வினையும் எதிர்வினையும்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நடிகர் விஜயை எதிர்கொள்ளுதல்திராவிட முன்னேற்றக்கழகம் தனது எதிரிக்கட்சியாக அஇஅதிமுகவை முன்வைத்து அரசியல் நகர்வுகளைச் செய்வதே சரியானது. அப்படித்தான் அதன் பொறுப்பாளர்கள் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் அதன் ஆதரவாளர்களும் கருத்தியல் முன்வைப்பாளர்களும் அப்படி நகர்வதில்லை.
குறிப்பாகத் தொலைக்காட்சி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செயல்படுபவர்கள் இந்தத் தேர்தலில் விஜயின் அரசியல் வருகையையும் அவரது தமிழக வெற்றிக் கழகத்தையுமே எதிரியாகப் பாவித்து வினையாற்றுகின்றார்கள்; சொல்லாடல் நிகழ்த்துகின்றார்கள். அதன் மூலம் அந்தக் கட்சிக்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். இது பதற்றத்தின் வெளிப்பாடு.
விஜயின் அரசியலை முன்வைத்து உருவாகும் இத்தகைய பதற்றம் புதிய ஒன்றல்ல. எதிர்தரப்பினர் உருவாக்கும் நடிக அரசியல் நுழைவுகள் ஒவ்வொன்றின்போதும் அத்தகைய பதற்றை வெளிப்படுத்துவது வாடிக்கையாகவே இருந்துள்ளது. நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், விஜய்காந்த என அரசியல் முகங்களைக் காட்டியது தொடங்கியவுடன் இத்தகைய பதற்றத்தை வெளிப்படுத்திவிடுவார்கள். அந்தப் பதற்றத்தின் மூல காரணம் திமுகவிலிருந்து வெளியேறிப் புதிய கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்த எம் ஜி ராமச்சந்திரன்.
1977 தொடங்கிய அந்தப் பதற்றம் ஒவ்வொரு நடிகரின் அரசியல் நுழைவின் போதும் திரும்பவும் உருவாகிறது. ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் நுழைவின்போது இந்தப் பதற்றம் உருவாகவில்லை. காரணம் எம்ஜி ஆர் உருவாக்கிய பதற்றத்தைத் தனதாக்கிக் கொண்டு வளர்ந்தவர் ஜெ.ஜெயலலிதா.
நடிகர் விஜயின் - அவரது கட்சியின் ஒவ்வொரு வினைக்கும் திமுகவை எதிர்வினையாற்றத் தூண்டுவது ஊடகங்களின் வணிக நோக்கம் மட்டுமல்ல; அரசியல் நோக்கமும். அவர்களின் போக்கோடு இணைந்து நிறபதும் எதிர்வினையாற்றவேண்டும் என நினைப்பதும் திமுகவினரின் பலமல்ல; பலவீனம்.
Ramki J
பதற்றத்தை ரஜினி பயன்படுத்திக்கொள்ளவில்லை. மக்கள் என்ன நினைப்பார்கள், அதை எப்படி நியாயப்படுத்தமுடியும் என்று நினைத்தார். பதற்றத்தை மூலதனமாக வைத்து நகர்ந்து சொல்லமுடியும் என்று விஜய் நினைக்கிறார். என்னுடைய மண்டபத்தை இடித்தார்கள் என்று விஜயகாந்த் சொன்னது போல் விஜய் இன்னும் தெளிவாக பேசவேண்டும்!
ஆரம்பத்தில் விஜய்தான் திமுகவை எதிர்ப்பேன் என்றவர். தற்போது போட்டியே திமுக - தவெக என்கிறார்.
பிறகே திமுக தற்போது பேச ஆரம்பித்துள்ளது.
உண்மை பேராசியரே. இது பொது போக்காக இருந்தாலும் விஜயகாந் வரையிலான கால கட்டத்திற்கு பின்பு தமிழ் நாட்டில் சனாதனத்தின் ஊடுருவல் அதிகமாகி வரும் சூழலில் அதனையும் கருத்தில் கொண்டு செயற்படுதல் அவதானமாக இருத்தல் அவசியம் ஆகின்றது. இவர்கள்(விஜய்) அனைவரும் எதோ ஒரு வகையில் பாஜக இன் சீடர்களாக இருப்பதுவும் அலலது இருக்கலாம் என்பதுவும் திமுக இன் இந்த எச்சரிகை வினையாற்றலுக்கு காரணமாக இருக்கின்றது.
