கண், காது, மூக்கு, உதடு, கன்னம், நெற்றி போன்றவற்றின் அமைப்புகளைக் கொண்டு இனப்பிரிவுகளுக்குள் ஒருவரைச் சேர்க்கிறது உடற்கூறு மானிடவியல், புதைக்கப்பட்ட உடல்களின் எலும்புகள் என்னும் தொல்லியல் சான்றுகளும் இன அடையாளத்தின் பகுதியாக இருக்கின்றது. அதன் தொடர்ச்சியில் தான் இன அடையாளங்கள் நடக்கின்றன. கர்மவினை, மறுபிறப்பு, ஆன்மாவின் தொடர்ச்சி போன்ற சொல்லாடல்கள் சமயங்களின் சொல்லாடலாக இருக்கின்றன. ஒரு மனித இருப்பு என்பது உடலாக இருப்பதா? மனமா இருப்பதா? என்பது திரும்பத்திரும்பக் கேட்கப்படும் விவாதம்.
******
தொன்மக்கதைகளைப் படமாக்கும் இயக்குநர்கள் உடலின் தொடர்ச்சி என்ற அறிவியல் பார்வைக்குள் நுழைவதில்லை. முந்திய பிறப்பில் நிறைவேறாத ஆசைகள், விருப்பங்கள், கோபங்கள், வன்மங்கள் என்னும் பண்புகளோடு/ குணங்களோடு மனம் திரும்பவும் இன்னொரு உடலுக்குள்ளாக வருகின்றது என்ற நம்பிக்கையை எடுத்துக்கொள்கின்றார்கள். அதற்குள் சமகாலச் சிக்கல்களை நுழைத்துத் திரைக்கதையை உருவாக்குகின்றார்கள். அவற்றில் சரியான திரைக்கதை அமைப்பும் நடிகர் தேர்வும் வெளிப்பாடும் பொருத்தமான சொல்முறைமைகளும் உணர்வுத் தொகுப்புகளும் வெற்றி அடைகின்றன. இந்தத்திறன்கள் இல்லாத இயக்குநர்களின் சினிமாக்கள் தோல்வி அடைகின்றன.
******
தொன்மக்கதைகளைப் படமாக்கும் இயக்குநர்கள் உடலின் தொடர்ச்சி என்ற அறிவியல் பார்வைக்குள் நுழைவதில்லை. முந்திய பிறப்பில் நிறைவேறாத ஆசைகள், விருப்பங்கள், கோபங்கள், வன்மங்கள் என்னும் பண்புகளோடு/ குணங்களோடு மனம் திரும்பவும் இன்னொரு உடலுக்குள்ளாக வருகின்றது என்ற நம்பிக்கையை எடுத்துக்கொள்கின்றார்கள். அதற்குள் சமகாலச் சிக்கல்களை நுழைத்துத் திரைக்கதையை உருவாக்குகின்றார்கள். அவற்றில் சரியான திரைக்கதை அமைப்பும் நடிகர் தேர்வும் வெளிப்பாடும் பொருத்தமான சொல்முறைமைகளும் உணர்வுத் தொகுப்புகளும் வெற்றி அடைகின்றன. இந்தத்திறன்கள் இல்லாத இயக்குநர்களின் சினிமாக்கள் தோல்வி அடைகின்றன.
தமிழிலும் அவ்வப்போது இதுபோன்ற படங்கள் வந்துள்ளன; வெற்றியும் பெற்றுள்ளன; தோல்வியும் அடைந்துள்ளன. தொன்மங்களிலிருந்து வேறுபட்டவை புராணங்களும் வரலாறும். அவற்றைத் தேர்வு செய்து திரைக்கதை ஆக்குவதிலும் இந்தத்திறன்களே தேவை.
.jpeg)
.jpeg)
கருத்துகள்