வாழ்நிலை சிந்தனையை தீர்மானிக்கும் என்ற வகையிலும் சமூக நீதி சிந்தனையில் மதச் சார்பற்ற பாதையில் பயணித்தே ஆகவேண்டி சூழலில் இருக்கும் திமுக... தமிழ் நாடு இதனை கட்டாயம் செய்தாக வேண்டிய வரலாற்றுக் கடமையிற்குள் உள்ளது.
தமிழ் நாட்டை முன்னேறி மாநிலமாக சமூக நீதி வளர்த்து வரும் மாநிலமாக கொண்டுவருவதில் இருந்து திராவிட சிந்தனை பெரியார் சிந்தனை இங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்பதினை தவிர்க்க முடியாமல் திமுக எடுத்துள்ளதாக உணரமுடிகின்றது.
உண்மையில் இங்கு அதிமுக தான் தனது தவறுகளை அதிகம் செய்கின்றது.
இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் சமூகக் குழுக்களை தனது மதவாதத்தின் ஊடு பிணைத்து(ளுழஉயைட நபெiநெநசiபெ) எண்கணித முறைப்படி அல்லது வெருட்டி விலைக்கு வாங்கும சனாதனத்தின் சூழ்ச்சிகளை பாவித்து எந்த எல்லைக்கும் போகும் பாஜக ஐ திமுக தனது வெற்றியிற்காக சாதாரணமாக எடுத்துச் செயற்படுத்த முடியாது.
இந்த திமுக இன் செயற்பாடு நிச்சயம் திமுகவின் விருப்பு வெறுப்பிற்கு அப்பால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மையாகத்தான் அமையும்.
பாஜக எந்த எல்லயிற்கும் போய் பாண்டிசசேரியை ஆள்வதை நீங்கள் அனுபவரீதியாக அங்கு வாழ்பவராக உணர்வீர்கள்.
நன்றி
அவர்கள் பேசுகிற அவதூறுகளுக்கு எல்லாம் எப்படி பதில் சொல்லாமல் இருக்க முடியும்?
முதல் கட்ட தலைவர்கள் பேசாமல் தவிர்ப்பது நல்லது ஆனால் அடுத்தடுத்த நிலையில் இருப்பவர்கள் பதில் சொல்லத்தான் வேண்டும்
முருக தீட்சண்யா அவதூறுகளைப் பேசுபவர்கள் எந்தப் பதிலையும் கேட்கப்போவதுமில்லை; அடுத்த அவதூறை நிறுத்திவிடப்போவதுமில்லை
Jameelah Razik
தமிழ்நாட்டில் திமுகவிற்குப் போட்டி இப்போதும் அதிமுக தான். அதிமுக கட்சியின் தொண்டர்கள் வாக்கு வங்கி எல்லாமே தமிழ்நாட்டில் இல்லாமல் ஆகிவிட்டது போலவும் தவெக மட்டும்தான் போட்டி என்பது போலவும் ஊடகங்கள்தான் படம் காட்டுகின்றன. இதனை அதிமுகதான் கூடுதலாக மறுத்து தங்களுடைய செல்வாக்கை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில் அவர்களுக்குக் கிடைகாக வேண்டிய வாக்குகள்/இடங்கள்தான் குறையும் வாய்ப்பிருக்கிறது.
- Reply
- Hide
Tamil Arasan
Jameelah Razik கொள்ளைக்கூட்டத்திற்கு ஒப்பந்தங்கள் தேவையென்கிறீர்கள்??
Noble Chelladurai
தமிழர்களின் மேல் காட்சி ஊடகங்களின் பாதிப்பைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.. கலைஞர் இதை உணர்ந்திருந்தார். மு க முத்துவின் திரைஉலக அறிமுகம், ஸ்டாலினின் ஆரமப கால சின்னத்திரை நுழைவு, உதய நிதியின் திரையுலக ஆளுமை,கலைஞர் குடும்ப ஊடக மேலாண்மை ஆகியவற்றையும் கணக்கில் எடுக்க வேண்டும்
Noble Chelladurai
எழுபதுகளில் எம்ஜிஆரின் அரசியல் வெற்றியை அதிர்ச்சியுடன் கவனித்தவர்களில் நானும் ஒருவன்.
Noble Chelladurai எம்ஜிஆர் தவிர இன்னொருவருக்கு அப்படியான வெற்றிகளைத் தமிழ்நாடு தரவில்லை
Krishna Kumar L
வெறும் கரண்டியை வெச்சிருக்கிறவன் எப்படி வேணுமானாலும் ஆட்டலாம். சாம்பார் கரண்டியை வெச்சிருக்கிறவன் கொஞ்சம் எச்சரிக்கையாதான் இருப்பான்.
Anicham Kanimozhi
சரியான கணிப்பு .
நான் சீமானை ஆரம்பத்தில் அதிகம் பதிய மாட்டேன் . நாமாக அடையாளம் தரக்கூடாது என்று கடப்பேன் .
அன்புமணி , அண்ணாமலை வகையறாக்களையும் அப்படித் தான் கையாள்கிறேன் .
விஜய் க்கு மட்டும் எதிர்வினை ஆற்றுகிறேன் என எனக்குள்ளேயே சிந்திப்பது உண்டு .
முடிவில் கண்ட காரணம் , இங்கே எதிர்வினை ஆற்றும் அளவிற்கு அதிமுக வினை ஆற்றுவதில்லை . நீங்கள் சொல்வது போல் ஊடகங்களும் அதை பெரிதாக எடுத்து வருவதில்லை .
திமுகவிற்கு எதிராக எங்கும் விஜய் மட்டுமே இருப்பதாக ஊடகம் விரிக்கும் மாயையில் நானும் விழுகிறேன் . பதட்டமாகிறேன் . அதற்காக களமாடுகிறேன் .
உங்கள் எழுத்தைக் கொண்டு நான் மாற வேண்டும் அண்ணா .
Sadasivam Mp
விஜய் ஒரு போட்டியே அல்ல.எந்த கூட்டணி என்று சொல்ல தயங்குகிற கட்சிகள் கூட விஜயை விமரசிப்பதில்லை.இருபது இலட்சம் பேரை கூட்டி வைத்து சொன்னாலும் விஜய் திமுகவின் எதிரி அல்ல அதிமுகவை மூன்றாமிடத்துக்கு தள்ள திமுக விமர்சனத்தை அவர் முன் வைக்கிறார்.திமுகவை நாங்கள் பாரத்துக் கொள்கிறோம் என விஜய்க்கு வெளிப்படையாக அதிமுக சொல்லத் தவறுகிற காரணத்தால் பிள்ளையில்லாத வீட்டில் விஜய் துள்ளி குதிக்கிறார். முன்பு நாற்பது சதவீத வாக்குகளில் வென்ற திமுக இப்போது முப்பத்தைந்து சதவீதத்தில் வெல்லும்.
Sadasivam Mp பாமக., விசிக., தேமுதிக. போன்ற வட்டார, சாதியப் பின்புலக் கட்சிகளும் அவரை எதிர்நிலைப்படுத்தி விவாதிக்க வேண்டும். தவறினால் தங்களிடம் உள்ள அரசியலற்ற வாக்காளர்கள் அவரை நோக்கி நகர்ந்துவிடுவார்கள்
Sigamani Thirupathi
திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தால் அதை ஓட்டுகளாக மாற்றும் வேலையைச் செய்வதில் அதிமுக பின்தங்கி விடக்கூடாது.
Siva Sivakumar
சரி வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தியவாறே எப்படி திமுக சமூக நீதி பேசுது எனவும் விளக்குங்களேன்
- Reply
- Hide

RAMASAMYWRITINGS.BLOGSPOT.COM
வாரிசுகளின் அரசியல்: வாரிசுகளின் சினிமா
வாரிசுகளின் அரசியல்: வாரிசுகளின் சினிமா
- Reply
- Remove Preview
Tamil Arasan
Siva Sivakumar அது குறித்தெல்லாம் பேராசிரியர் வாய்திறக்க மாட்டார்...அவருக்கு திராவிடம் என்ற பெயரில் உள்ள உள்ளம்சார்ந்த நெருக்கத்தால் இந்த சார்பு அவ்வளவுதான் மற்றபடி நிமிர்ந்த திராவிட விமர்சனத்தை இவரிடம் எதிர்பார்க்காதீர்கள் அது தமிழக (முகநூல்)முற்போக்கு அறிவுஜீவிகளிடம் இருக்காது ,2026 முடியட்டும் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தால் அப்புறம் பாருங்கள் கருத்தியல் ரீதியாக அரசை தர்க்கரீதியாக எப்படியெல்லாம் விமர்சனம் முகநூலில் நிகழ்கிறதென்று ,கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் முகநூலில் பிரச்சாரம் செய்த பெரும்பான்மையான முற்போக்காளர்களுக்கும் அரசு பதவிகள் கொடுத்தாயிற்று தமிழ்நாடு அதனால் தலைகீழாக மாறிவிட்டதையும் முற்போக்காளர்கள் மனநிறைவு அடைத்துவிட்டதையும் நாம் பார்க்கிறோம்,ஏனோ இந்த அரசு இன்னும் தனக்கு ஆதரவை மட்டுமே வழங்கக்கூடிய பேராசிரியரை இன்னும் கண்டுகொள்ளவில்லை வேணும்னா ஒரு ஹாஷ்டேக் போட்டா அதுவும் நடந்துடும் அப்புறம் எல்லாம் சுபம்தான்
...
Rethinagiri R
Siva Sivakumar அனைவரும் அவரவர் செய்வதில் வாரிசைஉருவாக்குக்கிறார்கள். SAC யார். விசை மகன் என்ன செய்கிறார்.
Mohamed Ravouf
ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜி சிந்தியாவின் மகன் துஷ்யந்த் சிங் எம்.பி ஆக உள்ளார். வசுந்தரா ராஜி சிந்தியாவின் தாய் விஜய ராஜி சிந்தியா ஜன சங்கத்தை சேர்ந்தவர், பாஜகவை உருவாக்கிய உறுப்பினர்களில் ஒருவர்.
பாஜக ஆட்சியில் வெளியுறவுத்துறை மற்றும் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா எம்.பி ஆக உள்ளார். இவர் பாஜக அமைச்சரவையில் இணை அமைச்சராகவும் இருந்தவர். இவரின் தந்தை யஷ்வந்த் சின்ஹா பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜன் எம்பியாக உள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த பிரேம் குமார் துமால் மகன் அனுராக் தாக்கூர் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் உடைய வழிகாட்டியான மகந்த் அவைத்யநாத் பலமுறை எம்.பி மற்றும் எம்.எல்.ஏவாக இருந்தவர் மற்றும் நெருங்கிய உறவினர்.
டெல்லி சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்த சார்த்தி லால் கோயல் மகன் விஜய் கோயல் மத்தியில் பாஜக அமைச்சரவையில் அங்கம் வகித்தார்.
5 முறை எம்.பி மற்றும் 2 முறை எம்.எல்.ஏவாக இருந்த விஜய் குமார் மல்கோத்ராவின் மகன் அஜய் குமார் மல்கோத்ரா 2013-ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருமகன் அனூப் மிஸ்ரா எம்.பியாகவும், எம்.எல்.ஏவாகவும் இருந்தவர். இந்தூரின் முன்னாள் மேயர் கைலாஷ் விஜயவர்ஜியாவின் மகன் ஆகாஷ் எம்.எல்.ஏவாக உள்ளார்.
சரி, இதைப் பத்தியும் எழுதுங்க
Roaster system abolition - ஆல் பாதிக்கப்பட்ட S/C அரசு ஊழியர்களுக்கு என்ன தீர்வு ?
16 (4 (A) -ன் படி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும் ?
S*C / S*T பின்னடைவுப் பணியிடங்கள் நிலுவை எப்போது நிரப்பப்படும் ?
ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்ப்படும் S*C சிறப்பு உட்கூறு நிதி திட்ட வாரியாக செய்ய்பட்ட ஒதுக்கீட்டை வெளிப்படையாக அறிவித்தல் எப்போது நடக்கும் ?
S*C க்களுக்கான இட ஒதுக்கீடு 22% ஆக உயர்த்துதல் எப்போது வரும் ?
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட அரசுத் துறைகளில் out Sourcing ல் இட ஒதுக்கீடு போலவே , தமிழ்நாட்டிலும் out Sourcing ல் S*C / S*T இடஒதுக்கீடு எப்போது வரும் ?
- Reply
- Hide
- Reply
- Edited
பியதஸி பியதஸி
அ. ராமசாமி நிறைவேறும் வரை எழுதவும் தோழர். இவைதான் சமூகநீதியின் அடிப்படைகள்
- Reply
- Hide
- Reply
பியதஸி பியதஸி
அ. ராமசாமி உங்களைப் போன்றோர் எழுதும் போது, அரசின் கவனத்தைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
Yuvarajkumar P
அந்த நடிகன் தனக்கு அரசியல் எதிரி திமுக என்று பேசிய பிறகுகூட இரண்டாம் கட்ட தலைவர்கள், தொண்டர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் கரூர் சம்பவத்திற்கு பின் திமுகவை அதற்கு முழு காரணமாக்க முயற்சித்த பிறகு தான், திமுக எதிர்வினையாற்ற வேண்டி வந்தது. ஆனால், தொடர்ச்சியாக திமுக மட்டும் குறி வைத்து தாக்கப்படும் பொழுது திமுகவினர், அதன் அனுதாபிகள் எதிர்வினை ஆற்றத்தான் செய்வார்கள். தங்கள் கருத்துக்களில் கீழே உள்ள நான்கு வரிகளுக்கான பதில் மட்டுமே இது.
- Reply
- Hide
- Edited
Ramachandran Radha
எம்ஜிஆர் அடித்த அடி அப்படி.
- Reply
- Hide
Rajiv Gandhi Kathirvel Bhavani
அதிமுக தான் அதை வலுவாக எதிர்க்க வேண்டும். இந்த இடத்திலும் பலவீனமாக இருக்கும் அதிமுகவை பலமாக காட்ட அதே ப்ரீவில்லேஜ்ஜை பயன்படுத்தி பேசுவது சரியா
- Reply
- Hide
பாரதிதாசன் இயல்
மீடியா எடுக்கும் தலைப்புக்கு போய் பேசுகிறார்கள்... அவ்வளவே
- Reply
- Hide
Kumaraguru Chokkalingam
சூப்பர். திமுகவே தங்கள் அரசியல் முதல்
எதிரி தவெக தான் என்பதுபோல் செயல்படுகிறது
அதுவே விஜய்க்கு வெற்றி தான்.
- Reply
- Hide
KA Akbar Deen
பதற்றம் என்பதை விட தவெகவின் எரிச்சலூட்டும் பொய்யான வசைகள்.
- Reply
- Hide
Nagarajan Muthu
ஏன்டா தற்குறி நடிகன் விஜய், உனக்கு எழுதிக் கொடுப்பவன் சினிமா பஞ்ச் டயலாக் மட்டுமே எழுதிக் கொடுப்பானாடா? இதெல்லாம் தமிழ் நாட்டில் எத்தனையோ ஆண்டுகளாக இருக்கிறது. இந்த தற்குறி நடிகன் புதியதாக ஏதும் சொல்லவில்லை. கொள்கை ஏதிரி முக்கியமான எதிரியா அல்லது அரசியல் எதிரி முக்கியமான எதிரியா? இவன் கொள்கை ஏதிரி பாசிச பாஜகவை ஏதும் சொல்வதே இல்லை. ஏனென்றால் இவன் பாஜகவினால் உருவாக்கப்பட்ட ஒருவன். இந்த தற்குறி நடிகன் விஜய் 41 பேரைக் கொன்ற கொலைகார பாதகன். இவன் அதற்காக எந்த இடத்திலும் வருத்தம் தெரிவிக்கவில்லை. இவன் ஒரு ஆள் என்று யாரும் இவனை மதிப்பதே இல்லை. இவனாக கற்பனையில் என்னைத் தொட்டால் .... என்னைத் தொட்டால் என்று புலம்பி தான் ஒரு தற்குறி என்று நிரூபித்துள்ளான். இந்த தற்குறி நடிகன் விஜய், எவனோ ஒரு தற்குறி எழுதிக் கொடுத்ததை வாசிக்க தடுமாறுகிறான். இவன் நாட்டில் பாசிச பாஜக செய்யும் அதிகார அத்துமீறல்ஙளை கண்டுகொள்ளாமல் திமுகவை மட்டும் திட்டுவது ஆர்எஸ்எஸ் இவனுக்கு கொடுத்த அசைன்மெண்ட்.
- Reply
- Hide
Mala Elangovan
அந்த தலைமை தற்குறி திமுக தலைவர்கள் மீது எத்தனை சேற்றை வாரி இறைத்தாலும் அதன் ஆதரவாளர்கள் அமைதியாக கடந்து செல்ல வேண்டும் என்கிறீர்கள்.
அதிமுக தாங்கள் தான் பிரதான எதிர்கட்சி என்று களத்தை பயன்படுத்தாமல் இருப்பதும் திமுக வால் தான். நன்று
- Reply
- Hide
Vasanthan Che Chandru
மிகச் சரி. இதனை திமுக தலைவர் பார்வைக்கு அனுப்ப வேண்டும். அதன் இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்னதான் செய்கிறார்கள்.
- Reply
- Hide
Sammandan Ramu
சோ சிம்பிள் தோழர், பகுத்தறிவுக்கு நாங்க தான் என்பவைகளிடம் பகுத்தறிவு இல்லை என்பதை இரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள்.
- Reply
- Hide
Rethinagiri R
Sammandan Ramu இதுக்கும் பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம். அவன் ஒரு கூட்டமா கத்திகிட்டே இருந்தால் என்ன செய்வது. முட்டாள் தனமாக பேசினால் அவன் பரம்பரையை காண்பிந்தால்தான் மக்களுக்கு தெரியும்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

கருத்துகள்